பாரதியார் நினைவாக .....


யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து போயினர். கலப்பு மணம் புரிந்து கணவனைப் பிரிந்து வாழ்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததனால் இவருக்கும் ஊரின், உறவின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அருந்ததி ராய்க்கு சமூகம் எதிர் உலகமாகத்தான் முதலில் அறிமுகமாகியது. பின்னர் எல்லாவற்றையும் மீறி நீலகிரியில் பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பில் சேர்ந்தார். உடன் படித்த ஒருவரைக் காதலித்து மணந்த தால் படிப்பு பாதியில் நின்றது. அந்த வாழ்க்கையும் நான்கு ஆண்டுகள்தான் நிலைத்தது. அவரிடமிருந்து பிரிந்த பின்னர் “பிரதீப் கிரிஷன்’ என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து திரைப் படம் எடுத்தனர். இவ்வாழ்க்கையும் இவருக்கு நிலைக்க வில்லை. இவரின் கட்டற்ற சிந்தனை அடக்குமுறைக்கு அடங்காதவராக இவரை வடிவமைத்திருந்தது. மேலும் புரட்சிச் சிந்தனை மிக்கவராகவும் இவர் இருந்தார். இவரின் முதல் ஆசிரியரே இவரின் தாய்தான். “”உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள். நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற பாடம் அவருக்குச் சூழலே கற்றுக் கொடுத்தது. அதனால் எல்லாவற்றின்மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி படைப்புகளின் மூலம் பலரின் கவனம் பெற ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 1997-ல் அவர் எழுதிய “த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small things) என்னும் நாவல் புக்கர் பரிசினைப் பெற்றது. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர்தான்.
1.0 முகப்பு
தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.
In a time of burnings and bombings Heaney used poetry to offer an alternative world; he gave example by his seriousness, his honesty, his thoughtfulness, his generosity Two years ago I invited Seamus Heaney to read at the Kilkenny arts festival in Ireland. The venue was St Canice's Cathedral, one of the most beautiful churches in Ireland. It was here almost 40 years earlier that, as a young poet, he had met Robert Lowell, who had become a friend and a mentor. Heaney admired Lowell's utter dedication to his craft, his ability to change, his absolute belief in the importance of poetry. When I suggested that Dennis O'Driscoll, who had done a book of interviews with Heaney, should introduce him on stage, Seamus said he would like that, but he would prefer it if Dennis would read as well. Dennis, he said, had done enough introducing; since he was also a poet, he should get equal billing. It was typical of Seamus's generosity. That evening, I suggested to him that he should do no signing of books after the reading, but go and have a drink with the theatre director Peter Brook, who was in Kilkenny and wanted to meet him. As we left by a side door and walked away from the church, he sighed and said that all his life after readings when everyone else was free to walk out into the world, he would spent an hour or more signing books and meeting people. He was the most tactful and careful and scrupulous of men. He used a deep-rooted conscientiousness in his work, but it also came across every time you met him. He had a way of holding back, watching every word, weighing the moment. In his public readings he had a real command; privately, he was almost shy, always thoughtful.
