மணிப்பூரே! ஓ பற்றியெரியும் மணிப்பூரே! - ம.ஆச்சின் -
மணிப்பூரே! ஓ பற்றியெரியும் மணிப்பூரே!
மணிப்பூரு எரியுதம்மா!
மரண ஓலம் உலகெங்கிலும் ஒலிக்குதம்மா,
குக்கி பழங்குடியே மணிப்பூரில்
சிக்கித் தவிக்கிறியே,
உன் உரிமைக் குரல் கேட்கிறதே!
மணிப்பூரே! ஓ பற்றியெரியும் மணிப்பூரே!
மணிப்பூரு எரியுதம்மா!
மரண ஓலம் உலகெங்கிலும் ஒலிக்குதம்மா,
குக்கி பழங்குடியே மணிப்பூரில்
சிக்கித் தவிக்கிறியே,
உன் உரிமைக் குரல் கேட்கிறதே!
இன்றுதான் இலங்கைத்தீவு
இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த்தீவானது.
இந்து சமுத்திரத்தின் சொர்க்கம்
இன்றுதான்
இந்து சமுத்திரத்தின் நரகமானது.
இலங்கைத் தீவின் இருண்ட யுகம் உதித்த நாளும்
இன்றுதான்.
இலங்கைத் தமிழர்தம்
இரத்தம் குடிக்கப்பட்ட நாள்.
இப்பாரின் திக்குகளெங்கும் அவரைப் பேர்
இடரால் பெருமளவில் அகதிகளாக
இடம் பெயர வைத்தநாள்!
- தேவதாரு மரம் -
டெல்லியில் இருந்து சிம்லாவிற்குச் சென்ற இந்திய ரயில் பயணம் சுகமாக இருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் உணவு மற்றும் பத்திரிகைகளும் தரப்பட்டது. சிம்லா வட இந்தியாவில் மிகவும் சுத்தமான இடமாக எனக்குத்தெரிந்தது. எங்களுடன் பயணித்த ஆங்கிலப்பெண் சிம்லா ஸ்கொட்லாந்து நகரம்போல இருக்கிறதென்றாள். பெரும்பாலான வட இந்தியர்கள் தேன்நிலவிற்கு வரும் இடமாக இது தெரிந்தது . கடைத்தெருக்கள் மிக சுத்தமாகக் காட்சியளித்தன.
சிம்லாவில் எனக்கு ஜுடியின் இருமல் தொற்றிக்கொண்டது. ஒரு நாள் அறையிலே தங்கியிருந்தேன். ஆக இரண்டு இரவுகள் சிம்லாவில் தங்கியிருந்தோம். இமாலயப் பிரதேசம் என்ற இந்த மாநிலத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இங்குதான் முதல் முதலாகச் சமஸ்கிருத இலக்கியங்களில் கூறப்பட்ட தேவதாரு மரததை (Himalayan Chestnut tree) எங்கும் பார்க்கமுடிந்தது.
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் வருடத்தில் ஒன்பது மாதங்கள் இங்கிருந்துதான் அரசாண்டனராம். ஆங்கிலேயர்களது வைசிராய் மாளிகை பெரிதானதில்லை. அந்த சிறிய மாளிகையில் 40 அதிகாரிகள் 800 வேலைக்காரரை வைத்து முழு இந்தியாவையும் அதனது 40 கோடி மக்களையும் வருடத்தில் 9 மாதங்கள் அரசாண்டார்கள் என்பது வியப்பான விடயமாகத்தோன்றியது. இங்குதான் சிம்லா மகாநாடு, சுதந்திரத்திற்காகப் போராடிய இந்தியத் தலைவர்களைச் சந்திப்பது, தீபெத்தின் பகுதியான அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவோடு இணைத்த நடவடிக்கை என எல்லா வரலாற்றின் முக்கிய விடயங்கள் நடந்தேறின.
எனினும் நான் எழுகின்றேன் – I
என்னை நீ வரலாற்றில் எழுதிவிடலாம்
கசப்பான, திரிக்கப்பட்ட உனது பொய்களுடன்,
என்னை மிதமிஞ்சிய அழுக்கிலிட்டு நீ மிதிக்கலாம்
ஆயினும், நான் மேலெழுவேன், தூசிபோல.
என் துணிச்சல் உன்னைத் துவம்சிக்கிறதா?
ஏன் மனமுடைந்து அல்லற்படுகிறாய்?
என் அமர்வு கூடத்தில்
எரிபொருள் பாய்ச்சும் எண்ணெய்க் கிணறுகள்
என்னிடம் இருப்பதுபோலான
மெத்தனத்துடன் நான் நடப்பதனாலா?
அதே சந்திரர்கள் போல, சூரியர்கள் போல,
ஆர்ப்பரித்தடங்கும் கடலலைகளின் நிச்சயத்துடன்,
அதே நம்பிக்கைகள் துள்ளித் துளிர்ப்பதுபோல,
இனியும் நான் எழுவேன்.
