பெரியார் என்னும் மகா மனிதர்! - வ.ந.கிரிதரன் -
பெரியார் திருமணத்தை எதிர்த்தாராம்..
அதனால்
பெரியார் குடும்பத்தை எதிர்த்தாராம்.
மனிதர் மிருகங்கள் போல்
மாறி மாறி உறவு கொள்ளலாமாம் என்றாராம்.
மூடரே!
பெரியார் எதிர்த்தது குடும்பத்தை அல்ல.
பின்
திருமணம் என்னும் சடங்கை.
ஏன்?
அது பெண்ணை அடிமையாக்கியது
என்பதனினால்.
சடங்கைத்தான் எதிர்த்தார்.
சேர்ந்த் வாழ்ந்து சந்ததி
பெருக்கும் அன்புமிகு
உறவை அல்ல.
சடங்கை ஏன் எதிர்த்தார்.
சடங்கு எப்படி பெண்ணை
அடிமையாக்கிய்து?
வெள்ளைக்காரன் சட்டம் போடும் வரைக்கும்
வெங்காயங்களே
பெண்களை உடன் கட்டை ஏற்றினார்களே
ஏன்? அந்தச் சடங்கால்தானே.
அதனால்.
உடன் கட்டை ஏற்றுவதற்காகப்
பாடையில் படுக்க வைத்து மனைவியைக்
கை ,கால் கட்டி தூக்கிச் செல்வார்களாம்.
கூடவே ஒருத்தன் பின்னால் தடியுடன் செல்வானாம்.
எதற்கு?
அப்பெண்ணின் கை, கால் அசைந்தால்
அடிப்பதற்காம். அதற்காகவாம்.
அதனால்தான் அதனை அனுமதிக்கிற
சடங்கை எதிர்த்தார் பெரியார்.
அதனால்தான் அவர் தந்தை.
அவர் பெண்கள் மேல் அன்பு வைத்திருந்த
தந்தை. அதனால் பெரியார்.