பாடகி வாணி ஜெயராமின் இழப்புச் செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன். இந்தியத் திரைப்பட உலகின் சிறந்த பின்னணிப்பாடகிகளில் ஒருவர். ஆழ்ந்த இரங்கல். இவரது நினைவாக எனக்குப் பிடித்த ஒரு பாடலை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். இப்பாடல் அவருக்கு அகில இந்திய சிறந்த பாடகி என்னும் விருதினைப் பெற்றுத்தந்த பாடலும் கூட. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையில் ஒலிக்கும் இப்பாடலுக்கு அற்புதமாக நடித்திருப்பார் ஶ்ரீவித்தியா. பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன். பாடல் இட,ம் பெற்றுள்ள படம்: கே.பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்'. https://www.youtube.com/watch?v=2xVFBKSxMP0
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் முழுமையாகக் கீழே:
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தை போல
வேதனையும் மாறும் மேகத்தை போல
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
குட்டி திரைப்படம் ஜெயபாதுரியை இளம் நாயகியாக அறிமுகம் செய்த திரைப்படம் வசந்த் தேசாயின் 'குட்டி'. ஜெயாபாதுரி சிறுமியாக சத்யஜித் ரேயின் 'மகாநக'ரில் நடித்திருந்தார். இத்திரைப்படப் பாடல்களை எழுதியவர் குல்சார். இத்திரைப்படம் இன்னுமொரு விடயத்துக்கும் முக்கியத்துவம் மிக்கது. வாணி ஜெயராமைப் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்திய படமும் 'குட்டி'யே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'குட்டி',திரைப்படத்தில் வாணி ஜெயராம் பாடிய பாடலிது. நடிப்பு - ஜெயாபாதுரி.
https://www.youtube.com/watch?v=56AUdC9mn4E
முள்ளும் மலரும்' படத்தில் இடம் பெறும் 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' பாடல் எனக்குப் பிடித்த வாணி ஜெயராமின் இன்னுமொரு பாடல். இப்பாடல் காட்சியில் நடித்திருக்கும் படாஃபட் ஜெயலட்சுமி, ரஜனிகாந்த் இருவரும் நன்கு நடித்திருப்பார்கள். எந்த வகைப்பாடலையும் சிறப்பாக பாடும் வாணி ஜெயராமின் குரலினிமை என்னை எப்போதும் காந்தம்போல் இழுக்கும் தன்மை மிக்கது.
https://www.youtube.com/watch?v=9JQgkQIeUzM
'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' - எழுபதுகளில் நாளும் பொழுதும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த பாடல். இந்தப்பாடலே பாடகி வாணி ஜெயராமைப் பட்டி தொட்டியெங்கும் எடுத்துச் சென்றது. கவிஞரின் வாலியின் வரிகள், எம்.எஸ்.வியின் இசை, கே,ஆர்.விஜயா & முத்துராமனின் வரிகளின் உணர்வுகளுக்கேற்ற நடிப்பு எல்லாமே இப்பாடலின் வெற்றிக்குக் காரணம். எஸ்.ஜானகிக்கு 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' என்றால் வாணி ஜெயராமுக்கு 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'
https://www.youtube.com/watch?v=JasttazYx3U