ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: "கூர்ப்பு (Evolution)" (அறிவியல் தொடர் - 7)
தீட்டு
எது தீட்டு
அவள் தீட்டா…?
அவன் தீட்டா…?
மூன்றெழுத்தில்
முட்டாளாய்
மாற்றிவிட்டார்களே…!
தீட்டு
வரையறை
இலக்கணம்
வகுத்தீா்களோ…?
இலக்கணம்
வரையறை
வகுத்தவன்
யார் யாரோ…?
திருவிழாக் கூட்டத்தில்
தொலைந்து விடக்கூடாதென்று
இறுகப்பிடித்த - உன்
உள்ளங்கைச் சூடு
இன்னும் உள்ளத்தில்
கணந்துக்கொண்டே
இருக்கிறது....!
மேற்படிப்புக்கு
இது தான் சிறந்த
பாடமென்று – என்
கரம்பற்றி சொன்னபோது
முனிவு கொண்டு
உதறியவனின்
உண்மை வரி(லி)கள்.
முன்னுரை
நாட்டுப்புற மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், வரலாறு, அன்றைய நாட்டு நடப்பு ஆகியவற்றை உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக் காட்டும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியம். மண்ணின் மைந்தர்கள் தம் மனக் கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான உணர்ச்சியின் வெளிப்பாடே நாட்டுப்புற இலக்கியங்கள். இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றால் நாட்டுப்புற இலக்கியம் சமுதாய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியெனில் மிகையாகாது. மனிதன் தோன்றிய போதே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன எனக் கூறுவது சரியானதாகும். அத்தகைய நாட்டுப்புற இலக்கியத்தில் பெண்களை பற்றியக் கருத்தாக்கமும் சிந்தனைகளும் எத்தகைய நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வதே இவ்வாய்வின் நோக்காகும்.
நாட்டுப்புற இலக்கியம்
நாட்டுப்புறங்களில் பல்வேறு நிலைகளில் வாழும் மக்களின் வாழ்வையும், வாழ்வுக் கூறுகளையும் படம் பிடித்துக் காட்டுவது நாட்டுப்புற இலக்கியங்களாகும். இது ஏட்டில் எழுதாத, எழுத்திலே காணமுடியாமல் மக்கள் மனதிலே ஊறிக்கிடக்கும் எத்தனையோ எண்ணங்களையும், நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் படம் பிடித்துக் காட்டுவது நாட்டுப்புற இலக்கியம். அத்தகைய நாட்டு;ப்புற இலக்கியங்களைப் பல வகைமைகளில் பகுத்துக் காணமுடியும் அவையாவன,
1. நாட்டுப்புறப் பாடல்கள் (Folk songs)
2. நாட்டுப்புறக் கதைகள் (Folk tales)
3. நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் (Folk ballads)
4. பழமொழிகள் (Proverbs)
5. விடுகதைகள் (Riddles)
6. புராணங்கள் (Myths) 1
என்ற அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார் டாக்டர் சு. சக்திவேல். இதற்கு அரண் சேர்க்கும் வகையில் பல்வேறு அறிஞர்களும் இவ்வாறேப் பாகுபடுத்தியுள்ளனர் என்பதை அறியலாம்.
“ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம் பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு மேலும் செழித்து வளர்ந்துள்ளது. தம் முன்னோரின் தோளின் மீது நின்றுதான் அடுத்த நாடக தலைமுறை உலகை பார்க்கிறது. தன்னை தாங்கி நிற்பவரின் பார்வைப் புலத்திற்கு தெரியாத பல காட்சிகள் மேலே நிற்பவரின் கண்களுக்கு தெரிய வாய்ப்புண்டு. கீழே தாங்கி நிற்பவர்கள் அனுபவம் மிகுந்தவர். அவர்களின் அனுபவம் என்ற அத்திவாரத்தில்தான் இளைய தலைமுறை நிமிர்ந்து நிற்கிறது. இவ் இருவர்களும் பிரதான மாணவர்களே. இந்த இருவரிடையேயும் வளரும் 'கொண்டு கொடுத்தல்' உறவு இருவரையும் வளர்க்கும் “ இவ்வாறு ஈழத்து தமிழ் அரங்கத்துறையில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வரும் பா. நிரோஷனின் அரங்க ஆளுமைகள் நால்வர் என்ற நேர்காணல் தொகுப்பு நூலுக்கு வாழ்த்துரை கூறியிருக்கும் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் எழுதியிருக்கும் கூத்த யாத்திரை ( நான் கொண்டதும் கொடுத்ததும் ) கூத்தே உன் பன்மை அழகு ஆகிய இரண்டு நூல்களும், மேற்குறித்த அவரது கருத்தை மேலும் வலுச்சேர்க்கும் வகையில் விரிந்த தளத்தில் பேசுகின்றன. கால ஓட்டத்தினூடே மாறிவந்த கூத்து பற்றிய அவரது கருத்தியலையும் செயற்பாடுகளையும் பற்றிப் பேசுகிறது கூத்தே உன் பன்மை அழகு. அவரது இளமைப்பராயம் முதல் அவர் கூத்துக்கலைக்கு அறிமுகமான பின்னணியையும் கூத்து அனுபவங்களையும் வாழ்வில் கண்டு மகிழ்ந்த கூத்துக்கலைஞர்கள் பற்றியும் தனக்கு கூத்தறிவூட்டிய அண்ணாவிமார்கள், ஆசிரியர்கள் பற்றியும் விளக்குகிறது கூத்த யாத்திரை என்ற நூல்.
எம்ஜிஆரைப் பட்டிதொட்டியெங்கும் அறிமுகப்படுத்தி, மக்களின் உள்ளங்களில் அவரைத் தங்கள் வீட்டுப்பிள்ளையாக உணர வைத்த பெருமைக்குரியவை கருத்துகள் நிறைந்த அவரது திரைப்படப் பாடல்களே. ஆரோக்கியமான கருத்துகளை உள்ளடக்கியுள்ள பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கையில் அவற்றில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துகள் ஆழமாகக் கேட்பவர் உள்ளங்களில் சென்று படிந்து விடுகின்றன.வாழ்க்கைச் சூழலால் வாடிக்கிடக்கும் உள்ளங்களில் நம்பிக்கையை, இன்பத்தை, எழுச்சியை வாரி இறைப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பவை இப்படியான ஆரோக்கிய உணர்வுகளைத் தூண்டும் பாடல்களே. எம்ஜிஆரின் திரைப்படங்களில் நான் விரும்பிப் பார்ப்பது கேட்பது எல்லாம் இவ்வகையான பாடல்களையே.
தற்போது இலங்கையில் வெளியாகிக்கொண்டிருக்கும் சிறுவர் இதழ் 'அறிந்திரன்'. 'அறிந்திரன்' சிறுவர் சஞ்சிகையின் ஆறாவது இதழ் நாட்டுச் சூழல் காரணமாகச் சிறிது தாமதமாகத் தற்போது வெளியாகியுள்ளது. இதனை வெண்பா பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம். உலகின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள் அங்குள்ள தமிழ்ப்பாடசாலைகளில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு இச்சஞ்சிகையினை வாங்கி வாசிக்கக் கொடுத்தால் இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக அமையும்.
இலங்கையிலிருந்து 'உதயம்' நிறுவன வெளியீடாக வெளிவந்த சிறுவர் மாத இதழ் 'அர்ச்சுனா'. தமிழகத்தில் வெளியான 'கண்ணன்', சிறுவர் இதழைப்போன்றதொரு சிறுவர் இதழ். அழகான ஓவியங்களுடன், சிறுவர்களுக்குப் பிடித்த துணுக்குகள், கட்டுரைகள், கதைகள் & கவிதைகளெனப் படைப்புகள் நிறைந்து கிடக்கின்றன. போர்ச்சூழலில் நான்கு வருடங்களும் (1986 - 1990), போரின் முடிவுக்குப் பின்னர் ஒரு வருடமும் (2011 - 2012) வெளியாகியுள்ளது. அண்மையில்தான் இச்சிறுவர் இதழை அவதானித்தேன்.
