மெய்நிகர் அரங்கு ( 11-09-2022 ) காணொளி - https://youtu.be/9XKG3bJ-77I
அத்தியாயம் ஒன்று - நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்!
என் பெயர் விக்கிரமாதித்தன். என்னை நன்கு அறிந்த சிலர் என்னை நவீன விக்கிரமாதித்தனென்றும் கூறுவார்கள். முற்றும் தளராத விக்கிரமன் - விக்கிரமாதித்தன் - எவ்விதம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்திலேறி வேதாளம் குடியிருக்கும் தொங்குமுடலைத் தூக்கி வருவானோ அவனைப்போன்றவனே நானும். முயற்சி செய்வதில் எனக்குச் சலிப்பில்லை.மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் எனக்குப் பெருங்களிப்பு என்று வேண்டுமானால் நீங்கள் கருதலாம். அதிலெனக்கு எவ்விதம் ஆட்சேபணையுமில்லை.
அட்டா, வித்தியாசமானவனாக இருக்கின்றானே இவன் என்று நீங்கள் எண்ணுவதை என்னால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிகின்றது. இங்கு நான் கூறப்போவது என்னைப்பற்றி. எனது எண்ணங்கள், என் வாழ்க்கைச் சம்பவங்கள் இவற்றைப்பற்றி. என் குறிப்பேடுகள் பலவற்றையும் இங்கு நான் உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்வேன். அவை என்னைப்பற்றிய சரியானதொரு சித்திரத்தை உங்களுக்கு அறியத்தரலாம். கோடியிலொருவனான ஒரு சாதாரண மானுடன் இவனைப்பற்றி அறிவதிலென்ன சுவாரசியமிருக்க முடியுமென்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. இதற்கு நான் கூறப்போகும் பதிலிதுதான்: 'மகா காலக்சிகளை உள்ளடக்கியுள்ள மிகச்சாதாரணமான சுடரொன்றின் கோள்களிலொன்றில்தான் நாம் , மானுடர்கள் வாழ்கின்றோம். அவ்வகையில் ஒவ்வோருயிரும் இங்கு முக்கியத்துவம் மிக்கதுதான்.அவ்வகையில் நானும் முக்கியத்துவம் மிக்கவனே என்பது என் தீர்க்கமான நம்பிக்கை.
பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அவ்வப்போது எழுதிய குறிப்ப்புகளிவை. பெரும்பாலும் எனது முகநூற் பக்கத்தில் வெளியானவை. அனைத்தையும் தொகுத்து இங்கு தந்திருக்கின்றேன். இக்குறிப்புகள் ஏற்கனவே பதிவுகள் இணைய இதழிலிலும் அவ்வப்போது துண்டு துண்டாக வெளியானவைதாம். 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகவுள்ள இத்தருணத்தில் இக்குறிப்புகளை வாசிப்பதும் இனிமையானதுதான். - வ.ந.கி - -
அழியாத கோலங்கள்: பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும்,, நந்தினியும் (ஓவியர் வினுவின் கை வண்ணத்தில்)
மானுடராகிய நாம் பல்வகை உணர்வுகளுக்கும் உட்பட்டவர்கள். எப்பொழுதுமே தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். நகைச்சுவையைக் கேட்டுச் சிரிப்பவர்கள்; நல்ல கலையை இரசிப்பவர்கள். நல்ல நூல்களைச் சுவைப்பவர்கள்.
நல்ல நூல்கள், நல்ல கலைகள் என்னும்போது அவற்றிலும் பல பிரிவுகளுள்ளன. உதாரணத்துக்கு நூல்களை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் அம்மா தூக்கி வைத்து, சந்திரனைக் காட்டிக் கதை கூறிச் சாப்பிட வைத்ததிலிருந்து கதைகளுடனான எம் தொடர்பு ஆரம்பமாகின்றது. பின்னர் குழந்தை இலக்கியப்படைப்புகள் (அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் , சிறுவர் பகுதிகள், குழந்தைப்பாடல்கள் போன்ற) , வெகுசன இலக்கியப்படைப்புகள் என்று வளர்ச்சியடைந்து பின்னர் பல்வகை தீவிர இலக்கியப்போக்குகளை உள்ளடக்கிய தீவிர வாசிப்புக்கு வந்தடைகின்றோம். இதனால்தான் எல்லாவகை இலக்கியங்களுக்கும் மானுட வாழ்வின் வளர்ச்சிப்படியில் , வாசிப்பின் வளர்ச்சிப்படியில் இடமுண்டு.
