ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் - தமிழியல் ஆய்வும், உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகளும்!
- தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -
- தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -
நேற்று ஸ்கார்பரோவில் எழுத்தாளர் தேவகாந்தனின் 'இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம்', 'சகுனியின் சிரம்' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
முனைவர் மைதிலி தயாநிதி, எழுத்தாளர் அருண்மொழிவர்மன், எழுத்தாளர் த.அகிலன் நூல்களைப்பற்றிய தமதுரைகளை ஆற்றினர். நிகழ்வுக்குத் தலைமையேற்று நெறிப்படுத்தியவர் எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன். பேச்சாளர்கள் தமதுரைகளை நூல்கள் பற்றிய குறை நிறைகளுடன் சுட்டிக்காட்டி ஆற்றினர். முதற் பிரதியினைக் 'காலம்' செல்வம் பெற்றுக்கொண்டார்.
வடக்கின் அரசியல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இரு வேலைத்திட்டங்கள், தமிழ் அரசியலின், தீவிர கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன:
ஓன்று பகிஷ்கரிப்பு.
இரண்டாவது, பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது.
‘பகிஷ்கரிப்பு–பொதுவேட்பாளர்’ என்ற இரண்டு கோட்பாடுகளுமே மொத்தத்தில் ஒன்றுதான் என்பதும், இவை பொதுவில் புலம்பெயர் அரசியலின் தீவிரமுகத்தால், வலுவாக ஊக்குவிக்கப்பட்டு வருவன என்பதும் வெளிப்படை.
மறுபுறம், இவை இரண்டுமே வட-கிழக்கு மக்களால் நிராகரிக்கப்படவதாகவே இருக்கும் என்பதும், இது அண்மையில் இடம்பெற்ற விமானப்படை கண்காட்சி அல்லது ஹரகரனின் இசைநிகழ்ச்சி என்பனவும் எதிரொலிக்கும் விடயங்களாகும், என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
இருந்தும இவ் அரசியல் முரண்களின் தாக்கம் ஏதோ ஒரு வகையில் தமிழரசு கட்சிக்குள்ளும் ஊடுருவத் தவறவில்லை எனக் கூறலாம்.
குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும்.எழுதுவதற்கு மிகவும் சிரமாமன இலக்கியம் எது என்றால் அது " குழந்தை இலக்கியமே " குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டால்த்தான் அது சாத்தியமாகும்.குழந்தைகளின் இலக்கியம் இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்த்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் "குழந்தை இலக்கியம் " என்பதுதான் மனமிருத்த வேண்டிய உண்மையெனலாம். அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களேஈடுபடுகிறார்கள்.குழந்தைகளுக்கான படைப்புக்களை படைப்பதை ஒரு முக்கிய பணியாக நினைத்தே அவர்கள் தங்களது படைப்புக்களை படைக்கின்றார்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளர்.அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர்.சமூக அக்கறை கொண்டவர்.அடுத்த தலை முறை யினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை சிறப் பினைப் பெற்றது எனலாம்.
அன்புக்கோர் அம்பி என அனைவராலும் விதந்து சொல்லப்பட்ட கவிஞர் அம்பி அவர்கள் நேற்று ( 27 ஆம் திகதி ) இரவு அவுஸ்திரேலியா சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்துவிட்டார். தன்னைப்பற்றிய பசுமையான நினைவுகளை எமக்குத் தந்துவிட்டு, விடைபெற்றிருக்கும் கவிஞர் அம்பி அவர்கள் இலங்கையில் வடபுலத்தில் நாவற்குழியில் 17-02-1929 ஆம் திகதி பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர், விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
இளம் பராயத்திலிருந்தே கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அவர் அளப்பரிய பணிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞர் என்றே அறியப்பட்டவர்.
ஏறினால் கட்டில் இறங்கினால் சக்கர நாற்காலி. இதுவே அவரது பல வருட வாழ்க்கையாகியிருந்தபோதிலும், தனது முதிய வயதிலும் மெய்நிகர் அரங்குகளில் தோன்றி கருத்துரைத்தார். அம்பி எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். அத்துடன் இச்சங்கத்தின் மதிப்பார்ந்த காப்பாளராகவும் இருந்தவர்.
ஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மறைவின் பின்னரும், அவருடைய படைப்புக்கள் குழந்தைகளின் நாக்கினில் தவழும். தமிழ் கூறும் நல்லுலகால் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் குழந்தை கவிஞன் என போற்றப்படும் கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகன் அவர்கள் தனது 94 வயதில் இன்று (28/4/24)இயற்கை எய்தினார்.
யாழ் பரியோவான் மாணவன் கவிஞர் அம்பி :
சிறுவர் இலக்கிய படைப்புக்களை தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் மண்ணிலும் படைத்த ஈழத்தைச் சேர்ந்த அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்கள் சிறுவர் இலக்கிய வரலாற்றில் காத்திரமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.
எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்கின்றன. தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்தவர் கவிஞர் அம்பி.
இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் வடக்கே நாவற்குழி சொந்த ஊராகும். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி உள்ளார்.
ஈழத் தமிழர்கள் தம்மை பாலஸ்தீன மக்களுக்கு ஒப்பானவர்களாக கருதிக்கொள்ளுகின்ற ஒரு நிலை இருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவானதொரு போக்கு ஈழத்தில் நெடுங்காலம் நிலவுகிறது. அதேவேளை தமக்கென்று ஒரு நாடற்ற நிலையில் இஸ்ரேலை உருவாக்கிய இஸ்ரேலியர்களிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டென்ற பார்வையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.
இந்த சிக்கலான அரசியலை புரிந்துகொள்ள ஜீவநதி பதிப்பகத்தின் 351 ஆவது வெளியீடாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய 'ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகி உள்ளது.
உலக அரசியல் சார்ந்த விடயங்களை நாம் அதிகமும் கற்றுக்கொள்வது இன்றைய உலக அரசியலின் போக்கை புரிந்து கொள்ளவும் 'ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் உதவும் என இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
'தேடகம் சிவம்' 'நெல்லியடி சிவம்' என்றறியப்பட்ட சமூக, அரசியற் செயற்பாட்டாளர் கணேசமூர்த்தி சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் ஏப்ரில் 27. இவரது மறைவு எதிர்பாராதது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் ஏற்படுத்திய பாதிப்புகளும் இவரது மறைவுக்கு ஒரு காரணம் என்று அறிகின்றேன்.
'தேடகம்' அமைப்பினை நிறுவியவர்களில் ஒருவர். அதன் சஞ்சிகையான 'தேடல்' சஞ்சிகையின் ஆசிரியராகவுமிருந்தவர். மாற்றுக்கருத்துகளின் அவசியத்தை நன்குணர்ந்து செயற்பட்டவர். இலங்கையில் இருந்த காலத்திலேயே சமூக, அரசியற் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மார்க்சியவாதியான இவர் சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டவர். தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.
அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சுதா குமாரசாமியைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது 1988இல் வெளியான அவரது கவிதைத்தொகுப்பான 'முடிவில் ஓர் ஆரம்பம்' பற்றிக்குறிப்பிட்டார். அவ்விதம் குறிப்பிடுகையில் 'கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுப்பாக இருக்குமென்று தான் நினைப்பதாக' அவர் குறிப்பிட்டிருந்தார்.
கனடாவில் வெளியான முதலாவது தனிக்கவிதைத்தொகுப்பாக அது இருக்கக் கூடும். சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' தொகுப்பிலுள்ள கவிதைகளின் எண்ணிக்கை 15.
கவிதைகளையும் உள்ளடக்கி வெளியான முதலாவது தொகுப்பென்றால் அது ஜனவரி 4, 1987இல் வெளியான எனது தொகுப்பான 'மண்ணின் குரல்' நூலே. அது கட்டுரைகள், சிறு நாவலான மண்ணின் குரல் மற்றும் கவிதைகள் உள்ளடக்கி வெளியான தொகுப்பு. அது எனது எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளது. அவை:
அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி : வவுனியா – கம்பகா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையுடன் புலமைப்பரிசில் உதவியை பெற்றுவரும் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் வழங்கப்பட்டது.