1.0 முன்னுரை
மனித உறவில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு கடப்பாடு உண்டு. தாய்க்குப் பிள்ளையைப் பெற்றெடுப்பது; தந்தைக்குப் பொருளீட்டச் செல்வதும், பிள்ளைகளைச் சான்றோர்களாக்குவதும் ஆகும். இவை சமுதாயத்தில் நடக்கும் என்றும் மாறாத இயல்புகள். அதனைப் போல் நட்புக்கும் சில கடப்பாடு உண்டு . அது நட்பு உடையவர்களை நன்னெறிப்படுத்துவதும், உயர்வடையச் செய்வதும் ஆகும். ஞாயிறு எவ்வாறு இயல்பாக தோன்றுகின்றதோ அதுபோல நட்பினைப் பெறுவதற்கு யாரும் அடையாளம் காட்டத் தேவையில்லை. இயல்பாக மனத்தால் அறியக்கூடிய ஓர் உன்னத உறவே நட்பு. நட்பிற்கு இணையாக நட்பே கருதப்படுகிறது. அந்நட்புக் குறித்துத் தமிழில் வள்ளுவரும், கன்னடத்தில் சர்வக்ஞரும் எடுத்தியம்பியுள்ளனர். திருக்குறளிலும் சர்வக்ஞர் உரைப்பாவிலும் (மொழிபெயர்ப்பு) அமைந்த நட்புச் சிந்தனைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கட்டுரையை முழுமையாக வாசிக்க
The Best Untranslated Writers series – in which established writers select and showcase fellow writers from their own languages who are not yet widely translated or read – began with a trio of Brazilians on the writers they love most but are yet to make the leap into English. Today V.V. Ganeshananthan introduces us to Shobaskathi, also known as Anthony X, who writes about Sri Lanka and its diaspora communities, and who was previously involved in the Liberation Tigers of Tamil Eelam. Shobasakthi is also known as Anthony X; he is an ex-militant; he is an expatriate. Based in France, he writes about Sri Lanka in Tamil, his native language (and the native language of my parents). I read Tamil, but not yet well enough to get through the original versions of his books; instead, I use popular English translations by Anushiya Ramaswamy. I finished his novel Gorilla very shortly before meeting him; I read another, Traitor, many years after that initial conversation.

இதமான கடற்காற்று…. ஆர்ப்பரிக்கும் கடல்… அந்தக்காற்றை சுவாசித்தவாறும் கடலோசையை கேட்டவாறும் மாலையில் சூரிய அஸ்த்தமனத்தின் அற்புதக்காட்சியை ரசித்தவாறும் தனது தாத்தா, பாட்டி, தாய், தந்தை, அக்கா, தங்கை, தம்பிமாருடன் மனிதநேயத்துடனும் எண்ணற்ற கனவுகளுடனும் வாழ்ந்து வளர்ந்த இளைஞன், அந்தக்கடற்கரையோர நகரத்தில் தமிழ் சார்ந்த பல பணிகளில் ஊர்மக்களுடன் இணைந்திருந்தான். தனது ஆரம்பக்கல்விக்கு துணையாக நின்ற பாடசாலையிலும் அதற்கு வித்திட்ட வெகுஜன அமைப்பான இந்து இளைஞர் மன்றத்திலும் இயல், இசை, நாடகத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக நின்றான். பாடசாலை பழைய மாணவர் மன்றத்தை உருவாக்குவதிலும் அதன் ஊடாக மாணவரிடையே ஊக்குவிப்பு போட்டிகளை நடத்துவதிலும் உறுப்பினர்களுடன் இணைந்திருந்தான். இவ்வாறு இலங்கையின் மேற்கே தமிழ் அலைகள் ஆர்ப்பரிக்க, அதில் தன்னாற்றலால் நீச்சலிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆச்சரியப்படத்தக்கது அல்ல. உள்ளார்ந்த படைப்பிலக்கவாதி எங்கிருந்தாலும் அப்படித்தானிருப்பான். அவனுக்கு எழுத்தின்மீதும் வாசிப்பின் மீதும் பற்றுதல் அதிகம். பெற்றவர்களின் கனவு வேறுவிதமாக இருக்க அவனோ தனது கனவை வேறுவிதமாக வளர்த்து நனவாக்கிக்கொள்ள முயன்றான். அவனது உழைப்பு வீண்போகவில்லை. தான் நேசித்த கடல் மாந்தர்கள் பற்றிய கதைகளையே முதலில் எழுதி முதல் தொகுப்பிற்கு தேசிய சாகித்திய விருதையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டான்.
“ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம், ஆனால் உண்மையான மனிதராக முடியாது” என தனது பள்ளிப்பருவத்திலே எழுதியவர் காரல் மார்க்ஸ். சக மனிதர்கள் குறித்தும் அம்மனிதர்களின் வாழ்வுக் குறித்தும் உயரிய நிலையில் சிந்தித்து செயலாற்றியமையே வரலாற்றினுடைய மனிதராக அவர் போற்றப்படுவதற்கான அடிப்படையாகும். மனித குல வளர்ச்சிப் போக்க்pல் அறிவு என்பது சமுதாயம் சார்ந்த விடயமாகும். எனவே அவ்வறிவு எப்போதும் விஞ்ஞானம் தழுவியதாக அமைந்திருப்பதுடன் செருக்ககோ நேர்மையீனமோ இல்லாது சமூக வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதாக அது அமைந்துக் காணப்படுகின்றது. பிரம்ஜி என்ற ஆளுமையின் பணிநலன் பாரட்டு நிகழ்வு குறித்த சிந்திக்கின்ற போது மேற்கறிக்க வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
1.0 முகப்பு
பாலவியாகரணம் தெலுங்கு மொழிக்குரிய முழுமையான இலக்கணநூலாகக் கருதப்படுகிறது. இதனை யாத்தவர் சின்னயசூரி (கி.பி. 1858). இந்நூல் இக்காலம் வரை கற்றலிலும் கற்பித்தலிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வந்துள்ளது. அதற்குக் காரணம் பழைமையைப் போற்றும் பண்பே. மேலும், இந்நூல் பயனாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுள், முந்து நூல்களின் கருத்தியல்களின் ஆட்சியே மிகுதி. அவ்வாட்சியின் விழுக்கட்டைப் பி.சா.சுப்பிரமணியனின் குறிப்புகளை முன்வைத்து மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
2.0 பாலவியாகரணமும் முந்து நூல்களும்
சின்னயசூரி, பாலவியாகரணத்தின் மூலம் தெலுங்கு எழுத்துலகை ஒழுங்கமைவுக்கு உட்படுத்தினார். இதனை அந்நூல் வெளிவந்தபிறகு பழைமையான இலக்கியங்களும் திருத்தம் செய்து மீள்பதிப்பாக வெளிவந்தமையின்வழிக் காணலாம்(ஆனைவாரி ஆனந்தன்:1999). அதன் பின்பு இவர் வகுத்த கோட்பாடுகளே நிலைபேறாக்கம் பெற்றன என்பதே உண்மைநிலை. ... மேலும் வாசிக்க
['மல்லிகை; சஞ்சிகையின் வெளியீட்டாளரும், ஆசிரியரும், எழுத்தாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்கு ஜூன் 27 அன்று வயது எண்பத்தியேழு. அவரது பிறந்த தினத்தையொட்டி 'எதுவரை.நெட்' இணைய இதழில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுமாகின்றது. - பதிவுகள் -]
தோழமைக்கும் பெருமதிப்பிற்குமுரிய டொமினிக் ஜீவா அவர்களை, அவரது அயராத உழைப்பிற்கும் அதன் சமூக முக்கியத்துவத்திற்குமாக கௌரவம் செய்து, எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துவது முக்கிய கடமை எனக் கருதுகிறோம்! டொமினிக் ஜீவா நமது சமூக, பண்பாட்டு, எழுத்து செயற்பாட்டில் அரை நூற்றாண்டிற்கும் மேலான பங்களிப்புடைய போராளி! காயங்களையும் வலிகளையும் தாங்கி ஓங்கி ஒலித்த குரல் ஜீவாவுடையது. ‘மல்லிகை ஜீவா” என்கின்ற ஒரு இயக்கத்திற்கு நாம் செய்ய வேண்டிய சமூகக் கடமையில் இந்த நிகழ்வு ஒரு சிறு துளியானதே! இனம், மதம், சாதி, பால், பிரதேச, மேலாதிக்க, அனைத்து வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக புகலிட நாடுகளில் மாற்றுக் குரலாக செயற்பட்டு வரும் 25 வருட வரலாற்றைக் கொண்ட ‘இலக்கியச் சந்திப்பு அரங்கு”, அதே மூல நோக்கினை தனது வாழ்நாள் இலட்சியமாகவும் நாளாந்தப் பணியாகவும் கொண்டிருந்த ஜீவா என்கின்ற அந்த மகத்தான வரலாற்று மனிதனை கௌரவிப்பதானது, எம்மில் ஒருவரை கௌரவம் செய்வது என்கின்ற அரசியல் தெளிவுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் இன்று நடைபெறுகிறது.
[அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான 'பிரமிளின் தவளைக் கவிதை பற்றியதொரு புரிதல்' என்னும் எனது கட்டுரையில் 'தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அது பற்றிய ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்துள்ள பதிற் கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. - வ.ந.கி -] ஒரு கவிதையை வாசிக்க குறைந்தபட்ச வாசிப்பு அதிகபட்ச வாசிப்பு என இரு தளங்களை உருவாக்கிக்கொள்வது பயனளிக்கும் என்பது என் எண்ணம். குறைந்தபட்ச வாசிப்பு என்பது அந்தக்கவிதை உருவான மொழி-பண்பாட்டுச்சூழலில் கவிதையின் வரிகள் மூலம் பொதுவாக அடையச்சாத்தியமான அர்த்தம். அந்த மொழி-பண்பாட்டுச்சூழலில் உள்ள, கவிதையின் தனிமொழியை கற்பனைமூலம் விரித்து அறியும் பயிற்சி கொண்ட எல்லா கவிதைவாசகர்களும் ஏறத்தாழ அடையக்கூடிய வாசிப்பு அது. ஒரு வகுப்பில், ஒரு விவாதக்கூடத்தில், ஓர் வாசிப்பரங்கில் எப்போதும் அந்த குறைந்தபட்ச வாசிப்பைத்தான் முதலில் முன்வைக்க முடியும். இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, ஒட்டுமொத்தமாக இக்கவிதை இந்தப் பொருளை, இந்த உணர்வை, இந்த தரிசனத்தை அளிக்கிறது என்று சொல்லலாம். அப்படிச் சொன்னதுமே அதை அங்குள்ள ஒவ்வொருவரும் தாண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் அதிகபட்ச வாசிப்பு என்கிறேன்.
'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் கவிஞர் சேரனின் கவிதைகளை லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom) அவர்களின் மொழிபெயர்ப்பில் 'ஆர்க்' வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. இதற்காக அப்பதிப்பகத்துக்கு இங்கிலாந்துப் பேனா அமைப்பினரின் (PEN - UK) மொழிபெயர்ப்பு நூல்களுக்கான 2012ற்குரிய விருது கிடைத்துள்ளது. லக்சுமி ஹாம்ஸ்றம் அவ்ர்களுக்குக் கனடாவின் 2007ற்கான இயல்விருது கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த விருது கிடைத்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் கடுமையாக அந்த விருதினையும், லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் அதற்கான தகுதி பற்றியும், அவரை அவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பற்றியும் விமர்சித்துத் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அந்நடுவர்களில் நானுமொருவனாக இருந்ததனால் அது பற்றி பதிவுகள் இணைய இதழில் எழுதிய பதில் கட்டுரைகளிலொன்றினை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்.
![[Grants] Independent publishers scoop PEN awards for translation Posted May 15th, 2013 by Emma Cleave & filed under Translation.](/images/stories/pentranslates1.jpg)
Publishers Arc, Peirene, Haus Publications, And Other Stories, Portobello Books and Harvill Secker were all named today as recipients of English PEN’s latest series of awards for books in translation. Alongside these five award-winners, English PEN announced a further 16 titles that will receive grants to enable publishers to bring into English outstanding writing from languages as diverse as Farsi, Tamil, Portuguese, Occitan, Hebrew, French, German and Spanish. Each year, English PEN highlights worldwide writing of exceptional literary merit and courage. The charity awards grants to support both the promotion of published titles to readers in this country and to help finance the translation of planned titles, to ensure they reach English-speaking readers around the world.
