பதிவுகள் முகப்பு

குறுநாவல் : தாய் நிலம்! - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
09 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI
         
1. ஆரம்பமாகி விட்டது ..
                                                                                                                                                                    
தற்போது ,ஆரம்ப  இளைஞர் அமைப்பில் இருந்தவர்கள்     சிதறி  , சிலர் சேர்ந்து தோழர்களாகி இயக்கங்ககளை உருவாக்கியும் ,  சேராது    தனிப்பட நட்பு வட்டத்துடன்  இயங்கிறதென மக்க​ளுக்குத் தெரியாத பல அமைப்புகள் இருந்தன.   தலைவர்களாக உருவெடுத்திருப்பவர்கள் ஒருத்தர் வீட்டிலே ஒருத்தர்  தலைமறைவாகி இருந்த காலமும் இருந்தது .  அச்சமயம் , வீட்டுப்பிள்ளையாக .. சகோதராக அரவணைக்கப்பட்டவர்கள் . இப்ப என்னப் பிரச்சனையோ ...?  எதிரியாகி , சார்ப்பாக நின்ற​திற்கு   அல்லது தெரியாத ஒரு காரணத்திற்காக  ..சுட்டு த் தள்ளும் செய்திகள் நகரை பரபரப்பாக்கி விடுகிறது . விடுதலைக்கு தம்மை  அர்ப்பணித்த இளைஞர்கள் ...இப்படி  விரயமாக   சாகிறது  வருத்தமாக இருக்கிறது .

உள்ளூர் அரசியல் தலைவர்கள்  கலவரங்களில் எல்லை மீறும் ஈழவரசை கட்டுப்படுத்த போட்ட இரகசிய விதையே இந்த ஆயுதம் ஏந்தல் . வன்முறைக்கு வன்முறை தீர்வாவதில்லை என்பதை நிரூபிப்பது போல கோபம் , விரக்தி ..என கொந்தளித்த குறைபாடுடைய ( ஆங்கிலேயக்) கல்வியைக் கற்ற​ மாணவர்களிற்கு அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை . விடுதலைக் கொள்கையை ஏற்படுத்தியவர்கள்  இளைஞர்களில்லை , அவர்களுக்கு அதற்கான​ புத்திசாலித்தனமும் கிடையாது . இந்த​ அரசியல் தலைவர்கள் தாம் .  . எனவே , கையில் ஆயுதம் கையில் ஏற கட்டுப்பாடின்றி செயல்படத் தொடங்கி விட்டனர் .

அமைப்புகளாக​ தாமே ஏற்படுத்திக் கொண்ட புதிய விதிமுறைகள் சிலந்திக்கணவாய் கணக்கில்  அவர்களையே கவ்விப்பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தன . பேச்சு தடிக்கிற போது கேட்கவில்லையா ... உடனே சூடு .  மக்கள் மத்தியில்  அமைப்புக்கள் தெரியாமலே இருந்தன .  வங்கிக்கொள்ளை நடைபெறுகிற போது பலவித இடையூறுகள் ஏற்பட்டன . மக்கள் சிலசமயம் கொள்ளையர் என கருதி தடுக்க முயன்றனர்  . விடுதலைப்போராட்டதிற்கு அளவுக்கதிகமாக ஏற்படுத்திக் கொண்ட  புனிதம்  குழப்பித் தள்ளியது . அதனால் , எடுத்த பணத்தை பிரித்து வைத்திருந்த இளைஞர்களில் ஏற்பட்ட சில்லறைச்  சந்தேகங்களும் சூட்டில்  முடிந்தன .    நகர , தரைக்கடினரின் நடமாட்டமும் வேறு அதிகமாக​  இருந்தன  . ஒரு சிக்கலான நிலமை . தோழமை மேலும் சிதறி .... அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த​ன . நேற்றைய நண்பர் இன்று எதிரி .

'மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் ' என்ற அவசியத்தை உணர்ந்த பிரதான அமைப்பு தாம் நிகழ்த்திய பல செயல்களுக்கு உரிமை கோரி பிரசுரம் அடித்து வினியோகித்தது . ஈழக்கடினரும் "தேடப்படுகிறார்கள் '  என்ற​ பட்டியலுடன் பல​ இளைஞர்களின் பெயர்களுடன் கூடிய புகைப்படங்களை  , பெரிய போஸ்டர்களை நகர்களில் ஒட்டின .  '' சொந்தமக்களே விடுதலையை எழுதுபவர் . அது வெளியிலிருந்து கிடைப்பதில்லை . வெளி அரசியலின் ஊடுருவல்கள்( நலன்கள் ) , ஈழவரசின் ஏதேச்சாதிகாரம் ...இவற்றின் மத்தியில் பாலஸ்தீனர்களின் அனுபவம் எமக்குத் தேவை '' என்று துண்டுப்பிரசுரம் வெளியிட்ட​  இவர்களின் கருத்து...எல்லாமே சரி தான் ! . ஆனால் ,  புதியவர்களாக உருவெடுத்தவர்கள்  எப்படி  அந்த இலக்கை  அடையப் போகிறார்கள் ? . மக்களுக்கு அவர்களை ஏற்பதா , தொழுவதா ..? எனத் தெரியவில்லை . எங்களுக்காக​ போராட​ வெளிக்கிட்டு விட்டார்கள் ''என்ற​ மரியாதை இருக்கவே செய்தது .

மேலும் படிக்க ...

தீப்பாஞ்சியம்மன் என்னும் காவல் தெய்வம் - ப. தமிழரசி, SHC / SH / Fellowship / 2024 /05), முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601

விவரங்கள்
- ப. தமிழரசிவ் SHC / SH / Fellowship / 2024 /05), முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601
ஆய்வு
09 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நெறியாளர்: முனைவர். ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601


முன்னுரை

தன்னை மீறிய அல்லது தன் கட்டுப்பாட்டில் இல்லாத அதே சமயம் அச்சுறுத்தும் செயல்கள் எல்லாம் மனிதர்களை அச்சம் கொள்ள வைத்தன. அப்படி அவர்களை அச்சுறுத்தும் எல்லாவற்றையும் வணங்குவதால் அதன் பெரிய சீற்றமோ பாதிப்போ அவர்களுக்கு ஏற்படாது என அம்மனிதர்கள் எண்ணி வழிபாட்டைத் தொடங்கினார். அப்படி தொடங்கிய வழிபாட்டில் தோன்றிய தெய்வங்களில் பல தெய்வங்கள் இன்று கலாச்சாரத்தை காக்கும் மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் சின்னங்களாக மாறியுள்ளன. அவ்வகையில் தீப்பாஞ்சியம்மன் என்னும் பெண் தெய்வம் எப்படி கலாச்சார காவலாளியாக மாறி வழிபடப்பட்டு வருகிறது என்பதை ஆராய்வதாக இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வு நோக்கம்

தீப்பாஞ்சியம்மன் என்னும் பொதுப் பெயரால் வணங்கப்படுகின்ற அப்பெண்கள் ‘கலாச்சாரத்தைக் காப்பது‘ என்பதன் எதிரொலியாக எப்படி கொல்லப்பட்டு தெய்வமாக்கப்பட்டனர் என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கம்.

கடவுளின் பிறப்பு

கடவுளே மனிதர்களை படைத்தார். அவரே அம்மனிதர்களை காக்கின்றார். பின்னர் அவரே மனிதர்களை அழிப்பார். அந்தக்கடவுளே மண் தொடங்கி வான் வரையிலும் உள்ள அனைத்து பருப்பொருட்களையும் உயிர்களையும் படைத்தார். இத்தனை பெரிய செய்லகளைச் செய்கின்ற அந்தக் கடவுள் யார்? அந்தக் கடவுளை யார் படைத்தார்? அந்தக் கடவுளை யார் அழிப்பார்? ஒரு மனிதர் பிறக்கிறார், வளர்க்கிறார், பின்னர் இறக்கிறார். கடவுளும் மனிதரை ஒத்த உருவம்தானே? எனில் கடவுள் எப்படி பிறப்பார்? எப்படி வளர்வார்? எப்படி இறப்பார்?

மேலும் படிக்க ...

