கலித்தொகை காட்டும் ஏறுதழுவல்
முல்லை நிலமக்களின் வீரவிளையாட்டாக விளங்குவது ஏறு தழுவலாகும். இவ்விளையாட்டு இன்றும் விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதற்கு மதுரை அலங்காநல்லூர் குறிப்பிடதக்க ஊராகும். இவ்வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும், காளை விரட்டு என்றும், வடமாடு என்றும், மஞ்சுவிரட்டு என்றும், எருதுகட்டு என்றும் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.


தமிழ் நாவல் நூற்றாண்டு நிறைவையொட்டி இழத்துத் தமிழ் நாவல்களின் நூல்விபரப் பட்டியலொன்று தயாரிக்கும் முயற்சியிலீடுபட்டிருந்த வேளையில், தகவல் தோட்ட எல்லைக்குட்பட்ட நாவல்களில், ‘ஒரு பிரசுரக்கள’த்தின் வெளியீடுகள் என்ற வகையில் வீரகேசரி பிரசுரங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த சுமார் தொண்ணூறாண்டுக் காலப்பகுதியில் (1885-1976) ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத்தொகையில் இருபது வீதத்துக்கு மேற்பட்டவை வீரகேசரி பிரசுரங்கள். கடந்த ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல் வடிவில் வெளிவந்த எண்பத்தைந்து நாவல்களில் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ‘ஜனமித்திரன்’ பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை, அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இலக்கியத்தரம் என்பது புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல வெனினும் வெளியீட்டுச் சாதனத்தின் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் மதிப்பிடக் கூடியதுமல்ல. இவ்வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே, கடந்த சுமார் ஐந்து ஆண்டுக் காலத்தின் வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்துள்ள காரணிகளுள் ஒன்றாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை இயங்கிவந்துள்ளதென்பது மிகையுரையல்ல. சமகால இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்ற வகையில் வீரகேசரி பிரசுர நாவல்களைப் பொதுமதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
Doug Ford, the chattier contingent of the Brothers Grim now running Toronto, is itching to close local Toronto libraries. But he has retreated uneasily from his bluff statement about library-defender Margaret Atwood that “If she walked by me, I wouldn’t have a clue who she is.” Now he says, confusedly, “Everyone knows who Margaret Atwood is but if she were to come up to 98 per cent of the people, they wouldn’t know who she was.” Rob and Doug, this is untrue. I have seen Atwood walk down a Toronto street, arm in arm with her daughter. You should have seen the reaction of Torontonians. A gape, a gasp, an elbow in the ribs, a pantomime “Did you see her? It’s Margaret Atwood!” Then they smile proudly, as if they have been given the key to the city of Toronto, which they sort of have been. But that’s not my quarrel with Mayor Ford’s smarter — which is not saying much — sibling. It’s what followed that rankled.
அவுஸ்திரேலியா முருகபூபதி இலங்கையில், நீர்கொழும்பில் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி பிறந்தவர். இன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 ஆம் ஆண்டு விவேகானந்த வித்தியாலயம் என்ற பெயரில் தோன்றியபோது அங்கு முதலாவது மாணவனாகச்சேர்ந்து 1963 இல் புலமைப்பரிசில் பெறறு; யாழ். ஸ்ரான்லி கல்லூரியிலும் பின்னர் நீர்கொழும்பு அல்ஹிலால ; மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றவர். 1972 இல் படைப்பிலக்கியவாதியாகவும் பத்திரிகையாளராகவும் அறிமுகமானவர். சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், கடித இலக்கியம், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் இதுவரையில் 18 நூல்களை எழுதியிருப்பவர்.
நெருங்கிய 'மடத்து' நண்பர்களுக்கு ஜே.கே. ஊருக்கு, உலகத்துக்கெல்லாம் ஜெயகாந்தன். பெற்றோர் வைத்த பெயரும் அதுவே. இந்த அடலேறு பிறந்த இடம்: மஞ்சக்குப்பம்; கடலூரின் ஒரு பகுதி. ஜெயகாந்தனின் எழுத்துப் பற்றி, தனக்கு வெளியேயான புறவுலகை அவர் பார்த்த பார்வையான அவரின் எழுத்தின் சாதனை பற்றி நிறையப் பேர் நிறைய எழுதிவிட்டார்கள். அவர்களில் வாசகர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் என்று நிறையப் பேர். பொதுவாக எழுத்தாளர்கள் இன்னொரு எழுத்தாளரைப் பற்றி விமர்சன ரீதியில் எழுத நிறைய யோசிப்பார்கள். இது பொதுவாக ஒரு எழுத்தாளர் குணம். இவர் விஷயத்தில் அவர்களிடையே அந்த யோசிப்பும் இல்லாது போயிற்று நல்லதாயிற்று. அவரது இளமைப் பருவத்தில், விந்தன் நடத்திய 'மனிதன்', இஸ்மத் பாஷாவின் 'சமரன்', மாஜினியின் 'தமிழன்', தோழர் விஜயபாஸ்கரனின் 'சரஸ்வதி', மற்றும் 'தாமரை' ஆகிய இதழ்களுக்கு தமது எழுத்துக்கள் பிரசுரமாக இலாயக்கான பத்திரிகைகள் இவையே என்று இவரே தெரிவுசெய்து தமது கதைகளைக் கொடுத்திருக் கிறார். இவைகளே எழுதுவதற்கு இவர் நடை பழகிய பத்திரிகை களாகவும் ஆயிற்று.