கிட்டத்தட்ட 500-600 ஆசிரியர்கள், சடுதியாக, ஹட்டன் கல்வி வலயத்தில், ஜுன்-12, 2023முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரணங்களில் பிரதானமானது, சமரசங்களுக்கு கட்டுப்படாத அல்லது அடிவருடித்தனங்களுக்கு ஆட்படாத, மலையக ஆசிரிய ஒன்றியம் போன்ற நடுநிலை ஆசிரிய தொழிற்சங்கங்கள், ஆசிரிய இடமாற்ற சபையில் இருந்து அகற்றப்பட்டது என்பது முதற் காரணமாக இருக்கின்றது. இரண்டாவது, மேற்படி ‘சிதைப்பு’ படலமானது, மலையகத்தை சார்ந்தவர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டு அரங்கேற்றப்படுமாயின் - அது இன்னமும் கன கச்சிதமாக சோபிப்பதாய் அமைந்துவிடும் என்ற எண்ணப்பாடு சம்பந்தப்பட்டவர்களிடம் ஆழ வேரூன்றி இருந்தமையும் காரணமாகின்றது.
மேற்படி பின்னணியிலேயே, கிட்டத்தட்ட 29 குற்றச்சாட்டுகளை தன்மீது சுமந்திருந்தாலும் மலையகத்தை சேர்ந்த பெ.ஸ்ரீதரன் அவர்கள் ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளராக மீண்டும் மத்தியால் நியமிக்கப்படுகின்றார். 2016-2021 காலம் வரை ஹட்டன் கல்வி வலயத்தில், பணிப்பாளராய் ஏற்கனவே, பணி புரிந்த பெ.ஸ்ரீதரனின் காலப்பகுதியிலேயே, அதிக அளவிலான, திட்டமிடப்பட்ட, மாணவ இடைவிலகல் ஹட்டன் வலயத்தில் காணப்பட்டது என்ற பாரிய உண்மை போக, இதன் காரணமாய் சில மாணவ மணிகள் தற்கொலைக்கும் முயன்றிருந்தார்கள் என்பது போன்ற தீவிர குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை குழுவினருக்கும், உயர் கல்வி அதிகாரிகளுக்கும் செய்யப்பட்டிருந்தன. இது, இவ்அதிகாரிக்கு எதிராக செய்யப்பட்ட அனந்த முறைப்பாடுகளில், ஒரு சிலவே, என்ற கூற்றின் உண்மை வெளிப்பாடாகும்.
- கீற்று இணையத்தளத்தில் வெளியான 'மாமன்னன்' பற்றிய விமர்சனமிது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
தொடர்ந்து சாதிக்கு எதிரான திரைப்படங்களை வழங்கிவரும் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்போது மாமன்னன் திரைப்படத்தை மக்களுக்கு சமர்ப்பித்து இருக்கிறார். சமகால அரசியலில் ஜாதியின் செல்வாக்கை இந்தப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக ரிசர்வ் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வடிவேலு. ஆனால் தன்னுடைய அதிகாரத்தை அவர் செலுத்தாமல் ஊரில் கலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கட்சியில் மாவட்ட செயலாளர் சாதி வெறியர் ஒருவருக்கு பணிந்து போகிற ஒருவராகத்தான் இருக்கிறார். மகன் உதயநிதி ஸ்டாலின் இதில் கருத்து மாறுபாட்டோடு தந்தையிடம் பேசுவதையே நிறுத்திக்கொள்கிறார். பிறகு சமூகத்தில் நடக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகள் வடிவேலு கண்களை திறக்கச் செய்கின்றன. மகனின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து மகனோடு போர்க்களத்திற்கு வருகிறார்.
இந்த உயர்வு மனப்பான்மை , தாழ்வு மனப்பான்மை பற்றிய எனது பார்வையை, இன்றுங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இந்த நீண்ட கட்டுரையை நீங்கள் பொறுமையாக , முழுமையாக வாசிக்க வேண்டுமென்று, அன்போடு வேண்டிக் கொள்கின்றேன். இந்த உயர்வு மனப்பான்மையும் , தாழ்வு மனப்பான்மையும் , ஓர் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றதே.
உயர்வு மனப்பான்மை
இங்கு உயர்வு நிலையில் உள்ள அமெரிக்கா , உலகில் தன் முதன்மை நிலையைத் தக்க வைத்திட எடுக்கும் முயற்சிகளை நாம் காண்கின்றோம். வணிகப் போட்டியில் சீனா தங்களை முந்திவிடாதிருக்க, அமெரிக்கர் எடுக்கும் பிரயத்தனங்களையும் நாம் காண்கின்றோம். சீனாவுடன் 5G வர்த்தகத்தை இங்கிலாந்து எடுக்காதிருக்க , அமெரிக்கா இங்கிலாந்திற்குக் கொடுக்கும் அழுத்தம் பற்றியும் நாம் உணர்கின்றோம். இது , உயர்நிலையில் உள்ள ஒரு அரசு , தனது முக்கியத்துவத்தை இழந்து விடாதிருக்கச் செய்யும் செயற்பாடுகள். இது பற்றிய பல்வேறு கருத்துப் பரிமாறல்கள், உலகளாவிய ரீதியில் நடக்கின்றன. பொதுவாகப் பல நடுநிலையாளர்கள் , அமெரிக்காவின், முக்கியமாக அமெரிக்க அதிபரின் , இத் தன்மையான செயற்பாடுகளை எதிர்க்கின்றார்கள்.
