- Atlantis Submarines Aruba - நீர்மூழ்கிப் பயணம் -

பூகோளரீதியாகத் தென் அமெரிக்காவில் இருக்கும், நெதர்லாந்தின் ஒரு பகுதியான Aruba, One Happy Island என்ற அவர்களின் sloganக்கு ஏற்ப மகிழ்ச்சியான ஒரு தீவாகவே தெரிந்தது. பிச்சைக்காரர்களையோ, வீடற்றவர்களையோ அங்கு காணவில்லை. ஆனாலும், பூமியிலேயே மிகப் பெரிய கடலான கரேபியன் கடலால் சூழப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் தாவரங்களைக் காண்பது அருமையாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கடலிலிருந்து ஆவியாகும் நீருக்கு என்ன நடக்கிறது, ஏன் அது மழையாகப் பொழியவில்லை என்பதே என் கேள்வியாக இருந்தது. பதிலை அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடியபோதே, இங்கு வீசும் காற்று (trade winds) வளியை மேலெழவிடாது கீழேயே வைத்திருப்பதால் அது முகில் உருவாக்கத்தையும் மழையையும் தடைசெய்கிறதென அறிந்தேன். அதேவேளையில் ஈரப்பதனையும் அது அகற்றுவதால், வெக்கையைத் தாங்கமுடியாத நிலை உருவாகாமலும் தடைசெய்கிறது.

வெக்கை மிகுந்த, மழை மிகக் குறைந்த, வேகமான காற்று வீசும் வரட்சியான இந்தக் காலநிலை Arubaஇன் தரைத்தோற்றத்தை மணல் மேடுகளாகவும், மண்ணரிப்பினால் உருவான தட்டையான மேட்டு நிலங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்ட தாவரங்களற்ற வெற்றுநிலமாகவும் மாற்றியுள்ளது. எனினும் இதன் தரைத்தோற்றத்துக்கு காலநிலை மட்டுமன்றி, குடியேற்றங்களை மேற்கொண்ட ஸ்பானியர் அங்கிருந்த காடுகளை அதிகளவில் அழித்தமையும், தீவின் வளங்களைச் சுரண்டியமையும்கூடக் காரணம் எனக் கூறப்படுகிறது.

வெய்யிலில் திரிந்தது போதும், ஒரு நாளைக்கு உள்ளகத்திலுள்ள விடயங்களைச் செய்வோமென முடிவெடுத்தோம். அதன்படி அடுத்த நாள் Atlantis Submarines Aruba என்ற அமைப்பினருடன் கடலுக்கு அடியிலுள்ள உயிரினங்களைப் பார்க்கும் பயணத்தை ஆரம்பித்தோம். கப்பல் ஒன்றில் ஆழக்கடல்வரை போய் நீர்மூழ்கிக் கப்பலொன்றில் ஏறினோம். Flamingo Beach அருகே கப்பல் சென்றபோது ஓரிரு Flamingoகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், அந்தக் கடற்கரையின் இளம் சிவப்பு மணலைப் பார்க்கமுடியவில்லை. அந்த இளம்சிவப்பு மணலைப் பார்க்கவிருப்பமிருந்தாலும், Flamingoகளின் செட்டைகளை வெட்டிபோட்டு அங்கு அவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்களாம் என்றபோது, அதைப் போய்ப்பார்ப்பதற்கு எங்களுக்கு மனம் வரவில்லை.


                           - வண்ணாத்துப் பூச்சி -

கப்பலில் போய்க்கொண்டிருந்தபோது அந்த வழிகாட்டி Aruba பற்றிய பல விடயங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார். அங்கிருக்கும் பலரும் பல மொழி பேசக்கூடியவர்களாக இருப்பது இன்னொரு சிறப்பெனலாம். கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு வராமல் இருப்பதற்காக மின்சார சக்தியைப் பயன்படுத்தியே நீர்மூழ்கிக் கப்பல் இயங்குகிறது என்பது உள்ளடங்கலாகச் சூழலில் அவர்கள் எடுக்கும் கரிசனைகள் பற்றியும் அவர் கூறினார். இலங்கையும் சுனாமியால் பாதிக்கப்பட்டதாலோ என்னவோ, அவர் கூறியவற்றில், சுனாமி பற்றிக் கூறிய தகவல் என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது சதுப்புநிலத் தாவரமான mangrove என்ற தாவரத்தின் அடர்த்தியான வேர்களுக்கும் கிளைகளுக்கும் அலைகளின் உயரத்தையும் வேகத்தைக் குறைக்கும் சக்தியுள்ளது என்றும், கடலோரங்களிலும் கடலுக்குள்ளும் அவை நிறையவே காணப்படுவதால் Arubaஇல் சுனாமி வருவதற்கான ஆபத்து வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

