நூலகம் அறக்கட்டளை தமிழ் நூல்களை, சுவடிகளை ஆவணப்படுத்தும் அரியதொரு சேவையினைச் செய்து வருகின்றது. உதாரணத்துக்கு என் சொந்த அனுபவத்தையே எடுத்துக்கொண்டால்.. நான் மாணவனாக ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் எழுதத்தொடங்கிய என் ஆரம்ப காலப் படைப்புகளிலிருந்து, இளைஞனாக அதன் வாரமலரில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள் வரை பலவற்றை என்னால் மீளப்பெற முடிந்ததற்குக் காரணம் எண்ணிம நூலகமான 'நூலக'மே.
அத்துடன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் பல்வகைப்பட்ட நூல்களை (புனைவுகள், அபுனைவுகள் என) , தமிழில் வெளியான பல்வகைச் சஞ்சிகைகள், பத்திரிகைகளையெல்லாம் மீண்டும் வாசிக்கச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது நூலகமே.
எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் பலவற்றைச் சேமித்து மீள அவற்றைப் பெற உதவும் நூலகம் அமைப்பு கலை, இலக்கிய, அரசியல், வரலாற்று நூல்களை , சஞ்சிகைகள், பத்திரிகைகளைச் சேகரித்து வைத்திருக்கும் அரியதோர் ஆவணச்சுரங்கம். இது பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். இதன் வளர்ச்சிக்கு அனைவரும் தம்மால் முடிந்த அளவில், வடிவிலான பங்களிப்பை நல்கலாம்.
1. தம்மிடம் அரிய நூற் பிரதிகள், பத்திரிகை, சஞ்சிகைகளின் பிரதிகளை வைத்திருப்போர் அவற்றை நூலகத்திடம் கையளிக்கலாம். அவற்றைப் பிடிஃப் பிரதிகளாகக் கூட நீங்கள் கையளிக்கலாம்.
2. எழுத்தாளர்கள் தமது நூல்களின் பிரதிகளை நூலகத்துக்கு அன்பளிப்பு செய்யலாம்.
3. பத்திரிகை, சஞ்சிகை வெளியிடுவோர் அவற்றின் பிரதிகளை நூலகத்தில் ஆவணப்படுத்தலாம்.
4. இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அங்குள்ள பழைய பத்திரிகை, சஞ்சிகைகளின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள உதவலாம்.
5. நூலகத்தின் வளர்ச்சிக்குத் தம்மாலியன்ற நிதிப்பங்களிப்பை நல்கலாம். குறைந்தது மாதம் 10 டொலர்களையாவது (கனடா, அமெரிக்காவில் வசிப்பவர்கள். ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் தம் நாட்டுப் பணத்தைக் கொடுக்கலாம்)
நூலகம் அறக்கட்டளையின் மாதாந்த அறிக்கையொன்றிலிருந்து
சில பகுதிகளைக் கீழே தருகின்றேன்:
நீங்களும் நன்கொடையாளராகவோ, தன்னார்வலர்களாகவோ, உள்ளடக்கப் பங்களிப்பாளர்களாகவோ மற்றும் நூலக நண்பர்களாகவோ இணைந்து நூலக நிறுவனத்துடன் பயணிக்க முடியும். நூலக நிறுவனமானது தங்களுடைய அனைத்துவிதமான பங்களிப்புகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. நூலக நிறுவனத்தின் Facebook, Twitter, YouTube, Instagram வாயிலாக எம்மோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்கொடையாளர்களாக - https://noolahamfoundation.org/wiki/index.php?title=Chapters
தன்னார்வலர்களாக - https://docs.google.com/forms/d/1BD433MUk4TspyvON4tnPpWzHl4qvMHZxutBFrh3SJ-c/viewform?ts=60a36207&edit_requested=true
உள்ளடக்கப் பங்காளர்களாக - https://noolahamfoundation.org/documents/PermissionTo%20Digitize%20%28English%29_2016.01.06.pdf
நூலகம் அமைப்புடன் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ள - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எண்ணிம நூலகமான நூலகத்தின் இணையத்தளம் - https://www.noolaham.org
நூலக அறக்கட்டளையின் இணையத்தளம் - https://noolahamfoundation.org/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.