ஒரு காலத்தில் எம் பால்ய, பதின்மப் பருவங்களில் நாம் வாசித்த படைப்புகள் (வெகுசன, குழந்தை இலக்கிய) எல்லாம் பின்னர் எம் வாழ்வின் அழியாத கோலங்களாகி நிரந்தரமாக எம் ஆழ் மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மீண்டுக் காண்கையில் இன்பம் கொப்பளிக்கின்றது. மகிழ்ச்சியால் பூரித்துப்போய் விடுகின்றோம். அவை எம்மை வாசித்த அப்பருவங்களுக்கே தூக்கிச் சென்று விடுகின்றன. அவற்றையெல்லாம் அழகாக ஓவியங்களுடன் வெளியான அத்தியாயங்களுடன் 'பைண்டு' செய்து வைத்திருந்தோம்; தொலைத்து விட்டோம். அவ்விதமான பல்வகைப்படைப்புகளை நாட்டில் நிலவிய போர்ச்சூழலில் என்னைப்போல் பலர் இழந்திருப்பார்கள். ஆனால் இன்று இணையம் ஓரளவுக்கு அவ்விதம் இழந்ததையெல்லாம் மீண்டும் கண்டு அனுபவிக்க இடமேற்படுத்தித் தந்துள்ளது. நான் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் வாசித்துக்குவித்த கல்கி சஞ்சிகையின் படைப்புகளை அக்கல்கி இதழ்களினூடே மீண்டும் வாசிப்பதற்கு இணையம் வழியேற்படுத்தித் தந்துள்ளது. நூல்கள் பலவற்றைப் பழைய புத்தகக் கடைகளில் தேடிக்கண்டுபிடிக்க இணையம் உதவுகின்றது.
விரிபெருவெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார் கண்ணம்மா!
மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா கண்ணம்மா!
பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணம்மா,
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணம்மா!
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணம்மா! சொல்லம்மா!
என் கண்ணம்மா!
- எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் குடும்பப் புகைப்படம் -
எழுத்தாளரும், 'நவீன விருட்சம்' சஞ்சிகை ஆசிரியருமான அழகியசிங்கர் அவர்கள் போட்டிருந்த இந்தப்பதிவு மனத்தைத்தொட்டது. அவரது நண்பரும் , எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் மூத்த புதல்வருமான ராமச்சந்திரன் அவர்களின் மறைவு பற்றிய பதிவு. இப்பதிவு ராமச்சந்திரனின் மறைவு பற்றிய தகவலுடன் , அவருடைய ஆளுமையையும் விபரிக்கின்றது.
எழுத்தாளர் கு.அழகிரிசாமி எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்.என் பதின்ம வயதுகளில் கல்கியில் வெளியான அவரது 'தீராத விளையாட்டு' தொடர்கதையை விரும்பி வாசித்திருக்கின்றேன். அவரது மகனின் மறைவுச்செய்தி கு.அழகிரிசாமி அவர்களையும் நினைவுபடுத்தி விட்டது. ஆழ்ந்த இரங்கல். மேற்படி பதிவில் அழகியசிங்கர் அவர்கள் காலையில் மறைந்த ராமச்சந்திரனுக்கு இறுதி அஞ்சலிக்காகச் சென்றபோது ஏற்கனவே அவரைத் தகனம் செய்துவிட்டிருந்தார்கள். பதிவில் அழகிரிசாமியின் குடும்பப் புகைப்படத்தினையும் அழகியசிங்கர் பகிர்ந்திருந்தார். அதில் ராமச்சந்திரன் சிறுவனாகவிருக்கின்றார்.
ஒரு எழுத்தாளரை பெயராலும் பெற்ற புகழாலும் அறிந்தபின் அவரது படைப்பினை வாசிப்பதைவிட , படைப்பினை வாசித்தபின் உருவாகும் ரசனையால் படைப்பாளி யார் என தேடி அறிதலே அப்படைப்புக்கு மகிமை தரும். இதனை அண்மையில் உணர்த்திய நாவல் சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்களின் 'குஞ்சரம் ஊர்ந்தோர் ' . இந்நாவலை வாசிக்கும் வரை எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவரது எந்தப் படைப்பையும் வாசித்ததும் இல்லை. ஏன் பெயரைக் கூட அறிந்தது இல்லை. இந் நாவலின் வடிவில் எழுத்தால் மட்டுமே அறிமுகமானவர். ஆனால் வாசிக்க கையில் எடுத்தது முதல் இறுதிவரை சோர்வில்லாது வாசிக்க வைக்கும் இயல்பான கதையோட்டம்,எளிமையான நடை, வேஷங்கள் அற்ற நிஜமான மனிதர்கள் எழுத்தாளர் யாரென்று தேட வைத்தன.
இவரது படைப்புகளில் வங்காலை பிரதேசத்தின் மண்மணமும், கடல் சார்ந்த மனிதர்களின் வாழ்வியலும், பிரதேச வழக்கும், கலைவடிவங்களும்முன் அறிந்திராத காட்சிப் புலத்தை கண்முன்னே கொண்டு நிறுத்தின. வாசித்த நாள் முதலாக ரசித்ததை எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் அறிமுகமில்லாத அந்தக் களமும், காலமும், கருப்பொருளும் பற்றிய எனது தெளிவின்மையால் எண்ணம் உடனடியாகக் கைகூடவில்லை.