ரஷ்ய எழுத்தாளரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான அன்டன் செகாவின் 150வது பிறந்த ஆண்டு உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1860ம் ஆண்டில் பிறந்து 1904 வரை 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த செகாவ் மகத்தான இலக்கியச் சாதனைகளை நிகழ்த்தியவர். எனக்கு செகாவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான- தேர்ந்த வாகரும், விமர்சகருமான- எஸ்.ஏ.பெருமாள் அவர்களே, இங்கும் செகாவைப் பற்றி சொல்கிறார்… செகாவின் பாட்டனார் ஒரு பண்ணை அடிமையாக வாழ்ந்தார். இது வம்ச பரம்பரையாக நீடித்தது. எண்பது ரூபிள் கடனுக்காக அவரும் அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் அடிமைகளாயினர். கடுமையாக உழைத்து எண்பது ரூபிள் சேர்ந்ததும் கடனை அடைத்துவிட்டு விடுதலை பெற்றார். அவரது பிள்ளைதான் பாவெல் செகாவ்.
[நேர்காணல் : கல்பனாதாசன். (இந்நேர்காணல் புதிய பார்வை 16 – 31 அக்டோபர், 1-15 நவம்பர் 1997 இதழ்களில் வெளிவந்தது. நன்றி : புதிய பார்வை. மேற்படி நேர்காணல் 'இனியொரு' இணையத் தளத்திலும் மீள்பிரசுரமாகியுள்ளது. நன்றி: இனியொரு.காம்]
ஆழ வேரூன்றி! அகலக் கிளைகள் பரப்பி!
எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது. .... காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவை தள்ளுகிறான் இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்கிறான். துங்குபவர்களில் ஒருவர் சிவத்தம்பி, மற்றவர் அவருடைய அறைவாசி. இருவரையும் இளைஞன் உற்றுப் பார்த்தபடி காத்திருக்கிறான். கையை நீட்டி, முறித்து, உறுமி கண்விழிக்கிறார் சிவத்தம்பி. என்னைப் பார்த்ததும் சிரித்து எழும்பி பேசத் தொடங்குகிறார். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார். முழுக்க முழுக்க இலக்கியம்தான். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் அப்படிச் சென்று அதிகாலை உட்கார்ந்திருந்ததற்கு காரணம் இருக்கிறது. காலையில் சிவத்தம்பி யாரை முதலில் சந்திக்கிறாரோ அதன்படியே அன்றைய நாளின் திட்டம் உருவாகும். அன்றைய நாளை நான் கைப்பற்றி விடுகிறேன். நாங்கள் இருவரும் பக்கத்திலே இருக்கும் காந்தி லொட்ஜிற்கு காலை உணவு சாப்பிட நடந்து போகிறோம். வழக்கம்போல சாப்பாட்டுக்கான பணத்தை சிவத்தம்பியே கட்டுகிறார்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பாலும் சென்று உலக அரங்கில் தமிழின் குறியீடாக நிலை பெற்றுள்ளார் என்று சூழலியலாளரும் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பிஅவர்களின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அஞ்சலிக் குறிப்பில், தமிழ் கூறும் நல்லுலகில் புலமையாளராக, ஆய்வாளராக, விமர்சகராக, சிந்தனையாளராகப் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக மிளிர்ந்தவர் பேராசிரியர்கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். தமிழ், தமிழர் பற்றிய சமூக வரலாற்றுப் பண்பாட்டுத் தேடுகையில் தனது ஆற்றல்களையும் அறிவுத் திறன்களையும் முழுமையாகக் குவியப்படுத்திச் செயற்படுத்திவந்த இவர், 20ஆம் நூற்றாண்டின் தமிழியல் ஆய்வுப் போக்கைத் திசைமுகப்படுத்தும் பேராளுமையாக விளங்கி வந்துள்ளார்.
பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியவர்.
!- பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தியினை எழுத்தாளர் மேமன்கவி மின்னஞ்சல்வாயிலாக அறியத்தந்திருந்தார். ஈமச்சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அறிவித்திருந்தார். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமன்றி, உலகத் தமிழ் இலக்கிய உலகிற்கே பேராசிரியரின் மறைவு பேரிழப்பே. ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்திற்கு பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் ஆற்றிய பணி அளப்பரியது. முதன் முறையாக இவரை நான் அறிந்து கொண்டது இவரது 'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்' என்னும் நூல் மூலமாகத்தான். நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் , 7ஆம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம், மட்டக்களப்பு, புனித மைக்கல் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்த் தின விழாவில் தமிழ்க் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையில் முதலாவதாக வந்ததற்காக கேடயமொன்றினையும், நூல்கள் பலவற்றையும் பரிசுப் பொருட்களாகத் தந்திருந்தார்கள். 'மட்டக்களப்புத் தமிழகம்', புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் நூலொன்று, வடமோடி தென்மோடி கூத்துகள் பற்றிய நூலொன்று, இன்னும் சில நூல்களுடன் பேராசிரியரின் மேற்படி 'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்' நூலும் அவற்றிலடங்கும். சிறிய நூலானாலும், ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கிய, விளங்கும் நூலது. அது முதல் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பலரும் மேற்படி நூலின் அடிப்படையிலேயே தமது ஆய்வுகளைத் தொடர்ந்திருப்பார்கள். இவரை ஒருமுறை சந்தித்துமுள்ளேன். அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைகழகத்தின் தமிழ்ச் சங்கத்தினரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் 'நுட்பம்' இதழின் ஆசிரியராகவிருந்த சமயம். அம்மலர் மிகவும் சிறப்பாக வெளிவருவதற்கு முனைவர் மு. நித்தியானந்தன் அவர்கள் மிகவும் உதவியாகவிருந்தார். அம்மலருக்கு ஆக்கங்கள் வேண்டி, அப்பொழுது யாழ்பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானபீட மாணவனாகப் பயின்றுகொண்டிருந்த நண்பர் ஆனந்தகுமாருடன் பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இருவருமே இதழுக்குக் கட்டுரைகள் தருவதாக உறுதியளித்தார்கள். ஆயினும் அச்சமயம் பேராசிரியர் க.கைலாசபதியிடமிருந்து மட்டுமே உரிய நேரத்தில் கட்டுரை எமக்குக் கிடைத்தது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தி மேற்படி நினைவுகளை மீண்டும் ஒருமுறை எழுப்பின. அவரது மறைவையொட்டி, கானாபிரபாவின் வலைப்பதிவிலிருந்து பேராசிரியர் மெளனகுருவின் பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய பகிர்வுகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். - வ.ந.கிரிதரன் , பதிவுகள் -
[அண்மையில் மறைந்த எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் பற்றித் 'தினமணி' பத்திரிகையில் வெளியான கட்டுரையிது. அவரது ஞாபகார்த்தமாக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. - பதிவுகள் -] அண்ணாச்சி ர.சு.நல்லபெருமாள் இன்று உடலோடு இல்லை. இயற்கை எய்தினார் இறைவனடி சேர்ந்தார் என்று பலபடச் சொன்னாலும் காலமானார் என்று சொல்லுவதுதான் சாலப் பொருந்தும் அந்தப் பெருமகனாருக்கு. ஆமாம், கல்கியின் அன்புக்குப் பெரிதும் பாத்திரப்பட்டவர் அண்ணாச்சி. அவரது வாழ்க்கை வருங்கால இளையவர்க்குப் பெரும் பாடமாக அமையும். மிகுந்த அன்பு கொண்டவர் அண்ணாச்சி. அதிர்ந்து பேசாத பண்பாளர். எந்தவித தீயபழக்கங்களும் இல்லாத தூயவர். அவரது சித்தப்பா சங்கரபாண்டியம் பிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரு அவையில். இன்றோ அவரது உறவில் தம்பி ஏ.எல்.எஸ். திருநெல்வேலி மாநகரத் தலைவர். எனினும், அண்ணாச்சிக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம்.
