கனடாவில் இயங்கும் சுயாதீன – கலை திரைப்படக் கழகம் வருடந்தோறும் மாற்று ஊடக முயற்சிகளில் தீவிர பங்களிப்பவர்களுக்கு விருது வழங்கி வருகின்றது. பி.விக்கினேஸ்வரன், பாலேந்திரா, டொமினிக் ஜீவா வரிசையில் இவ் வருடம் திருமதி வசந்தா தேவி டானியல் இவ் விருதைப் பெறுகின்றார். அனைவராலும் வசந்தா டானியல் என அறியப்பட்ட இவர் தனது ஒன்பவாவது வயதில் பரத நாட்டியத்தை கற்க ஆரம்பித்தார். திரு. ஏரம்பு சுப்பையா, திருமதி. திரிபுரசுந்தரி யோகானந்தன் ஆகியோர் இவரது ஆரம்ப கால குருக்கள். இடையில் திருமதி. வஜீரா சித்திரசேனா கண்டிய நடனமும் கற்றார். பின்னர் இவர் இந்தியாவில் பத்மஸ்ரீ கே. என். தண்டாயுதபாணி பிள்ளையிடம் முறையாக பரத நாட்டியம் கற்றார். நாடு திரும்பியவர் 1968ம் ஆண்டில் இருந்து பரதநாட்டிய ஆசிரியராக உள்ளார். தமிழ் மக்கள் பல இன்னல்களை சந்தித்த நேரங்களில் மக்களது அவலங்களை நாட்டிய நாடகமாக வெளிப்படுத்தினார். பாரதியார் பாடல்களை மையப்படுத்திய பல நாட்டிய நாடகங்களை இவர் படைத்துள்ளார். இக் கால கட்டத்தில் இவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
கனடாவில் 'ரொரண்ரோ'வில் தமிழர் வகை துறை வள நிலையத்திற்காக (தேடகம்) மேழி, பெண் கொடுமைகளுக்கு எதிராக 'சொல்லாத சேதிகள்', யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்காக 'உயிர்ப்பு' போன்ற நாட்டிய நாடகங்களை மேடையேற்றினார். பின்னாட்களில் பல புதிய முயற்சிகளை மேற் கொண்டு நடனத்தாலும் பல வித்தியாசமான செய்திகளை புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தினார். பஞ்சபாதங்களை மையமாகக் கொண்ட நுடநஅநவெள என்ற நாட்டிய நாடகம் ஒரு சிறந்த உதாரணம். இசையை மையமாகக் கொண்ட மிகக் கடினமான 'ராகம் தாளம் பல்லவி' இவரது திறமையின் மறறொரு பரிமாணத்தையும் ஒரு படைப்பாளியின் இயல்புத் திறனையும் வெளிப்படுத்தியது. இவ்வாறான முதல் முயற்சி அடையார் லக்ஷ்மன் அவர்கள் படைத்துள்ளார். அதன் பின்னர் திருமதி வசந்தா டானியலே படைத்துள்ளார். இசையின் பல பரிமாணங்களை நாட்டியத்தில் மிக அற்புதமாக திருமதி வசந்தா டானியல் படைத்துள்ளார். அம்பேத்காரை மையமாகக் கொண்ட 'எச்சமாய் பதிந்து நிற்கும் காலடிகள்' என்ற நாட்டிய நாடகத்தை மேடையேற்றினார். இதனை யோர்க் பல்கலைக் கழகமும் அம்பேத்கார் மையமுக்காகவும் மேடையேற்றினார். சுமார் 70க்கும் மேற்பட்டோர் இந் நாட்டிய நாடகத்தில் பங்கேற்றிருந்தனர். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு ) மேடையேற்றினார்.
இது வரை இவரது மாணவர்களில் 40 மாணவர்களே அரங்கேற்றம் செய்துள்ளனர். வாரத்துக்கு ஒரு அரங்கேற்றம் நடக்கும் ரொரண்ரோவில் இப்படி ஒருவரா? ஊயயெனய வில் பயிலும் மாணவர்கள் பலர் நாட்டியத்தை ஒரு அந்தஸ்து கலையாகவே மேற்கொள்கின்றனர். அதன் அங்கீகாரமாகவே அரங்கேற்றம் நடைபெறுகின்றது. இதன் வியாபாரப் பெறுமதி சுமார் 25,000 – 35,000 டொலர்கள். இவரது மாணவர்கள் அனைவரும் முறையாக ஆட வேண்டும். அத்துடன் நாட்டியம் பற்றிய அறிவும் அதிகமிருக்க வேண்டும். அரங்கேற்றம் செய்பவர்கள் அங்க சுத்தம், அடவு சுத்தத்துடன் ஆட வேண்டும். இதனை இவரது மாணவர்களிடம் காணலாம். பல்வேறு பட்ட நாட்டிய நாடகங்களை இவர் மேடையேற்றுவதனால் இவரது மாணவர்களும் சமூக பிரச்சினைகளையறிந்தவர்களாக வெளியே வருகின்றார்கள். இது நிச்சயமாக மிக முக்கியமான ஒரு சமூக பங்களிப்பாகும். இவரது மாணவர்கள் பலர் இலங்கை இந்தியா உட்பட்ட பல நாடுகளில் நாட்டிய ஆசிரியையாக உள்ளார்கள்.
பந்த நல்லூர் பாணியை தனது பரத நாட்டியத்தில் மேற்கொண்டாலும் நாட்டிய நாடகத்தில் ஒடிசி, கத்தக், கதகழி, குச்சிப்புடி, கண்டியன் நடனம் போன்றவற்றை உள்ளடக்கினார். சமூகத்தில் புரையோடியிருக்கும் பல ஏற்றத் தாழ்வுகள், ஒடுக்கு முறைகள், பெண்ணடிமைத்தனம் போன்ற பல பிரச்சினைகளை தமது நாட்டியத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பரத நாட்டியத்தில் மிக அதிக தேடல் மிகுந்தவராக இவருள்ளதால் இப் பிரச்சினைகளின் வெவ்வேறு பரிமாணங்களை பல் வேறு வடிவத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய வர்த்தக நுகர்வுக் கலாச்சாரத்தின் எதிர் நிலையில் இருந்து பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களையளித்துள்ளார்.
இவர் வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெற்றோர் திரு.திருமதி இளையதம்பி தெய்வேந்திரம் வியுவல் ஆவார்கள். திருமதி வசந்தா டானியலுக்கு இவ் விருதை சுயாதீன கலை திரைப்பட கழகம் வழங்குவதன் மூலம் கழகம் பெருமைப்படுகின்றது என கழக இயக்குனர் திரு. ராம் சிவதாசன் தெரிவித்தார். பரதநாட்டியம் என்ற கலைவடிவத்தை மனிதநேயக்குரலாகவும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கலை வடிவமாகவும் மாற்றிய பெருமை திருமதி வசந்தா டானியலைச் சேரும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.