இதன் பின் சீமான் அவர்களது 'திசையறியாப் பயணங்கள்', 'தோற்றுப் போனவர்கள்' ஆகிய நாவல்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது படைப்புகளில் பொதுப் பண்புகள் சில மனதில் ஆழப் பதிந்தன. வாசகர் மத்தியில் அதிகம் கவனம் பெறாத கடல் சார்ந்த பரதவ சமூகத்தினரின் அன்றாட வாழ்வியல் சோகங்கள்; பல வஞ்சனைகள், சில நட்புகள் தியாகங்கள்; நடைமுறை யதார்தங்களுடன் இயல்பாக வெளிப்படுத்தப் படும் பெண்கள்; மதம் இம்மக்களின் வாழ்வியலில் செலுத்தும் பங்கு ஆகியன.
கவிஞர் விக்கிரமாதித்யனின் பிறந்ததினம் செப்டெம்பர் 25.
சத்தியத்தையே
எழுதுகிறேன்
அலுத்துப்
போய்விட்டது எல்லாமும்
சலிப்படையச்
செய்கிறார்கள் எல்லோரும்
எனினும்
வாழ்ந்து கொண்டும்
எழுதிக் கொண்டும்தான்
இருக்கிறேன் இன்னமும்.
– விக்ரமாதித்யன் நம்பி -
ஒன்ன நினைச்சுப் பார்க்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது அதை எழுதணும் உட்கார்ந்தா எழுத்துதான் வரமாட்டேங்குது என குணா கமல் அபிராமியிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அதுபோலத்தான் நிறைய விசயங்களை எழுதணும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதையெல்லாம் உடனே எழுத முடியாது. அதற்கும் ஒரு வல்லமை வேண்டும்.
கவிதைகள் என்றாலே பாரதியைத்தான் எனக்குத் தெரியும் பள்ளிநாட்களில். மற்றபடி கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். படிப்பெல்லாம் முடித்த பிறகு ஒரு சமயம் நூலகத்தில் விக்ரமாதித்யன் கவிதைகள் நூலைப் பார்த்த போது அட்டைப் படத்தில் தாடியோடிருந்த விக்ரமாதித்யன் முகம் மிகவும் ஈர்த்தது. அந்த கவிதை நூலைத் திறந்து கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தேன். மிகவும் பிடித்துப் போனது. வீட்டிற்கு எடுத்து வந்து பலமுறை வாசித்தபின் எனக்கு மிகவும் பிடித்த இருபதிற்கும் மேற்பட்ட கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைத்தேன். எனக்கு சோர்வேற்படும் போதெல்லாம் அதையெடுத்து வாசிப்பேன். அந்தளவிற்கு விக்ரமாதித்யனின் இரசிகனாகிவிட்டேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த மனதிற்கு நெருக்கமான சில கவிதைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன் விக்ரமாதித்யன் கவிதை குறித்து ச.தமிழ்ச்செல்வன் எழுதியதையும் வாசித்துப் பாருங்கள்.
அண்மையில் மறைந்த கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த எழுத்தாளர் பூர்ணிமா கருணாரன் முகநூலில் பின்வருமாறு குறிப்பொன்றினை இட்டிருந்தார்:
"நேற்றையதினம் இலக்கிய ஆளுமை திரு. K.S சிவகுமாரன் ஐயா அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு, அவரது சிதைக்கு தீ மூட்டிய வரையில் உடனிருந்தேன். மிகவும் வேதனையான உண்மை என்னவென்றால் அவரால் முன்னுக்கு வந்ததாக முகநூலில் பலரது பதிவுகளை காண முடிந்த அளவுக்கு, அவரது மரணச் சடங்கில் பலரைக் காண முடியவில்லை. யாரோ என் அருகில் இருந்த ஒருவர் கூறியதும் என் காதுகளில் விழுந்தது. 'ஆனானப்பட்ட பாரதியின் சாவுக்கே பதினொரு பேர் தான் என்று. தமிழ் சங்கத்தில் எனக்குத் தெரிந்த பலரையும் காணவில்லை. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஓரிருவர் வந்திருந்தார்கள். தமிழ் சங்கம் என்பது இலக்கியவாதிகளின் இளைப்பாறும் இடமாக மாறி விட்டதா? தயவுசெய்து திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது போனாலும் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ளுங்கள். இதை நான் கூட கற்றுக் கொண்டது பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து தான். அவர்களின் இலக்கியவாதி ஒருவர் இறந்திருக்கும் பட்சத்தில் அங்கு எவ்வாறான மக்கள் கூட்டம் இருக்கும் என்பதைக் கண் கூடாக கண்டிருக்கிறேன். சென்று வாருங்கள். உங்கள் ஆளுமை எதிர் காலத்தில் ஏனும் புரிந்து கொள்ளப்படும். மிகவும் வேதனையோடு இதனைப் பகிர்கின்றேன்."