ஜூன் 3 நடிகர் ஜெய்சங்கரின் நினைவு தினம். என் பால்ய பருவத்தில் என்னைக் கவர்ந்திருந்த நடிகர்களில் ஜெய்சங்கரும் ஒருவர். அழகான ,வசீகரம் மிக்க தோற்றத்துடன் விளங்கிய இவர் அக்காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக விளங்கினார். எனக்குத் தெரிந்த அக்கா ஒருவர் பார்த்தால் ஜெய்சங்கரைப்போல் மாப்பிள்ளை பாருங்கள் என்று அடம் பிடித்தது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது. இவரது நல்ல கதையம்சத்துடன் கூடிய திரைப்படங்கள் பல அனைவரையும் கவர்ந்திருந்தன. குழந்தையும் தெய்வமும், பஞ்சவர்ணக்கிளி. பெண்ணே நீ வாழ்க, நூற்றுக்கு நூறு போன்ற திரைப்படங்கள் அனைவரையும் கவர்ந்திருந்தன. இவர் துப்பறிவாளராக நடித்த திரைப்படங்கள் பலவும் மக்களைக் கவர்ந்திருந்தன. அதனால் இவர் தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் எனப் புகழ்பெற்றார். ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் துப்பறியும் தொடர்கதையொன்றினையும் தினமணிக்கதிர் வெளியிட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இலங்கையின் எதிர்ப்பலைகள், ஒன்று, ஜனநாயக ஏற்பாட்டினை நோக்கி அசையக்கூடும் - அல்லது பாசிசத்தை நோக்கி நகர கூடும் என்பது கலாநிதி அகிலன் கதிர்காமரின் கணிப்பானது. (பௌசர் Zoom Meeting)). இருந்தும் இந்தக்கூற்றானது பிரதமர் ரணில் பதவி ஏற்பதன் முன்னர் வெளிவந்தது, என்பதும் குறிக்கத்தக்கது. இவ் எதிர்ப்பலையானது 1971, 1989இன் எழுச்சிகள் போல் தனித்து இயங்காது, ஒரு சமூக தளத்தை அரவணைப்பதாகவும், ஓர் தேசத்தின் கோபத்தை எதிரொலிப்பதாகவும் இருந்தது-இருக்கின்றது. (இவற்றில், வடக்கு மக்கள் எந்தளவில் இணைய முற்பட்டனர் என்பது தனித்து வாதிடப்பட வேண்டிய விடயமேயாகும்). தமிழ் மக்கள் இதில் இணைய வேண்டும் என்று ஒருபுறத்தில் சுமந்திரன், கலாநிதி அகிலன் போன்றோர் அபிப்பிராயப்பட்டாலும், புலம்பெயர் அரசியலின் நிலைப்பாடு என்பது, துருவமயமாக்கலை தொடர்ந்தும் தக்கவைத்தல், என்ற அரசியலை, மையமாக வைத்தே இயங்குவதாய் அமைந்திருந்தது. இது புலம்பெயர் அரசியலுக்கு மாத்திரமல்லாமல் இலங்கையின் ஆதிக்க சக்திகளுக்கும், கூடவே, மேற்கின் நலன்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டும் விடயம்தான் என்பதில் ஐயமில்லை. வடக்கு மக்களை தனிமைபடுத்தும் இந்நிகழ்ச்சி நிரலானது கடந்த காலங்களிலும், (தேர்தல் உட்பட) நடந்தேறியுள்ளது என்பதும் அவற்றுக்கு பல்வேறு வல்லரசுகளின் பின்னணி உண்டு என்பதெல்லாம் பிறிதான விடயங்களே. ஆனால், எதிர்ப்பலைகளானது மேலே கூறப்பட்டது போல, ராணுவமயமாக்கலுக்கும் அடித்தளம் அமைக்க கூடும் என்பதும், அதற்கான சமிஞ்சைகள் மிக தெளிவான முறையில் இலங்கை அரசியலில் ஏற்கனவே வெளிவரத் தொடங்கி இருந்தன என்பதும் முக்கியமான விடயங்களாகும்.
அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியம் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவை அதிகரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 34 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம், இவ்வாண்டு முதல், உதவியைப் பெற்றுவரும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவை அதிகரித்துள்ளது. இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், போர் முடிவுற்ற பின்னர் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களையும் தெரிவுசெய்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தகுந்தது.
அவுஸ்திரேலியாவில் வதியும் மனிதநேயம் மிக்க அன்பர்களின் ஆதரவினால் இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், இலங்கையில் யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் ( Centre for Child Development ) வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு ( Voluntary Organization For Vulnerable Community Development – VOVCOD) மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation Community Development Organization) மற்றும் கம்பகா மாவட்டத்தில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ஆகியனவற்றின் ஊடாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகின்றது. இந்த உதவியின் மூலம் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, கம்பகா, மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.
உண்மையிலேயே இந்தியப்பாடகர் என்று கூறத்தக்க வகையில் இந்தியாவின் பன் மொழிகளில் பாடிப் புகழ்பெற்றவர் பாடகர் கே.கே (கிருஷ்ணகுமார் குன்னுத்). கேரளாவைப் பூர்விகமாகக்கொண்ட குடும்பம் இவருடையது, ஆனால் இவர் பிறந்தது புது தில்லியில்.
ஆரம்பத்தில் கே.கே என்னும் ஈர் எழுத்துகள் மூலம் என் கவனத்தை ஈர்த்த பாடகராக விளங்கியவர். நீண்ட நாட்கள் அவ்வெழுத்துகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெயர்களையோ அல்லது அவரது உருவத்தையோ நான் அறிந்திருக்கவில்லை.
ஜுன் 1 இலங்கை வரலாற்றில், குறிப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றில் கறை படிந்த நாள். ஆம்! யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டது யூன் 1 , 1981 இரவுதான். எரியுண்ட நூலகத்தில் அரிய ஆய்வு ஆவணங்கள், சுவடிகள், நூல்கள் பலவும் எரியுண்டு போயின. நூலக எரிப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி தமிழ் அறிஞர் தாவீது அடிகளின் உயிரையும் பறித்துச் சென்றது.
ஜீவாவிற்கு அம்மாவையும் , அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது . மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது . ஆனால் , கிராமத்தைப் போல வருமா ? . பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும் , செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது . சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள் . அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது . இங்கே இல்லை . என்ன தான் பிரச்சனை மனிதர்களிற்கு ? , வடக்கு , கிழக்கில் பொலிஸ் தெரிவையும் ஆள்றதையும் அவர்கள் கையிலேயே கொடுத்து விட்டால்.....அரைவாசி பிரச்சனையே மாயமாகி மறைந்து விடுமே ! . இங்கேயும் மகிழ்ச்சியற்று வாழ வேண்டிய அவசியமும் இல்லையே . அங்கே , போரிற்குப் பின்னரான படை அமைப்புகளையே கலைத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் கிடக்கிறது . செய்வார்கள் எனப் படவில்லை . குற்றவாளிகளைக் கொண்டே ஆண்டு கொண்டு இருக்கப் போறார்கள் . இன்று , பஞ்சம் , பசி என்றால் அனைவருக்குமே தெரிகிறது . மனிதர்களை மனிதர் நம்புறதால் , நம்பினால் தான் சிறந்த வாழ்வு கிடைக்கும் . அல்லா விட்டால் , வட்டிக்கு வாங்கிற கடன்களே ஏறிக் கொண்டே இருக்கப் போகிறது . பொலிஸ் , பயங்கரவாதி என்றே பார்க்கிற பார்வையால் ஒரு நிமிசம் கூட நிம்மதியாக வாழ முடியாத குழப்பம் நிலவினால் எப்படி தமிழரும் விவசாயம் செய்து அவர்களுக்கு உத முடியும் ? விவசாயத்தையும் , பொருளாதாரத்தையும் வளர விடாது ....படையினர் குதறிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் .