அதிகாரக் கட்டமைப்பும் ஷம்பாலா நாவலும் - பெ. சுமதி, தமிழ் முதுகலை இரண்டாமாண்டு, தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் -

விவரங்கள்
- பெ. சுமதி, தமிழ் முதுகலை இரண்டாமாண்டு, தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் -
ஆய்வு
08 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நெறியாளர்: முனைவர். ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601


முன்னுரை

ஷம்பாலா 2019 - இல் வெளியான நாவல். தமிழவன் அவர்களால் எழுதப்பெற்ற இந்நாவல் ‘ஓர் அரசியல் நாவல்’ என்ற கோணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாவலில் கூறுகின்ற அரசியல் மக்களுக்கு எந்த விதமான சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கிறதா? அல்லது பயனற்றதாக இருக்கிறதா? என்பதை நாம் பார்ப்போம். இந்நாவல் இரண்டு வகைக் கதைப்போக்குகளைக் கொண்டுள்ளது. ஒன்று பேராசிரியர் அமர்நாத் எனபவரது எழுத்தும் சிந்தனையும் அரசால் உளவு பார்க்கப்படுகிறது. அமர்நாத் என்பவர் ஒரு எழுத்தாளர். சிந்தனையாளர், அறிவுஜீவி, முற்போக்காளர் என்ற அடையாளத்துடன் விளங்குபவர். அதனால்தான் அவர் சிந்தனைப் போலீசால் கண்காணிக்கப்படுகிறார். எப்படியெல்லாம் கண்காணிக்கப்படுகிறார்? எதற்காக கண்காணிக்கப்படுகிறார்? அதனால் அமர்நாத் அடைந்த வேதனை - மனநிலை என்ன? அவர் குடும்பம் அனுபவித்த அவல நிலை என்ன? சிந்தனை எப்படியெல்லாம் தடம் மாறுகிறது. தன் வாழ்வை எப்படி? நகர்த்திச் செல்கிறார். குடும்பத்துக்காக என்ன செய்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த கண்காணிப்பை மீறி அதிகாரத்தை உடைத்து எப்படி செயல்படுகிறார் என்பதையும் பார்க்கலாம்.

இரண்டாவது, அரசாங்கத்தால் உளவு பார்க்கப்படுகின்ற பேராசிரியர் அமர்நாத்தின் மனதில் தோன்றிய ஒரு சொல் ஹிட்லர். இவர் ஒரு ஓவியர், பிற்போக்காளர் ஆவார். ஒரு திரைப்படத்தில் எப்படி? கதாநாயகனும், வில்லனும் இருப்பார்களோ அதுபோலத்தான் இந்நாவலும் செயல்படுகிறது. ஹிட்லர் என்பவர் அரசாங்காத்தால் எப்படி? பாதுகாக்கப்படுகிறார். பிறருடைய சிந்தனையை எப்படி? தன்னுடைய சிந்தனையாக மாற்றுகிறார். ஜீனியர் அமைச்சர் என்ற பதவி எப்படி? அவருக்கு கிடைக்கிறது. அதனை வைத்து அவர் எப்படி செயல்படுகிறார். பிறரை எப்படி? வீழ்த்துகிறார். என்பதே இரண்டாம் கதைப் போக்காகும்.

சட்டம் என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் அச்சட்டம் “அறிவுஜீவிகளுக்கு“ பாதகமாகவும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாகவும் செயல்படுகிறது. அரசு எனும் அதிகாரத்தை அடையும் அரசியல் கட்சிகள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் அதிகாரத்திலிருந்து எப்படி தம்மை விடுவித்து கொள்கிறார்கள். அதிகாரத்தை விரும்புபவர்கள் எப்படி? தம்மை அதிகாரத்திற்கு உட்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய அறிவு, சிந்தனை நம் தமிழ் சமூகத்திற்கு தேவைப்படுகிறது. இந்நாவல் முழுவதும் அதிகாரத்தின் விளைவுகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. அதை மையப்படுத்தி நாவல் அமைந்திருப்பதால் நாவலை முதன்மைத் தரவாகக் கொண்டு இவ்வாய்வு அமைகிறது.

மேலும் படிக்க ...

பாமாவின் சிறுகதைகளில் ஆதிக்கக் குரல்களும் எதிர்ப்புக் குரல்களும் - வி. தீபிகா, (SHC / SH / Fellowship / 2024 / 02), முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, தமழ் முதுகலை மற்றும் ஆய்வுத் தறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் - 635 601 -

விவரங்கள்
- வி. தீபிகா, (SHC / SH / Fellowship / 2024 / 02), முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, தமழ் முதுகலை மற்றும் ஆய்வுத் தறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் - 635 601 -
ஆய்வு
08 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நெறியாளர்: முனைவர். ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601


                                             -  எழுத்தாளர் பாமா -

தலித் இலக்கியம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பல்வேறு இலக்கியங்கள் தோன்றிவிட்டன. காலத்திற்கேற்றவாறு தீண்டாமைகள், ஏற்றத்தாழ்வுகள் நவீனமயமாக்கப்பட்டு செல்கின்றன. எவையாக இருப்பினும் அவற்றை அறிந்து அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில் சமூகத்தில் நிகழும் அவலங்களை ஆவணப்படுத்தும் வகையில் தன்னுடையச் சிறுகதைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தவர் தலித் பெண் எழுத்தாளர் பாமா.  அவர் 'ஒரு தாத்தாவும் எருமையும்' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலில் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு விதமான வாழ்வியல் சிக்கல்களைச் சமூகத்திற்கு நேரடியாக சித்திரித்தவர். தன்னுடைய படைப்புகளில் யதார்த்தமானக் கதைப் பாத்திரங்களைக் கொண்டு சாதி என்னும் சமூக கட்டமைப்பை உடைக்க முயற்சித்தவர். தலித் என்று அடையாளப்படுத்தும் தலித் மக்களின் அடக்குமுறைகளையும், ஒடுக்கு முறைகளையும் உடைத்தெறிய பல்வேறு பரிணாமங்களில் பயணித்தவர். .

சாதிரீதியான ஒடுக்குமுறையால் ஏற்பட்ட நிலமைகள் அடிப்படையில் தலித் மக்கள் வறுமையாலும் தீண்டாமை போன்ற கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாச்சி சிறுகதையில் ‘‘ஒரு பறத் தாயாளியாடா எனிய அண்ணாச்சின்னு சொல்லுறது“1 என்று மேல் சாதிக்காரர் ஜெயசங்கரின் கூற்று மரியாதை நிமித்தம் காரணமாகக் கூட அண்ணாச்சி என்று தலித் மக்கள் மேல் சாதிக்காரரை அழைப்பதற்குத் தடையிருந்த நிலையை உணர்த்துகிறது. மேலும், சக மனித உரையாடல் உரிமையை மறுக்கபட்டிருந்த நிலையைக் காட்டுகிறது. “பார்ப்பனரல்லாதாரிடமிருக்கும் கொடுமை பார்ப்பனர்கள் காட்டும் கொடுமைகளை விட சில விஷயங்களில் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும்”2 என்ற வாக்கியத்தில் கூறப்பட்டுள்ள அதிகமான கொடுமைகளுள் மேல் சாதிக்காரை உறவுமுறை வைத்து கூறுவது தவறு என்று சொல்லும் கொடுமையும் ஒன்றாகும்.