கொழும்பில் அவரை நன்கு அறிந்த இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், பதிப்பாளர்கள் என்று பலர் உள்ளார்களே. அவர்களில் முகநூலில் அவரது நண்பர்களாகப் பலர் இருக்கின்றார்களே. அவர்களில் பலர் செல்லவில்லைபோல் தெரிகிறதே. பூர்ணிமா கருணாரனுக்கு கே.எஸ்.எஸ் அவர்களை முகநூல் மூலமே தெரிந்திருக்குமென்று நினைக்கின்றேன். அவர் தன் இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். ஆனால் ஆண்டுகள் பலவாக கே.எஸ்.எஸ் அவர்களை அறிந்த கொழும்பில் வாழும் கலை, இலக்கியவாதிகளுக்கு அது முக்கியமாகப் படவில்லையென்பது நவகாலத்தின் யதார்த்தம்.
- கவிஞர் மு.மேத்தா -
முன்னுரை
"ஆணாதிக்கத்தினின்று விடுதலை சமுதாயத்தில் ஆணுக்கு இணையான உரிமை , எக்காலத்தும் எச்சூழலிலும் எப்பருவத்திலும் ஆணுக்கு நிகரான மதிப்பு, பெண் தன்னம்பிக்கையுடன் தன் காலில் நின்று எதிர்நிற்கும் சிக்கல்களைத் துணிந்து எதிர் கொண்டு தன் இழிவகற்றி முன்னேறுதல், வாழ்வில் தன் இன்றியமையாமையை உணர்த்துதல், பெண்ணை இழிவுபடுத்தும் அனைத்தையும புறக்கணித்து அவற்றை வேரோடு களைதல் ஆகியவற்றை மையமிட்டுப் பெண்ணியம் இயங்குவதாகக் கொள்ளலாம்”
என்று பெண்ணியத்திற்கு விளக்கமாக முனைவா் ச. சிவகாமி அவா்கள் தன் 'காலச் சூழலில் பெண்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
'தற்பொழுது பெண் சமுதாயம் பல வகைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது எனலாம். ஆனாலும் அவை முழுமையான அளவை எட்டவில்லை. கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இருமடங்கு அதிகரித்திருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் குற்றச் செயல் புள்ளிவிவரப் பிரிவு சென்ற ஆண்டில் என்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றங்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஒவ்வொரு நாற்பத்தேழு நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள். ஒவ்வொரு நாற்பத்து நான்கு நிமிடத்துக்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறாள். ஒரு நாளைக்குப் பதினேழு வரதட்சிணைக் கொலைகள் நிகழ்கின்றன என்றெல்லாம் புள்ளி விவரங்கள் பெண்ணின் அவல நிலையைக் கூறுகின்றன. இந்தநிலை ஓா் ஆரோக்கியமான முன்னேறும் சமுதாயத்துக்கு உரிய அடையாளங்கள் ஆகுமா? '
என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன அவா்கள் 'பெண் விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதின் வாயிலாக அறிய முடிகிறது.
”உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினும் இந்தப் பெண்மையினிதடா” (பாரதியார் கவிதைகள். ப.235)
என்று ' பெண்கள் வாழ்க' என்ற தலைப்பில் பாரதி எழுதுகிறார்.
பெண்மை என்பது தாய்மையின் வடிவங்களன்றோ! அவ்வியப்பூட்டும் சக்தியைப் பெற்ற பெண்கள் சார்புப் பிராணிகளாக்கப்பட்டு விட்டார்கள். இத்தகைய நிலையில் வானத்து விடிவள்ளி போன்று சில எழுத்தாளர்களில் ஒருவா்தான் கவிஞா் மு. மேத்தா. அவா் எழுதியகவிதைகளில் காணப்படும் பெண்ணியச் சிந்தனைகளை ஆய்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.
- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -
நினைவுகளின் தடத்தில் - (25)
கும்பகோணம் பள்ளிக்கூடம் போக தினம் ஐந்தரை மைல் காலையிலும் பின் உடையாளூர் திரும்ப ஐந்தரை மைல் மாலையிலும் நடந்து செல்லும் வாழ்க்கையென்றாலும், கும்பகோணம் பள்ளி நேரங்களும், அதோடு ஒட்டிக்கொண்டு வந்து விட்ட உடையாளூர் கிராம வாழ்க்கையும் கொஞ்சம் கொஞமாக பிடித்துத்தான் போயின. பள்ளிக்கூடத்தில் முற்றிலும் புதிய சூழல். என்னமோ இஷ்ட பாடம் (Optional subjects) எடுத்துக்கொள்ள வேண்டுமாக்கும் SSLC யின் கடைசி இரண்டு வருஷங்களில் என்று எனக்குச் சொல்லப்பட்டது. உயர் கணிதம், பௌதீகம், ரசாயனம் என்னும் மூன்று பாடங்கள் கொண்ட MPC க்ரூப் எடுத்துக்கொண்டால் பெரிய பெரிய வேலைக்குப் போகலாமாக்கும், எஞ்சினீயர் ஆகலாமாக்கும் என்று எல்லாரும் சொல்ல, எனக்கென்ன தெரியும், நானும் எஞ்சினீயராகப்போறேன் என்று அந்த க்ரூப் கேட்டேன். கொடுக்கப்பட்டது. முதல் நாள் பௌதீகம் நடந்த வகுப்புக்குப் போனால், வாத்தியார் சொன்னது ஒரு மண்ணும் புரியவில்லை. உயர் கணித வகுப்பு அதற்கு மேல். யாரிடம் போய் நான் என்ன கேட்டு விளங்கிக் கொண்டு படித்து தேறமுடியும்? இங்கு யார் இருக்கிறார்கள் எனக்கு சொல்லிக்கொடுக்க? வீடு திரும்பும் வரை எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருண்டு வந்தது. அம்மா கேட்டாள், என்னடா ஆச்சு, என்னமோ போல இருக்கியே? என்று. அப்பா வந்ததும் அம்மா சொன்னாள், "அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை, சொரத்தாவே இல்லை" என்று சொல்லி விட்டாள். எல்லோரும் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்து விட்டார்கள். அப்பா அம்மா தான் என்றில்லை. மூன்று தங்கைகளும் சூழ்ந்து கொண்டு என் முகத்தையே கவலையோடு பார்த்தார்கள். "அண்ணாவுக்கு ஏதோ ஆயிடுத்து" என்று கவலை அவர்களுக்கு. நிலக்கோட்டையாக இருந்திருந்தால், மாமா திட்டி யிருப்பார். இங்கு என்னைச் சூழ்ந்து கொண்டு எல்லோரும் கவலைப் பட்டார்கள். இது புது அனுபவமாக இருந்தது எனக்கு.