விசுவாமித்திரன் வரங்கள் பல பெற விரும்பி ஒரு வேள்வி செய்யத் தீர்மானித்தார். அதே நேரத்தில் அந்த வேள்வியைக் குழப்பிவிடப் பல அசுரர்கள் எத்தனிப்பர் என்ற ஐயப்பாடும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, கடுகதியாய் அயோத்தி சென்று, தசரத மன்னனைக் கண்டு, விடயத்தைக் கூறி, வேள்வியைக் காப்பதற்கு இராமனைத் தந்தருளுமாறு வேண்டி நின்றார். இராமனைப் பிரிய விரும்பாத தசரதன் துடிதுடித்து ஈற்றில் இராமர், இலக்குமணன் ஆகிய இருவரையும் விசுவாமித்திரருடன் செல்வதற்குச் சம்மதித்தான். விசுவாமித்திரன், இராமன், இலக்குமணன் ஆகிய மூவரும் அயோத்தியிலிருந்து காட்டுக்குச் சென்றனர். ஆங்கு முனிவர்களின் தவத்திற்கு இடையூறு புரிந்து வருபவளான தாடகை என்ற அரக்கியை இராமன் அம்பைத் தொடுத்துக் கொன்றான். அதன்பின் இராமரும், இலக்குமணனும் யாக சாலையைச் சுற்றி நின்று காவல் புரிய, விசுவாமித்திரன் அரிய வேள்வியை ஆறு நாட்கள் நடாத்தி முடித்து இராமனையும், இலக்குமணனையும் வாழ்த்தினார்.
தமிழ்
முற்போக்கு இடதுசாரி இயக்க செல்நெறிகளில் ஆழக்கால் பதித்த செ.கணேசலிங்கன் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அறுபது ஆண்டு காலத்துக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்களில் முதன்மை பெற்று நிற்கின்றார். எண்பது நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுச் சாதனை படைத்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், சஞ்சிகை என்று பல்துறை இலக்கிய வடிவங்களுக்கூடாக தன் ஆளுமையை நிலை நிறுத்தியுள்ளார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் அதன் கொள்கை வழிநின்று செயற்பட்ட பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கே.கணேஷ், எச்.எம்.பி.மொஹிடீன், சில்லையூர் செல்வராஜன், இ.முருகையன், நீர்வை பொன்னையன், அ.முகம்மது சமீம், இளங்கீரன், கே.டானியல்,பிரேம் ஜி, டொமினிக் ஜீவா, அ.ந.கந்தசாமி போன்றவர்களுடன் தோழமை உணர்வுடன் ஒன்றிணைந்து முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செ.கணேசலிங்கன் வழங்கினார். தாம் மேற்கொண்ட மார்க்சிய சித்தாந்தக் கொள்கைப் பற்றுறுதியுடன் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் செ.கணேசலிங்கன் முற்போக்கு இலக்கியச் செம்மல்களில் ஒருவராக முகிழ்ந்து நிற்கின்றார்.
மாந்தர் செய்திப் பரிமாற்றத்திற்குத் தொடக்கத்தில் சைகைகளையும் ஒலிகளையும் பயன்படுத்தியிருக்கின்றனர். பின்னர், தொடர்ந்த வளர்ச்சி நிலையில், படிப்படியே சொற்களை உருவாக்கி, மொழியை அமைத்து, அம் மொழி வழி பேசத் தொடங்கினர். அதன்பின் வரிவடிவங்கள் அமைத்துக் கொண்டு, அதன் வழியாகத் தம் எண்ணங்களை எழுத்திலும் வெளிப்படுத்தத் தொடங்கினர். முதலில் உருவான எழுத்து வழியான செய்தித் தொடர்பு ஊடகமே மடல் அல்லது கடிதம். தொலைவில் இருப்பாருடன் தொடர்பு கொள்ளப் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டுவரும் இந்த ஊடகம், கணிப்பொறி கைப்பேசி வருகைக்குப்பின் பெரிதும் குறைந்து அறவே மறைந்துவிடும் நிலைக்குச் சென்றுகொண்டுள்ளதைக் காண்கிறோம்.
