சிறுவர் நாடகம்: புலம்பெயர்ந்த மண்ணில் பொங்கலோ பொங்கல்..! - பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன் -
காட்சி – 1 (அப்பா, அம்மா, மகள், மகன்)
அண்ணன் கட்டிலில் படுத்து நித்திரை கொள்ளும் காட்சி. வாசலில் நின்று தங்கை அண்ணாவை நித்திரையால் எழுப்பவேண்டும். வெளிச்சம் வட்டமாக கட்டிலில் விழவேண்டும். சுப்ரபாதம் பாடல் மெதுவாகக் கேட்கவேண்டும்)
தங்கை: அண்ணா எழும்புங்கோ. இண்டைக்குத் தைப்பொங்கல் எல்லே.. எழும்புங்கோ அண்ணா…
அண்ணா: (குறட்டை ஒலி கிர்… கிர்…. என்று கேட்கவேண்டும்)
தங்கை: அண்ணா எழும்புங்கோ…!
அண்ணா: (மீண்டும் குறட்டை ஒலி)
தங்கை: அம்மா..! அண்ணா எழுபுறாரில்லை..!
(அம்மா உள்ளே வருதல்)
அம்மா : மகன் எழும்புங்கோ, இண்டைக்கு தைப்பொங்கல்எல்லே, எழும்பி குளிச்சிட்டு வாங்கோ
(மகன் எழும்பாது பிரண்டு படுத்தல்)