தாழ்வாரத்தை ஒட்டிய கூடத்தில் ஹரிகேன் விளக்கின் மங்கிய மஞ்சள் ஒளியில் நடந்த அந்த மகா நாட்டில், "கஷ்டமா இருக்கற பாடத்துக்கு ஒரு முழுக்கு போட்டுட்டு வேறே பாடம் எடுத்துக்கறது, இஷ்ட பாடங்கள் தான் நிறைய இருக்கே, என்னத்துக்கு வேண்டாதத கட்டிண்டு அழணும்?" என்ற தீர்மானம் நிறைவேறியது. மறு நாளே வேறே என்ன எடுத்துக்கலாம் என்று நானே யோசித்து, ஒரு வேளை வேலை தேடி வடக்கே போவதென்றால் உபயோகமாக இருக்கும் என்று, பாகவதர் கிராப் வைத்துக்கொண்டிருந்த ஹிந்தி பண்டிட் வகுப்பில் சேர்ந்தேன். அப்படி ஒன்றும் ஹிந்தியையும் ஒழுங்காகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. ஹிந்தி வகுப்பில் என்னையும் சேர்த்து மூன்று பையன்கள், ஆறு பெண்கள். ஏதோ எம்ப்ராய்டரி, தையல் க்ளாஸ் போல இந்த ஹிந்தி வகுப்பிற்கும் அந்த மரியாதை தான் என்று தோன்றிற்று.
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர் -
இந்த உலகில் மாறாத ஒன்று உண்டென்றால், அது மாற்றம்தான். நம் கல்வியறிவு, பொருளாதார நிலை, குடும்பச் சூழ்நிலை, நாட்டின் அரசியல் நிலைமை, தட்பவெட்ப நிலை என்று எல்லாவற்றிலும் மாற்றங்களை காண்கிறோம். நம் மனநிலையே சூழ்நிலைக்கு தக்கவாறு மாறிக்கொண்டே வருகிறது. இப்படி வரக்கூடிய மாற்றங்களை எப்படி எதிர் கொள்வது? மாற்றங்களை ஏற்காமல் அப்படியே இருந்து விடுவதா? இல்லை, மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வதா? ஆளுமை வளர்ச்சிக்கு மாற்றங்களை எதிர் கொள்ளும் குணம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி இந்த இதழில் உங்களுக்கு எடுத்துரைக்க போகிறேன். இதை பற்றி முதல் அத்தியாயத்தில் நான் ஏற்கனவே ஒரு குறளை மேற்கோள் காட்டி சொல்லியிருக்கிறேன்.
"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்".
என்று அன்றே வள்ளுவர் கூறினார். இதன் பொருள் என்னவென்றால் "தகுந்த காலமறிந்து, இடத்தோடு பொருந்துமாறு செய்தால், ஒருவன் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும்" என்பது. வெற்றிக்கான காரணங்கள் காலத்திற்கேற்றவாறு மாறுபடுகிறது. அந்தந்த காலத்தின் தேவைகளை புரிந்து கொண்டு, அந்த மாற்றங்களுக்கேற்றவாறு செயல்படுபவர்களே வெற்றிக் கனியை பறிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த மாற்றம் பற்றி எழுதும் போது முக்கியமாக ஒரு விஷயத்தை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். விப்ரோ (WIPRO) ஒரு உலக புகழ் பெற்ற கணிணி மென்பொருள்(Computer Software) நிறூவனம். இந்த நி¢றுவனத்தின் தலைவர் அசிம் ப்ரேம்ஜியும் கூட மிக புகழ் பெற்ற மனிதர். உலகிலுள்ள மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர். கடும் உழைப்பாளி.. சமீபத்தில் அவர் மாற்றங்களை பற்றி குறிப்பிட்டு ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அதிலிருந்து சிலவற்றை உங்களுக்காக சொல்கிறேன். இந்த சொற்பொழிவு ஒரு மிக பெரிய பாடமாக கருதப்படுகிறது. அவர் சொன்ன சாராம்சத்தை எடுத்துக் கொண்டு என் கருத்துக்களையும் சேர்த்து சொல்லுகிறேன்.