இன்று , ஜூலை 21, நடிகர் திலகத்தின் நினைவு நாள். அவர் நினைவாக ஒரு பாடல்: https://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg
அண்மையில் கேட்டதிலிருந்து அடிக்கடி நினைவில் வந்து வந்து போகும் பாடல் 'மாமன்னன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நெஞ்சமே நெஞ்சமே' பாடல்.ஏ.ஆர்.ரகுமானின் இசை, கவிஞர் யுகபாரதியின் வரிகள், விஜய் ஜேசுதாஸ் & சக்திஶ்ரீ கோபாலனின் குரலினிமை , ஒளிப்பதிவு எல்லாம் கேட்பவர்தன் உள்ளங்களை ஈர்க்கின்றன. விஜய் ஜேசுதாஸின் குரல் சிற் சில இடங்களில் எனக்கு பாடகர் உன்னிமேனனின் குரலை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. மனத்தை இலேசாக வருடிச்செல்லும் குரல். https://www.youtube.com/watch?v=xvfDN_Ga2_M
- எழுத்தாளர் லாங்ஸ்ரன் ஹியூஸ் -
- எழுத்தாளர் க.நவம் மொழிபெயர்த்து 'நான்காவது பரிமாணம்' வெளியீடாக வெளியான 'எனினும் நான் எழுகின்றேன்' தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கவிதைகள். -
சுதந்திரம்
- லாங்ஸ்ரன் ஹியூஸ் | தமிழில்: க. நவம் -
சுதந்திரம் வரப்போவதில்லை
இன்றோ, இவ்வருடமோ
இனி ஒரு போதுமே
சமரசத்தாலும் அச்சத்தாலும்
சுதந்திரம் வரப்போவதில்லை
அடுத்தவனுக்குள்ளது போலவே
எனக்கும் உரிமையுண்டு
என்னிரு கால்களில் நிற்கவும்
எனக்கென நிலத்தினைச் சொந்தமாக்கவும்
“அவை அவை போக்கில் போகட்டும்.
நாளை என்பது இன்னொரு நாளே”
மனிதர் சொல்லக் கேட்டு மிகவும்
மனம் களைத்துவிடுகிறேன்.
மாமன்னன் திரைப்படத்தைத் தமிழ்த்திரையுலகின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக நான் இனங்காண்கின்றேன். முக்கிய காரணம் இயக்குநர் மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தில் கையாண்டுள்ள கரு.அதனை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள். வசனங்கள். நடிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள்.
கலைஞரின் பராசக்தி வசனங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றனவோ அவ்விதம் இத்திரைப்படத்தின் சில காட்சிகள், வசனங்கள் நிலைத்து நிற்கப்போகின்றன. உதாரணங்களாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:
1. தகப்பன் வடிவேலைப் பார்த்து மகன் உதயநிதி கதிரையில் உட்காரச் சொல்வது. அக்காட்சியில் அற்புதமாக நடித்திருப்பார் வடிவேலு. அவரது உடல் மொழி சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. கடைசியில் மகனின் உத்தரவுக்கமைய கதிரையில் அமர்வதும், எழாமல் இருக்கும்போது காட்டும் முகபாவங்களும் மறக்க முடியாதவை.
மேலும் இக்காட்சி முக்கியமானதொரு குறியீட்டுக் காட்சி. சமூக அடக்குமுறைகளுக்கெதிராகப் போராட வேண்டுமென்பதை, அடங்கி விடக்கூடாதென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீட்டுக் காட்சி. சமூக அநீதிகளுக்குள் அடங்கி, ஒடுங்கிக் கிடக்கும் எவரையும் அதனை எதிர்கொண்டு , எதிர்த்துப்போராட வேண்டுமென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீடாகவே இக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மிகவும் முக்கியமானது.
2. அச்சமயத்தில் வில்லனாக வரும் Fahadh Faasil கூறும் வசனம் : 'நான் அவரை உட்காரச்சொன்னது என் அடையாளம். உன்னை உட்காரச் சொன்னது என் அரசியல்' வசனகர்த்தாவை நினைவில் வைத்திருக்கச் செய்யும் வசனமிது. Fahadh Faasil சிறந்த நடிகர். பல்வேறு விருதுகளை நடிப்புக்காகப் பெற்ற நடிகர். அவரை நன்கு பாவித்திருக்கின்றார் இயக்குநர் இத்திரைப்படத்தில்.
