பிரான்ஸில் எஸ்.அகஸ்தியரின் 'லெனின் பாதச்சுவடுகள்' நூல் வெளியீடு!
மே 8, 2011 அன்று, மறைந்தும் மறையாத முற்போக்கு எழுத்தாளர் அமரர் திரு. எஸ்.அகஸ்தியர் அவர்களின் 'லெனின் பாதச் சுவடுகள்' நூல் வெளியீடு! ...விரிவான விபரங்கள் கீழே:

மே 8, 2011 அன்று, மறைந்தும் மறையாத முற்போக்கு எழுத்தாளர் அமரர் திரு. எஸ்.அகஸ்தியர் அவர்களின் 'லெனின் பாதச் சுவடுகள்' நூல் வெளியீடு! ...விரிவான விபரங்கள் கீழே:
"மாஸ்' திரைப்படக் கல்லூரியின் குறுந்திரைப்பட விழா எதிர்வரும் சனிக்கிழமை 23-04-2011 அன்று மாலை 4.01 மணிக்கு , தேசிய சினிமாக் கூட்டுத்தாபன அரங்கில் நடைபெறவுள்ளது. கொழும்பு - 7 இலுள்ள 303 பெளத்தலோக மாவத்தையிலுள்ள மேற்படி அரங்கிலேயே மேற்படி விழா நடைபெறவுள்ளது. விரிவான விபரங்களுக்கு .... உள்ளே
சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர். ஈழத்திலே புகழ் பெற்ற கலைஞர்கள் பலர், பிறந்த நாட்டில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து கனடாவைப் புகுந்த நாடாக ஏற்றுக் கொண்டிருப்பதும், அவ்வப்போது தமது ஆத்ம திருப்திக்காகக் கலை நிகழ்ச்சிகளை மேடை ஏற்றிக் கொண்டிருப்பதும் பலரும் அறிந்ததே. அப்படியான ஆர்வமுள்ள கலைஞர்களில் சிலரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நாடகப் பட்டறைகளில் ஒன்றுதான் ‘உயிர்ப்பு’ நாடகப் பட்டறை.
இடம்: Scarborough Civic Centre, Scarborough, Canada.; காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 5.00மணி வரை.
“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் கருத்தாடல் களம் ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்கின்றது.

JOBFAIR 2011 - (1) THURSDAY APRIL 28 - HAMILTON Convention Centre, 1 Summers Lane, Hamilton ON - Please send this info to friends
(2) Thursday May 5 - TORONTO Centennial College Conf. Centre,
(3) Thursday May 19 - Mississauga International Centre
TIME: 10:00AM - 3:00PM
Jobseeker FREE REGISTRATION: http://www.nappcanada.com/attendeeregistration.php
ADMISSION: FREE
PARKING: FREE (Toronto and Mississauga)