“பணம் வசதி இருந்தா மட்டும் போதுமாங்க சாதியில்லன்னு ஆகிப் போகுமா எம்புட்டுப் பணம் இருந்தாலும் கீச்சாதி கீச்சாதி தாங்க. இவுங்களுக்குப் பணம் இப்ப வந்ததுங்க”3 என்று பச்சையம்மா சகுந்தலாவிடம் கூறுகிறாள். அப்போது தலித் மக்கள் எத்தகைய உயர்ந்தப் பொருளாதாரம் பெற்று பதவிரீதியில், பொருளாதாரரீதியில் உயர்ந்தாலும் தீண்டாமை என்ற ஒடுக்குமுறை தலித் மக்களிடம் இன்றும் நிலவிக் கொண்டுதான் வருகிறது. அப்போது பார்க்கையில் நவீனமயமாக்கப்பட்ட இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுகளிலும் தலித் மக்களைப் பார்க்கும் பார்வை புறத்தில் உயர்ந்த மாதிரி இருந்தாலும் அகத்தில் தலித் மக்கள் குறித்த மனநிலை முன்னேறவில்லை. தீண்டாமை நிலை தோன்றவதற்கு அடிப்படையாக இருப்பது தீட்டு, சுத்தமின்மை போன்ற கருத்தாக்கங்கள் ஆகும். இக்கருத்தாக்கங்கள் ஒரு தலைபட்சமாக தலித் மக்களின்மேல் சுமத்தப்படுகின்றன. பச்சையம்மா தலித் மக்களை வீட்டில் விட்டால் நல்ல காரியம் விளங்குமா என்று கூறும் இடத்தில் பிராமணர்களின் கொள்கைத் தாக்கம் அனைத்துச் சாதியினரிடமும் பரவச் செய்துள்ளனர். தீண்டாமை என்ற பூட்டிற்குத் தீட்டு, சுத்தமின்மை என்ற சாவி உருவாக்கப்பட்டு கடவுள் என்ற பெயரால் பூட்டி சாவியைத் தூக்கி வீசி அடிக்கப்பட்டார்கள். தலித் இனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் பொருளாதார ரீதியில் சமுதாயத்தில் உயர்ந்து வாழ்கிறார். ஆனால் பச்சையம்மா எவ்வளவு பொருளாதாரம் ஈட்டி அதனைத் தக்க வைத்து வாழ்ந்தாலும் அவர்கள் கீழ்ச்சாதிகாரர் என்று கூறுவதில் பொருளாதாரத்திற்கும் தீண்டாமைக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிகிறது. “முந்தைய காலங்களில் தலித்துக்களைப் பிறர் தொடுவதும் அவர்கள் மற்றவர்களைத் தொடுவதும் அனுமதிக்கப்படாத நிலையும்; அதைத் தொடர்ந்து பிற சாதியினர் வாழும் வீதிகளுக்குள்ளும் அவர்களது வீடுகளுக்குள்ளும் தலித்துக்கள் அனுமதிக்கப்படாத நிலையும் நிலவின”4 தலித் மக்கள் மேல் சாதியினர் வாழும் வீடுகளுக்குள்ளும், வீதிகளுக்குள்ளும் செல்ல அனுமதி இல்லாமல் இருப்பதைத் தெரிவிக்கிறது. எனவே, தலித் மக்கள் படித்து மேல்சாதிக்காரர்களுக்குச் சமமாக பொருளாதாரம் ஈட்டி அதனைத் தக்க வைத்து வாழ்ந்தாலும் அவர்களுடைய இறந்த காலத்தை நினைவூட்டி இழிவுச் செய்யப்படுகிறார்கள்.

மேலும் படிக்க ...

சர்வதேச மகளிர்தினக் கவிதை: இமயமாய் மகளிர் இருக்கிறார் என்றும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
08 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தாயாய் இருப்பாள் தாரமாய் இருப்பாள்
ஓயாமல் இருப்பாள் உழைப்பினை நல்குவாள்
சேயாய் இருப்பாள் சேவகி ஆகுவாள்
அவளே அவனியில் ஒளிவிளக் காவாள்

மகளிர் என்றுமே மகத்துவம் ஆவர்
மாநில வரமாய் வாய்த்தவர் மகளிர்
மண்ணின் பொறுமை மகளிர் பொறுமை
எண்ணிடும் வேளை கண்ணே மகளிர்

வீட்டினை ஆழ்கிறார் நாட்டினை ஆழ்கிறார்
விஞ்ஞான உலகில் விந்தைகள் செய்கிறார்
கல்வியில் உயர்கிறார் கண்ணியம் காக்கிறார்
கலைகளின் உயர்வாய் மகளிர் திகழ்கிறார்

மேலும் படிக்க ...

பேராதனை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கவிதைப் பயிலரங்கு – 2025 - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நிகழ்வுகள்
08 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், பிரதான நூலக இந்திய தகவலகமும் இந்திய உதவித் தூதரகமும்  இணைந்து நடாத்திய  பல்கலைக்கழக மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு (05.03.2025) புதன்கிழமை அன்று இடம்பெற்றது.   பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் ஈழத்துக் கவிதை மரபிற்கும் மிக நீண்டகாலமாகவே  அணுக்கமான தொடர்பொன்றுள்ளது.ஈழத்தின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆரம்ப நாட்கள் பேராதனைக்களத்திலிருந்து உருவானதை அடையாளம் காண முடியும். அந்த வகையில் தமிழ்த்துறை வருடந்தோறும் ஒழுங்கமைக்கும் குறித்த பயிலரங்கு இம்முறை  பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதான  நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றிய பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதம நூலகர் கலாநிதி ஆர். மகேஸ்வரன். “உலக தாய்மொழி தினத்தின் முக்கியத்துவம், அகத்திய முனிவர்இ தொல்காப்பியர் ஆகியோரின் இலக்கணப் பங்களிப்பு முதலான விடயங்களைக் குறிப்பிட்டார். மேலும் இந்திய, தமிழக அரசுகள்  வெளியீடு செய்யும் நூல்களை பிரதம நூலகத்திற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கௌரவ இந்திய உயர் ஆணையர் ஸ்ரீமதி சரண்யா அம்மையார் அவர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.

மேலும் படிக்க ...

அனைத்துலகப் பெண்கள் நாள் - 2025 - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
08 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

   

அனைத்துலக மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.

    இந்த 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் ‘‘ எல்லா பெண்களுக்கும் உரிமைகள், சமுத்துவம், அதிகாரம் அளிப்பதை விரைவில் செயல்படுத்துவதாகும்.’ இது  பாலினச் சமத்துவத்திற்காகச் சேர்ந்து துரிதமாகச் செயற்படலாம் என்பதை உணர்த்துகிறது. ஒருவர் சாதனையாளராக நிலைநிறுத்தி இருப்பதற்கு அதாவது ஒரு பெண்ணின் வெற்றிக்கு யாரோ ஒருவரின் உதவிக் குரல் அவருக்குப் பக்கபலமாக ஒலித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பம் வீட்டில் இருந்துதான் உருவாகியிருக்கிறது. குடும்பத்திலுள்ள தாயாக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம், சகோதரனாக இருக்கலாம், துணைவருடைய உதவியோ அல்லது மகனுடைய உந்துதல்தான் நிட்சயமாக இருந்திருக்கும்.

    அந்தவகையில் ஆண் பெண் சமத்துவத்தை உணந்து நாம் செயற்பட்டு இந்நாளை முன்னெடுப்பது பொருத்தமானது என் நம்புகின்றேன். பெண்களுக்கு ஏற்படும் வன்மங்கள், அநீதிகளுக்கு எதிராக கண்டனத்தை நாம் வழங்கவேண்டும். அது பெண்ணாக மட்டுமன்றி யாராக இருந்தாலும் பரவாயில்லை அதற்குக் குரல் கொடுக்கவேண்டும்.

     பெண்கள் தினத்தைக் கொண்டாடும் இத்தினதில் நாம் பெண்களாகப் பிறந்ததை எண்ணிப் பெருமிதத்தோடு இருக்கின்றோம்.

     ‘மங்கையராயப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
     செய்திடல் வேண்டுமம்மா’

     என்ற கவிமணி சொன்ன கூற்றுக்கு இணங்க நாம் எல்லோரும் பெருமிதமடைய வேண்டும். பெண் என்பவள் பொறுமையின் சிகரம் என்று கூறுவார்கள். ஒரு தாய் எவ்வளவு பொறுமையைக் கடைப்பிடிக்கிறாள் என்பதை நாம் குறிப்பாக அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு பெண்ணும் அந்தத்தாய்மை நிலையை அடையும்போது அது தானாகவே உருவாகி விடுகின்றது. எனவே இளையவர்களுக்கு பொறுமையில்லை என்று கூறவதைவிட அவர்கள் அந்த நிலைக்கு வரும்போது அவர்களிடம் இவை இயல்பாகவே வந்துவிடும். இந்த வேளையில் ஒவ்வொரு பெண்ணுக்கும்; மகளிர்தின வாழ்த்துக்களைக் கூற விரும்புகின்றேன்.

மேலும் படிக்க ...