கடந்த வாரங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாகவும், அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு , அங்கிருக்கும் மாணவர் கல்வி நிறுவகத்தின் ஊடாகவும், மலையகத்தில் - நுவரேலியா மாவட்டத்தில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாகவும் இவ்வாண்டின் முற்பகுதிக்கான நிதியுதவிகள் இந்தப்பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வதியும் தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்' (The Old Man and The Sea) உலக இலக்கியத்தில் முக்கியமான நாவல். இது ஒரு விரிந்து பரந்த நாவலல்ல. சிறியதொரு நாவல். இந்நாவல் ஹெமிங்வேயிற்கு புலியட்சர் பரிசைப் பெற்றுத்தந்தது. நோபல் பரிசினையும் பெற்றுத்தந்தது. ரொபின்சன் குரூசோ, மோபி டிக் போன்று கடலுடன் சம்பந்தப்பட்ட நாவல் மட்டுமல்ல , அவற்றைபோல் மானுட இருப்பின் குறியீடாக விளங்குமொரு நாவல்.
இந்நாவலில் வரும் சண்டியாகோக் கிழவன் மறக்க முடியாத பாத்திரம். இந்நாவல் முதுமையைப்பற்றிப் பேசுகிறது. நட்பைப் பற்றிப் பேசுகிறது. பாசத்தைப் பற்றிப் பேசுகிறது. சக உயிர்களைப்பற்றிப் பேசுகிறது. உயிர்களின் விடா முயற்சி பற்றிப் பேசுகிறது. இயற்கையைப்பற்றிப் பேசுகிறது. மானுட இருப்பு பற்றிப் பேசுகிறது. ஹெமிங்வேயின் நடை சிறப்பு மிக்கது.ம் தனித்துவமானது. வாசகர்களைக் கட்டிப்போட்டு விடுவது.
= பட்டாணிச்சுப் புளியங்குளம் -
மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட்டுப்பகுதி ஒற்றையடிப்பாதையுடன் கூடியதொரு பகுதி. சில வீடுகள் , நெசவு சாலை, பண்ணையுடன் கூடிய இயற்கை வளம் மலிந்த பகுதி. அப்பகுதியில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. படுக்கையில் படுத்திருந்தபடி வான் பாயும் ஒலி கேட்டுக்கொண்டிருப்பேன். விடிந்ததும் ஊரவர்கள் வான் பாயும் குளத்தைப் பார்க்கச் சென்று விடுவார்கள். நானும் சென்று பார்ப்பேன். வான் பாயுமிடத்தில் இரவெல்லாம் வெங்கணாந்திப்பாம்புகள் காத்திருந்து அவ்வழியால் சென்று விடும் விரால் மீன்களைப் பிடிக்குமாம் என்பார்கள். ஊரவர்கள் சிலரும் விரால்களைப் பிடிப்பார்கள். என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த குளம் பட்டாணிச்சுப்புளியங்குளம். இக்குளம் நிறைந்து வான் பாயும் காட்சியும் அத்தகையதே.
சிலப்பதிகாரத்தில் வரும் 'உழவரோதை மதகோதை உடைநீரோதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப' என்னும் வரிகளைக் கேட்கும் ,நினைக்கும் சமயங்களிலெல்லாம் கூடவே வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளமும் நினைவுக்கு வந்துவிடும்.
ஆய்வுச்சுருக்கம்
ஒரு சமூகமுன்னேற்றத்தின் வழிகாட்டியாக விளங்குவது பெண்நிலைப்பாடாகும். பொறுமையின் அடையாளமாகத் திகழும் பெண்கள். அமைதியான குணத்துடன், உணர்ச்சிகரமான சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல் மற்றும் கடினமான சூழ்நிலையை நம்பிக்கையுடன் கையாளும் திறன் போன்ற தன்மைகளை இயல்பாகப் பெற்றிருப்பதால் பெண்மையைப் போற்றுகின்றோம். அதோடு இல்லறம் நடத்துவதற்கு ஏற்றவளாகப் பெண்ணை உருவாக்கி வருகின்றோம். பலபாத்திரங்களாகப் பரிமாணிக்கும் பெண்ணினத்தை மதிப்புடன் பேணுவது நம் தலையாய கடமையாகும்.