காலம்: ஏப்ரல் 16, 2011 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: கனடா 'ஸ்கார்பரோ சிவிக் சென்ரர்' மண்டபம்
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் தனகென்றோர் ஆளுமையினைப் பதித்து , பங்களிப்புச் செய்து வருபவர் வெ.சா. என்று அழைக்கப்படும் திரு. வெங்கட் சாமிநாதன். அவரது கலை, இலக்கியத்துறைப் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் முகமாக வெளிவரும் நூல் 'வெங்கட் சாமிநாதன்: வாதங்களும், விவாதங்களும்.'. பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் மேற்படி நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரில் 30, 2011 அன்று சென்னை தேவனேய பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் முதல் ஒன்பது நூல்களின் அறிமுக விழாவும், வெளியீட்டு விழாவும். விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் முதல் ஒன்பது நூல்களின் அறிமுக விழாவும், வெளியீட்டு விழாவும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில், ஞாயிறு 24-04-2011 மாலை 4.00 மணிக்கு .. மேலதிக விபரங்கள் .... | பகுதி 1 | பகுதி 2
தகவல்: ஜீவகுமாரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கனடாத் தமிழ்க் கலை இலக்கிய மலர் (இதழ்) வெளியீடு!
கனடாத் தமிழ்க் கலை, இலக்கியத்தை வலிதாய் முன்னெடுக்கும் முயற்சியில் மூன்றாவது தோற்றம். சித்திரை - 30- 2011, சனி மாலை 6 மணி.
இடம்: Mid Scarborough Civic Centre
(Close to Kennedy Subway)
காலம்: சித்திரை - 30 - 2011
சனி மாலை 6 மணி
விழாவுக்கான அழைப்பு அனைவருக்கும்.
மேலதிக தொடர்புகளுக்கு
தேவகாந்தன் - 416.458.9426 / டானியல் ஜீவா - 416.500.9016
தகவல்: தேவகாந்தன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அன்புடையீர்! வணக்கம்! றீற்றா பற்றிமாகரனின் சங்கத் தமிழ் நூல்களைப் படித்துச் சுவைப்பதற்கான உதவிநூல். இந்நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம் - இலண்டன் சிவன் கோயில் மண்டபம் 4A,Clarendon Rise, London SE13 5ES; - 24.04.2011 காலம் - 24.04.2011 ஞாயிறு மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை. சங்க இலக்கியத்தின் இன்றைய தேவைகள்” என்னும் கலந்துரையாடல் நூல் வெளியீட்டை அடுத்து இடம்பெறும். திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை முன்னிட்டு இந்நிகழ்வில் ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரனின் “ ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ தத்துவம் தந்த அப்பர் சுவாமிகள்”, என்னும் சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெறும்.
இதில் தாங்களும் கலந்து சிறப்பித்து கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்
விழாக்குழுவினர் தொடர்புகளுக்கு : 01865437397ஃ07877302731
தகவல்: விசாகப்பெருமாள் வசந்தன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அகராதிகள், கலைச்சொற்கள் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் அந்தந்தக் காலக்கட்ட மொழியின் இயல்பிற்கும் ஏற்ற வகையில் வளர்ந்து வரும் துறையாகும். மொழிக்கு இன்றியமையாதது அகராதிகள் என்று கூறினாலும் அதன் காலத்தை உணர்ந்து புதிய புதிய சொல்லாட்சிகளை உருவாக்கித் தொகுத்து நூலாக வெளியிட்டனர். இஃது ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இன்று கணிப்பொறி இணையம் காலத்தில் நாம் இருப்பதால் அதற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சியை நம் செம்மொழித் தமிழ் பெற வேண்டும் என்ற நல்ல நம்பிக்கையில் இணையத்தில் தமிழ் மின் அகராதி என்ற ஒரு பகுதியைத் தமிழ் ஆர்வலர்கள், நூலக உரிமையாளர்கள் தொடங்கி வைத்துள்ளனர். மின் உலகில் தமிழ்மொழி சார்ந்த மின் அகராதிகள் எழுபத்தைந்து (75) உள்ளன. இவைகளின் பணிகள், எந்தெந்த மின் அகராதிகள் தமிழில் உள்ளன என்பதைப் பற்றி பார்ப்போம்.
அன்புடையீர், வணக்கம், புத்தகம் பேசுது ஏப்ரல் இதழ் வெளிவந்துள்ளது. புத்தகம் பெறுவதற்கு சந்தா செலுத்த விரும்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு ரூ.75 அனுப்பவும் இச்சலுகை ஏப்ரல் 23, உலக புத்தகதினம் வரை மட்டுமே. (சந்தா தொகை ரூ.120), அல்லது இந்தியன் வங்கி. ஆழ்வார்பேட்டை 701071066 என்ற தற்போது பாவனையிலுள்ள வங்கிக் கணக்கிலும் Current Account (பாரதி புத்தகாலயம்) செலுத்தலாம்.
puthagam pesuthu <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பார்வையற்றோர் நலனுக்காகக் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND – WFB) என்ற அமைப்பு தனது முக்கியப் பொறுப்புகளில் பார்வையற்றவர்களைக் கொண்டிருப்பது. உரிய ஆதரவும், வாய்ப்புகளும் சமூகத்திலிருந்து கிடைத்தால் பார்வையற்றவர்களால் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும்; சமூக நலனுக்குச் சீரிய முறையில் பங்காற்ற முடியும் என்ற உண்மை குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் முனைப்போடு இயங்கிவரும் இவ்வமைப்பு இந்தக் குறிக்கோளோடு விழிப்புணர்வுக் கண்காட்சிகள் நடத்தியும், பார்வையற்றோர் உரிமைகள், திறமைகள் குறித்த கருத்தரங்குகள் நடத்தியும், வருடாவருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, +2 பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணாக்கர் களுக்கும், பார்வையற்ற ஆசிரியர் பயிற்சியில் முதல் மதிப்பெண் எடுப்பவர், தேசியப் பார்வையற்றோர் நிறுவனம் – பிராந்தியக் கிளை(NATIONAL INSTITUTE FOR THE VISUALLY HANDICAPPED REGIONAL CENTER)சார்பாய் நடத்தப்படும் பயிற்சிவகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் ஊக்கமளிப்பதாய் பரிசுத்தொகை அளித்தும், பல்துறைகளில் சிறந்து விளங்கும் பார்வையற்றத் திறமைசாலிகளுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் சாதனையாளர் விருது வழங்கியும் பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கி வருகிறது. தவிர, பார்வையற்றவர்களுக்கான நன்னலப் பணியில் ஈடுபடுபவர்களையும், பார்வையற்றவர்களின் பிரச்னைகளிலும், பணிகளிலும் பங்கெடுத்து சகமனித நேயத்துடன் இயங்கிவரும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு பார்வையற்றவர்களின் நண்பன்(FRIENDS-OF-THE-BLIND) விருது வழங்கியும், பார்வையற்றோர் குறித்த, மற்றும் பார்வையற்றோரால் படைக்கப்பட்ட எழுத்தாக்கங்களை நூலாக வெளியிட்டும் வருகிறது. அப்படி கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்களில் சில:

பார்க்காதவர்கள் பார்த்து மகிழ்வதற்கென மீண்டும் 5310 Finch Ave East, # 37 (Markham & Finch) பாரதி கலைக்கோயில் அரங்கில் மார்ச் 27, 2011 ஞாயிறு மாலை 6:30 மணிக்கு
திவ்யராஜனின் உறவு
எமது கதை, எமது மொழி, எமது கலைஞர்கள்!
தொடர்புகளுக்கு:
திவ்யராஜன்
416-244 2484 / 416-832 5230
அனுப்பியவர்: க.நவம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'மகாகவி' மார்ச் 2011 இதழ் படியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள். படைப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.
http://issuu.com/vathilaipraba/docs/pdf_feb-mar_11
கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.
phone: 04543 -26 26 86
cell: 96 2 96 52 6 52, 88 70 70 99 63
email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
blog: vathilaipraba.blogspot.com
19-03-2011
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 14வது பௌர்ணமி இரவு. சனிக்கிழமை, 19-03-2011 இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும். இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்) தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)
http://thamizhstudio.com/thodarbukku.php இந்த மாதம் திரையிடப்படும் படங்கள். இந்த மாதம் சேகர் தத்தாத்ரே இயக்கிய "புலிகளின் ரகசியங்கள்" ஆவணப்படமும், ஆண்டோ இயக்கிய "புலி யாருக்கு" ஆவணப்படமும், அஜய் இயக்கிய பினாயக் சென் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படும். (குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)
[
மே15, 2011 - மே 22, 2011 வரை] நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறை சென்னையில் மே 15 முதல் 22 வரை எட்டு நாட்கள் நடக்க இருக்கின்றன.. கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக்கல்வியை கிராமப்புற மாணவர்கள் பெறவேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு, முதலியவை கற்றுத் தரப்படுகிறது. ஆசிரியர்கள், வழக்குரைஞ்கர்கள் ,பொறியாளர்கள், டாக்டர்கள் முதலியோர் இந்த கோடைகால பயிலரங்கத்தில் கலந்து கொள்ளலாம்.இறுதிநாள் மாணவர்களே குறும்படம் எடுக்கலாம். உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு. பட்டறையில் 50 குறும்பட / ஆவணப்படங்களும்,உலகப் புகழ் பெற்ற 7 திரைப்படங்களும் திரையிடப்படும்.பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்..
தொடர்புக்கு:ப.திருநாவுக்கரசு,
block12 /28 ராணி அண்ணா நகர்,கே.கே
நகர்,சென்னை-78.
பேசி:9444484868 /9842210538 .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
['நிகழ்வுகள்' பகுதிக்காக வந்த சில தகவல்கள் தவறுதலாக விடுபட்டு விட்டன. அவ்விதம் விடுபட்டவைகளில் இத்தகவலுமொன்று. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். தவறுக்கு வருந்துகின்றோம் - பதிவுகள்] நாள்: சனிக்கிழமை (12-03-2011). இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
['நிகழ்வுகள்' பகுதிக்காக வந்த சில தகவல்கள் தவறுதலாக விடுபட்டு விட்டன. அவ்விதம் விடுபட்டவைகளில் இத்தகவலுமொன்று. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். தவறுக்கு வருந்துகின்றோம் - பதிவுகள்] 'சென்ற ஆண்டு பங்குனி சித்திரை மாசங்களில் வரலாறு காணாத வெப்பம் எம்மை வாட்டி வதைத்தது. பின்னர் 62 வருடங்களுக்குப் பின்னர் சென்ற மாதம் கொழும்பில் வெப்ப நிலை 18 பாகையாகக் குறைந்து கடும் குளிரில் துன்பப்பட்டோம். இப்பொழுது வடக்கு கிழக்கு வடமத்திய மாகணங்களில் கடும் மழை, வெள்ளம் என அனர்த்தங்கள் தொடர்கின்றன. மலையகத்தில் மண்சரிவுகளால் பலர் மாள்கிறார்கள். பூகோளம் வெப்படைதலால் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்களை இவற்றின் ஊடாக நாம் அனுபவத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. துன்பத்தில் ஆழவும் வைக்கிறது. ஆனால் இவை பற்றியெல்லாம் முன்னோக்கிப் பார்த்து, கடந்த 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேட் உரையாற்றி இருக்கிறார்.