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர் -
நமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறதுஉங்கள் குடும்பம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் குடும்ப பிரச்சனைகளில் மன அழுத்தம் கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்பதை கண்டறிய பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்படுகிறதா என்று ஆராயுங்கள்.
• வீட்டில் இருப்பதை விட அதிக நேரம் பணியில் செலவிடுதல்
• கணவனிடமோ அல்லது மனைவியிடமோ அதிகமாக வாதம் புரிதல்
• பாலியல் விஷயங்களில் இருந்து பின்வாங்கிச் செல்லுதல்
• மது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல்
• மனக் கவலை, மனச்சோர்வு
• மிதமிஞ்சிய கோபம்
• தகாத உறவில் ஈடுபடுதல்
இவைகளில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டால் குடும்பம் மன அழுத்தம் தரும் விஷயமாக மாறிவிட்டது என்பதை அறிதல் வேண்டும்.
இத்தகைய பிரச்சனைகள் உங்களை எங்கே அழைத்துச் செல்லும் தெரியுமா? விவாகரத்து, மனைவி அல்லது கணவனை துன்புறுத்துதல், குழந்தைகளை துன்புறுத்துதல் போன்ற தீய விளைவுகளை நோக்கி இந்தப் பிரச்சனைகள் உங்களை அழைத்துச் செல்லும்.
உங்களுக்கு உள்ள பணப்பிரச்சனை பல சமயங்களில் உங்கள் குடும்ப பிரச்சனையாக மாறி உங்களை வாட்டி வதைக்க வாய்ப்புள்ளது. அப்படியானால் பணம் உள்ளவர்களுக்கு பணப்பிரச்சனை இருக்காது, அவர்களுக்கு பணத்தால் எந்த மனப்பிரச்சனையும் இருக்காது என்று அர்த்தமல்ல. பணக்காரர்களுக்கும் நிதிநிலையில் பல மாற்றங்கள் ஏற்படும். எனவே ஒருவரின் நிதிநிலையில் ஏற்படும் பெரிய அல்லது சிறிய மாற்றங்கள் குடும்பத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
பேரரசன்
ஆளுமை தவறே
வழக்காடு மன்றம்
நீதி முறைமைகளில்
முறையில்லாமல்
அதிகாரத்திமிரே
அநீதி.
நீதி வழுவாத
மாபெரும் வேந்தன்
இழைத்தான் கொடுமை
கண்ணகிக்கு
ஆளுமை தவறேல்...?
அதிகாரப்போக்கில்
செய்வதறியா வேந்தன்
சிறைப்பிடித்தான்
சீதையை…!
இராவணன்
ஆளுமை தவறேல்…?
*தமிழ்! பிள்ளைத் தமிழ்!!* இது தமிழ் மொழியைத் தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகக் குழந்தையாகப் பாவித்து மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும். கண்ணே மணியே என்று வழக்கமாகப் பாடப்பெறும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய 10 பருவங்கள் இந்நூலில் வித்தியாசமான முறையில் உள்ளது.! இந்த 10 பருவம் போகப் புதிதாக இக்காலதிற்கேற்ப கணினி, செம்மொழி என்ற 2 புதுப் பருவங்கள் சேர்க்கப்பெற்றுள்ளது. செம்மொழிப் பருவம் பட்டாபிஷேகம் போல வர்ணிக்கப் பெற்றுள்ளது. 12 பருவங்களும், தமிழ் உயிரெழுத்துகள் 12ஐ நினைவூட்டுவதாக அமைந்து அவ்வுயிரெழுத்தே அந்த 10 பாடல்களின் முதல் எழுத்தாக ஆரம்பிக்கும்படி புதுமையாக உள்ளது.
மானுட நேயப் போராளியாக, ஒரு காலகட்டத்தின் வரலாற்றுக் கடமையினைச் செய்யப் பலரும் அச்சமுற்றிந்ருந்த நிலையில் துணிந்து செயலாற்றி, அதற்காகத் தன்னுயிரை ஈந்த ராஜனி திரணகமவின் நினைவு தினம் செப்டெம்பர் 21. இலங்கைத் தமிழரின் ஆயுதப் போராட்டக் காலகத்தில் இலங்கை, இந்திய படைகளால், தமிழ் அமைப்புகளால் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கெதிராகக் குரல் கொடுத்ததுடன் அவற்றை ஆவணப்படுத்துவதில் சக பேராசிரியர்களான ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம் & கே.ஶ்ரீதரன் ஆகியோருடன் இனைந்து தன் பங்களிப்பை நல்கியவர். அந்த ஆவணமே 'முறிந்த பனை' - https://noolaham.net/project/11/1001/1001.pdf -. அவ்வகையில் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மானுடநேயப்போராளியாக , மனித உரிமைகளுக்காகப் போராடிய ஒருவராக , அதற்காகத் தன் வாழ்வைக்கொடுத்த ஒருவராக வரலாறு அவரை என்றென்றும் நினைவில் நிறுத்தி வைத்திருக்கும்.