தமிழ்ச் சூழலில் கவனிக்கப்பட்ட படைப்பாளிகளைவிட கவனிக்காமல்விட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகமென்பது பலரும் அறிந்ததுதான். ஓர் எழுத்தாளரைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து, அவருடைய படைப்புகளை அங்கீகரிக்கும்போது அவரிடமிருந்து மேலும் சில சிரத்தையானப் படைப்புகளை எதிர்பார்க்க முடியும். அந்த அங்கீகாரம் மேலும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை அவருக்குக் கொடுக்கும். காலம் கடந்து ஒருவரின் சாதனைகளைப் பாராட்டுவதும், விழா எடுப்பதும் தமிழ்ச்சூழல் கண்டிராத ஒன்றல்ல. அந்த வகையில், நிகழ்காலம் மறந்த ஓர் எழுத்தாளர்தான் ப.சிங்காரம். தான் எழுதிய இரு நாவல்களுக்காக எந்தவித அங்கீகாரமும் கோராத மகத்தான மனிதர். இவர் எழுதியது "கடலுக்கு அப்பால்', "புயலிலே ஒரு தோணி' ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே!
உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் ஆறறிவுள்ள மனிதனுக்கு மிக முக்கியமாக வேண்டப்படுவது மனிதனால் வகுக்கப்பட்ட மனித நேயமாகும். மனித நேயம் என்பது 'மனித உலக வாழ்க்கை இயல்', 'மனித இனநலக் கோட்பாடு', 'மனிதப் பொதுமைநல இயல்', 'மனித இனப் பொதுச்சமய அமைதி', 'மனித இன இயற் பண்பாய்வுத் துறை' என்றும் பொருள்படும். மனித நேயத்துக்குரிய ஒழுக்கத் தத்துவ முறைகளை மனிதன் சிந்திப்பதாலும், வரலாறுகளைப் படிப்பதாலும், தன்னிடமுள்ள அனுபவத்தாலும் பெற்றுக் கொள்கின்றான். இதைக் கருத்திற் கொண்ட ஆன்றோரும், சான்றோரும் அன்பு, பண்பு, சத்தியம், உண்மை, தர்மம், நேர்மை போன்ற அறநெறிகளைத் தமது இலக்கியங்களிலும், நீதிநெறி நூல்களிலும், சமய நூல்களிலும் எழுதி வருகின்றனர். மக்கள் இவற்றைப் படித்துத் தாமும் இவ்வறநெறிகளை உள்வாங்கித் தமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கின்றனர். இதனால் மக்களும் மனித நேயமுள்ளவர்களாகி அவ்வழி நின்று செயல்படுவதனால் மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வைக் காண்கின்றனர். மனித நேயம் மக்கள் மத்தியில் மிளிர்வதால் அவர்கள் மக்களையும், மற்றைய ஐயறிவுடைய உயிரினங்களையும் கட்டிக்காப்பாற்றிப் பேணி வருவதும் தெளிவாகின்றது.
1. வரலாற்றுக் காட்சியான ஒரு படைப்பாக்கம்
நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட - கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட - வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.

பொன்-பாலா என்று எம்மால் ஆசையுடன் அழைக்கப்படும் எம் இனிய நண்பர் பொன்னையா பாலசுந்தரம் அவர்கள் வயது எண்பத்து ஐந்தினை அடைந்துவிட்டார். குறொய்டனுக்குக் கிட்டிய 'பேர்ளி'யில் ஒரு கிறீத்தவக் கோவிலில் கொண்டாட்டம். அவரின் மூத்த மருமகன் கிருபாகரன், எமக்குத் தொலை பேசியில் அழைப்பு விடுத்தார். 2013 மேமாதம் 27 திங்களில் அந்தஒன்றுகூடல். என் மேசைத்தொலை பேசிக்குக் கிட்டப் பேனா, கடுதாசி இருந்தபடியால் எல்லா விபரங்களையும் கேட்டு மடமடவென்று மகிழ்ச்சியுடன் குறித்தேன். (இப்போஅதைத் தேடுகிறேன்! தேடித்தேடிக் கொண்டே இவ்வாழ்த்துக் கட்டுரையை எழுதுகிறேன்!!). பொன்-பாலாவுக்கும் எனக்கும் நல்ல ஒற்றுமைகள் பல உள்ளன. . ஒன்று, நாம் இருவரும் தமிழ் கவிதையின் தாசர்கள். நாங்களும் கவிப்போம். எனது கவிதைகளை அவர் தன் இதயத்தினால் இமயத்தில் வைத்துப் பாராட்டுவார். நானும் அவரின்கவிதைகளை உடனுடன் மிகவும்மெச்சுவேன். அவரின் கட்டுரைகளில் ஒன்றை மட்டும் நான் சுருக்கி இருக்கிறேன். என் ஆங்கிலக் கவிதை ஒன்றில் மட்டும் சில தட்டெழுத்துப் பிழைகளை அவரால் திருத்த முடியவில்லை. இவை எம் தொகுப்புக் கடமைகளை ஆற்றும் போது நாம் எதிர்கொண்ட நிர்ப்பந்தங்கள்@ இன்றுமட்டும் இவை எம்மால் பேசப்படாதவை.
