பெண்மொழியும் புனைவும் - முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -
முன்னுரை
வரலாறு என்றவுடன் நினைவுக்கு வருவன போர்கள் தான் அதிகாரம் கொண்ட மனிதனான ஆணை எதிர்த்து போர்கள் மீண்டும் ஒரு அதிகாரத்தை நிறுவுவதற்காகவே நிகழ்கின்றன இத்தக அதிகாரம் அரசின் வழி மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களிலும் அதாவது குடும்பம் மதம் மொழி கலை பண்பாடு அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது எனலாம் அவ்வகையில் தமிழ் இலக்கியச் சூழலில் பெண்ணின் நிலைப்பாடு குறித்த பெண்ணிய சிந்தனைக்கு தமிழ் சூழல் சார்ந்த பெண் பதிவுகளின் வரலாற்று தேவை இன்றைக்கு மிக அவசியமான ஒன்றாக உள்ளது அவ்வகையில் தமிழ் சூழலில் பெண்ணிய சிந்தனைகள் நிலை கொண்டதற்கானப் பெண் நிலை குறித்த சிந்தனைகள் எவை எவை என்பதை அவற்றின் இன்றையத் தேவையை குறித்தும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பெண்ணியம்
தமிழ் சூழலில் பெண்ணிய சிந்தனை தன் பயணத்தைத் தொடர மேலைநாட்டு நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற கொள்கைகளும் காரணம் எனலாம். பஞ்சகாலத்தில் முன் வைத்து கட்டவிழ்ப்புக் கொள்கையின் செல்வாக்கு பெண்ணே சிந்தனை தளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது எனில் மிகையகாது. ஆரம்பத்தில் பெண்ணியம் பெண் உரிமை, பெண் விடுதலை (அரசியல், பொருளாதாரம்) என்ற ஒற்றை அடையாளத்தில் செயல்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு இன்றைய சூழலில் சாதி,மத இன மாறுபாடுகளைத் தாண்டிய சமூக மாற்றத்தை முன்வைக்கிறது. அவ்வகையில் இன்று “பெண்ணிய மொழியை” முதன்மைப்படுத்தி பெண் மரபினத்தின் (உயிரியல்) அடையாளத்தை முன் வைப்பதாக தன் இயங்கியலை அமைத்துக் கொண்டுள்ளது .