மரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் ! (இந்திய சுதந்திரதினக் கவிதை)
எனை ஈன்ற மாதாவே….!
உன் மகன் எழுதுகிறேன்….!
வீட்டைப் பாரு : நாட்டைப் பாரு
என்பார்கள் !
வீட்டைப் பார்ப்பதற்காகவே…. நான்,
நாட்டைப் பார்க்கின்றேன் !
பெற்ற சுதந்திரத்தைப்,
பெருமையுடன் காத்துவிட ,
பெறற்கரிய குடியரசின்,
பேரதனை நிலை நிறுத்த,
நாட்டைக் காப்பதற்காய்,
எல்லைப் புறத்தில்,
இராணுவப் படையில்,
இன்று நானும் ஒருவன் !
பனிபடர்ந்த மலைகளின் சாரலில்,
மரணத்தின் விளிம்பினில் – நான்,
நின்றபோதிலும் எனக்குள் சுழல்வது,
உந்தன் நினைவுகளே !













“பஞ்சத்தில் உழன்று : பட்டினி கிடந்தாலும்….


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









