மானிடத்தை இதய சுத்தியோடு நேசித்த முதுபெரும் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்!
- பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ் அகஸ்தியரின் இருபதாவது நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி இக்கட்டுரை வெளியாகின்றது. -

தமிழ் இலக்கிய உலகில் அகஸ்தியர் என்ற பெயர் மிகப் பிரபலமான ஒன்றாகும். பௌராணிக கதைகள் கூறும் குறுமுனிவர் அகஸ்தியர் இந்தியாவின் வடபுலத்திலிருந்து தென்புலத்திற்கு வந்து தமிழிலக்கியத்தையு(ள)ம் மொழி அமைப்பையும் புதிய நெறியிலே வளர்த்தார் எனக் கூறப்படுகிறது. இதே போன்று இருபதாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபுலத்திற் பிறந்து வளர்ந்து தென்புலத்திலும் மத்தியபுலத்திலும் வாழ்ந்து பூமிப்பந்தின் மேலைப்புலத்திற் சங்கமமாகிவிட்ட அசுர எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர், புதிய இலக்கிய அரசியற் கோட்பாடுகளைத் தம்மகத்தே கொண்ட நூற்றுக்கணக்கான ஆக்கங்களைத் தந்து தமிழ் இலக்கிய உலகிற் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
தனக்கெனவும் தனது குடும்பத்திற்கெனவும் தனது சுற்றத்துக்கெனவும் மட்டும் வாழாது தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்துக்காகவும் நாட்டுக்காகவும் அவற்றையும் கடந்து மனிகுலத்துக்காகவும் தனது வாழ்க்கையையும் சுகபோகங்களையும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்ணிப்பவன் சராசரி மனிதனிலிருந்து உயர்ந்து நிற்கின்றான். இறந்தும் இறவாது வாழ்ந்து கொண்டிருக்கின்றான்: போற்றுதலுக்குள்ளாகின்றான். அத்தகையவர்களுள் அமரரான அகஸ்தியரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையிற் பிறந்து பிரான்சின் தலைநகரான பாரிஸ் மாநகரத்திற் சங்கமமாகிவிட்ட அவரது முற்போக்குச் சிந்தனைகளும் உயர்ந்த கருத்துக்களும் இலங்கைக்கோ, தமிழ் உலகுக்கோ மட்டுமன்றி பிரதேச, இன, மத, மொழி, நாட்டு எல்லைகளைத் தாண்டிய அனைத்துலகுக்கும் சொந்தமானவை, நன்மை பயப்பவை.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்டை என்னும் கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு சவரிமுத்து அன்னம்மா தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்து, ஆனைக்கோட்டைத் தமிழ்ப் பாடசாலையிற் கல்வி பயிலத் தொடங்கி, எஸ்.எஸ்.ஸி வகுப்புடன் பாடசாலைக் கல்விக்கு – வரன்முறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தபோதும் தமது அறுபத்தொன்பதாவது வயதில் அமரராகும் வரையும் கீழை நாடுகளதும் மேலைநாடுகளதும் தத்துவம், அரசியல், தர்க்கவியல், அறிவியல், சித்தாந்தக் கோட்பாடுகள் முதலிய பலதுறைகள் சார்ந்த நூல்களையும் கீழைத்தேய, மேலைத்தேய இலக்கியங்களையும் இடையறாது கற்று வந்தார். இறுதி மூச்சுவரை அலுப்புச் சலிப்பின்றி எழுதி வந்தார். மரணப் படுக்கiயில் இருந்தபோதும் அவரது கை எழுதுவதை நிறுத்தியதில்லை.



நாளையைப் பற்றி என்ன நிச்சயமாகச் சொல்லமுடியும்… பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் நான் முதலில் வாசிப்பது அதன் உள்ளடக்கம் அல்ல. அணிந்துரை, முன்னுரை, முன்னீடு இவைகளைத்தான் படிப்பேன். இவைகள்தான் புத்தகத்தை தூக்கி நிறுத்துபவை. இவற்றை வைத்துக் கொண்டு ஓரளவிற்கு புத்தகத்தை எடை போடலாம். ஒவ்வொருத்தருக்கும் அவருடைய புத்தகம் பெரிது. நான் எனது ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு முதுபெரும் எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதனை முன்னுரை எழுதுவதற்காக அணுகினேன். அவரை நான் ஏன் தெரிவு செய்தேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘வல்லமை’ என்ற மின்னிதழ் 2012 ஆம் ஆண்டு ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றைஒரு வருட காலமாக நடத்தியது. மாதாமாதம் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்தவற்றைத் தெரிவு செய்து கருத்துக் கூறினார் வெ.சா. முதல்மாதம் (ஆகஸ்ட்) வந்த கதைகளில் என்னுடைய சிறுகதையைத் (காட்சிப்பிழை) தெரிவு செய்து கருத்துக் கூறியிருந்தார். அவர் கூறிய கருத்துகள் :
‘யுத்தம் என்பது மனித உடல்களை மாத்திரமல்ல, மனித மனங்களையும் சிதைத்து விடுகின்றது. இது போன்ற பயங்கர அனுபவங்கள் இனி யாருக்கும் வரவேண்டாம். அதை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் வலியும், வேதனையும் தெரியும். எனவே யுத்தத்தைக் கொன்று விடுங்கள். இந்த உலகத்தை சுதந்திரமான அமைதிப் பூங்காவாக்குங்கள்’ என்று குரு அரவிந்தன் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டிருப்பதில் இருந்து அவர் ஒரு அமைதி விரும்பி என்பது புலனாகின்றது. குரு அரவிந்தன் இயல்பாகவே தனது உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்டுவதில்லை. புன்சிரிப்பு தவழும் அழகான வதனம், கண்கள்கூட அமைதியைக்காட்டும் ஆனால் சுற்றியிருக்கும் அத்தனையும் அங்கே பதிவாகியிருக்கும். தேவையான பொழுது மட்டும் அவை எழுத்து மூலம் வெளியே கொண்டு வரப்படும். தமிழ் மீதும், தாய் மண் மீதும் அதிக பற்றுக் கொண்டவர். எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அதனால்தான் தன்னார்வத் தொண்டராகவும் புலம் பெயர்ந்த மண்ணில் தன்னை அர்ப்பணித்திருக்கின்றார்.
ஈழத்து ஆக்க இலக்கியப் படைப்பாளியும் மல்லிகைப்பந்தல் தோழருமான எழுத்தாளர் நாவல்நகர் ப.ஆப்தீன் அவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கடந்த 9 ஆம்திகதி கொழும்பில் தனது 77 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல மல்லிகைப்பந்தல் தோழமை வட்டத்திலும் ஒரு வெறுமையை ஏற்படுத்தி விட்டது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.....