- யாழ்ப்பாணப் பொது நூலகம் சிங்கள வன்முறையாளர்களால் தீவைத்து அழிக்கப்பட்ட நினைவுநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது (01.06.2013) -

நூல்களை எரிப்பதும் நூலகங்களை எரிப்பதும் அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக்கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளாக உலகெங்கினும் உள்ள அரசியல் அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் வரலாறு. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடி அறியப்படாத அந்நாளில் இருந்த நூல் ஒரு பிரதியோ, சில பிரதிகளோ ஏடுகளிலும், களிமண் தகடுகளிலும் எழுதப்பட்டுப் பேணப்பட்டு வந்திருந்தன. அவற்றை அழிப்பதன் மூலம் அதிகார வர்க்கம் அதிலிருந்த கருத்துக்களை குழி தோண்டிப் புதைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கலாம். அன்று மட்டுமல்ல இன்று அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்காலத்திலும் இந்த நடைமுறையைக் கைக்கொள்வதினால் இவர்கள் எதைச்சாதித்து விட்டார்கள்?
1. திராவிடமொழிக் குடும்பத்தில் தொன்மையானது தமிழ். தமிழை விடத் தெலுங்கு மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம். தமிழ் தனித்தன்மை வாய்ந்தது. இம்மொழிக்குரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் அத்தன்மை பெற்று விளங்குகிறது. தெலுங்குமொழி சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைச் சார்ந்தது. தெலுங்கின் முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி (நன்னயப்பட்டு, கி;.பி.11). இந்நூலின் பெரும்பகுதி சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. அதன்பின், பன்னூறாண்டுகள் கழித்து மாணவர்களுக்காக தெலுங்கில் பாலவியாகரணம் (சின்னயசூரி, 1858) இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் பாலவியாகரணத்திலும் எச்சவியல் இடம்பெற்றுள்ளது. அவ்வியல்களின் கருத்தியல்களை ஒப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. [மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ] .....முழுவதும் வாசிக்க
இன்றைய தினம் (11.02.2013) பவள விழா அகவையைத் தொட்டு நிற்கும் கவிஞர் ஏ.இக்பால் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அசைக்க முடியாததொரு ஆளுமை என்பது யாவரும் அறிந்ததே. அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மேல் மாகாணம் தர்கா நகரை புகுந்தகமாகக் கொண்டு அங்கு இற்றைவரை வாழ்ந்து வருகிறார். இலக்கியத்துறையில் தன்னை நிலைநாட்டி ஜாம்பவானாகத் திகழும் அதே நேரத்தில் கல்விப் புலத்தில் அவர் பணி இரண்டாம் பட்சமானதல்ல. அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் படிக்கும்போது அங்கு பயிற்சி ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எம்.வை.எம். முஸ்லிம், அ.ஸ.அப்துஸ்ஸமது ஆகியோரால் இனம் காணப்பட்டு வழி நடத்தப்பட்டார். அங்கு "கலாவள்ளி' என்ற கையெழுத்துச் சஞ்சிகை இவர் பொறுப்பில் நடத்தப்பட்டது. ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர் தமிழ்ப் பாட நூல் ஆலோசனை சபை உறுப்பினராக, இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராக விடுவிப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, கல்விக் கல்லூரி தமிழ்ப் பிரிவு போதனாசிரியராக பல்லாண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

- March 22, 2013 - Chinua Achebe, the internationally celebrated Nigerian author, statesman and dissident who gave literary birth to modern Africa with Things Fall Apart and continued for decades to rewrite and reclaim the history of his native country, has died. He was 82. Achebe died following a brief illness, said his agent, Andrew Wylie. “He was also a beloved husband, father, uncle and grandfather, whose wisdom and courage are an inspiration to all who knew him,” Wylie said. His eminence worldwide was rivaled only by Gabriel Garcia Marquez, Toni Morrison and a handful of others. Achebe was a moral and literary model for countless Africans and a profound influence on such American writers as Morrison, Ha Jin and Junot Diaz. As a Nigerian, Achebe lived through and helped define revolutionary change in his country, from independence to dictatorship to the disastrous war between Nigeria and the breakaway country of Biafra in the late 1960s. He knew both the prestige of serving on government commissions and the fear of being declared an enemy of the state. He spent much of his adult life in the United States, but never stopped calling for democracy in Nigeria or resisting literary honours from a government he refused to accept.