நீர்மூழ்கிக் கப்பல் கடல்மட்டத்துக்குக் கீழாக 130 அடிவரை சென்றது. விதம்விதமான, வெவ்வேறு நிறங்களைக் கொண்ட மீன் கூட்டங்களை அவற்றின் வாழிடத்தில் பார்த்தது மன அமைதிதரும் இனிய அனுபவமாக இருந்தது. பின்னர் butterfly sanctuary இல் விதம்விதமான வண்ணத்துப்பூச்சிகளைப் பார்த்தோம். வண்ணத்துப்பூச்சிகள் முட்டைகள் இட்டு, பின் முட்டைகளிலிருந்து குடம்பிகள் தோன்றி, அவை கூட்டுப்புழுக்களாகி முடிவில் வண்ணத்துப்பூச்சிகளாகும் அவற்றின் வாழ்க்கைவட்டம் தொடர்வதற்கு உதவிசெய்வதற்காக அங்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் California light houseக்குப் போனோம் பிரித்தானிய நீராவிக் கப்பலான S.S. California என்ற கப்பல் 1891இல் மூழ்கிப்போனதுதான், 1914இல் அந்த வெளிச்சவீட்டைக் கட்டுவதற்குத் தூண்டியாக இருந்தது எனவும் அதனால் அது California light house என அழைக்கப்படுகிறது எனவும் அறிந்தோம். அதில் ஏறிநின்று பார்த்தபோது panoramic view இல் Arubaஐப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

                           - இரவு Infini என்ற உணவகத்தில்வ்.. -

இரவு Infini என்ற உணவகத்தில் tasting menuக்குப் போனோம். பெயருக்கு ஏற்றமாதிரி அந்த அனுபவம் எல்லைக்குள் அடங்காத அதியுன்னத அனுபவமாக இருந்தது. இந்தப் பயணத்துக்கான செலவு யாவும் மகளுடையது என்பதால் இந்த உணவு அவவின் பிறந்தநாளுக்கான என் அன்பளிப்பு என நான் முடிவுசெய்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, உணவு பரிமாறப்பட்ட விதமும், உணவின் ருசியும் ஒரு எல்லைக்குள் அடங்காததாக இருந்தது. எங்களுக்கு முன்பாகவே உணவைத் தயார்படுத்தி, அதில் என்ன என்ன உள்ளன என்பதையும், எப்படி அவை தயாரிக்கப்பட்டதென்பதையும் விளங்கப்படுத்தினார்கள். 8-course அசைவச் சாப்பாடும், சைவச் சாப்பாடும் ஒரே மாதிரியான தோற்றத்திலும் வடிவத்திலும் செய்யப்பட்டிருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரே ஒரு விடயம் என்னவென்றால், எனக்குப் பிடித்த jerk chicken கரேபியன் உணவாக இருந்தாலும், இங்கு ரொறன்ரோவில் இருக்குமளவுக்கு ருசியாக இருக்கவில்லை. 21 பேர் உண்ணக்கூடிய இடத்தில் அன்று 18 பேர் மட்டுமே இருந்தோம்.

எங்கள் அருகேயிருந்த 73 வயதான ஒரு US மருத்துவர் தானும் மனைவியும் கடந்த 30வது வருடமாக இதே உணவகத்துக்கு வந்துகொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு முறையும் தங்களை அவர்கள் அசத்துவதாகவும் கூறினர். அத்துடன், வருடத்தில் அவருக்குக் கிடைக்கும் ஆறு கிழமை லீவில் ஒரு கிழமை எப்போதும் Arubaஇல் தான் கழியுமாம் என்றும், குடும்பமாகப் போயிருந்த private islandஐவிட Aruba சிறந்ததாக இருக்கிறதென்றார்.

