பொக்கிஷம் - ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் - ஆவணப்படங்கள்!


நண்பர்களே, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் போன்ற தமிழின் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமைகளை கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட ரவிசுப்ரமணியன் அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார். என்னிடம் ஜெயகாந்தன் ஆவணப்படத்தை பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்த மூன்று ஆளுமைகளின் ஆவணப்படத்தையும் ரவிசுப்ரமணியன் தன்னுடைய இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த மூன்று ஆவணப்படங்களையும் நான் பொக்கிஷம் என்றே சொல்வேன். இந்த ஆவணப்படங்களை இலவசமாக ரவிசுப்ரமணியன் அவர்கள் இணையத்தில் பார்க்கலாம். எனவே இனியும் யாரும் இந்த மூன்று ஆவணப்படங்களையும் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. மேலும் ரவிசுப்ரமணியன் மிக சிறந்த வாய்ப்பாட்டு கலைஞர். தன்னுடய குரலில் மிக முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை வாய்ப்பாட்டாக உருவாக்கியுள்ளார். அதில் சில பாடல்களும் இந்த இணையத்தில் கேட்க கிடைக்கிறது. தவறவிடாதீர்கள்.



This mothers day, Ranjini and her two sons, aged 6 and 8, faced their fourth night of indefinite detention - without charge, without trial, without appeal. Ranjini was verified as a refugee last year after fleeing the civil war in Sri Lanka. On Thursday night, she was told to pick up her kids from school in Melbourne and meet Department of Immigration officials. ASIO had given her an averse security finding. They were flown to Sydney and detained in Villawood detention centre, where they will stay indefinitely. They have no right of appeal. 46 other refugees are currently detained under the same circumstances. On Friday morning, one of them, Kumar, attempted suicide in a Melbourne detention facility. No matter what, we mustn't allow anyone - let alone children - to be detained indefinitely without charge, trial or appeal. A Parliamentary Committee has already recommended that there should an independent review and appeals process for ASIO findings - a basic principle of justice.
யுத்தம் நிறைவெய்தி மூன்றுவருடங்களாகிறது. நமது கண்ணிர்த்துளிகளினதும் செந்நீர்த் துளிகளினதும் பெறுமதி எதனாலும் அளவிட முடியாதது.மே 17 தமிழர் வாழ்வில் இருண்ட நாள். கவிதைகளால் ஒரு நினைவு கூர்தல் இது. மானமுள்ள தமிழரின் மனசாட்சிமிக்க பதிவு. உங்கள் வருகை தமிழர் தன்மானமிழக்கவுமில்லை தாழ்ந்து போகவுமில்லை என்பதன் எடுத்துக்காட்டாகட்டும். இன்னும் இந்த நாட்டில் கவிதை பாட மட்டுப்படுத்தப்பட்ட உரிமையாவது எச்சமிருக்கிறது. -
முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இன அழிப்பின் பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.


இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்
'படிப்பகம்' இணையத்தளத்தை அண்மையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் பயனுள்ள தளம். மார்க்சிய நூல்களையெல்லாம் இங்கு நீங்கள் வாசிக்கலாம். மிகவும் அரிய நூல்களான மார்க்சின் 'மூலதனம்' (தமிழில்), மார்க்ஸ்-எங்கெல்ஸ்ஸின் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' உட்படப் மேலும் பல நூல்களை நீங்கள் வாசிக்க முடியும். இதுதவிர ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகள், அவற்றின் அறிக்கைகள், புலம் பெயர்ந்த தமிழிலக்கிய உலகில் உருவான சஞ்சிகைகள் போன்ற பல ஆக்கங்களை, தகவல்களை இங்கு ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். இங்கு ஆக்கங்களை வாசிப்பதற்கு நீங்கள் உங்களை இத்தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். கட்டணம் எதுவுமில்லை. அதன்பின் ஆக்கங்களை வாசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் செல்ல வேண்டிய இணையத்தள் முகவரி: 
தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த நிறுவனத்தின் மூலம் அண்மையில் பூங்காவனம் எட்டாவது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சஞ்சிகையின் இதழ்களில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன், ஆக்கங்களை அனுப்பிவைக்க வேண்டும். இச் சஞ்சிகைக்கான பவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும். இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது சந்தாவாக 500 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்துகொள்ளலாம்.
- ஏப்ரில் 25, 2012- மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கடந்த 20 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு கவலையுறுகிறோம். தென்தமிழீழம் கல்முனை நகருக்கு அருகேயுள்ள பாண்டிருப்பில் 1939 ஆம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம் பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960 ஆம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் 'நீர்வளையங்கள்' [தமிழியல் 1988], 'சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்' [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் அடிப்படையில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும் அழகிய சிறுகதைகள் பலவும் கையெழுத்துப் படியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.
ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960ம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் ரீதியில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும், அழகிய சிறுகதைகள் பலவும், கையெழுத்துப் பிரதியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.[ நன்றி: 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









