எழுத்தாளர் இளவாலை எஸ்.ஜெகதீசன் எழுபதுகளிலிருந்து தமிழ் ஊடகத்துறையில் இயங்கிவரும் எழுத்தாளர். எழுபதுகளில் இவரது பல கட்டுரைகள் ஈழநாடு வாரமலரில் வெளிவந்துள்ளன. தொண்ணூறுகளில் 'டொரோண்டோ' , கனடாவில் 'பொதிகை'சஞ்சிகையை வெளியிட்டவர்.
பொதிகையில் வெளியான முக்கியமான அம்சங்களிலொன்று எழுத்தாளர்கள் இருவருக்கிடையிலான சந்திப்பு. அவர்களுக்கிடையிலான உரையாடலை ஒலிப்பதிவு செய்து, அவற்றை எழுத்து வடிவில் வெளியிட்டு வந்தார். இவ்வெழுத்தாளர்களுக்கிடையிலான சந்திப்பில் நானும் பங்குபற்றியிருக்கின்றேன். எழுத்தாளர் குறமகளைச் சந்தித்து உரையாடியது மறக்க முடியாத நிகழ்வு. அவ்வுரையாடல் 'பொதிகை'யில் வெளியானது. அதற்காக ஜெகதீசனுக்கு நன்றி.
தற்போது அவ்வுரையாடல்களைத் தொகுத்து 'மற்றவை நேரில்' என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார் ஜெகதீசன். முக்கியமான ஆவணமாகத் திகழும் நூலது. இதன் மின்னூல் வடிவினை நீங்கள் ஜெகதீசனுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டால் அனுப்பி வைப்பார்.
எழுத்தாளர்களுக்கிடையிலான உரையாடல்களை நான் விரும்பி வாசிப்பவன். அவை அவர்களது அனுபவங்களை, உணர்வுகளை, கருத்துகளை வெளிப்படுத்துபவை என்பதால் எனக்கு அவற்றை வாசிப்பதில் மிகுந்த நாட்டமுண்டு. இவ்வுரையாடல்களை எழுத்து வடிவில் தொகுத்து, பிரசுரித்து , தற்போது நூலாக்கியுள்ளார். அதற்காக ஜெகதீசனுக்கு எனது வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.