முன்னுரை
மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்பார் கவிமணி. இந்த உலகில் கருவைத் தாங்கி, கல்லறை வரை உறவோடு உறவைப் பின்னிப்பிணைத்து இயக்கும் ஆற்றல் பெண்மைக்கு உரியதாகும். பஞ்சபூதங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தால்கூட, நற்சமூகத்தை வழிநடத்தும் சக்தி பெண் தான். அவளின் சாதனை அளப்பரியது. இத்தகு புனிதத்தன்மை வாய்ந்த பெண்ணின் நிலையை, “பறவையாடிப்பழகு” என்ற ஸ்ரீபதியின் சிறுகதை வழி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உலக நூல் நாளில் ஒரு நூலினைப் படித்திட வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற ஏதுவாக அமைந்தது 'பேரிகை' என்ற நூல். ஈழமங்கை மு.நவகீதா இன் முதலாவது படைப்பாக 'பேரிகை' என்ற நூல் ஏப்ரல் 20, 2024 சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய 'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அன்றைய நாளில் வெளியிடப்பட்ட 15 நூல்களில் இந்த நூலும் இடம்பெற்றது. ஈழப் பெண்களின் வரலாற்றுப் பதிவாக உருவான சின்னஞ் சிறிய நூலாக 'பேரிகை' என்ற நூல் இருந்தது. வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளராக, மேடை நிகழ்ச்சிகளில் சிறப்பாக நெறியாளுகை செய்பவராக மட்டுமே அறிமுகமான நவகீதா இப்பொழுது நூலாசிரியராக அறிமுகமாயுள்ளார். நூலில் காணப்படும் 'என்னுரை' மூலம் அவரது கல்விப் பின்புலம், தாய்மண்ணுடன் ஒன்றிய அவரின் மனவுணர்வு பற்றியெல்லாம் அறியும் வாய்ப்பையும் பேரிகை என்ற நூல் அறியத்தந்தது.
சிலநாட்களுக்குள் உருவாகிய நூலாக இருந்தாலும், அளவில் சிறிய நூலாக இருந்தாலும் சிறப்பான நூலாக நூலாசிரியர் எழுதியுள்ளார். வீரமிகு ஈழமங்கைகள் சிலரின் விபரங்களை அழகான, எளிமையான நடையில் தேடலுடன், நுண்ணிய பார்வையும் மேலிடத் தந்துள்ளார் நவகீதா.
நாங்கள் அனைவரும் அரிய பணிகளைச் செய்தால் புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம் என்ற செய்தியை 'பேரிகை' சுட்டி நிற்கிறது.
- சத்தியமூர்த்தி மாஸ்டர். -
அராலி வடக்கில் வசித்த காலத்தில் எம் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களில் ஒருவர். ஆசிரியையான அம்மா மீது மிகுந்த மதிப்பையும், அன்பையும் வைத்திருந்தவர் இவர்.
ஆரம்பத்தில் கட்டுப்பெத்த தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் கற்றவர். அதன் பின் அமெரிக்கா சென்று பட்டப்படிப்பை முடித்தவர். இவ்விதமே நான் அறிந்திருக்கின்றேன். ஊர் திரும்பியவர் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்று அதனையே தன் வாழ்க்கைத்தொழிலாகத் தொடர்ந்தார். சக மானுடர் மீது பேரன்பு கொண்டவர். அனைவரினதும் அன்பினையும் பெற்றவர்.
எனக்கு இவரைப்பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது 1977 ஆம் ஆண்டின் நவம்பர் 30. அன்று ஶ்ரீதர் திரையரங்கில் நண்பர்களுடன் 'தாயைக் காத்த தனயன்' திரைப்படத்தை 'மாட்னி ஷோ'வாகப் பார்த்து மாலை வீடு திரும்பபோது இவர் எனக்காகக் காத்திருந்தார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது வந்த என்னை அரவணைத்தவாறு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவ்விதம் செல்கையில் நான் அதிர்ச்சியடையாத வகையில் என் அப்பா இறந்த செய்தியினைத் தெரிவித்து என்னை ஆறுதல் படுத்தினார்.
துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங். புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் என்பார் எங்கள் பாரதிதாசன்.
சர்வதேச புத்தக நாளை கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் (Catalonia) உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சர்வதேச புத்தக நாள் (World Book Day ) என்பது வாசிப்பு, பதிப்பு, எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதற்கான தினமாகும். துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங்.
- எழுத்தாளர் மருதூர்க்கொத்தன் -
பல படைப்பாளிகள் தமது இலக்கியப்பிரதிகளை எழுதும்பொழுது இயற்பெயரை விடுத்து புனைபெயர்களில் அறிமுகமாவார்கள். பலர் தமது பிறந்த ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தமக்குத்தாமே ஊருடன் இணைந்த புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள். பின்னாளில் அவர்களின் இயற்பெயரை பிறப்புச்சான்றிதழ் - பதிவுத்திருமண சான்றிதழ் - மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும். இலக்கிய வட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் புனைபெயரே நிலைத்துவிடும்.
கிழக்கு மாகாணத்தில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு எழுத்தாளர் இருந்தார் எனச்சொன்னால் எவருக்கும் தெரியாது. மருதூர்க்கொத்தனையா சொல்கிறீர்கள் என்று அவருக்கு மிகவும் நெருக்கமான சிலரே குறிப்பிடுவார்கள்.
கிழக்கு மாகாணத்தில் கல்முனைக்கு அருகாமையில் பெரிய நகரமும் அல்லாமல் சிறிய கிராமமாகவும் காட்சியளிக்காத கடலோர சிற்றூர் மருதமுனை. இந்த ஊரில் மருதூர் ஏ. மஜீத் - மருதூர்க்கனி - மருதூர் வாணன் என்ற பெயர்களில் எழுதியவர்களின் வரிசையில் முன்னோடியாக இருந்தவர் மருதூர்க்கொத்தன்.
1935 ஜூன் மாதம் 6 ஆம் திகதி அநுராதபுரத்தில் பிறந்த இஸ்மாயில் என்ற மருதூர்க்கொத்தன் ( இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 89 ஆவது வயதை குடும்பத்தினருடனும் இலக்கிய நண்பர்களுடனும் கொண்டாடியிருப்பார். ) 2004 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 19 ஆம் திகதி மறைந்தார்.
இன்று, ஏப்ரில் 23, உலகப்புத்தக நாள். என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது என் மூச்சு போன்றது. எனக்கு வாசிக்கத்தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளுமே புத்தகநாள்தான். எண்ணிப்பார்க்கின்றேன். வாசிப்பும், யோசிப்பும் அற்று ஒரு நாள் கூடக் கழிந்ததில்லை.
ஆனால் வாசிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரும்பாலானவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் , புரியாமல் வாழ்கின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த இது போன்ற நாளொன்று அவசியமானது.
மானுடர்கள் வாசிப்பின் அவசியத்தை உணரவேண்டும். வாசிப்பு எத்தகையாதகவுமிருக்கலாம், ஆனால் அது தேவையான ஒன்று. புனைவாகவிருக்கலாம், அபுனைவாகவிருக்கலாம், கவிதையாகவிருக்கலாம் , இவ்விதம் எத்துறை சார்ந்ததாகவுமிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.
எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று (ஏப்ரில் 22) பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர். சிறுகதை, கவிதை,நாவல் என இவரது இலக்கியப் பங்களிப்பு இருந்தாலும், முக்கியமான பங்களிப்பு இவரது சிறுகதைகளே என்பேன். இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளாக (மாற்றம் (1980), உலா (1992), சட்டநாதன் கதைகள் (1995), புதியவர்கள்- (2006), முக்கூடல் - (2010), பொழிவு - (2016), தஞ்சம் (2018)) வெளியாகியுள்ளன.