                      - பேபி கடற்கரை ,  Baby Beac -

மறுநாள் Baby Beachக்குப் போனோம். ஆழம்குறைந்த அலைகள் அதிகமற்ற அமைதியான கடல் என்பதால்தான் அது அந்தப் பெயரில் அழைக்கப்படுகிறதாம். ஆனால் நாங்கள் போனபோது காற்றின்வேகம் அதிகமாக இருந்ததாலோ என்னவோ கடல் அமைதியாக இருக்கவில்லை. எங்களுடன் சேர்ந்து ஒரு கடல் ஆமையும் கடலுக்குள் இருந்தது. கடல் ஆமைகள் சுவாசிக்காமல் நீண்டநேரம் நீருக்குள் இருக்குமாம், ஆனால், அந்த ஆமை சுவாசிப்பதற்காகவோ என்னவோ அடிக்கடி நீரின் மேல் வந்தது. அப்படி அது மேலே வரும் ஒரு மில்லி செக்கனில் வேகமாகப் போய் அதை அருகில் பார்த்து, நாங்கள் உள்படப் பலர் பரபரப்படைந்தோம். எங்களருகே இருந்த ஓர் பெண் தான் 20 வருடங்களாக, வருடாவருடம் Arubaவுக்கு வருவதாகக் குறிப்பிட்டார். இப்படியாகப் பலர் மீளமீள வருபவர்களாகவே இருந்தனர்.

மிகப் பொருத்தமான இடத்திலிருக்கும் தீவு ("well situated island") என்பது 32 கிமீ நீளத்தையும் 10 கிமீ அகலத்தையும் 179 km2 பரப்பளவையும் கொண்டிருக்கும்
Arubaவின் பெயருக்கான அர்த்தமாம். வருமானத்துக்காகச் (75%) சுற்றுலாத் துறையிலேயே தங்கியிருக்கும் இது முக்கியமாக வட அமெரிக்கர்களின் சுற்றுலாத் தளமாக இருப்பதற்கு அதன் அமைவிடம் காரணமாக உள்ளது என்பது உண்மையே.

பின்னர் செயலற்ற எரிமலையாக இருக்கும் Hooiberg எனப்படும் 500க்கும் மேற்பட்ட படிகளைக் கொண்ட கிட்டத்தட்ட 500 அடி உயரமான கூம்புவடிவ குன்றொன்றில் ஏறி Arubaஐ மீளவும் panoramic viewஇல் பார்த்தோம். அப்போது கனடாவிலிருந்து Arubaவுக்குப் புலம்பெயர்ந்திருக்கும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவரைச் சந்தித்தோம். ரொறன்ரோப் பாடசாலையை விட்டுச்சென்றது எப்படியிருக்கிறதெனக் கேட்டேன். தாய்க்கு ரொறன்ரோ பிடிக்கவில்லை என்றும், அங்குள்ள international schoolஇல் தான் படிப்பதாகவும் கூறிய அவர், தன் வகுப்பில் 18 பேர்தான் உள்ளனர் என்றும், Arubaஇல் மூன்று மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன என்றும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கதைத்தார். அன்றிரவு Omakase Japanese Sushi Barஇல் சாப்பிட்டோம்.

Arubaஐ விட்டு வெளியேற முதல் நாள் Manchebo beach இல் நேரத்தைச் செலவழித்தோம். எவ்வளவு வெக்கையாக இருந்தாலும் அங்குள்ள கடற்கரைகளிலுள்ள மணல் வெப்பமடைவதில்லை. அதற்குக் காரணம் அந்த மணல்சிதைவடைந்த முருகைக்கல் பாறைகள் (coral and shells) மற்றும் சிப்பிகளால் ஆனதுதான் காரணமெனத் தெரிந்தது, அவை ஒளியை உறிஞ்சுவதற்குப் பதிலாக அவை தெறிக்கச்செய்கின்றன.