இங்கே மாமர நிழல் இல்லை ,கீச்சூ ,கீச்சூ என்ற பறவைச் சத்தமில்லை , சுத்தமான நீர்,காற்று...சுகம் காண முடிகிறதா ? என்ன . ஒரு ஏலியன் குடியிருப்புக்குள் வந்து இருப்பது போல இருக்கப் போறார்கள் .நகரத்தின் புறப்பகுதியில் கொண்டோவில் இருக்கிறான் . பல்கணியை அடைக்கலாம் என்ற அனுமதி இருப்பதால் கண்ணாடியால் அடைத்து விட்டிருக்கிறான் . அதிலே திரைச்சீலையை இழுத்து விட்டு ஆசையுடன் இரவில் வானத்தையும் சாலையையும் பார்த்துக் பார்த்துக் கொண்டு நிற்பான் . விண்மீன்களைத் தான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை . அப்பாவிற்கு அதிலே சீலைக்கதிரையைப் போட்டு இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார் . " அது என்னப்பா சீலைக் கதிரை ? " என்று அவனுடைய வால் ஆறுமுகம் கேட்கிற போது " அது ஈசி செயார் " என்றான் . ஐஞ்சு வயசாகிற அவனுக்கு விளங்க மாட்டாதே ...எனத் தோன்ற கையில் வைத்திருந்த அப்பிள் பலகையில் எடுத்துக் காட்டினான் . " ஒரு பாடியோ கதிரை ". ஒன்லைனில் வாங்கலாம் தான் .உடைந்து விழுகிற அதற்கு விலை அதிகமாகவே போட்டிருந்தது . தமிழ்க்கடைகளில் குறைவாக இருக்கலாம் . கிராமத்தில் எல்லார் வீட்டிலேயும் இருக்கிறது .
மே 25 டி.எம்.எஸ் நினைவு தினம்!
எங்கள் தலைமுறையைப் பொறுத்தவரையில் நாம் இவருடன் கூடப் பயணித்தவர்கள். எம் உடல் வளர்ச்சியில், உள வளர்ச்சியில் இவர் எம்முடன் கூடப் பயணித்தார். காதல், வீரம், இன்பம், துயரம் என்று எம்மைத் தாக்கிய பல்வகை மானுட உணர்வுகளுக்கும் வடிகாலாக இருந்தவர். இன்று வரை இருக்கின்றார். இருந்தபோதும் இருந்தார். இல்லாதபோதும் இருக்கின்றார். மே 25 இவரது நினைவு தினம். நினைவு கூரச் சிறிது தாமதமாகி விட்டது. அதனாலென்னஓவ்வொருநாளும்தான் இவரை ஏதோ ஒருவகையில் நினைவு கூர்கின்றோமே. டி.எம்.எஸ் என்னும் மூன்றெழுத்தில் எம் மூச்சிருக்கும்.
- எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பிறந்ததினம் மே 25. முகநூல் மூலம் நான் தொடர்பு கொண்ட எழுத்தாளர்களில் மூத்த எழுத்தாளர்கள் பலரடங்குவர். அவர்களில் முகநூலில் என்னுடன் அதிகம் உரையாடியவர்களில் நந்தினி சேவியரும் முக்கியமானவர். தானிருந்தவரை தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளில் நிலைகுலையாதவராக, உறுதியுடன் நின்ற ஒருவராகவே அவரை நினைவில் வைத்திருக்கின்றேன். எழுத்துகளால் தான் வாழ்ந்த உலகின் அவலங்களைச் சாடியவர். அத்துடன் சமூக, அரசியற் செயற்பாட்டாளாராகவும் விளங்கியவர். - வ.ந.கி -
1.