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையும் கிறிஸ்தவ மிஷனரிகளின் தீவிரச் செயல்பாடுகளும் ஒன்றுசேர்ந்து சைவ, வைணவ மதத்தின் சனாதன அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கின. இந்தக் காலக்கட்டத்தில் நுழைந்த நவீனக்கல்வி முறைகளால் நகரங்கள் முன்னேற்றமடைந்தாலும் சாதி, சமய அடிப்படைகளை மீறிய சிந்தனைக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. மாறாகச் சமய அடிப்படையிலான சமூக முன்னேற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தது. அதேநேரத்தில் காலனியத்தின் எதிர்வினைகள் காரணமாகச் சீர்த்திருத்த மரபுகள், இயக்கங்கள் போன்றவை பல புதிய போக்குகளையும் கொள்கைகளையும் தம்மிலிருந்து உருமாற்றிக் கொண்டன. அந்த வரிசையில் மரபைக் கட்டுடைத்து ஆன்மீக வழியில் சன்மார்க்கத்தையும் சமதர்மத்தையும் தேடியவராக வள்ளலார் காட்சியளிக்கிறார்.
பல தனிநபர் இயக்கங்களும், ஆசாரச் சீர்திருத்த முயற்சிகளும் தங்களின் சித்தாந்தங்களின் வழியாகச் சமூக மீட்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த சூழலில் தோன்றியவர்தான் இராமலிங்கனார். அவர் எந்தவிதச் செல்வாக்கும் இன்றிச் சமய ஆதிக்கத்துக்கு எதிராக ஒரு புதிய ஆன்மீக வழிமுறையே கட்டமைத்து இருக்கிறார். அவர் தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நபரில்லை என்றாலும் சமயவாதிகளாலும் மிஷனரிமார்களாலும் விமர்சனத்துக்கு ஆளானார். ஆத்திக மரபில் தோன்றி சக ஆத்திகர்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று பழித்தூற்றப்பட்டார்.
என்ன இது
ரொம்ப நீளமாவே
போய்க்கொண்டு இருக்கு.
என்ன ஏதும் தெரியலயே
அட நல்லா
கண்ணதிறந்து பாருப்பா
அது ரோடு.
என்னப்பா சொல்லுற
ரோடா அப்படினா
என்ன..?
பஸ்சு காருலாம் போகுமே
அந்த ரோடா.
ய்யோவ் ஒன்னுமே
தெரியாத மாதிரி நடிக்காதய்யா
ரோட்டு நடுவுல நின்னுகிட்டு
என்ன குறும்பு தனத்த பாரு.
எவனவது உன்மேல
ஏத்திட்டு போய்யிட போறான்
அப்புறம் அவ்வளவுதான்
என்மேலயாவது
ஏத்திட்டு போய்டுவானுங்க.
நான் அவன்மேலே
ஏறிவிட்டு போய்டுவேன்.
- எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் பிறந்தநாள் ஜூலை 13. அவரைப் பதிவுகளும், அதன் படைப்பாளிகள், வாசகர்களும் வாழ்த்துகின்றார்கள். அவரது கலை, இலக்கியச் சேவையுடன், சமுக சேவையும் முக்கியமானது. அவரது தன்னலமற்ற சமூக,இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. வாழ்த்துகள். - பதிவுகள்.காம் -
அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப் பெற்றுவரும் நீர்கொழும்பு விஜயரத்தினம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் அண்மையில் ( கடந்த 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ) கல்லூரியின் நூல் நிலைய மண்டபத்தில், அதிபர் திரு. ந. புவனேஸ்வரராஜாவின் தலைமையில் நடைபெற்றது. கடந்த பலவருடங்களாக, கல்வி நிதியத்தின் உதவியைப் பெற்றுவரும் மாணவர்களுக்கான இந்த ஒன்றுகூடலில் இம்முறை நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியும், ஆசிரியர்களும் உதவி பெறும் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.
கல்வி நிதியத்தின் தொடர்பாளர் ஆசிரியை செல்வி லோஜினியின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சி, இக்கல்லூரியின் முதலாவது தலைமை ஆசிரியர் ( அமரர் ) பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மங்கள விளக்கேற்றப்பட்டு தொடங்கப்பட்டது.
`
அண்மையில் நான் வாசித்த நூல்களில் என் கவனத்தை ஈர்த்த நூல்களிலொன்று ஒரு கவிதை நூல். எழுத்தாளர் க.நவம் மொழிபெயர்த்து 'நான்காவது பரிமாணம்' வெளியீடாகக் கைக்கடக்கமான அளவில் வெளியாகியுள்ள கவிதைத்தொகுதியான 'எனினும் நான் எழுகின்றேன்'. நோபல் பரிசு பெற்ற கவிஞர்களான பப்லோ நெருடா (சில் நாட்டுக் கவிஞன்), 'மாயா ஆஞ்ஜெலோ, அமெரிக்கக் கவிஞரான லாங்ஸ்ரன் ஹியூஸ், பாலஸ்தீனியக் கவிஞரான சாலா ஓமார் உட்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத்தொகுப்பு. மிகவும் சிறப்பான தேர்வு தொகுப்பின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது.