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
08 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்துக்கூடாக, சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கலாசாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை உலகளாவியரீதியில் கொண்டாடும் ஒரு கொண்டாட்டமாக இது இருப்பதுடன், பாலின சமத்துவத்துவத்துக்கான செயல்பாடுகளுக்குரிய ஓர் அறைகூவலாகவும் அமைந்திருக்கிறது.

முதலாவது மகளிர் தினம், மார்ச் 19, 1911 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிற்சிலாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டிருந்தது. அன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்களும் ஆண்களும் தங்கள் ஆதரவைக் காட்டுவதற்காக பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். பின்னர், மார்ச் 8ம் திகதியைச் சர்வதேச மகளிர் தினமாக, 1975 இல் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. தற்போது கியூபா, உக்ரேயன், ரஷ்யா, போன்ற 20 நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கும் உரிமை, கற்கும் உரிமை என்பன உள்ளடங்கலான பெண்களின் உரிமைகளுக்காக பெண்ணியவாதிகள் பலர் போராடிய போராட்டங்களின் விளைவாகவே பெண்கள் இன்று ஆண்களின் தங்கியிராமல் தங்களின் காலில் நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் பெண்கள் செல்லவேண்டிய தூரமும், கடக்கவேண்டிய தடைகளும் இன்னும் அதிகமாகவே உள்ளன. அதற்கான மாற்றங்களை உலகளாவியரீதியில் தூண்டுவதும், சமத்துவக் கருத்துக்களைப் பரவலாகத் தெரியப்படுத்துவதும், பாலின சமத்துவத்திற்கான அவசரத் தேவையை முன்னிலைப்படுத்துவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதின் இன்னுமொரு முக்கிய நோக்கமாகும்.

இவ்வருடச் சர்வதேச மகளிர் தினத்துக்கான கருப்பொருள் 'Accelerate Action/ செயலைத் துரிதப்படுத்தல்' ஆகும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தலைமைத்துவத்தில் பெண்களின் முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கான உத்திகளில் இது கவனம் செலுத்துகிறது. அமைப்புரீதியான தடைகளை அகற்றல், வகைமாதிரிகளைச் சவாலுக்கு உள்ளாக்கல், பாலின சமத்துவத்தை நோக்கி விரைவாக முன்னேறல் ஆகியவற்றுக்கான அவசரத்தை, ‘செயலைத் துரிதப்படுத்தல்’ வலியுறுத்துகிறது. உலகம்பூராவுமுள்ள பெண்களுக்கு உறுதியான, நீடித்த நல்விளைவுகளை வழங்கக்கூடிய உத்தி முறைகளை விரிவுபடுத்துதல், வளங்களை ஒதுக்குதல் மற்றும் முன்முயற்சிகளை ஆதரித்தல் ஆகியவற்றுக்கான உலகளாவிய அழைப்பாக இது உள்ளது. அதேவேளையில் Strength in every story என்பதே இந்த வருடத்துக்குரிய எங்கள் நாட்டின் கருப்பொருளாகும். இது, ஒவ்வொரு பெண்ணினதும் வாழ்க்கைக் கதையும் மீண்டெழும் தன்மைக்கான, தைரியத்துக்கான, மனவுறுதிக்கான சாட்சியமாக இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது.

மேலும் படிக்க ...

சிறுகதை: பைரவி கதை சொன்னாள் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
சிறுகதை
07 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI

மனதின் சாளரங்கள் திறப்பதற்கு  மாமனிதர்களின்  தத்துவங்கள்  உதவுவது போல,  சில வாசிப்புகளும் உதவுவதை அவள் அறிவாள். இறுகியிருந்த  எண்ணங்கள் சிட்டுக் குருவிகளைப்  போல  சிறகடித்துப் பறக்கவும் ,  இனிய சங்கீதம் எங்கும் நிறைக்க   வல்லதும்  வாசிப்பு என்பதை மறுக்க முடியாது.

அறிதலுக்கும் விவாதத்திற்குமுரிய பல விடயங்களை அலசும் அந்தப் புத்தகத்தை  வாசித்து  முடித்த திருப்தியுடன் அவள் விழிகளை  மூடித்  தன் அகவுலகில் நுழைந்தாள். அங்குதான் அவளது மனக்குதிரைகள் லாயத்தில் கட்டப்பட்டிருக்கும்.

அவள் அங்கு செல்லும் வரை மிக அமைதியாக இருக்கும் அவை , அகவுலகில் நுழைந்ததும் மட்டற்ற வேகம்கொள்ளும். சில சமயங்களில் கட்டுக்கடங்காது.

அவளுடைய மனக் குதிரைகளின் இயல்பு பற்றி முதலில் ஒரு அறிமுகம் தர வேண்டும்.

உறுத்தலான  பல  விடயங்களைக்  கலந்தாலோசிப்பதற்கும் சிக்கலான  உள்ளக விவாதங்களை நடத்துவதற்கும்  அவை மிகமிக  உறுதுணையானவை.   இக்கட்டான சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள பக்கவாட்டுச் சிந்தனைகளைத் தந்து அவளுடன் கூடவே பயணிப்பவை. வேகமான மாற்றுவழிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுப்பதற்கு எப்போதும் துணை நிற்பவை.

மற்றவர்களின் கண்களின் ஊடாக அவர்களது மனதிற்குள் கணநேரத்தில் ஊடுருவும் வல்லமை  கொண்டவையென்பதால் அவர்களின் உள்ளுணர்வை அறிவதற்கு எப்போதும் அவளுக்கு உதவுகின்றன. முரண் கருத்துடையவர்களிடம் வாதிடுவதற்கு உடனடியாகக்   காரணிகளைக் கண்டறிந்தும் தருகின்றன.

ஆனாலும் மிகமிக இறுக்கமான அமசடக்கான மனிதர்களை சில சமயங்களில் அவை எடைபோடத் தவறி  விடுகின்றன.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும்: மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல்  மிகுல்  டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra) எழுதிய் புகழ் பெற்ற ஸ்பானிஸ் மொழி நாவலான 'டொன் கியூடே அல்லது டொன் கியூடி' (Don Quixote) பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இரு பாகங்களை உள்ளடக்கிய நாவல் தமிழில் 'டான் குயிக்ஸாட்' என்னும் பெயரில் நற்றிணைப் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. நாவலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார் பேராசிரியர் சிவ முருகேசன்.

இந்நாவலைப் பற்றிய என் குறிப்பினை வாசிக்கையில் , குறிப்பாக  நீங்கள் இலங்கைத் தமிழராக இருக்கும் பட்சத்தில் , நிச்சயம் உங்களுக்கு ஒருவரின் நினைவு தோன்றலாம். அப்படித்தோன்றினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.

டொன் கியூடே நாவல் இலக்கியத்தில் சுவையான, மறக்க முடியாத கதா நாயகர்களில் ஒருவன். இந்நாவல் அவனது சாகசப்பயண அனுபவங்களை விபரிப்பது.

நாவலின் கதை  இதுதான்: டொன் கியூடே வாசிப்பதில் ஆர்வம் மிகுந்தவன். அவன் வீர தீரச் செயல்கள் மிகுந்த சாகசக் கதைகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவன். அவனது வாசிப்பின் விளைவாக அவன் தன்னை ஒரு சாகச வீரனாகக் கற்பனை செய்து கொள்கின்றான். உலகைக் காக்க வந்த ஒரு வீரனாக எண்ணிக்கொள்கின்றான். அந்த கற்பனை உலகையே அவன் உண்மையான உலகாக எண்ணி, நிசத்துக்கும் , நிழலுகுமிடையில் நிலவும் வேறுபாட்டினை உணராது செயற்படுகின்றான்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (23) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் : ஞாலத்தின் மாணப் பெரிது! - இந்து.லிங்கேஸ்-

விவரங்கள்
- இந்து.லிங்கேஸ்-
இலக்கியம்
06 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                           -  அமரர் ராஜேஸ்வரன் -

ஆழ் மனத்திரைக்குள் பதிந்திருக்கும் பக்கங்களைப்புரட்டிப் புரட்டி மறுபடியும் அப்புத்தகத்தை வாசிப்பதில் அத்தனை சுகம்!அதற்குள்தானே நிரம்பிக்கிடக்கின்றன அத்தனையாயிரம் கதைகள்?ஓடி ஓடி களைத்துப்போகும் வாழ்வெனும் வட்டத்திற்குள் அவற்றைப்பகிர்ந்திட எமக்குத்தான் நேரமில்லையே!எப்போதாவது முதுமைக்கு நரையழகாகும் பருவத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வாழ்வின் புதிய பயணத்தை ஆரம்பிக்கும்போதுதான் கதை சொல்லியாக இது கைகூடும் என்றால் அதுவும் ஆனந்தம்தான்!அதற்கும் அப்பால் ஞாபகங்களை கரைந்துவிடாது காத்திட பக்கங்களைப்புரட்டிப்பார்ப்பதும்கூட மனநலத்திற்கான ஆரோக்கியமும்கூட !