[ தமிழ் இலக்கிய வரலாற்றில் பிரமிளின் பங்களிப்பானது முக்கியமானது. கதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், தத்துவமென இவரது ஆளுமை பரந்துபட்டது. இவை தவிர ஓவியம், சிற்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவராக விளங்கினார். தமிழ்ப் படைப்பாளிகளில் குறிப்பிட்ட வெகு சிலரே நவீன அறிவியற் துறையின் பலவேறு கோட்பாடுகளை, அவை கூறும் பொருளினைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலான தேடலை மேற்கொண்டவர்களெனலாம். அவர்களில் பிரமிள் முக்கியமானவர். விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு இருப்பை அறிதற்கு முயன்றவர் பிரமிள். நவீன விஞ்ஞானம் கூறும் காலவெளி, 'குவாண்டம்' இயற்பியல், சார்பியற் தத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் இருப்பை அறிதற்கு முயன்றார். இதனைத்தான் 'விஞ்ஞானம் - ஞானம் - விபூதிப்பட்டை', 'விஞ்ஞானப் பார்வையும் காலாதீதமும்' போன்ற அவரது கட்டுரைகள் புலப்படுத்துகின்றன. பிரமிளின் பிறந்த தினம ஏப்ரல் 20. அவரது நினைவாகவும், தமிழ் இலக்கிய உலகில் அவரது ஆளுமையினை, பங்களிப்பினை நினைவு கூரும் முகமாகவும் அவரைப் பற்றிய மற்றும் அவரது ஆக்கங்கள் சில 'பதிவுகளி'ல் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. - பதிவுகள்]
1. உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக:
அச்சுப் போன்ற தமிழை அடக்கமாக உச்சரித்து, நகைச்சுவை ததும்ப தமிழை ஈழமண்வாசனையுடன் சுவைக்கத்தந்தவர் புலவர் அமுது. லண்டனில் ‘மூதறிஞர்’பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டு சரித்திர வரலாறாகிய புலவர் அமுது, ஈழத்தின் பாரம்பரிய பண்டித மரபையும் பல்கலைக்கழகத்தின் நவீன இலக்கிய மரபையும் இணைத்த ஒரு பாலமாகத் திகழ்ந்தவர். இத்தகைய ஒரு பெரிய தமிழ் அறிஞரை நான் அவருடைய இளைய மகள் ஜெயமதியுடன் இளவாலைக் கன்னியர் மடத்தில் சிறுமியாகப் படித்த காலம் தொட்டே அறிந்திருந்தேன். எமது பாடசாலையின் அனைத்து முக்கியமான வைபவங்களிலும் வெள்ளை வேட்டி சால்வையோடு மெல்லிய உயர்ந்த இந்த அறிவுச்சுடரின் தலை பளபளக்க, கழுத்தை பூ மாலைகள் அலங்கரிக்க, முதல் வரிசையில் இருந்ததைப பார்த்திருக்கிறேன். லண்டனில் ஆண்டுதோறும் இடம்பெறும் இளவாலைக் கன்னியர் மடத்தின் பழைய மாணவிகளின் ஒன்றுகூடலின்போதுதான் இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
தற்போதைய யாழ். நவீன சந்தைக் கட்டிடம் அப்போது கட்டப்படவில்லை. அந்த இடத்தில் தான் அன்றைய பஸ் நிலையம் அமைந்திருந்தது. அதற்கு மேற்குப்புறமாகக் கஸ்தூரியார் வீதியின் ஆரம்பம். அதனருகாமையில் மேற்குப்புறமாகத் தகரக் கூரைகளுடன் வரிசையாகப் பல கடைகள். அதிகமானவை குளிர்பானம், பிஸ்கட் முதலியன விற்கப்படும் கடைகள். அவற்றின் நடுவே ஒரு புத்தகசாலை. அந்தப் புத்தகசாலையின் உள்ளேயும், வாசலிலும் தினசரி பல இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்களைக் காணலாம். உள்ளே ஓர் உயர்ந்த கறுப்பு உருவம், வெள்ளை வேட்டி, அதற்கேற்ற வெள்ளை நாசனல் - சேட், சிவப்பு நிற 'மவ்ளர்" தோளில் - சிலவேளை நாரியில் இறுக்கக்கட்டியபடி, சிலவேளை நெற்றியில் சந்தனப் பொட்டு, பளிச்சிடும் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரிக்கும் அழகு, அன்பாகப் பண்பாகப் பேச்சு. ஆமாம்.. அவர் தான் அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் ஆர். ஆர். பூபாலசிங்கம்.
ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை. ஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும். குறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை. கோ.றஞ்சகுமாரின் 'மோகவாசல்' தொகுப்பு மீள் பிரசுரம் பெற்றிருந்தாலும் அதில் அவரின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இலங்கையிலிருந்து வெளிவரும் 'நந்தலாலா' , முன்பு வெளிவந்த 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாருடன் நடைபெற்ற நேர்காணல். இந்த நேர்காணல் 1997இல் ஜோதிகுமார் தொராண்டோ வந்திருந்த சமயம் எடுக்கப்பட்டது. பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் கருதிப் பதிவுகளுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். பேட்டி கண்டவர் வ.ந.கிரிதரன்.- 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