மேலே செல்வதற்கு முன் சில வார்த்தைகள்: நூலிலுள்ள கவிஞர்கள் பற்றிய ஓரிரு வரிக் குறிப்புகள் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். கவிதைகளுடன் கவிஞர்கள் பற்றிய அறிமுகத்துடன் , அவர்களைப் பற்றிய மேலதிகத்தேடல்களுக்கும் அது நிச்சயம் வழி வகுத்திருக்குமென்பதென் திடமான நம்பிக்கை. இதன் அடுத்த பதிப்பில் நிச்சயம் நவம் இதனை நிறைவேற்றுவாரென்று எதிர்பார்ப்போம். நூலின் அடுத்த முக்கியமான அம்சம்: மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலக் கவிதைகளையும் தொகுப்பு உள்ளடக்கியிருப்பது. அண்மைக்காலமாக இவ்விதமாக மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்புகள் வெளிவரத் தொடங்கியிருப்பதை அவதானிக்கிறேன். ஆரோக்கியமான விடயமிது. ஏனைய மொழிபெயர்ப்புக் கவிதைகளை வெளியிடும் பதிப்பகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எழுத்தாளர் முனைவர் சுனில் ஜோகி பதிவுகள் இணைய இதழில் எழுதிய ஆதிக்குடிவாசிகளான படகர்களை மையமாக வைத்து எழுதிய சிறுகதைகள் தற்போது 'ஓணி ' என்னும் தலைப்பில் சிறுகதைத்தொகுப்பாக வெளியாகியுள்ளது. தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல மானுடவியல் துறைக்கும் வளம் சேர்க்கும் கதைகள் இவை. நூலின் அட்டையில் கதைகள் பற்றிய எனது வாழ்த்துக் குறிப்பையும் பிரசுரித்துள்ளார்.
சுனில் ஜோகி அவர்கள் இது பற்றி அனுப்பிய மின்னஞ்சலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். முனைவர் சுனில் ஜோகியின் முக்கியத்துவம் மிக்க இச்சிறுகதைகளுக்குக் களமாக இருந்ததில் பதிவுகள் மகிழ்ச்சி அடைகின்றது. நூலை தமிழகத்திலுள்ள 'மலர் புக்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலைப் பெற முனைவர் சுனில் ஜோகியுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
- தாயொருவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் சிற்பம் -
Fløyen மலையின் அழகுடன் எங்களின் அடுத்த நாள் ஆரம்பமானது. மலையின் இயற்கை அழகைக் கண்குளிரக் கண்டு களித்துவிட்டு, University Museum of Bergenக்குள் காலடியெடுத்து வைத்த எங்களை வாசலிலிருந்த சிற்பம் அதிசயிக்க வைத்தது. தாயொருவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் காட்சி மிகத் தத்ரூபமாக அங்கு வடிக்கப்பட்டிருந்தது. அந்தத் தாயின் பார்வையிலும் முகத்திலும் அத்தனை பரிவு, அன்பு, கரிசனை, பெருமை என உணர்ச்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பால்குடித்துக்கொண்டிருப்பது போலவிருந்த அந்தப் பச்சிளங் குழந்தையும் அவ்வாறே நிஜம்போல அழகாயிருந்தது. மனித வாழ்வின் இயற்கையான ஒரு தருணத்தைக் காட்டும். அற்புதமான அந்த சிருஷ்டிப்பைவிட்டு என் கண்களை அகற்றுவது சிரமமாகவிருந்தது. அதன் அழகைப் படத்துக்குள் அடக்கலாமா எனப் பல கோணங்களில் நின்று முயற்சித்துப் பார்த்தேன், இருப்பினும் சிலையிலிருந்த உயிர்ப்பைப் படங்களில் கொண்டுவர முடியவில்லை. மானுடவியல், தொல்லியல், தாவரவியல், புவியியல், விலங்கியல், எனப் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்பான கலை மற்றும் கலாசார வரலாறுகளைக் கூறும் இவ்வாறான வியத்தக்க பொருள்கள் நிறைந்திருந்த அந்த அருங்காட்சியகத்தைச் சூழ்ந்திருந்த தாவரவியல் பூங்காவும் செழிப்பும் அழகும் மிகுந்ததாக அமைந்திருந்தது.
- இந்தியா வாயில் (India Gate) -
இந்த (2023) வருடம் மார்ச்சில் புது டில்கி போயிருந்தபோது முன்னைய வாலிப காலத்துப் பயணம் நினைவுகள் சிறகடித்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு( 1985) முன்பாக போயிருந்தேன். அப்பொழுது சித்திரை மாதம். கோடை வெயில் காலம். அக்காலத்தில் மெட்ரோ ரயில் இல்லை. ஓட்டோவும் நடராசாவுமே. சூரியன் தலைக்கு நேரே வந்து எங்கள் மேல் தரையிலும் தலையிலும் எரிதணலைக் கொட்டியதுபோல் இருந்தது. நடக்கும்போது சிறுவயதில் எங்களது ஊரில் கோவிலின் முன்பாக பார்த்த தீ மிதிப்பு நினைவுக்கு வரும். டெல்லித் தெருவில் தீ மிதித்தபடி நடக்கும்போது அடிக்கடி கரும்புச் சாறு, மிளகுத் தண்ணீரென குடித்தபடி நண்பன் விசாகனோடு நடந்தேன்.