அம்மனத்திரைக்குள் பதிந்திட்ட இன்னொரு கதைதான் இது. எனக்கும்,என் நண்பர் கிரிக்குமான நட்பின் உயிர்ப்பு இது. வாழ்வில் எத்தனை நிகழ்வுகள் எதிர்பாராது வந்து போகின்றன. அதற்குள் எத்தனை தங்கி விடுகின்றன.எத்தனை நிலைத்து நிற்கின்றன? அப்படியென்றால்,எனக்கும் கிரிக்குமான நட்பு 50 வருடங்களையும்தாண்டி நிலைத்து நிற்கின்றது என்பதும் மகிழ்ச்சிதான்.எப்போது இணைந்தோம். இருவருக்குமான அறிமுகமோ அன்றி முதன்முதலாக பரிமாறிக்கொண்ட வார்த்தைகளோ நினைவிலில்லை. எந்த வருடம்,மாதம், நாள்,திகதி எதுவுமே ம்கூம்;ஒன்றுமே தெரியாது.நட்பு ஒன்றுதான் ஆணிவேராகி பலமாய் இன்றும் நிலைத்து நிற்கின்றது.இப்படித்தான் காதலும் சரி,ஆழமான நட்பும் சரி எதிர்பாராமல் உயிருக்குள் கலந்து மானுடத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றது. கிரியும் அப்படித்தான்.இந்த உறவுப்பாலத்தில் ஒன்றுணைந்து பயணித்தவர்கள் பலர்.தவிர,என் தம்பியும் கிரியுடன் இணைந்ததும் இன்னொரு சிறுகதை.

விடியலும் இருளும்போல
வெயிலும் மழையும்போல
வாழ்வில் இன்பம் துன்பம் எதுவாயினும்
வீட்டையும் தாண்டி இவற்றைச்சுமந்து கொண்டு
உயிர்நண்பனிடம் பகிர்ந்துவிட்டால்
அச்சுமைகள் ஏனோ கொஞ்சமாவது குறைந்துவிடும்.
இது நியதி.
அப்படித்தான் என் சுமைகளை என் நண்பன் சுமந்தான்.
அவனின் மைத்துனனான கிரிக்கு அது கடத்தப்பட்டது.
புரிந்துணர்வும்,கெட்டித்தனமும் கொண்ட
கிரியிடமிருந்து நல்லதொரு முடிவு வந்தது.
இதுதான் இச்சிறுகதைக்கான
முன்னுரை என்றும் எழுதலாம்.

மேலும் படிக்க ...

காதலும் இன்னபிறவும்! - ராஜேஷ்வர் (சென்னை) -

விவரங்கள்
- ராஜேஷ்வர் (சென்னை) -
கவிதை
05 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இவர்களால்
சபிக்கப்பட்ட நிலத்திலும்
மலர்கிறது
ஈரம் தோய்ந்த
இரவுகளை உரியும்
இத்யாதிகள்

கசியும்
பின்னிரவின் பனித்துளியில்  
ஆல்கஹால் நிரப்பப்பட்டு
கணையம்
காதல் மொழிந்து தான்
கிடக்கிறது

மேலும் படிக்க ...

ரவி அல்லது கவிதைகள் இரண்டு!

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
05 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.  புத்தாயணப் புரிதல்.

பட்டுத்தான்
தெரிய
வேண்டியதாக
இருக்கிறது.
பறவைகளுக்கு
இலைகளின்
அருமை.
இறகுகளீன் பெருமை.

காலத்திடம்
இருக்கிறது
துளிர்ப்பதெல்லாம்
கவலைகளைக்
கடந்து.

துளிர்விடாத
போதிமரம்
பறவைகளுக்கானது
நம்பிக்கைகள்
வளர்க்க.

துளிர்த்த
போதிமரம்
இலைகளை
உதிர்க்கிறது
மனிதனுக்காக.

மேலும் படிக்க ...

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! - க. நவம் -

விவரங்கள்
- க. நவம் -
ஆய்வு
05 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம் அமைதி பெறுகின்றது. இனிமையான இசையை இரசிப்பதென்பது ஓர் அலாதியான அனுபவம்! இதனால்தான் “இசையில்லாத வாழ்க்கை இனிக்காது” என்று நீட்சேயும் – ”துன்பத்தைத் துடைப்பதற்கே இசை உண்டாக்கப்பட்டது” என்று ஷேக்ஸ்பியரும் சொல்லிச் சென்றார்கள் போலும்!

மேலும், இசையானது சிந்தனையைத் தூண்டவல்ல ஒரு சிறந்த சாதனமாகும். புறவயமான இன்பத்திலும் மேலாக, இசை அறிவின் ஓர் ஊடகமாகவும், ஆன்ம ஈடேற்றத்தின் சாதனமாகவும், அகவயமாகப் பயன் தரவல்லது. தியானம், முறுக்கேறிய உணர்வுகளிலிருந்து தளர்ந்து விடுபடுதல், மனதில் காட்சிப்படுத்தல் - மற்றும் ஞாபகசக்தி, ஒழுங்கு, ஒழுக்கம், உடலாரோக்கியம், கலை-கலாசார விழுமியங்கள் ஆகியவற்றை மேம்படுத்தல் - போன்ற பல்வேறு நன்மைகளையும் இசை தன்னகத்தே கொண்டது.

உலகில் வேறெந்த இனத்திற்குமே இல்லாத இசையுறவு தமிழினத்திற்குள்ளது. தாயின் வயிற்றில் கருக்கொண்டதும் நலங்குப் பாடல், மண்ணில் வந்து பிறந்ததும் தாலாட்டு என்று ஆரம்பித்து - குழந்தைப் பருவத்தில் நிலாப்பாடல், வாலிபப் பருவத்தில் வீரப்பாடல், காதற்பாடல், சற்று முதிர்ந்த பருவத்தில் ஆன்மீகப் பாடல் எனத் தொடர்ந்து, உயிர் பிரிந்த பின்னர் ஒப்பாரிப் பாடல் என்று வாழ்வியலின் அனைத்துப் பருவங்களுக்குமெனத் தமிழ்ப் பாடல்கள் உள்ளன. இது தமிழினத்திற்கு மட்டுமேயுள்ள தனித்துவமான இசை அடையாளம்.

உண்மையில், நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். நாம் நமது தாயின் கருப்பையில் இருந்தபோது, நமது கண்களால் எதையுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால் காதுகளால் அந்த இசையைத் தொடர்ந்து இரசித்துக்கொண்டு இருந்தோம். அது வெறொன்றுமல்ல, நமது தாயின் இதயத்துடிப்புத்தான். எப்போதுமே தாலாட்டுப்போல, அந்த இதயத் துடிப்பின் இசையில நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

மேலும் படிக்க ...

பகுத்தறிவு - சந்திரகெளரி சிவபாலன் -

விவரங்கள்
- சந்திரகெளரி சிவபாலன் -
இலக்கியம்
04 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று கட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் ஐந்து  அறிவு மிருகங்களா? என்று புரியாது போய்விடும். மிருகங்கள், பறவைகள் பலவற்றின் குணநலங்களை எடுத்தாராயும்போது அவையே தம் வாழ்வுக்குத் தேவையான அறிவு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தலையாட்டித் தொடரும் ஆட்டு மந்தைகள் போல் வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கம் என்றோ, ஊரோடு ஒத்தோடாவிட்டால், சமூகம் எம்மை ஒதுக்கிவிடும் என்றோ, ஆச்சரியமானதாக இருக்கின்றது என்றோ, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்றார்களே! அதில் ஏதோ உண்மை இருக்கும் என்றோ எதையும் நம்பிவிடக்கூடாது.