- நாடகவியலாளர் க.பாலேந்திராவின் 'கண்ணாடி வார்ப்புகள்' பற்றிய எனது முகநூற் பதிவொன்றுக்கான கே.எஸ்.சிவகுமாரன் அவர்களின் மின்னஞ்சலிது. - வ.ந.கி -
K S SIVAKUMARAN <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Wed, May 13, 2020 at 12:17 p.m.
My recollections on Thamil Drama in Colombo!
In the 1960s and 1970s, I was a keen drama critic. Having seen the Colombo North cine-dramas and Rajaratnam's Colombo South comedies. I wrote a column called “Manathirai” in Thamil in the Thinakaran Vaara Manjari. I criticized all the slapstick presentations that went by the name Thamil Drama. This was because I read many books in English about Drama and Theatre and understood that what we witnessed were recreating Indian Thamil film sequences and using colloquial Yaalpaaana speech comedies. In 1953 or 1954, the TKS Brothers visited Colombo and staged a professional drama presentation. There was a semblance of theatricality in their presentation. I also witnessed one or two plays of the doyen of Lankan Thamil Drama-Sornalingam.
It must be 1961 or 1962, I saw a play called Mathamarram written by the late A N Kanthasamy, a writer and a Marxist thinker. When I saw that I was baffled. It was a different cup of tea for me. It was like a Shavian play. It was provoking and feast for thinking. I wrote a review of it in Tribune, now defunct.
In the meantime, playwrights like Robert, Anthony Jeeva, Matale Karthigesu and a few others rallied around me accepting me as a drama critic. Since I was interested in Drama & Theatre, I visited theatre halls which presented English and Sinhala plays. I noticed that in these languages a variety of plays were staged. I urged my readers to see the plays in Sinhala.
ENGLISH - not so much in Thamil produced by others in various parts of Colombo. I also suggested that they may attempt to translate foreign plays so that they will have a grip of the structure of drama and theatre,
பத்திரிகைகள், சஞ்சிகைகள் கலை, இலக்கியத்துக்குப் பங்களிப்பதுடன் ஒரு காலகட்டத்தின் கண்ணாடியாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் அவற்றினூடு அவை வெளிவந்த காலகட்டத்துச் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழலை அறிய முடியும், கலை, இலக்கிய வெளிப்பாடுகளை அறிய முடியும், தீய சக்திகள் சமூகத்தில் புரிந்த பல்வகைப்பட்ட வன்முறைகளைப் பற்றிய தகவல்களை அறிய முடியும். இவ்வகையில் யாழ்ப்பாணத்தில் சைவ பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்ட இந்து சாதனம் பத்திரிகையும் பல்வேறு தகவல்களைத் தாங்கி நிற்குமோர் ஆவணச்சுரங்கமாக விளங்குகின்றது. 1889ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வெளியாகும் பத்திரிகையிது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிபர் பொ.கனகசபாபதியின் பிறந்ததினம் செப்டெம்பர் 4, 2022!
அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசந்துறை குருவீதியை வதிவிடமாகவும் கொண்டவர். 1957 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விலங்கியலுக்கான தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட பட்டதாரியான இவர் மகாஜனாக் கல்லூரியில் உயர்தர வகுப்பு விலங்கியல் ஆசிரியராகவும், அதன் பின் 1976 ஆம் ஆண்டு தொடக்கம் கல்லூரி அதிபராகவும் இணைந்து கடமையாற்றினார். இவரது காலத்தில் கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் கல்லூரி புகழ் பெற்றிருந்தது. இதைவிட ஏழாலை மத்திய மகாவித்தியாலயத்திலும், புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியிலும் அதிபராகக் கடமையாற்றியிருந்தார். அதன் பின் சிறிது காலம் நைஜீரியாவில் கடமையாற்றினார். அங்கிருந்து 1987 ஆம் ஆண்டு கனடா வந்தார். 1991 ஆம் ஆண்டு தமிழ் மொழியை ஒரு பாடமாகக் ஒன்ராறியோ கல்விச் சபைகளில் கற்பிப்பதற்கு முன்னின்று பாடுபட்டார்.
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த தினம்!