முன்னுரை
தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை. கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி. 1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.
வண்ணதாசனும் இயற்கையும்
சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார். ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழினி பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1

[அறிஞர் அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனை முன்னிட்டு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுன் 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூல் பற்றிய எழுத்தாளர் மேமன்கவியின் இக்கட்டுரை பிரசுரமாகின்றது. இதனைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பிய மேமன்கவிக்கு நன்றி. -பதிவுகள்.] அ.ந.க.என நெருக்கமானவர்களால் அழைக்கப்பட்டவர்.. அவரது மறைவு நிகழ்நது சுமார் 40 வருடங்கள் கடந்து அவரை பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகள் உதிரிகளாக ஆங்காங்கே பிரசுமாகி இருப்பினும், அவர் பற்றிய ஓரு நூல் என்ற வகையில் அந்தனி ஜீவாவின் ‘அ.ந.க ஒரு சகாப்தம்’ முக்கியமான நூலென்றே சொல்லவேண்டும். இன்றைய நமது கலை இலக்கிய சூழலில் முக்கிய தேவை ஒன்று இருக்கிறது. புதிய தலைமுறையைச் சார்ந்த கலை இலக்கிய ஈடுபாட்டாளார்களுக்கு, அவர்கள் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் நவீன கலை இலக்கிய வளர்ச்சிக்கு அஸ்திவாரமிட்டுப் போன முன்னோடிகளைப் பற்றிய அறிதலை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இந்த நூல் அந்த தேவையை நிறை வேற்றுவதில் பங்காற்றி இருக்கிறது. அந்தனியின் இந்த சிறிய நூல் அ.ந.க வை சிறப்பான முறையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஆய்வு செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர். சென்னை பாரதீய வித்தியா பவனில் 29.1.2013 அன்று செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழாவின் சிறப்பம்சமாக இவ்வரவேற்புபசாரம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றான பலனை எதிர்பார்க்காமல் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்ய வேண்டும் என்ற வாக்கைத் தன் வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி வரும் செல்வராஜாவுக்கு இந்நிகழ்வு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். நிகழ்ச்சிக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும். பாரதீய வித்தியா பவன் வாயிலில் நூலகவியலாளரின் புகைப்படத்தைத் தாங்கிய பாரிய வண்ணப் பதாதையொன்று “இலண்டன் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வரவேற்பு விழாவுக்கு வருகைதரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்று வரவேற்றது.
கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது. இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும் சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் போன்று நானும் மகிழ்கிறேன். கரிகாலன் விருது குறித்து என் கருத்தைக் கூற விழைகிறேன். தமிழ்நாட்டிலுள்ள தஞ்சைப் பல்கலைக்கழகம் இவ்விருதினை வழங்குவதில்,எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக விளைந்ததே இந்த விருது. இதற்காகச் சங்கத்தையும் தொலைநோக்காகச் செயல்படும் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களையும் பாராட்டத்தான் வேண்டும்.