அன்றே உலகப்பொதுமறை தந்து முக்காலத்தையும் ஒன்றே முக்கால் வரிகளால் அளந்த வள்ளுவர் பகுத்தறிவு காடடிவிட்டார்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எவர் சொன்னாலும் அதன் உண்மைப்பொருளைக் காணவேண்டும் அதுவே அறிவு.

“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எந்தப்பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப்பொருளின் உண்மையான இயல்பை அறிவது அறிவு.

“யார் சொன்னார், எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்” என்று சாக்ரடீஸ் சொல்லியிருக்கின்றார்.

மேலும் படிக்க ...

அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முருகபூபதி எழுதிய யாதுமாகி ( பாகம் -02 ) மின்னூல் மெய்நிகரில் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
04 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | ZOOM Meeting ID: 897 1736 5517ss | Passcode: 737853

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ. முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி ( 02 ஆம் பாகம் ) மின்னூல் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் அமேசன் கிண்டிலில் வெளியாகிறது. இதன் வெளியீட்டு அரங்கு மார்ச் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் இடம்பெறும். கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாதுமாகி – முதலாம் பாகத்தின் மின்னூலை வெளியிட்டிருக்கும் முருகபூபதி, இந்த ஆண்டு மீண்டும், அதன் இரண்டாம் பாகத்தினை வெளியிடுகிறார். முதல் பாகத்தில் 28 பெண் ஆளுமைகள் இடம்பெற்றனர். குறிப்பிட்ட நூலை தற்போதும் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: `பறவைகள்’ நூல் அறிமுகம் - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
நூல் அறிமுகம்
04 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில் பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப் பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல், தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணி சஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.

பறவைகள்’ என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் கூடியன. புலம்பெயர் நாடுகளில் வெவ்வேறு இனம், மதம், கலாசாரம் கொண்ட பின்னணியில் வாழும் இருவர், ஒருவருக்கொருவர் துணை தேடும்போது ஏற்படும் சிக்கல் தன்மையை பறவைகள் சிறுகதை பிரதிபலிக்கின்றது. 'எனக்கொரு சினேகிதி’ சிறுகதையானது, காதல் என்பது இதுதான் என்று இலக்கணம் வகுக்கும் கதை. 'புளிமாங்காய்’ என்ற கதை மிகவும் சிறப்பாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. கனடா பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய 'நீங்காத நினைவுகள்’ என்ற தொகுதியில் இடம்பெற்ற கதை இது.

சிறுவர் சிறுகதைகளில் 'கனவு நினைவாக வேண்டும்’ என்ற சிறுவர் கதை ஒரு அறிவியல் கதை ஆகும். வேற்றுக்கிரக வாசிகளின் அன்ரனாக்களை - பூமியிலே இருக்கும் லேடி பேர்ட், நத்தை போன்றவற்றுடன் ஒப்பிடுகின்றது இந்தக் கதை. கதையை ஒரு கனவு என்று சொல்லாமல், இடையில் நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. 'மர்ம மாலை’ என்ற தொடர் சற்றே வித்தியாசமானது. பெயருக்கு ஏற்றவாறு அமேசன் காடுகளில் நடக்கும் தொடர் மர்மமாக இருந்தது.

மேலும் படிக்க ...

மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும்பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (3) - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
02 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒன்று

நான் ஒரு ஏதெனியன் அல்ல;
கிரேக்கனும் அல்ல;
ஆனால் உலகின் குடிமகன்.
- சோக்ரடீஸ்

கிரேக்க நாகரிகமும் தொடக்ககால மெய்யியலின் கருவூலமும் முதல் இயலில் துலக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவும் மேற்காசியாவும் இணையும் இடத்தில் கிரேக்கம் அமைந்துள்ளது. ஆரம்பகாலத்து கிரேக்க அரசியல் போக்குகளை நூலாசிரியர் வரலாற்று, சமூக அடிப்படையில் அலசியுள்ளார். அரசியல், சமூக மாற்றங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல், சமூக நடத்தைக்கோலங்களை எடுத்துரைக்கையில் பின்வருமாறு எழுதிச் செல்கின்றார்:

“நாட்டில் அன்றிருந்த பொருளாதாரச் சூழலில் ஏழைகளும் விவசாயிகளும் பெரும் கடன் சுமைகளுக்காளாகினர். கடனை அடைக்க முடியாதவர்கள் எஜமானர்களுக்குத் தம்மையே அடிமைகளாக விற்பனை செய்துகொண்டனர். இதற்கிடையில் விவசாயிகள், கைவினைஞர்கள், வணிகர்களைக் கொண்ட ஒரு நடுத்ததரப் பண்புகளைக்கொண்ட ஒரு வகுப்பும் உருவாகியிருந்தது. இவை, அசைவற்ற சித்திரங்கள் அல்ல. மக்கள் கிளர்ச்சிகளுக்கு ஆயத்தமாகி வந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வும் அரசியல் ரீதியான வேறுபாடுகளும் சமூகத்தில் ஒரு கொதிநிலையை உருவாக்கியிருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஏதென்சில் ஒரு புதிய அரசியல் மாற்றம் நிகழ்கின்றது. அரசியல் சமத்துவம், அரசியல் உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், நாட்டின் அரசியலில் மக்களின் பங்களிப்பு போன்ற மக்கள் நிலைப்பட்ட அரசியலுக் கான கோரிக்கைகள் வலுவடைகின்றன. இங்கிருந்துதான் ஜனநாயக அரசியல் தோற்றம் பெறுகிறது. அடிமைகளின் அவலம், எழைகளின் துயரம் என்ற கருத்துகளும் இதன் பின்னணியில் இருந்தன. இந்தக் காலத்தில் நடைபெற்ற அரசியல், சட்டச் சீர்திருத்த வரலாறுகளிலிருந்து இந்த உண்மைகளை நாம் பார்க்கிறோம்” (பக். 6),

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் தன்மேம்பாட்டுரை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி , உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி , உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
02 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று தன்மேம்பாட்டுரை அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் தன்மேம்பாட்டுரை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

தன்மேம்பாட்டுரை அணி

தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தன் மேம்பாட்டுரை என்னும் அணியாகும்.

“தான்தற் புகழ்வது தன் மேம் பாட்டுரை”
(தண்டியலங்காரம் 44)

1.வாலி, தாரையிடம் தன்னைத் தானே புகழ்தல்

வாலியை சுக்ரீவன் போருக்கு அறைகூவல் விடுத்தான். வாலியும் போருக்குக் கிளம்புகிறான். அப்போது தாரை, சுக்ரீவனுக்கு உதவியாக இராமன் வந்துள்ளான் என்பதை, நம் அன்புக்குரியவர்கள் கூறியதை வாலியிடம் கூறினாள். அதற்கு பதில் அளிக்கும் போது, வாலி மூன்று என்று அமைந்துள்ள அழிவற்ற பெரிய உலகங்களில் உள்ள உயிர்கள் யாவும் கருத்தால் ஒத்து ஒருங்கு சேர்ந்தவையாகி, எனக்குப் பகையாக வந்து எதிர்த்தாலும் அவை அனைத்தும் தோல்வியடையும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றையெல்லாம் கூறுகிறேன் கேட்பாயாக. மந்திரம் என்னும் பெரிய மலை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பு முடிவில்லாமல் கடையும் கயிறாகவும், திருமால் அந்த மத்தாகிய மந்திர மலை ஆழ்ந்து போகாது தாங்கிக் கொள்ளும் ஆமையான அடைக்கலாகவும், சந்திரன் மத்தாகிய மந்திர மலையை அணைத்து நிற்கும் தூணாகவும் விளங்க, அக்கயிற்றைப் பெருமிதத்துடன் ஒருபுறத்தில் இழுத்துக் கடைபவர் இந்திரன் முதலிய தெய்வங்களும், மறுபுறத்தில் கடைபவர் அத்தேவர்களுக்கு எதிரான அசுரர்களும் ஆவர்.