செங்கை ஆழியான் (க.குணராசா) ஒரு காலத்தில் இளம்படைப்பாளிகளின் படைப்புகளை அவதானித்து, அவர்களை சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் அறிமுகம் செய்து வைத்தார். ‘வல்லமை’ இணையத்தளம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து, ஒருவருட காலத்திற்கு தனது இணையத்தளத்தில் வெளியாகும் சிறுகதைகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்பாளிகளை இனம் கண்டிருந்தது. வல்லமையில் வெளியான அனைத்துக் கதைகளையும் வாசித்து தனது கருத்துக்களைச் சொல்லியிருந்தார் மூத்த எழுத்தாளரான வெங்கட் சாமிநாதன். மோதிரக்கையால் குட்டுப்பட்டுக் கொண்ட படைப்பாளிகளில் எட்டுபேர் மட்டும் (சுதாகர், பழமைபேசி, மணி ராமலிங்கம், அரவிந் ச்ச்சிதான்ந்தன், மாதவன் இளங்கோ, ஜெயஸ்ரீ சங்கர், பார்வதி இராமச்சந்திரன், தேமொழி) தேறினார்கள்.
"நான் கருப்பொருட்களைக் தேர்ந்துகொள்ள எனது உள்உணர்வுகளிலேயே நம்பிக்கை வைத்துள்ளதோடு என் உள்ளத்து உணர்வுகளுடனேயே எழுதுகின்றேன்" , "நானே எனது புத்தகங்களின் ஒட்டு மொத்தம்" எனவும் குறிப்பிடும் இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இலக்கிய கர்த்தா திரு. வி. எஸ். நேப்போல் அவர்கள், (Trinidad) ரினினாட் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தனது இலக்கியப்படைப்பால் உயர்ந்து நிற்கின்றார். உலகில் காணப்படும் ஒரே ஒரு இந்துமத அரசாகக் காணப்படும்; நேபாள தேசத்தின் பரம்பரையில் உதித்தவர்தான் இன்று உலகளாவிய புகழ் படைத்த நாவல் படைப்பிலக்கிய மேதையாகக் கருதப்பட்டு உயர்விருதினைப் பெற்றுக்கொண்ட சிவா நேப்போல் அவர்கள். தனது பாட்டியார் இந்தியாவிலிருந்து வரும்போது பல இந்துமத நூல்களையும், சாத்திரங்களையும் கொண்டு வந்திருந்தார். அவர்கள் சமய அனுட்டானங்களைத் தொடர்ந்தார்கள் நாமும் பின்பற்றினோம் ஆனால் எமக்கு மொழியை யாரும் கற்றுத்தரவில்லை. இந்தி எழுத்துக்களை இளமையில் யாரோ சொல்லித்தந்ததாக ஞாபகம் ஆனால் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அத்தோடு எமது மொழியின் இடத்தில் ஆங்கிலம் திணிக்கப்பட்டதால் நாம் எமது மொழியை மறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தமது ஆதங்கத்தை நோபல் பரிசு பெறுவதற்காக ஸ்ரக்கோம் சென்றவேளை குறிப்பிட்டிருந்தார். எனது புத்தகங்களின் கூட்டு மொத்தம் நானே என்று கூறும் அவர் தனது தாயாரின் ஊர் நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் என்கின்றார்.



இலக்கியம் என்பதென்ன? 
அவர் நினைவாக அவரைப்பற்றிய விக்கிபீடியா பதிவினைப் பகிர்ந்துகொள்கின்றேன். கோபுலு என்றதும் என் நினைவில் வருபவை என் பதின்மவயதினில் தமிழகத்து வெகுசன சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள்தாம். ஜெயகாந்தனின் நாவல்களான 'ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்.' (விகடன்), 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (தினமணிக்கதிர்), கதிரில் வெளியான ஜெயகாந்தனின் சிறுகதைகள் மற்றும் 'ரிஷி மூலம்' குறுநாவல், ஆனந்த விகடனில் வெளியான உமாசந்திரனின் 'முழுநிலா' நாவல், ஶ்ர...ீ வேணுகோபாலனின் 'நீ. நான். நிலா' (கதிரில் வெளியான நாவல்), சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' (விகடன் பிரசுரம்), அகிலனின் 'சித்திரப்பாவை' (விகடன்), நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' (விகடன்), கொத்தமங்கலம் சுப்புவின் 'பந்த நல்லூர் பாமா' (கதிர்), தேவனின் 'துப்பறியும் சாம்பு' போன்ற படைப்புகளுக்கு அவர் வரைந்த ஓவியங்களும், விகடனின் தீபாவளி மலர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களும்தாம்.



1. எதிர்காலச் சித்தன் பாடல்! 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









