’காவல் சுவடுகள்’ கல்லுக்குள் ஈரத்தை தொட்டுக் காட்டும் கவிதைகள்! கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பு குறித்து சொல்லத்தோன்றும் சில குறிப்புகள்! - லதா ராமகிருஷ்ணன் -

இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.
கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பான காவல் சுவடுகளைப் படித்த போது மேற்காணும் எண்ணங்கள் மனதில் எழுந்தன. தான் பணியாற்றும் காவல் துறையைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள கவிதைகள் இடம்பெறும் தொகுப்பு இது. இத்தகைய கவிதைகள் வெறும் புலம்பலாகவும், பிரச்சார முழக்கங் களாகவும், சுய விளம்பரமாகவும் முடிந்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அப்படி யாகவில்லை என்பதே ஒரு கவிஞராக தோழர் வசந்தனை சமகாலத் தமிழ்க்கவிதை வெளியில் நிறுவுகிறது எனலாம்.
காவல்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பொதுப்புரிதல் அவர்கள் கடுமையானவர்கள், அதிகாரத்தை மக்கள் மீது தவறாகப் பிரயோகிப்பவர்கள் – இப்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களை ஆசாபாசங்கள் மிக்க, சமூகப்பிரக்ஞையும் மனிதநேயமும் நிறைந்த மனிதர்களாகத் தனது கவிதைகளில் எளிய, அதேசமயம் கவித்துவம் குறையாத மொழிநடையில் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர் வசந்தன்.



இலங்கையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலரை மாண்பு மிகு ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் விடுவித்திருப்பதற்கு நன்றியும், தெரிவித்து, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் ஆவனசெய்யவேண்டும் எனக்கோரும் கடிதம் ஒன்றை அவுஸ்திரேலியா வாழ் மூவீனத்தையும் சேர்ந்த இலங்கையர்கள், தங்கள் இலங்கை நண்பர்கள் கழகத்தின் ஊடாக அனுப்பிவைத்துள்ளனர்.
ஆதிப் பொதுவுடமை, ஆண்டான் அடிமை, நிலப்பிரவுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்று மனித குல வரலாற்றை பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் பிரிந்து ஆராய்ந்து உருவாக்கிய நூலின் இறுதி வடிவமாக மூலதனம் என்று புத்தகத் திரட்டு பொருளாதாரம் பற்றி ஒரு முழுமையான ஆய்வை எமக்கு கொடுத்திருக்கின்றது. இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து மானுடர் அறியாமையில் வாழ்ந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பாக இருந்தது. பின்னர் அது உற்பத்திக் கருவிகளின் பரிணாம வளர்ச்சிப் போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை - உடைமை சமுதாய அமைப்பாக மாற்றம் பெற்றது. பின்பு நிலப்பிரபு - பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு பெரும் நிலப'பரப்புகளை வழங்களை தமக்கானது என்று ஒரு சிறு பகுதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்து சமூக அமைப்பாக ஆட்சியதிகாரமாக மாற்றம் பெற்றது. இதன் வளர்ச்சியில் மூலதனத் திரட்சி ஓரிடத்தில் குவிந்ததாக உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ சமுதாய அமைப்பு இதில் தான் பாட்டாளி வர்க்கம் என்ற உழைக்கும் வர்க்கமும் அவர்களின் உழைப்பைச் சுரண்டி பெரும் மூலதனத்திற்கு அதிபதியான முதலாளி வர்க்கமும் பகை வர்க்கங்களாக பரிணாமம் பெற்ற சமுதாய் அமைப்பு உருவானது. இப்படியான ஒரு காலகட்டத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம்.
ஒக்டோபர் 8 இல், கிரைமியா பாலத்தை, தனது குண்டுவெடிப்பால் உக்ரைன் தகர்த்தெரிந்த முயற்சியுடன், ‘ரஷ்யா–உக்ரைன் போர்’ ஒரு புது பரிணமிப்பை எட்டிப்பிடித்தது எனலாம். இதே நாளில், ரஷ்யா, தனது போர் முனைக்கான, புதிய எளபதியையும் நியமித்தது–– Sergei Surovikin . Surovikin னின் நியமிப்புடன், ரஷ்யாவின் ‘யுத்த அணுகுமுறை’, புதிய மாற்றங்களை கண்டது. இதுவரை பாவித்திராத ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் ரஷ்யா பெருமளவில் பாவிக்க தொடங்கியது என்பது இரண்டாம் பட்சமே. முக்கியமானது, தன் யுத்த ‘அணுகுமுறையை’ ரஷ்யா மாற்றிக் கொண்டது என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது.






இன்று என் தந்தையார் (நடராஜா நவரத்தினம்) மறைந்த நாள். நேற்றுத்தான் போலிருக்கின்றது. அப்பொழுது எனக்குப் பத்தொன்பது வயது. யாழ் ஶ்ரீதரில் 'மாட்னி ஷோ' (Matinee Show) பார்த்து விட்டு வீடு திரும்பியபோது , அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்தோம், சத்தியமூர்த்தி 'மாஸ்டர்' எனக்காக பஸ் வரும் வரை காத்திருந்து , அப்பா மறைந்த செய்தியினைக் கூறி , அரவணைத்து , ஆறுதல் கூறிச் சென்றது இன்னும் நினைவில் நேற்றுத்தான் நடந்தது போல் நிழலாடுகின்றது.