“ மந்தர நெடு வரை மத்து வாசுகி
அந்தம் இல் கடை கயிறு அடைக் கல் ஆழியான்
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர்”
(வாலி வதைப்படலம் 252)

அந்த மத்தாகிய மந்திர மலையைப் பெயர்த்து சுழலுமாறு இழுத்து வலிமை இல்லாத தன்மையரான தேவர்களும், அசுரர்களும் தளர்ச்சி அடைந்த நிலையைப் பார்த்து நான் அவர்களை எல்லாம் விலக்கி, அதைத் தயிறு கடைவது போலக் கடைந்து அவர்களுக்கு அமிர்தம் கிட்ட செய்தது நீ மறக்க கூடியதாகுமோ. (வாலி வதைப்படலம் 253)

மேலும் படிக்க ...

புற்றுநோய்க்கெதிரான பயணத்தில் - மருத்துவர் சியாமளா நடேசன் - தகவல்: நடேசன் -

விவரங்கள்
- தகவல்: நடேசன் -
நலந்தானா? நலந்தானா?
01 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புற்றுநோய்க்கெதிரான பயணத்தில் ..-  மருத்துவர் சியாமளா நடேசன்

https://www.youtube.com/watch?v=KTMbLXDAvZU

சிறுகதை: வழியறியும் பாதங்கள் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
01 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

வானத்தைக் கருமேகங்கள் முற்றாக ஆக்கிரமித்திருந்தன. மார்கழி மாதத்துக் குளிர் ஊசி துளைப்பதுபோல அவளைத் துளைத்தது. மழை நீர் குட்டைகளாக அங்கும் இங்கும் தேங்கியிருந்தது. சேறும் சகதியாக இருந்த தரையில், காலடிகளை ஒவ்வொன்றாகத் தூக்கித்தூக்கி மெதுமெதுவாக அவள் வைத்தாள். “கவனமப்பா, வழுக்கும். விழுந்திடாதையும்,” அவளுக்குள் ஒலித்த நாதனின் குரல் அவளின் கண்களைத் திரையிடச் செய்தது.

அந்த மப்பும் மந்தாரமுமான சூழலில்கூட, பின்வளவில் நாதன் பயிரிட்டிருந்த தக்காளியும், கத்தரியும், பிஞ்சு மிளகாயும் காய்த்துப் பொலிந்திருந்தது அவளுக்குத் தெரிந்தது. அதேநேரத்தில், எப்போதுமே நேர்த்தியாகவிருக்கும் அந்தத் தோட்டம், களைகளால் நிரம்பி அவளைப் போலவே சோகத்தை அப்பிவைத்துக்கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோற்றமளித்தது. தண்ணீர் பாய்ச்சுவதும், களைபிடுங்குவதும், பசளையிடுவதுமென செப்ரெம்பர் வரைக்கும் தினமும் நாதனின் மாலைநேரங்கள் அதற்குள்தான் கழிந்திருந்தன. அவன் நேசித்த அந்தத் தோட்டத்தைச் சற்றுச் சீராக்குவோமென்ற நினைப்பில் களைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கத் தொடங்கினாள். “குந்தியிருந்து பிடுங்காமல் ஒரு ஸ்ரூலிலை இருந்துகொண்டு செய்யுமன். முதுகு வலிக்கப்போகுது. அதோடை களையெண்டு நினைச்சுக் கீரையளையும் பிடுங்கிப்போடாதையும்,” மீளவும் அவன் அவளுடன் பேசினான். தோட்ட வேலைகள் என்று எதையும் அவள் இதுவரை செய்ததும் இல்லைத்தான். “நீர் விதைச்சா பெரிசா முளைக்கிறதில்லையப்பா, நான் செய்யிறன். நீர் போய் எனக்கொரு தேத்தண்ணி போட்டுக்கொண்டுவாரும்.” தூக்கிக் கட்டின சாரத்துடனும், முறுக்கேறிய மார்புடனும் வியர்க்க வியர்க்க நிற்கும் நாதனுக்குத் தேத்தண்ணியுடன் அவனுக்குப் பிடித்த கடலை வடையையோ அல்லது பகோடாவையோ சேர்த்து அவள் கொண்டுவருவதும், அவனின் கைகள் அழுக்காக இருந்தால் அந்தச் சிற்றுண்டிகளை அவளே அவனுக்கு ஊட்டிவிடுவதுமான காட்சி அவளின் மனதில் ஓடி மறைந்தது. கண்களை நிறைத்த கண்ணீரை தனது வலது முன்கையால் துடைத்துக்கொண்டவள், பூத்துச் செழித்திருக்கும் பயிர்களைப் பார்த்துப் பூரித்துப்போகும் அவனுடன் தானும் சேர்ந்து அகம் மகிழ்ந்துபோவதை நினைத்துக்கொண்டாள். “இண்டைக்கு எல்லாமே உங்கடை தோட்டத்திலை பிடுங்கினதுதான்,” எண்டுசொல்லியபடி அவள் பரிமாறும், மசித்த கீரைக்கறியையும், மாசிக்கருவாடு கலந்த கத்தரிக்காய் பால்கறியையும், தக்காளியுடன் தாளித்துச் செய்த வெந்தயக் குழம்பையும், பருப்புடன் அவன் ரசித்துச் சாப்பிடும்போது அவளுக்கு ஏற்படும் உவகைக்கு ஏதும் ஈடிருப்பதில்லை.

மேலும் படிக்க ...

முருகனின் விழாக்களும் வழிபாட்டு முறையும் - முனைவா் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூா் - 635 802, திருப்பத்தூர் மவட்டம்

விவரங்கள்
- முனைவா் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூா் - 635 802, திருப்பத்தூர் மவட்டம்
ஆய்வு
28 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீது மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளின் தொகுப்பாகவும் சொற்கோவைகளால் ஆன இறைவழிபாட்டுத் துதிகளின் வெளிப்பாடாகவும் சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் போன்ற செயல்களின் அடிப்படையில் தமிழ்கூறு நல்லுகில் தனிப் பெரும் புகுழுடன் போற்றப்பட்டு வரும் முருக வழிபாடானது தொன்மைக் காலந்தொட்டு அண்மைக்காலம் வரை ஒண்தீந்தமிழ்க் குடிமக்களின் சமய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றிவிட்ட ஒரு வழிபாட்டு முறையெனில் மிகையன்று முருகவிழாவும் வழிபாடுயும் எவ்வாறு எப்படி படிப்படியாக வளா்ந்ததென்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

பெயர்க்காரணம்

முருகு என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும் ஆகுவு முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின இடையின வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சோ்த்து முருகு (ம் + உ, ர் + உ, க் + உ, முருகு) என்றானதால் இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

வேறு பெயா்கள்

முருகனின் வேறு பெயா்கள் சேயோன் அயிலவன், ஆறுமுகன் முருகன், குமரன், குகள், காங்கேயன், வேலூரவன், சரவணன், சேனாதிபதி, வேலன், சுவாமிநாதன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, தஞ்சபாணி அல்லது தண்டபாணி, கதிர்காமன், முத்துவேலன், வடிவேலன், மயில்வாகனன், ஆறுபடை வீடுடையோன், வள்ளற்பெருமான், சோடாஸ்கந்தன், முத்தையன், சேந்தன், வசாகன், சுரேஷன், செவ்வேல், கடம்பன், சிவகுமரன், வேலாயுதன், ஆண்டியப்பன், கந்தசாமி, செந்தில்நாதன், வேந்தன் போன்ற பல பெயா்களால் வழங்கப்படுகிறார். கொற்றவை சிறுவன் பழையோள் குழவி அறுவா் பயந்த ஆறமா் செல்சன் எனப் பலவாறாக அவ்வழிபாட்டுக் கடவுளான முருகனைப் பழந்தமிழ் இலக்கியங்கள் ஆலமா் அசல்வன் அணிசால் மணிமிடற்று அண்ணற்கு மதி ஆரவ் பிறந்தோன் என்று பலவாறு வா்ணிக்கின்றன.

மேலும் படிக்க ...

எனது எழுத்துகளைப்பற்றிய செயற்கை அறிவுத் திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில உரையாடல்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது படைப்புகளைப்பற்றிய செயற்கை அறிவுத்  திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில மொழியிலான  உரையாடல்களை இங்கு நான் பட்டியலிடுகின்றேன். இங்கு உரையாடப்படும் என் படைப்புகளின்  ஆங்கில மொழி பெயர்ப்புகளைச் செய்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்.