'உயிர்ப்பு' நாடகப் பட்டறையின் 3வது நிகழ்வு. ஏப்ரல் மாதம் 9ந்திகதி மாலை 6:00 மணிக்கும், 10ந்திகதி மாலை 4:00 மணிக்கும் 1785 'பிஞ்ச் அவென்யு' மேற்கில் அமைந்துள்ள 'யோர்க் வூட் ' நூலக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 'அணங்கு', 'காலப்பயணம்', 'போருழுத நிலம்' மற்றும் புலம் இழந்த போதும் பூச்சூடிக்கொள்வோம் (இசை நடனம்)' ஆகிய நாடகங்கள் நடைபெறவுள்ளன. விரிவான தகவல்களுக்கு .. இங்கே
தகவல்: கறுப்பி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பெப்ரவரி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை (15-02-2011) காலை 10.00 மணிக்கு தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி வளாகத்தில் கணனிக் கற்கைக்காக அமைக்கப்பட்ட விசேடமண்டபத்தின் திறப்புவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இக்கணனிக் கற்கை நிலையத்திற்குத் தேவையான தொகை ரூபா 25 இலட்சம் பெறுமதியான 30 கணனிகளையும் அதற்குரிய தளபாடத் தேவைகளையும் கனடா பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கியிருந்தது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மகாஜனா கல்வி அபிவிருத்தி நிறுவனம் முன்னின்று உழைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்கத் தலைவர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார். மகாஜனக்கல்லூரி பழைய மாணவர்கள் கடல் கடந்து சென்றாலும் கல்லூரி மீது அவர்கள் வைத்திருக்கும் ஈடுபாட்டை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும், குறிப்பாக கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் காலத்திற்கேற்ற இந்த உதவியை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதோடு மட்டுமல்ல அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கல்லூரி அதிபர் தனது உரையில் குறிப்பிட்டார். நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கற்றுக் கொள்வதில் மகாஜனாக் கல்லூரி மாணவர்கள் என்றும் பின் நிற்கக்கூடாது என்ற கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஆதங்கத்தை நிறைவேற்றி வைப்பதில் தான் பெருமை அடைவதாகத் கனடா பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. சாந்திநாதன் தனது பதில் உரையில் குறிப்பிட்டார். இப்படத்தில் இக்கல்லூரி அதிபர் சிவமலர் அனந்தசயனன், நாகமுத்து சாந்திநாதன் ஆகியோரைக் காண்கிறீர்கள்.
Kuru Aravinthan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த ந.சுசீந்திரன் அவர்கள் “ இடப்பெயர்வு இலக்கியம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்த்துறை மாணவியின் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் அவர்களின் தலைமை உரை இன்றைய பாடத் திட்ட மாறுதல்களும் அவற்றின் தேவைகளும் அதற்கு படைப்பாளிகளின் ஆதரவின் தேவை பற்றியும் உரையாற்றினார்.

பாரதி இலக்கிய சங்கத்தின் செயலர் திலகபாமா ந. சுசீந்திரன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அடுத்து நடந்தேறிய சுசீந்திரனின் உரையில், மிக முக்கிய இடப் பெயர்வுகள் பற்றியும் அவற்றின் தாக்கம் இலக்கியங்களின் பிரதிபலிப்பது பற்றியும் விரிவாக உரையாற்றினார். அவற்றில் புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கும் புகலிட இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும், அதனால் வரைபடங்களை அழித்துக் கொண்டு ஒரு புது வெளி உருவானதின் நன்மைகளையும் , வெளிநாட்டு இலக்கியங்களை மூலமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் அரிய வாய்ப்புகள் கிடைத்திருப்பது பற்றியும், சமூக கலாசார மாற்றங்களை மக்கள் எதிர்கொண்டதை இலக்கியங்கள் பிரதிபலிக்கக் கூடியதாய் இருப்பதைப் பற்றியும் உதாரணங்களோடு பேசினார், அவரது உரையைத் தொடர்ந்து மாணவர்களது பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்த கலந்துரையாடலோடு நிகழ்வு இனிதே முடிந்த்து
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

39வது இலக்கியச் சந்திப்பு கனடாவில் (ரொறொன்டோவில்) ஒக்டோபர் மாதம் 8ம், 9ம் திகதிகளில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்அஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. தொலைபேசி எண் - 647 351-2213. மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்