ஜூன் 06 - ரஷ்ய மொழி தினமும், அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த நாளும்! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -
(ரஷ்ய இலக்கிய சிருஷ்டி, பெருங்கவி அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது)
ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியருக்கு ஒப்பானவராக கருதப்படுவரே ரஷ்ய இலக்கிய சிருஷ்டி அலெக்சாண்டர் புஷ்கின். வையகம் புகழ் ரஷ்ய இலக்கிய சிருஷ்டி கர்த்தா அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 06 ஆம் திகதி கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது.
ரஷ்யக் கவிஞரும், காதல் கவிதைகள் யுகத்தின் சிறந்த படைப்பாளியுமான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) ரஷ்ய மொழியில் : Алекса́ндр Серге́евич Пу́шкин பிறந்த தினம் ஜீன் 6 ஆகும். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 1799 இல் பிறந்தவர். இளம் வயதிலேயே தனது நகர நூலகத்தில் பல புத்தகங்களைப் படித்தார். இந்த சூழல் இலக்கிய தாகத்தை ஊற்றெடுக்க வைத்தது.