இறுதியில் மாலையில் நாங்கள் தங்கிய மாடிக் கட்டிடம் உள்ளே சென்றபோது செங்கல்லைச் சூடாக்கும் சூளைபோல் நெருப்பாகக் கொதித்தது. புகை வராததுதான் மிச்சம்! அக்காலத்தில் கட்டிடங்களில் அதிகம் ஏர் கண்டிசன் வசதிகள் இருக்கவில்லை. நாங்கள் நின்ற வீட்டின் பகுதியில் புல்லால் ஆன யன்னல் தட்டியில் நீர் வந்து சிதறி அறையை குளிராக்கும் ஒரு விசித்திர பொறிமுறையை அமைத்திருந்தார்கள். அதில் பட்டு வரும் காற்றின் மூலம் அறையின் வெப்பம் குறைய வேண்டும். ஆனால் நாங்கள் நின்ற அன்று அந்தப் பொறிமுறை வேலை செயதாலும் வெப்பத்தில் மாற்றமில்லை. வேலை செய்த ஃபான் தொடர்ந்து அக்கினி கலந்த காற்றை உள்ளே சுமந்து வந்தது. தரை, கட்டில், மேசை எல்லாம் கொதிநிலையிலிருந்தன. எப்படி இரவில் படுத்து உறங்குவது என்ற சிந்தனையின் இறுதியில் இரண்டு வாளி நீரை சீமந்து தரையில் ஊற்றிவிட்டு அதன்மேல் கம்பளத்தை விரித்துப்படுத்தோம்.
1. 'பாராக்குருவி' ( இருளா மொழித்திரைப்படம்)
அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் இருளர் மக்களின் மொழியில் எடுக்கப்பட்ட ஒரு படம். பிரியநந்தனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. 'பாராக்குருவி' : அதன் தலைப்பு .அட்டப்பாடி பழங்குடி மக்கள் மற்றும் தமிழருடைய வாழ்க்கை சொல்கிறது அப்படம். பெரும்பாலும் தமிழர் குடும்பங்களையும், அவர்களின் பயன்பாட்டு கொச்சை தமிழ் வசனங்களையும் இந்த படம் கொண்டிருக்கிறது. நம்முள் தமிழ் மழை பொழிந்து கொண்டே இருக்கிறது முடிவில்லாமல். .ஆனால் தமிழ்க் குடும்பங்களின் வேதனையும் நதியாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
தமிழ் மருத்துவம் பார்க்கும் குடும்பங்கள் சில.. அங்கு நடக்கும் ராமயாண நாடக நிகழ்ச்சியினைப் பார்த்து அதே போல சீதா வேடம் போட ஆசைப்படும் பெண் பாப்பா . ஆனால் காலம் காலமாக ஆண்கள் தான் அந்த வேடம் போடுகிறார்கள். பெண்ணுக்கு இது நடக்காது என்று அவள் அம்மா சொல்கிறார். அவள் அம்மாவுக்கு சாராயம் காச்சும் வேலை. தமிழ் குடும்பம் அப்பா ஐந்தாவது மனைவியாக ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு எங்கோ வாழ்கிறார். இந்த பெண்ணுக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அம்மாவின் சாராயம் காய்ச்சும் தொழிலை செய்துவிடக்கூடாது என்ற பயம் இருக்கிறது. அவள் பாப்பா 15 வயது. அவளுடைய தோழி லிங்கே பாப்பாவின் அம்மா லக்கி சாராயம் வாங்க வருபவர்களின் சீண்டலுக்கும் பலாத்காரத்திற்கும் ஆளாகிறாள். இதிலிருந்து தப்பிக்க ஆசைப்படுகிறாள். ஆனால் மகள் எப்படியோ பலியாகிவிடுகிறாள் .பாப்பா அவள் கர்ப்பமாக இருக்கிறாள். பாப்பாவின் கர்ப்பத்தை கலைக்க ராமி அவளை சில இடங்களுக்கு வைத்திய முறைக்காக கூட்டிக்கொண்டு போகிறாள். ஜோசியர்கள், மந்திரவாதிகள் இவளிடமெல்லாம் கூட்டிக்கொண்டு போகிறாள். கடைசியில் சாமியாடி ஒருவன் அவளிடம் உள்ள பேயை விரட்டுவதாகாச் சொல்லி அடித்து துவம்சம் செய்கிற போது அவள் அபார்ஷன் செய்து விட வேண்டும் என்று நினைக்கிற முயற்சிகளைத் தாண்டி அப்படியே ஆகிறது. அவள் தனக்காக புதுப்பித்துக் கொள்கிறாள். அவளை இந்த நிலைக்குக் காரணம் யார் என்று சொல்லப்படுவதில்லை. . இருளர் மற்றும் பழந்தமிழருடைய உண்மையான முகங்கள், அவருடைய இசை, நடனம், நாட்டியம், நாடகம் முதல் கொண்டு பல விஷயங்களை ஆட்டப்பாடியின் பின்னணியில் சொல்லி இருப்பதில் இந்த படம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது .அட்டப்பாடியில் வசிக்கும் கூலி தமிழர்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே சரியாக சொல்லி இருக்கிறார்கள்.
