இக்காணொளிகளை அண்மையில் பார்த்தேன். இவற்றில் ஒன்றில் இருதய மருத்துவ நிபுணர் எஸ். இராமசாமி அவர்கள் மாரடைப்பு, அதற்கான சிகிச்சை முறைகளான 'ஆஞ்சியோ பிளாஸ்டி', 'ஸ்டென்ட்', 'பைபாஸ்' சத்திர சிகிச்சை , இரத்த அடைப்புகள் & அவற்றால் உருவாகும் இரத்தக் கட்டிகள் போன்றவற்றைப்பற்றித் தெளிவான விளக்கங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். இருதயத்தின் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றுக்கான மருத்துவர்களின் ஆலோசனைகளை எவ்விதம் அணுக வேண்டும் என்பது பற்றிய அவரது கருத்துகளும் முக்கியமானவை. இப் பதிவு என் ஆலோசனை அல்ல. தகவலைப் பகிர்ந்து கொள்ளல் மட்டுமே. அவ்வப்போது என் கருத்துகளையும் கூறியிருக்கின்றேன். அவை மருத்துவ ஆலோசனைகள் அல்ல. என் கருத்துகள் மட்டுமே.
பொதுவாக இருதய மருத்துவர்கள் ஒருவருக்கு மூன்று இரத்தக் குழாய்களில் அடைப்புகள் 70% வீதத்திற்கு மேல் இருந்தால் , கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சத்திரசிகிச்சை க்குப் பரிந்துரை செய்வார்கள். இல்லாவிட்டால் ஆஞ்சியோபிளாஸ்டிக் முறை மூலம் ஸ்டென்ற் வைப்பதற்குப் பரிந்துரை செய்வார்கள்.
இவரது ஆலோசனைகள்படி நான் புரிந்து கொண்டவை இவைதாம்:
இருதயக் குழாய்களில் அடைப்புகள் இருந்தாலும், அவற்றால் எவ்விதம் எதிர்விளைவுகளும் ( மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற) இல்லையென்றால், அவற்றால் இருதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பில்லையென்றால் , EF Ratio > 55% ஆக இருந்தால் ஸ்டென்ற் அல்லது பைபாஸ் சிகிச்சை தேவையில்லை. ஆனால் ஒழுங்கான உடற்பயிசி, தேவையான மருந்து வகைகக்ள், இருதய ஆரோக்கியமான உணவு வகைகள் அவசியம். புகைபிடித்தல், மது அருந்துவதை இயலுமானவரை தடுக்க வேண்டும்.
EF Ratio < 40%ற்குக் குறைவாக இருநதாலும், இருதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலும், அதனால் இருதயத் தசை பாதிக்கப்பட்டு வலுவிழந்தாலும், இருதய வலி தடுக்க முடியாத வகையில் அதிகரித்துச் சென்றாலும் மட்டுமே மேற்படி இருதயச் சத்திர சிகிச்சைகளின் தேவை ஏற்படும். (அமெரிக்காவில் வசிக்கும் புகழ்பெற்ற இருதய மருத்துவர்களில் ஒருவர் Dr. Pradip Jamnadas, MD இவரது கருத்துப்படி ஒவ்வொரு அடைப்பும் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அவ்வடைப்புகளூடு செல்லும் இரத்தோட்டத்துன் அளவு கண்டறியப்பட்டு , FFR என்று அதற்குப் பெயர்- Fractional flow reserve - , அதன் அளவு .8ற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே, அவவடைப்புகளுக்கு ஸ்டெண்ட் வைக்க வேண்டும். .8ற்கும் கூடவாக இருந்தால் ஸ்டெண்ட் தேவையில்லை. உடற்பயிற்சி, மருந்து, இருதய ஆரோக்கிய உணவு, புகைபிடித்தலைத் தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் தொடர்ந்தும் அவதானிக்க வேண்டும்.)
இவரது இந்த ஆலோசனைகள் எனக்கும் சரியானதாகத் தோன்றுவதால்,இக்காணொளியைப் பகிர்ந்து கொள்கின்றேன். இது என் ஆலோசனை அல்ல. தகவலைப் பகிர்ந்து கொள்ளல் மட்டுமே.
மேலும் மூன்று இரத்தக் குழாய்களில் அடைப்புகள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சத்திர சிகிச்சை என்று முடிவெடுப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றுதான் நானும் நினைக்கின்றேன். மூன்று இரத்தக் குழாய்களும், முக்கியுமான இரத்தக் குழாய்களாக இருந்து, மூன்று இரத்தக்குழாய்களூடு செல்லும் இரத்த ஓட்டம் மிகவும் குறைந்து, அதன் மூலம் இருதயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு, இருதயத்தின் 'பம்பிங்' செயற்பாடு 4)%ற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே, இருதய இரத்த ஓட்டத்தைச் சீராக்க, இருதயத்தின் பம்பிங் சக்தியை வலுவாக்க, இருதயத்தை ஆரோக்கியமாக் வைத்திருக்க பைபாஸ் சத்திர சிகிச்சை அவசியம். [ ஒரு முக்கியமான இரத்தக் குழாயிலும், இரு முக்கியத்துவமற்ற கிளை இரத்தக் குழாய்களிலும் அடைப்புகள் இருந்தாலும் அவற்றை மருத்துவர்கள் பலர் மூன்று இரத்தக் குழாய் அடைப்பாகக் கருதுகின்றார்கள். இதுவும் தவறென்பது எனது சாட் ஜிபிடியுடனான உரையாடல் மூலம் நான் அறிந்து கொண்டேன்.)
பைபாஸ் சிகிச்சை செய்வதால் மாரடைப்பைத் தவிர்க்க முடியாது. மாரடைப்பு என்பது இரத்த அடைப்புகள் வெடித்து, கட்டிகள் உருவாகி, 100% இரத்த ஓட்டம் தடை பட்டால் மட்டுமே ஏற்படுவது.
மன அழுத்தம் மாரடைப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
இரத்த அடைப்புகள் குறைந்த வீதத்தில் , 40 வயதுக்கும் குறைவான வயதுள்ளவர்கள் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. காரணம் அவர்களின் அடைப்புகள் நிலையான,திடமானவை அல்ல. அவை வெடித்து 100% அடைப்பை ஏற்படுத்தியே மாரடைப்பு இவர்கள் மத்தியில் ஏற்படுகின்றது.
இவை நான் இவரது நேர்காணலின் மூலம் அறிந்த முக்கியமான விடயங்கள்.
இருதய மருத்துவம் இராமசாமியுடனான நேர்காணல் - https://www.youtube.com/watch?v=D3YknuwKLnE
இருதய மருத்துவர் Dr. Pradip Jamnadas, MD இன் காணொளி - https://www.youtube.com/watch?v=buzfmeTpyCw