- அறிஞர் அண்ணாவின் இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை! கவிஞர் கண்ணதாசன் 'தாய்வீடு' இதழில் எழுதிய கட்டுரையில் பகிர்ந்துகொண்டது. இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை புதுக்கோட்டையில் நடைபெற்றபோது (14,15 – 12 – 1946)) அறிஞர் அண்ணா ஆற்றிய உரையினைக் கவிஞர் கண்ணதாசன் புதுக்கோட்டை க .நாராயணனின் “தாய்நாடு” இதழில் எழுதிய கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றார். இக்கட்டுரையினைக் கண்ணதாசன் வலைப்பதிவில் (http://kannadasan.wordpress.com) வாசித்தேன். உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இவ்விதமான அறிஞர் அண்ணாவின் உரைகள் ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களைப் பித்தம் கொள்ள வைத்திருந்தன. அவரது உரையினைக் கேட்பதற்கு இலட்சக்கணக்கில் மக்கள் கூட்டங்களில் திரண்டனர். அண்ணாவின் எழுத்துகள் - கடிதங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் & நாடகங்கள் அனைத்தையும் வாசிக்க \ அண்ணாவின் சொற்பொழிவுகள் -
அறிஞர் அண்ணாவின் உரை:
அருமைத் தோழர்களே! தலைவர் அமைச்சரைக் கூப்பிட்டுவிட்டு அமர்ந்தார். அமைச்சர் அண்டவனை அழைத்துவிட்டு அமர்ந்துவிட்டார். (கரகோஷம்) புது உலகம் அமைக்கவிருக்கும் வீரர்கள் ஆண்டவன் அருளை வேண்டி நிற்கச் சொல்கிறார்அமைச்சர். ஆண்டவன் அருள் எப்பொழுதும் இருக்கும் அமைச்சர் சொல்லிவர வேண்டியதில்லை. மேலும் நாமக்கல் கவிஞர் போன்ற பக்தர்கள் இருக்கும் இடத்தில் ஆண்டவன் அருளுக்குக் குறைவா என்ன? (கரகோஷம்) அமைச்சர், விரும்பும் ஆண்டவன் அருள் கிடைக்காவிட்டாலும் அமைச்சர் போன்ற ஆள்பவர் அருள் இருந்தால் எதைத்தான் சாதிக்கமுடியாது?
அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே, அன்னிய நாட்டிலே பிறக்கும் போது, கம்பராமாயணமும், கந்தபுராணமும் இங்கே ஏட்டிலே சிறக்கிறது. அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை (கரகோஷம்) ஆக்கவும் அளிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்து இருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல. இவை இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
- கலை, இலக்கிய விமர்சகர் மு.,நித்தியானந்தன் அவர்கள் கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் பற்றி எழுதி பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரையிது. - பதிவுகள்.காம்
ஈழத்து இலக்கியத்தோப்பில் வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.
- கவிஞர் ஷெல்லிதாசனை (பே.கனகரத்தினம்) முற்போக்குக் கவிஞர்களிலொருவராகவும், மெல்லிசைப் பாடலாசிரியர்களில் ஒருவராகவும் இனங்காண்பார் கலாநிதி செ.யோகராசா அவர்கள். இங்கு கலாநிதி சு.குணேஸ்வரன் அவர்கள் “அம்மாவுக்குப் பிடித்த கனி” கவிதைத்தொகுப்பின் மூலம் அவரை சிறந்த குழந்தைக்கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காண்கின்றார். - பதிவுகள் -
அகவுலகில் ஜனித்த கவிதையை புறஉலகில் எழுத்து வடிவம் பெற்ற ஒரு கவிதையாக உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மொழியின் மீது இயங்கும் செய்நேர்த்தி கவிஞனுக்குக் கைவரவேண்டும்.” என்பார் இந்திரன்.
சிறுவர் இலக்கியத்தின் மீதான ஈடுபாடு கடந்த சில வருடங்களில் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது. சிறுவர் பாடல்கள், சிறுவர் கவிதைகள், சிறுவர் கதைகள், சிறுவர் கட்டுரைகள், மட்டுமன்றி சிறுவர் அரங்கச் செயற்பாடுகளும் காணொளி வடிவிலான கோப்புகளும் தற்காலத்தில் சிறுவர் இலக்கியத்தின் மீதான தேக்கத்தை உடைப்பனவாக அமைந்துள்ளன. இவை வரவேற்க வேண்டியவை ஆகும். அரச திணைக்களங்களும் சமூகநலத் தொண்டு நிறுவனங்களும் சிறுவர்களின் உடல் - உள ஆற்றலை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன. சிறுவர்களுக்காகப் பெரியவர்கள் எழுதுகின்ற நிலைமையோடு சிறுவர்களே தங்கள் அனுபவங்களையும் வெளிப்பாடுகளையும் முன்வைப்பதற்குரிய களங்களும் வாய்ப்புக்களும் சமகாலத்தில் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் இலக்கிய முயற்சிகளில் சிறுவர் பாடல்களை முதன்மையாகக் குறிப்பிடலாம்.
சிறுவர் இலக்கியத்தில் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஷெல்லிதாசனின் புதிய தொகுப்பான “அம்மாவுக்குப் பிடித்த கனி” சிறுவர்களின் மனவுலகில் சஞ்சாரம் செய்யும் பாடல்களாக அமைந்துள்ளன. ஷெல்லிதாசன் ஏற்கெனவே கவிதை சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். சமூகத்தின் அக்கறைகள் குறித்து மிகுந்த கரிசனையுடன் தனது படைப்புக்களையும் தந்திருக்கிறார். இவ்வகையில், தொகுப்புக் குறித்து சில வார்த்தைகளைப் பதிவு செய்யலாம்.