இவரது கதைகளைப்பற்றி அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் ஏ.ஜே.கனகரத்தினா 'மென்மையான உணர்வுகளை கலை நயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெறுவதால், ஈழத்துச் சிறுகதை உலகில் சட்டநாதன் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார்' என்று கூறுவார்.
அண்மையில் ரொரன்றோ'வில் அவரது புனைவுகள் பற்றி இலக்கியவெளி நடாத்திய மெய்நிகர்க் கருத்தரங்கக் காணொளியை இத்தருணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். இவர் யாழ் வேலணையில் பிறந்த இவர் பூரணி காலாடிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஆசிரியராகவிருந்து ஓய்வு பெற்றவர். இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினைத்தனது உலா சிறுகதைத் தொகுப்புக்காகப் பெற்றவர். இவரது நூல்கள் நூலகத்தளத்திலுள்ளன. அவற்றை வாசிப்பதற்கான இணைப்பு.
எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேவும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'சக்கரவர்த்தித் திருமகள்'. ப.நீலகண்டனின் இயக்கத்தில் , ஜி.ராமநாதனின் இசையில், வெளியான இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருப்பார்கள. இப்பாடலை எழுதியிருப்பவர் ஒரு நடிகர். இவர் அக்காலகட்டத்தில் பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார். 'கிளவுன் சுந்தரம்' (‘Clown’ M. S. Sundaram) என்றறியப்பட்டவர். இவரது புகைப்படங்கள் வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.
" எந்த நேரமும் கை கட்டப்பட்ட நிலையில் கிடப்பது போனஂற நிலையில் நாம் கிடக்கிறோம் . நம் பிறந்த மண் , தாய் மண் , தாய் நாடு , ஆனால் , அதிகாரம் பண்ண அனஂனியரான நபர்களே எப்பவும் வருக்கிறார்கள் . தாங்கள் வைச்சதே சட்டம் போல திரிகிறார்கள் . அதிகாரம்பண்ணுகிறார்கள் . ,பாலஸ்தீனத்தில் , இஸ்ரேலியர் ஆள்கிற கட்டளை முறை போனஂற ஆட்சியில் அகப்பட்டு இருக்கிறோம் . " எனஂறு வேலவனஂ சொல்லிக் கொண்டு போக ," நில்லு , நில்லு எனஂன புதுக்கதை விடுகிறாய் ?"எனஂறு உருத்திரனஂ விளங்காமல் கேட்டானஂ. இயக்கத்திறஂகு முதலே , புதிய சந்தையில் இவனஂ தேனீர் குடிக்கச்செல்கிற கடைக்கு .உருத்திரனும் , நல்லவனும் வாரவயள் . அனஂறு பழக்கமாகிய நட்பு . இவனுக்கே புலப்படாத ஒனஂறு தானஂ . வீரகேசரியில் லெபனானஂ பறஂறி எரிகிறது , அகதிகள் எம்மைப் போல பெருமளவில் சா...எனஂற செய்தியால் வீட்டிலே இருந்த அண்மையில் கிடைத்த எஸ் . ராமகிருஸ்ணனஂ எழுதிய "நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள்" எனஂற சிறிய புத்தகத்தை எடுத்து. உயிரியல் படித்தவனில்லையா , அறிவதறஂகு அட்டவணைப் படுத்தி விபரங்களை பறஂறிய குறிப்புகளை எடுத்த போதே இலங்கையிலும் கூட நிலவுவது ...அந்த மாதிரியான ஆட்சி முறை எனஂறு புரிந்தது. அரசியலில் பொது , நுண் நோக்குகள் என இருப்பது அதறஂகுப் பிறகே தோனஂறியது . இதை அனஂறு , முல்லை பேசுற போது ..எனஂன பேசுகிறார்கள் என சரிவரப் புரியவில்லை . இவர்கள் பாலஸ்தீனர்பிரச்சனைப் பறஂறித் தானஂ பேசியிருக்கிறார்கள் எனஂபது புரிகிறது .
Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 |Passcode: 12345
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268