இங்குள்ள படைப்புகளில் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல்களை எனது V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலில் கேட்கலாம். நாவல்களுக்கான உரையாடல்களை என் முகநூற் பக்கத்திலும் , இணையக் காப்பகம் தளத்திலும் கேட்க்லாம்.

செயற்கை அறிவினை மானுடர் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதால் நன்மையுண்டு என்பதை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை. இவற்றைச் சாத்தியமாக்கியது Google NotebookLM. அதற்காக அதற்கு என் மனம் நிறைந்த நன்றி.
 
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast

சிறுகதைகள்:

கணவன் (Husband) - https://www.youtube.com/watch?v=BSWen8-qdvA&t=15s
மான்ஹோல் (Manhole) - https://www.youtube.com/watch?v=DF6YX6pDHKc
சுண்டெலிகள் (Mice) - https://www.youtube.com/watch?v=QbcPKR_jAm8&t=10s

நாவல்கள்


அமெரிக்கா (America) -

https://www.youtube.com/watch?v=9nATHcXH5nI
https://archive.org/details/novel-america-by-v.-n.-giritharan

குடிவரவாளன் (An Immigrant) -  
https://www.youtube.com/watch?v=YH3QoanB1Gg    
https://archive.org/details/novel-an-immigrant-by-v.-n.-giritharan

பதினெண்கீழ்க்கணக்கில் நிலம்சார் சிந்தனை - முனைவர் ச.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவர் ச.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
26 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை

மனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் கடைப்பிடிக்க கூடாத செயல்களை தொகுத்தும் பகுத்தும் உரைப்பதே பதினெண்கீழ்க்கணக்கு. இந்நூலில் அறத்தோடு அறிவியல் கருத்துகளும் பொதிந்து கிடந்துள்ளன என்று கூறின் மிகையாகாது. இயற்கையைக் கண்டு மனிதன் அஞ்சத் தொடங்கினான். இவ்வச்சத்தின் விளைவாக பண்டைத்தமிழன் ஐம்பூதங்களையும் வழிபட்டான். ஐம்பூத வழிபாட்டால் பருவத்தையும் நேரத்தையும் அளவிடுவதில் அதீத நாட்டம் கொண்டான். ஐம்பூதங்களில் முதன்மையானது நிலம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத்தமிழனின் வாழ்வில் இன்றியமையா இடத்தினைப் பெற்ற நிலம் சார் சிந்தனைகளை இலக்கியங்கள் வழி வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

நிலம்

உலகில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஐம்பூதங்களே. இவ்வைம்பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த தொடர்பினை உடையவை. இயற்கையோடு இயைந்த பழந்தமிழன், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் போற்றி வழிபட்டதோடு அவற்றின் நுட்பமான இயக்கங்களையும் தனது தொலை நோக்கு பார்வையால் அறிந்துள்ளான் என்பதனை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தெளிவாக்குகின்றன.

ஐம்பூதங்களுள் முதன்மையானது நிலம். உலகில் வாழ்கின்ற ஓரறிவு முதலாக ஆறறிவு உயிரினங்கள் வரையிலானோர் தங்குவதற்கு இடமளிக்கும் பரப்பளவே நிலம். மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவடையச் செய்வதில் நிலம் முக்கிய பங்காற்றுகின்றது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி நிலம் என்ற சொல்லிற்கு, “பயிர் செய்யும் இடம், பூமியின் மேல்பரப்பு, இயற்கைச் சூழலைக் கொண்டு பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு, தரை”1 என்று பொருள் உரைக்கின்றது. முதற்பொருளில் நிலத்தை முதன்மையாக தொல்காப்பியர் சுட்டும் முறையினை,

“முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பு எனமொழிப இயல்பு உணர்ந்தோரே”
(இளம்,தொல்,பொருள்,மரபு.நூற்.950)

என்ற நூற்பா உணர்த்துகின்றது. நிலங்களை அவற்றின் தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பண்டைத்தமிழன் பாகுபடுத்தியதோடு காலத்தை அறிந்து கொள்வதற்கும் நிலத்தை உபயோகப்படுத்தினான் என்பதனையும் உணர முடிகின்றது.

மேலும் படிக்க ...

சிறுகதை: முடிவு - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
26 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*ஓவியம் - AI

 “ மதிய உணவுக்கு வாருங்கள்  “  சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு...வழக்கமாய் தொலைபேசி செய்து   வரட்டுமா , வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபின்... இந்த முறை குறுஞ்செய்தி என்பது ஆச்சர்யமாக இருந்தது . அதுவும் தமிழில் அனுப்பியிருந்தாள்.

ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் புது சிம்மும், புது எண்ணும் பெற்று தொடர்பில் இருப்பாள். அதனால் இம்முறை வந்த புது எண்ணில் இருந்த சந்திரமதி என்ற பெயர்தான் உறுதிப்படுத்தியிருந்தது அவள் ஊருக்கு வந்திருப்பதை. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இரண்டு நிமிடம் கழித்து அழைத்தான். “ நல்லா இருக்கீங்களா. இப்பிடி கேட்க சில சங்கடங்கள் வந்திருச்சு .. வாங்க வீட்டுக்கு.. பேசலாம் ’‘

 சந்திரமதியின் முகத்தில்  தெரிந்த பதற்றம் உடம்பு முழுக்கப் பரவியது போல சந்திரமதியின் முகம் வியர்த்து சோர்ந்திருந்த தோற்றம் சொல்லியது. சேலையை இடுப்பிலும் மார்பிலும் ஒரு சேர சரிசெய்து கொண்டாள். முகத்தில் வழிந்த வேர்வையை துடைக்க்க் கைக்குட்டையை தேட நேரமற்றது போல் உள்ளங்கையால் துடைத்துக் கொண்டாள். சந்திரசேகரன் எதிரிலிருந்த நாற்காலியைக்காட்டினான்.அதன் இயல்பான நிறத்தை இழந்து வெளிறியிருந்தது நாற்காலி.

“ மொதல்லே உக்காருங்க “

“ துபாய் பிளைட்டுக்கு இன்னும் இருபது நாள் இருக்குது. அதெக் கான்சல் பண்ணிட்டு உடனே போறதுக்குன்னு வேற புக் பண்ண நெறைய செலவாகும்.    அதுவரைக்கும் எங்க தங்கறதுன்னு தெரியலே “

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கறுப்பின வரலாற்று மாதம் - குரு அரவிந்தன் -
  2. நதியில் நகரும் பயணம் 8 பாம்பேர்க் (Bamberg) - நடேசன் -
  3. சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' பற்றிய சிந்தனைகள் (4) - ஜோதிகுமார் -
  4. மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (2) - ஈழக்கவி -
  5. நனவிடை தோய்தல் (22) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - *வாசங்களே விலாசங்களாய் வாழ்ந்த பொழுதுகள்! - இந்து லிங்கேஸ் -
  6. எனது யு டியூப் சானல் 'V.N.Giritharan Podcast' - வ.ந.கிரிதரன் -
  7. நடேஸ்வராக்கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது! - குரு அரவிந்தன் -
  8. பல்கலை வித்தகர் பாடும் மீன் ஸ்ரீகந்தராசா அவர்களின் பாராட்டு விழா நிகழ்வு
  9. மடலேறுதல் - முனைவர் மூ.சிந்து, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641048 -
  10. வாழும் இலக்கியங்கள் - நடேசன் -
  11. சூரியக் குடும்பக் கிரகங்களின் அணிவகுப்பு - குரு அரவிந்தன் -
  12. அஞ்சலிக்குறிப்பு: 'சங்கீதக் கலாநிதி' அருந்ததி ஶ்ரீரங்கநாதன் நினைவுகள்! - முருகபூபதி -
  13. நனவிடை தோய்தல் (21): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - நயினை நாகபூசணியின் அருளும்,அழகும்! - இந்து.லிங்கேஸ்-
  14. முதல் சந்திப்பு: சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் பத்மா இளங்கோவன்! - முருகபூபதி -
பக்கம் 16 / 115
  • முதல்
  • முந்தைய
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • அடுத்த
  • கடைசி