ஜேவிபி ஓர் இனவெறிக் கட்சியா? செயற்கை அறிவுடன் ஓர் உரையாடலும், கேள்விக்கான அதன் பதிலும்! - வ.ந.கிரிதரன் -

"ஜேவிபிக் கட்சி இனவெறிக் கட்சியா?" இந்தக் கேள்வியை ஆங்கிலத்தில் நான் "Is the JVP party a racist party?" என்று செயற்கை அறிவான chatGPT இடம் கேட்டேன். அதற்கு அது தந்த விரிவான ஆங்கிலப் பதில் மூலம் அதன் வரலாற்று அறிவைக் கண்டு வியந்தேன். அது கூறியதன் முக்கிய சாராம்சம் வருமாறு:
"ஜனதா விமுக்தி பெரமுன (JVP) ஓர் இனவெறி கட்சியாக வரையறுக்கப்படவில்லை, ஆனால் அதன் வரலாறும் அரசியல் நடவடிக்கைகளும் இலங்கையில் இனப் பிரச்சினைகள் தொடர்பாகச் சிக்கலானவை. JVP மார்க்சிச - லெனினிசக் கட்சியாகத் தொடங்கியது, அது நாட்டில் வர்க்கப் போராட்டம் மற்றும் பொருளாதார வேறுபாடுகளைச் சரி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இனப் பிரச்சினைகள் குறித்த அதன் நிலைப்பாடு காலப்போக்கில் பரிணாமம் அடைந்தது.
1980-களின் பிற்பகுதியில், JVP இந்திய-இலங்கை உடன்பாட்டிற்கு எதிராக இருந்தது, இது இந்தியத் தலையீட்டையும் இந்திய அமைதிப் பாதுகாப்புப் படையினரின் (IPKF) இருப்பையும் எதிர்த்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியது. அப்போது, JVP-யின் பேச்சுவார்த்தைகளில் தேசியவாதச் சூழல் காணப்பட்டது. விமர்சகர்கள் சிலர் அதைச் சிங்களப் பேரினவாதத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறார்கள், அவர்கள் தமிழர் பிரிவினைவாதத்தையும் இந்தியத் தலையீட்டையும் எதிர்த்தனர்.
ஆனால், சமீப ஆண்டுகளில், JVP அனைத்து இனக் குழுக்களுக்கும் சமத்துவத்தை ஆதரிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இந்தக் கட்சி இன அரசியலில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு சமூக நியாயம், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.. இது இலங்கையில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் முறையில் முன்னேறிய அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்கிறது.
பொதுவாக, JVP-யின் வரலாற்றில் அதன் செயல்கள் அல்லது பேச்சுவார்த்தைகள் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்த காலங்கள் இருந்தாலும், தற்போது அது இனவெறிக் கட்சியாக கருதப்படுவதில்லை. மற்றும் கூட்டு அரசியல் நோக்கில் முன்னேற முயற்சி செய்கின்றது."




கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் சென்ற 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் (கவிஞர் ஆரணி) ‘நினைவிடைத் தோய்தல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பெற்றது. மார்க்கம் நகரில் உள்ள யுயniin ஊழஅஅரnவைல ஊநவெசநஇ 5665 14வா யுஎநரெந என்ற இடத்தில் உள்;ள அரங்கில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரான திரு. லோகன் கணபதி கலந்து கொண்டார்.
இரண்டு முறை சாகித்தியப் பரிசு, பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையினரின் இலக்கியச் சாதனையாளர் விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தினரின் வாழ்நாள் சாதனையாளர் விருது என வேறுபட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார்.
எமது ஈழ மற்றும் தமிழகச் சமூகத்தில் சிறை சென்றவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. அத்துடன் ‘சிறை மீண்ட செம்மல்’ எனப் பட்டமும் பெறுவார்கள். சிலர் பிற்காலத்தில் இதை ஒரு முதலீடாக்கி ஆட்சிபீடமேறினார்கள். நமக்குத் தெரியப் பலருக்குச் சிறையைப் பற்றிய அனுபவம் உள்ளது. சிறைக்குச் சென்ற காரணம் அரசியலாகட்டும் அல்லது சங்கிலித் திருட்டாகட்டும். அனுபவம் ஒன்றே. அப்படியிருக்கும் சமூக வெளியில், அவுஸ்திரேலியாவில் அதுவும் பேர்த்திலுள்ள சிறையைப் பற்றி நான் எழுத என்ன அவசியம் உள்ளது ?







கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று பேசுபொருளாக இருக்கின்றன. ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற உயர்திணைப் பாலினம். இப்போது பாலினமே இல்லை. மனிதர் என்ற இனம் மட்டுமே உள்ளது என கொண்டாடப்படுகின்றது. உறுப்புக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆண், பெண் என்று பிரிக்கக் கூடாது என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது. இங்கு ஒருமுறை என்ற வார்த்தை இந்த வாழ்க்கை என்பதற்குள் அடங்கி விடுகிறது. எம்முடைய மனத்துக்கு எது சரி, எது பிழை என்று தோன்றுகிறதோ அதன்படி வாழ்வோம் என்று வாழுகின்ற பண்பு தற்கால இளம் தலைமுறையினரிடம் தோன்றியுள்ளது. ஒரு பலூனை ஒரு பக்கம் அழுத்துகின்ற போது மறுபக்கம் அது தள்ளிக் கொண்டு வரும். அதுபோலவே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தி வைக்கின்ற போது அது மறுபக்கம் வேறுவிதமான குற்றங்களாக மாறுகின்றன. 


- திருப்பூர் சிறுகதைகள்! - தொகுப்பாசிரியர் - பொன் குமார்! விலை ரூபாய் 300 ( 95787 84322 ) -

தாய் நாட்டின் விடுதலைக்காய் 






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