“பாற்றா . பாற்றா. கிடக்காடா.கிடக்காடா. பாற்றா. பாற்றா” கைவிரலைச் சுண்டி வாயைக் குவித்து "உய்’ எனச் சீழ்க்கை ஒலி எழுப்பி கையிலிருக்கும் கூர்க்கொட்டனால் பற்றைகளையும் காவோலைகளையும் தட்டி, நாய்க்கு உற்சாகம் கொடுக்கிறார் தம்பர். நாயும் நெருங்கிய. அடர்ந்த.பற்றைக்குள் எல்லாம் அனாயசமாக வளைந்து, நெளிந்து, ஊர்ந்து, பதுங்கி மோப்பம் பிடிக்கின்றது. “வெள்ளையா. உதுக்குள்ளான் கிடக்கு . விட்டி டாதை.எழுப்படா. எழுப்படா..." மீண்டும் மீண்டும் உற்சாகமூட்டுகிறார் தம்பர். நாய் சுறுசுறுப்பாக இயங்குகிறது. தம்பர் ஒரு நிலையில் இல்லை. அவர் வேட்டை யிலேயே லயித்து . "கிடக்கடா . கிடக்கடா .. விட்டி டாதை.விட்டிடாதை.எழுப்பு.எழுப்பு." தம்பரின் உற்சாக ஒலயினால் அந்தப் பற்றைப் பிராந்தியம் அமைதியை இழந்து அல்லோலப்படுகிறது. வெள்ளையன் எதையோ மோப்பம் பிடித்துவிட்டது. தம்பர் உசாராகிறார்.
“வெள்ளையா.அதுதான் ரா.இடைஞ்சலாய்க் கிடத் தால் மற்றப் பக்கமாய் வந்து, சுத்திவளை. மற்றப்பக்க மாய் வா.”
நாயைவிடத் தம்பரின் உற்சாகம் கூடிவிட்டது. அவர் சுற்றிச் சுழலுகிறார்.
வெள்ளையன் பற்றைகளை இடறி எறிவதும், வெளியில் வந்து பற்றையைச் சுற்றிச் சுற்றி ஒடுவதும். மீண்டும் பற்றைக்குள் புகுந்து இடறி இடறிக் கால்களால் மண்ணைத் தோண்டி ன்றிவதும்.தோண்டிய இடத்தில் முகத்தை வைத்துமுகர்வதுமாய் போராடுகிறது.
“வெள்ளையா.விலகு நான் பார்க்கிறேன்.என்ன புத்துக்கை விழுந்திட்டுதே. கொஞ்சம் விலகு வெள்ளையா!”
விலகவே மனமில்லாது நிற்கும் நாயைப் பலாத்கார மாக விலக்கிவிட்டுத் தமது கையிலுள்ள கத்தியினால் பற்றைகளை வெட்டி வழிசெய்து கொண்டு புற்றை நெருங்குகிறார் தம்பர்.
“இது என்னடாப்பா.இடைஞ்சலாய்க் கிடக்குது. மம்ப்ெட்டியாலை கூட வெட்டேலா போல கிடக்கு. வெள்ளையா. தம்பி.வாடா. வந்து விட்டு வீசாடியா நிண்டு பார்.என்னாலை வெட்டேலா.புத்துக்கை இடக்குது போல. வந்து பாரடி ராசா."
இயலாத நிலைமையை உருக்கமான வார்த்தைகளால் வெள்ளையனுக்குக் கூறி உசார்படுத்துகிறார் தம்பர்.
[சித்திரை மாத 'ஜீவநதி' சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரை 'பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்! ' . வாசிக்க ஜீவநதி சஞ்சிகையினை வாங்கி வாசியுங்கள். ஜீவநதி சஞ்சிகையுடன் jeevanthy@yahoo.com என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.]
தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிப் பெண் விடுதலையைப்பற்றிப் பாடி, எழுதி அதனைத் தீவிரமாக வலியுறுத்தியவர் பாரதியார். பால்ய விவாகம், விதவைகள் மறுமணம், பெண் கல்வி, பெண் வேலைவாய்ப்பு என்று பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவை அவரது எழுத்துகள். பாரதியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் ஆய்வாளர்கள் சிலர் பாரதியார் ஐரோப்பியப் பெண்களை விடுதலை பெற்ற பெண்களாகக் கருதியதாகவும் அதன் மூலம் அவரால் பால் கவர்ச்சியையே விற்பனைப் பண்டமாகப் பயன்படுத்தும் முதலாளித்துவத்தை அறிய முடியவில்லையென்றும் கருதுகின்றார்கள். இது மிகவும் தவறான கூற்று. உண்மையில் பாரதியார் அப்படித்தான் கருதியிருந்தார? அவரது 'மாதர்' தொகுதியிலுள்ள 'நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்' என்ற கட்டுரை பின்வருமாறு கூறுகின்றது:
"ஆண்,பெண் இருபாலாரும் பரிபூர்ண சமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இரு பாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம்" என மேற்படி கட்டுரையில் ஓரிடத்தில் ஐரோப்பிய நாகரீகத்தின் சமவுரிமை பற்றிய நோக்கு பற்றிக் குறிப்பிடும் பாரதியார் மேற்படி கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்.