மிகைப் படுத்தல்களும் திரிபுபடுத்தல்களும் இல்லாது, வரலாற்றினை அடியொற்றி எழுதிய 'அகதியின் பேர்ளின் வாசல்' என்னும் இந்நாவல் ஈழத்தமிழர்களின் ஆரம்பகால புலம்பெயர்வின் தெளிவான குறுக்கு வெட்டுமுகம் எனலாம்.
ஜேர்மனிக்கான அன்றைய புலம்பெயர்வின் பயணப்பாதைகள் பற்றியும் அதன் பின்னணியில் ஆதிக்க நாடுகளின் பனிப்போர்கள் பற்றியும் இதுவரை அறியப்படாத பல உண்மைகளை வாசகருக்கு எளிய முறையில் தெளிவு படுத்தி உள்ளது.
தமிழினத்தின் மீதான அரசவன்முறைகளை அடுத்து, தமிழ் இயக்கங்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியிலிருந்து ஆயுதப் போராட்டத்துக்கு மாறிய காலமாகிய 1970 களில் ஆரம்பமாகி 2017 இல் நிறைவுபெறும் ஐந்து தசாப்தங்கள் , நாவலின் பேசுபொருள்.
பேரினவாதத்தின் அரசியல் ஆதாயங்களுக்காக தாயகத்தில் தமிழினத்துக்கான பல வாயில்கள் மூடப்பட்டன. இதுவே, சர்வதேச அரசியலின் தந்திரோபாய நடவடிக்கைகளால் மேற்குநாடான ஜேர்மனியில் முன்னமே திறந்திருந்த மற்றுமோர் வாயிலை புலம்பெயர்ந்த அகதிகளுக்கு இனங்காட்டியது.
புலம்பெயர்வின் வரலாற்றுப் புலங்களும் காட்சிப்புலங்களும் நாம் அறிந்தவை, அறியாதவை என இரு பிரிவுகளுள் அடங்குகின்றன. உண்மையிலேயே நாட்டில் வாழ முடியாத உயிராபத்து நிறைந்த சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் கோரி புலம் பெயர்ந்தவர்கள் ஒரு பகுதியினர். நிலைமையை சாதகமாகப் பயன் படுத்தி பொருளாதார மேன்மைகளுக்காக அகதி என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றுமோர் பகுதியினர்.
எலி பொறியை மழையில் கிடத்திவிட்டது சட்டென ஞாபகத்திற்கு வந்தது கிருஷ்ணனுக்கு .மழை சோ என்ற சப்தத்துடன் நீ கோடுகளாய் கீழே இறங்கிக் கொண்டிருந்தது .நெடு நேரமாய் மழை பெய்து கொண்டிருப்பதாக தோன்றியது இவ்வளவு நேரம் மழை பெய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று ஞாபகம் வந்தது .
எலி பொறியில் ஏதோ கிடப்பதே அவன் சலனத்தின் மூலம் அவன் அறிந்து கொண்டான்.கருவாடு ஒன்றை குத்தி வைத்தது சரியாகத்தான் பயன்பட்டது என்று நினைத்தான். வாழைப்பழம் இருக்கும் வரைக்கும் மசியாத எலி கருவாட்டுக்கு சரண் அடைந்து விட்டது. அதை எப்படி அடித்துக் கொல்வது என்பது அவனுடைய ஞாபகத்தில் வரவில்லை .
அம்மா சாக்குல போட்டு நாலு சாத்து சாத்து என்றாள்.. அது சும்மாவா இருக்கு டப்பா லிருந்து எல்லா பாத்திரத்தையும் ஓட்டை போடுது. பிளாஸ்டிக் டப்பாவேச் சொல்லவே வேண்டாம் . துணி ஒன்னும் வெளியே கிடக்கக்கூடாது. அதை குறிவைக்கிறது.கடுச்சு சேதம் பண்ணுது. இது மாதிரி எத்தனை இருக்கும்
அப்படியே கொண்டு போய் வாசல் முற்றத்தில் வைத்தபோது மேகம் கருத்துத் தெரிந்தது. மழை வருமா என்பது சந்தேகமாக இருந்தது .
ஆனால் பத்து நிமிடங்களில் மேகங்கள் திரண்டு கொண்டது போல மழை பொழிய ஆரம்பித்தது. தொடர்ந்த மழை அவனை உடம்பை ஏதாவது ஸ்சொட்டர் போட்டு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று ஞாபகம் ஊட்டியது. அவன் உடம்பின் கருப்பு நிறத்திற்கு எந்த ஸ்சொட்டர் போட்டாலும் அது ஒத்து வராது .கொஞ்சம் லைட்டான கலரிலும் இருக்க ஆசைப்பட்டிருக்கிறான். அப்படித்தான் அவனின் கருத்த உடம்புக்கு ஏதாவது இறுக்கத்தை சேர்க்கிற மாதிரி இருந்தது. இந்த மழையில் தவிர்த்து விட முடியவில்லை பச்சை நிறத்தில் இருந்த்தை எடுத்து மாட்டிக்கொண்டான். அது இதயத்திற்கு அருகில் ஒரு ரோஜா பூவை சிவப்பு நிறத்தில் கொண்டு வந்திருந்தது. அந்த எம்பிராய்டரி அவனுக்கு பிடித்திருந்தது .பக்கத்தில்கூட எம்பிராய்டரி சார்ந்து இயந்திரங்கள் இருப்பதை அவன் பார்த்திருக்கிறான் .ஆனால் அவை எல்லாம் ஒரே நொடியில் ஆயிரக்கணக்கான பூக்களை பூக்க வைத்து விடுகின்றன. நூற்றுக்கணக்கான மலர்களைத் துளிர்க்கச் செய்துவிடுகின்றன. ஆச்சரியமாக இருக்கிறது அவற்றிலிருந்து சாயப்பட்டறை வாசம் கிளம்புவதாக தான் அவனுக்கு தோன்றியது. ஆனாலும் அந்த பூக்கள் உடைய வாசனையை அவனால் மறுக்க முடியவில்லை .அதேபோலத்தான் வாசனை சார்ந்த ஷர்மிலி எண்ணங்களும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. வெளியில் போகிறபோது எங்காவது அவள் தட்டுப்பட்டு விடுகிறாள்.