தக்ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும் கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘பீடி’ நாவலைப் பொறுத்தமட்டிலன்றி பொதுவாகவே தற்கால நாவல்கள் குறித்து, உள.
மாதிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பளபளவென ஒளிரும் வெண்ணிற ஹெவெல்ஸ் வெர்ஷ்டன் டைப் கழிப்பானைக் கண்டு கண்டுச் சிரித்தாள்.
பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று, கிறித்துவம் நமக்கு போதிக்கிறது. இங்கே, பரிசுத்த ஆவி என்பது, இறைத்தன்மை கொண்ட, ஒற்றை ஆத்துமாவைக் குறிக்கிறது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்று, இந்துமதத்தின் அத்வைதம், நமக்கு போதிக்கிறது. இந்துமதத்தின் இன்னொரு நிலையான, த்வைதம், பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்று நமக்கு போதிக்கிறது. ஆக, இந்து மதம் சொல்லும் மனிதனின் ஜீவாத்மாவும், ஒரு ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. மனிதனின் படைப்பைக் களிமண்ணில் துவக்கிய இறைவன், பின்னர், அவனது சந்ததிகளை, நீரின் சத்திலிருந்து உருவாக்கி, பின்னர் அவனைச் சீரமைத்து, தனது உயிரை அவனிடம் ஊதினான் என்று, இசுலாம் நமக்கு போதிக்கிறது. இங்கே, இசுலாம் சொல்லும் உயிர் என்ற வார்த்தை, ஆத்துமாவைக் குறிக்கிறது. ஆக, இந்த மதத்தில் சொல்லப்படும் ஆத்துமாவும், ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. இப்படி, இன்று உலகில், பெரு விருட்சமாய் வளர்ந்து நிற்கும் மதங்கள், ஆத்துமாவைப் பற்றி, இரண்டு விசயங்களை, நமக்குப் பொதுவாய்ச் சொல்லுகின்றன.

அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த இதமான உணர்வின் வெளிப்பாட்டை அதிக நேரம் அவளால் அனுபவிக்க முடியவில்லை. பூப்போன்ற சின்னஞ் சிறிய அந்த உதடுகளின் தேடலில் அங்கே சுரப்பதற்கு எதுவுமில்லை என்று தெரிந்த போது குழந்தையின் ‘வீல்’ என்ற அந்த அலறல் சத்தம்தான் அவளது செவிகளில் முட்டி மோதி நின்றது.
லண்டனில் மிருதங்க இசையின் தனிப் பெரும் ஆசானாகத் திகழ்ந்த ஸ்ரீ கந்தையா ஆனந்த நடேசன் அவர்கள் கொரோனாவின் ஆரம்பத்தாக்குதலில் மறைந்த செய்தி துரதிஷ்டமானதாகும். குறிப்பாக அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்று இன்றும் அக்கலையை ஆர்வத்தோடு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் குமுறல்கள் மனதை உருக்கும் செய்தியாகும். இவ்விதம் அவரிடம் மிருதங்ககலையைப் பயின்ற இளம் கலைஞர்கள் அவரது 2ஆவது வருட நினைவை கலை வடிவங்களாக்கி பல்வேறு தடங்கல்களின் பின்னர் வெளிப்படுத்தியிருந்தார்கள். 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஊடாக பல முற்போக்கு எழுத்தாளர்களை அறிந்துகொண்டேன். அத்துடன் தமிழக முற்போக்கு இலக்கிய இதழ்கள் சரஸ்வதி, தாமரை முதலானவற்றில் எழுதிய படைப்பாளிகள் பற்றியும் தெரிந்துகொண்டேன். அவர்களில் ஒருவரான எச். எம். பி. மொஹிதீன் பற்றி ஜீவா சொன்ன செய்திகள் வியப்பூட்டுவதாக இருந்தது. இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தவர் எனவும், 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த கிளர்ச்சியையடுத்து கைதாகி சிறைவைக்கப்பட்டிருந்தார் எனவும் ஜீவா சொன்னார். யாழ்ப்பாணம் சிறையில் அக்காலப்பகுதியிலிருந்தவர்களில் ஒருவர்தான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான ரோகண விஜேவீரா. மற்றவர் எழுத்தாளர் எச். எம். பி. மொஹிதீன். ரோகண விஜேவீரா, தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களை எழுச்சிகொள்ளச்செய்து ஆயுதக்கிளர்ச்சியை மேற்கொண்டமைக்காக கைதானவர். ஆனால், மொஹிதீன் எழுத்தாயுதம் ஏந்தியமையால் கைதானவர் என்பதை தெரிந்துகொண்டேன். வட கொரியாவின் கிம் இல் சுங் எழுதிய சில புத்தகங்களை மொஹிதீனும் அவர் மூலமாக அவரது நண்பர்கள் சிலரும் மொழிபெயர்த்தனர். 1971 ஏப்ரில் கிளர்ச்சிக்கு வடகொரியாவின் சித்தாந்தங்களும் காரணமாக இருக்கலாம் என அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசின் புலனாய்வுப்பிரிவு தீர்மானித்ததன் விளைவுதான் எச். எம். பி. மொஹிதீனின் சிறைவாசம்.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









