ரெகே (Reggae) இசையென்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடகர் பாப் மார்லி (Bob Marley) . அறுபதுகளின் இறுதியில் ஜமைக்காவில் உருவான இசை வடிவம் இது. தனித்துவமான 'ரிதம்' கொண்ட இசை. சம உரிமை, சமூக நீதி, அடக்குமுறைகளுக்கெதிராக ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகக் குரல் கொடுத்தல் போன்றவை ரெகே இசையின் சமுதாயப் பிரக்ஞையினை வெளிப்படுத்தினாலும் காதல், ஆன்மீகம், உறவுகள் பற்றியுமிருக்கும்.
பிரதான பாடகருடன் சேர்ந்து பாடுதல், பிரதான பாடகரின் கேள்விகளுக்குச் சக பின்னணிப்பாடகர்கள் பதிலளித்தல் போன்ற வகைகளிலும் பாடல்கள் அமைந்திருக்கும். ரிதம், பாவிக்கப்படும் இசைக்கருவிகள், சுருதியின் வேகம் இவற்றின் அடிப்படையில் ரெகே இசை பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
முப்பதுகளில் ஜமைக்காவில் உருவான ரஸ்டஃபாரி (Rastafari) இயக்கத்தின் தாக்கமும் ரெகே இசையிலுண்டு. ரஸ்டஃபாரி இயக்கத்தில் ஆபிரிக்கக் கலாச்சாரக் கூறுகளின் தாக்கம் (குறிப்பாக எதியோப்பிய காலனியவாதத்துக்கெதிராக போராட்டம் ஆகியவற்றின் தாக்கம்) உண்டு.
'Get Up, Stand Up for Your Rights' பாப் மார்லியின் முக்கிய பாடல்களில் ஒன்று. ' உங்கள் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்' என்று அறைகூவல் விடுக்கிறது. பாடலுக்கான இணைப்பு.
'கிட்டார்க் கடவுள்' எரிக் கிளாப்டனின் ' 'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை')
முகநூலில் எனது இசை பற்றிய பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பரும் , எழுத்தாளருமான ஜோர்ஜ்.இ.குருஷேவ் பிரபல 'கிட்டார்' கலைஞரும், பாடகருமான எரிக் கிளாப்டனின் 'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை') என்னும் பாடலுக்கான 'யு டியூப்' இணைப்பினைச் சுட்டிக்காட்டினார். டியூன், ரிதம், பீட் பற்றிய புரிதலுக்காக அவ்விணைப்பினைச் சுட்டிக் காட்டினார். அதற்காக அவருக்கு நன்றி.
'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை') பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் ரேகே பாடகர் பாப் மார்லி.
எரிக் கிளாப்டன் ரேகே பாடகர் அல்லர். ரொக், புளூஸ் இசைக்கலைஞர். பாப் மார்லியின் ரேகே பாடலைத் தான் பாவிக்கும் இசை வடிவில் தந்திருக்கின்றார் எரிக் கிளாப்டன். ரெகே , ரொக் இசையின் முக்கிய அம்சங்களில் ஒன்று சமூக அநீதிகளுக்கெதிராக, நீதிக்காக, அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது. கூறப்படும் விடயத்தை மீண்டும் மீண்டும் அழுத்திக்கூறும் வகையில் வரிகளை மீண்டும் , மீண்டும் பாடுவது. இப்பாடலிலும் அவ்வம்சத்தைக் காணலாம்.
ரெகே இசையில் கோரஸ் பாவிக்கப்படும், பொதுவாகப் பிரதான பாடகரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கோரஸ் பாவிக்கப்படும், ஆனால் இங்கு கோரஸ் பாவிக்கப்பட்டாலும் அவ்விதம் பாவிக்கப்படவில்லை. பதிலாக பாடகர் பாடும் வரியினை மீண்டும் பாடும் வகையில் பாவிக்கப்பட்டுள்ளது.
தனி மனிதன் ஒருவன் தற்பாதுகாப்புக்காகத் துணைக் காவல் அதிகாரியைக் கொன்றதை வெளிப்படுத்தும் பாடல். எவ்விதம் ஜான் ப்ரவுன் என்னும் காவல் அதிகாரி தன்னை வெறுத்தார். தன்னைக் குற்றவாளியாக்க முனைந்தார். தன்னைச் சுட முற்பட்டார். அதனால் தா அவரைச் சுட்டேன். ஆனால் இறந்த துணைக் காவல் அதிகாரியைத் தான் சுடவில்லை. இவ்விதம் தன் நிலைப்பாட்டை, தான் குற்றமற்றவர் என்பதை அம்மனிதன் வெளிப்படுத்துகின்றான். அம்மனிதனின் குரலாக ஒலிக்கின்றது இப்பாடல்.
எரிக் கிளாப்டனை 'கிட்டார்க் கடவுள்' (God of Guitar) என்றழைப்பார்கள். இக்காணொளியை ஒரு முறை பாருங்கள். கேளுங்கள். நிச்சயம் அவர் கிட்டார்க் கடவுள்தானென்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். பாடலுக்கான இணைப்பு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.