                         - கலங்கரை விளக்கம், அருபா -

அங்கிருந்தபோது ஒரு தம்பதிகள் எங்களுடன் பேசினர். தாங்களும் கனேடியர்கள் என்றும் hotel ஒன்றில் இருப்பதாகவும், காத்திருந்து பஸ்சில்தான் எல்லாவிடமும் போய்வருவதாகவும் சொன்னார்கள். நாங்கள் வெளியேரத் தயாரானபோது அவர்களும் தயாரானதால் அவர்களை அவர்களின் ஹோட்டலில் இறக்கிவிடவா என நான் கேட்டேன். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். அப்படியாகக் காருக்குள் மேலும் பேசிக்கொண்டோம். அந்த வீதிகளில் மகள் கார் ஓட்டும் விதம் பற்றியும் அவர்கள் பாராட்டினார்கள். பின்னர் அவர்களை இறக்கிவிட்டு எங்களிடன் இருப்பிடத்துக்குப் போய் உடை மாற்றிக்கொண்டு இரவுணவுக்காக Olivia Mediterranean Restaurantக்குப் போனோம். அந்த உணவகம் உள்ளகத்தில் நிறையத் தாவரங்களுடன் மிக அழகாக இருந்தது. 2013இல் Dominican Republicக்குப் போயிருந்தபோது, resortஇல் இருந்ததால் பல்வகையான cocktailகளை இலவசமாகச் சுவைக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது, அதில் Sex on the beach ருசியாக இருந்ததாக ஞாபகம் இருந்தது. இன்றைக்குக் கடைசி நாள் ஏதாவது cocktailஐச் சுவைத்துப் பாருங்கள் என்று மகள் சொன்னபோது அதை மீள ருசிக்கலாமென நினைத்தேன், ஆனால், அது சுவையாக இருக்கவில்லை. அதைப் பரிமாறிய பெண் எப்படியிருக்கிறது எனக் கேட்டபோது, ‘பரவாயில்லை, நல்லாயிருக்கு’ என்றேன், ஆனால் என் முகக்குறிப்பு நான் சொல்வதற்கும் உணர்வதற்கும் ஒற்றுமை இல்லாததை அவருக்குச் சொல்லியிருக்கிறது. சரி இதை விட்டுவிடுங்கள் என எடுத்துச்சென்றவர் Mojito என்ற cocktail ஒன்றைக் கொண்டுவந்துதந்து இதை ருசித்துப்பாருங்கள் என்றார். அது மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருந்தது. முகக் குறிப்பறிந்து வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் சேவைவழங்குநரும் இருக்கிறார்கள் என மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்த நாள் விமானநிலையத்துக்குப் போக முன்பாகக் காரைச் சுத்தம்செய்யச் சென்றபோது, காரின் வெளியேயோ, உள்ளேயோ அசுத்தம் எதுவுமில்லை என்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொருமுறையும் நாங்கள் கவனமாக மணலைத் தட்டிப்போட்டு காருக்குள் ஏறியிருப்பதைப் பாராட்டிக்கொண்டு, பின்னால் பார்த்தால் முதல் நாள் ஏற்றிக்கொண்டுபோய் விட்டவர்கள், அவர்களின் waterproof சப்பாத்துக்களை தங்களுடன் எடுத்துச்செல்ல மறந்திருக்கின்றனர் என்பது தெரிந்தது. அதனால், நாங்கள் அப்படி ride கொடுத்தது பற்றிச் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக கவலைப்பட்டிருப்பார்களே என்றிருந்தது. அவர்கள் சொன்ன விடயங்களை வைத்து LinkedInஇல் அந்தப் பெண்ணின் முழுப்பெயரைக் கண்டறிந்தார் மகள். அந்தச் சப்பாத்துக்களை எடுத்துச்சென்று அவர்களின் ஹோட்டல் வரவேற்பாளரிடம் கொடுத்தோம். அப்போது சில விபரங்களை வைத்து ஒருவரைச் சமூக ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக இருப்பது எவ்வளவு தூரம் அபாயமானதாகவும் இருக்கலாமென்றும் நானும் மகளும் பேசிக்கொண்டோம்.

காரை வாடகைக்குத் தந்தவருக்கு அதைச் சுத்தமாகக் கொடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. விமானநிலையத்துக்குப் போகும்போது எங்களின் காரில் எங்களுடன் வந்தவரும் கனேடியர்தான். ஒரு கிழமையாக அங்கிருக்கும் அவர், பிள்ளைகளும் பெற்றோரும் வருகிறார்களாமென விமானநிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். குடும்ப ஒன்றுகூடலுக்காக 20 வருடங்களாக அங்கு போய்க்கொண்டிருக்கிறார்களாம் என்றார்.

மகளுடன் போனதால் பயணம் நன்கே அமைந்திருந்தது, சுவைக்காத உணவெல்லாம் சுவைக்கக்கிடைத்தது, புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். ஆனால் மற்றவர்கள் போல் மீளமீளப் போவேனா என்றால் இல்லை என்பதுதான் என பதிலாக இருக்கும். உலகில் பார்ப்பதற்குப் பல இடங்கள் உள்ளன. வரும்போது எங்களுக்குக் கார் தந்த நபர் வாங்கிக்கொண்டு போகச் சொன்னா Papaya Courmet Hot sauceஐயும் வாங்கிக்கொண்டு வந்தோம் (உண்மையிலேயே மிகவும் சுவையாகத்தானிருந்தது). திரும்பிவந்திருந்தபோது, இரவு வெளிச்சத்தில் ரொறன்ரோ அழகாக இருந்தது, பனியும் முற்றாக உருகியிருந்தது. போகும்போது, காலையில் நேரத்துடன் விமானமெடுக்க வேண்டியிருந்ததால் ஒருவரையும் குழப்பக்கூடாதென Uberஇல் சென்றிருந்த எங்களைக் கூட்டிச்செல்ல மகளின் கணவர் காருடன் காத்திருந்தார்.

முற்றும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்