நவீன உலக இலக்கியத்தில் முக்கியமானதோர் இலக்கிய ஆளுமையான செக் நாவலாசிரியரான மிலன் குந்தேரா தனது 94ஆவது வயதில் காலமான தகவலை இணையத்தின் மூலம் அறிந்தேன். அவரது இழப்புக்கான் ஆழ்ந்த இரங்கலைப் பதிவுகள் செலுத்துகின்றது. இவரது இவரது இருப்பின் தாங்க முடியாத மென் தன்மை (The Unbearable Lightness of Being) இவர் எழுதிய நாவல்களில் மிகவும் புகழ்ப்பெற்ற நாவல். இதுவே இவரது மிகச்சிறந்த நாவலாகவும் கருதப்படுகின்றது. இந்நாவலைப்பற்றித் தனது வலைப்பூவில் எழுத்தாளர் ஜெயமோகன் 'மிலான் குந்தரே எழுதிய புனைவுகளில் ஆகவும் சிறந்ததாக The Unbearable Lightness Of Being நாவலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நாவலின் முதல் இரண்டு பக்கங்களின் எந்தப் புள்ளியில் இருந்து அந்த நாவல் அவரில் தொடங்கியது என்பதை எழுதிவிடுகிறார். அதில் நீட்சே வருகிறார். Parmenides வருகிறார். இன்னும் சில தத்துவவாதிகள் வருகிறார்கள். அவர்களது கருத்துக்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும் குந்தரே, தனக்குள்ள கேள்விகளையும் முன் வைத்து அவர்களை மறுதலிக்கவும் முயல்கிறார். அதில் இருந்து தனக்கான தேடலை முன்னகர்த்துகிறார். அப்படியாகத்தான் இந்த நாவல் உருக்கொள்கிறது' என்று கூறுவது கவனத்துக்குரியது.
இத்தருணத்தில் எழுத்தாளர் ராம் முரளியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணலைப் 'பதிவுகள்' நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறது. இந்நேர்காணல் அவரது கலை, இலக்கிய மற்றும் அரசியல் சிந்தனைகளை வெளிப்படுத்துவதால் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -
நேர்காணல் ஒன்று: புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா - நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி
நம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார். இலக்கியத்தின் ஒரு அங்கம் என்றில்லாமல், நாவல் எழுத்தே தனியொரு கலை என்பது இவரது கருத்து. தற்போது 90 வயதை கடந்துவிட்ட நிலையில், அவரது படைப்புகள் வெளிவருவது தோய்ந்துவிட்டது. 2014ம் வருடத்தில் வெளியான The festival of insignificance என்பதே கடைசியாக வெளிவந்த இவரது நாவலாகும்.
செக் குடியரசின் புரூனோ நகரில் 1929ல் பிறந்தவர் என்றாலும் 1975ல் இருந்து பிரான்ஸிலேயே வாழ்ந்து வருகிறார். 1993க்கு பிறகு, பிரெஞ்சு மொழியிலேயே தமது புனைவெழுத்துக்களை எழுதி வருகிறார். இளம் பருவத்தில் கம்யூனிஸ இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், செக் குடியரசின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அவ்வியக்கத்துடனான தமது உறவுகளை முறித்துக்கொண்டார். விளைவாக, இவரது படைப்புகள் செக் குடியரசில் தடை செய்யப்பட்டன; குடியுரிமையும் ரத்துசெய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, பிரான்ஸுக்கான இவரது இடப்பெயர்வு நிகழ்ந்தது. பலமுறை நோபல் பரிசுக்கான பரிந்துரைகளில் இவரது பெயர் பரிசீலனை செய்யப்படிருக்கிறது என்றொரு வழக்குப் புழக்கத்தில் இருக்கிறது. எனினும், தமது நிலைபாடுகள், செக் குடியரசில் இருந்து வெளியேறியது, சோஷியலிஸ அரசுடனான அவரது சிக்கல் மிகுந்த உறவு போன்றவற்றால், குந்தேராவுக்கு நோபல் பரிசு கிடைப்பது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.