நான் எழுத்தாளர்களின் நூல்களுக்கு எழுதிய ஏழு அணிந்துரைகளை உள்ளடக்கிய மின்னூல் 'வ.ந.கிரிதரனின் அணிந்துரைகள்' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற்பதிப்பாக வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள்.
'பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?'
நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா மூலமே. இருவருக்கும் குமாரி கமலாவின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எப்பொழுதும் அவரின் நடனத்திறமையினைச் சிலாகித்து உரையாடுவார்கள். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே.லக்சுமணனை முதலில் திருமணம் செய்த விடயத்தையும், ஆர்.கே.எல் அவர்கள் அப்பாவுக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் சகோதரர் என்னும் விடயத்தையும் அப்பா மூலமே முதன் முதலில் அறிந்தேன். அப்பாவிடம் ஆர்.கே.என்னின் ஆங்கில நாவல்களின் சேகரிப்பிருந்தது. கூடவே ஆர்.கே.என்னை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கிறகாம் கிறீனின் நாவற் சேகரிப்புமிருந்தது.
'நாம் இருவர்' திரைப்படத்தில் குமாரி கமலா பாரதியாரின் இந்திய சுதந்திர வேட்கைப்'பாடல்களுக்குச் சிறப்பாக ஆடியதையும் அவர்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். அவற்றிலொன்றான 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் பாடலையும் அம்மா பாடிக்காண்பித்திருக்கின்றார்.
நான் பார்த்த குமாரி கமலாவின் முதற் திரைப்படம் 'பாவை விளக்கு'. றீகலில் பழைய தமிழ்ப் படமாக எழுபதுகளில் வெளியானபோது , இரவு இரண்டாம் காட்சியாகப் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு முன்னரே அகிலனின் 'பாவை விளக்கு'நாவலை வாசித்திருந்ததால் நீண்ட நேரமாக ஓடிய அப்படத்தை விருப்புடன் பார்த்து இரசித்தேன். நாவலில் வரும் செங்கமலம் பாத்திரமாகத் திரையில் வருவார் குமாரி கமலா. அவருக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம்.
எழுத்தாளர் – ஊடகவியலாளர் – தமிழ்த்தேசிய பற்றாளர் சண்முகம் சபேசன் அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்து நாளை மே 29 ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றது. அதனை முன்னிட்டு, நாளைய தினம் மெய்நிகரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியா, கன்பரா தமிழ் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த மெய்நிகர் அரங்கில் மூத்த ஊடகவியலாளர் திரு. இரா. சத்தியநாதன் ஏட்டுச்சுவடி முதல் எண்ணிம ஊடகங்கள் வரையில் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.
சண்முகம் சபேசன் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான சபேசன், அவுஸ்திரேலியா மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய தமிழ்த் தேசிய பற்றாளர். 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார். அவ்வாறு எழுதி ஒலிபரப்பிய ஆக்கங்கள் நூற்றுக்கணக்கானவை. அவுஸ்திரேலியாவில் 1989 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்தவர். அற்பாயுளில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மெல்பனிலேயே மறைந்துவிட்டார்.
- * அழைப்பிதழைத் தெளிவாகப் பார்ப்பதற்கு கீழுள்ள படத்தை ஒருமுறை அழுத்தவும். -
தகவல்: ராஜமாணிக்கம் மாணிக்கம் - rajamanickam29583@gmail.com