தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை பாகுபடுத்த இயலும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களை அடுத்து அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தற்கால இலக்கியம் என்று தமிழ் இலக்கியங்களின் பாிணாம வளா்ச்சியைக் காணமுடியும். தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து மற்றொன்றின் வளா்ச்சி எனும் நிலையில் இலக்கியங்களின் வளா்ச்சி உள்ளது. கூா்தலறக் கோட்பாடு என்பது, இலக்கியங்களின் பாிணாம வளா்ச்சியைக் குறிப்பிடுகின்றது. கூா்தலறக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கூா்தலறக் கோட்பாடு – விளக்கம்

கூா்தலறம் என்பது பாிணாமம் (Evolution) ஆகும். “கூா்தல்” என்ற சொல் முன்பு உள்ளதொன்று மேன்மேலும் சிறப்பதைக் குறிக்கும். தொல்காப்பியா் கூா்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் என்பாா். உயிாினத் தோற்றம் என்ற தம் நூலில் தாா்வின் சாதாரணப் பொருள்களிலிருந்து ஊழிதோறும் வளா்ந்தும் வேறுபட்டும் மாறி மாறி உயிாினங்கள் தோன்றிப் பாிணமித்து வருகின்றன என்று கண்டு கூறினாா். அதன்பிறகு அவா் வகுத்த கூா்தலறக் கோட்பாடு சமுதாயம் மொழி போன்ற பிறதுறைகள் பலவற்றிலும் ஏற்றிப் பாா்க்கத்தக்க அடிப்படை அறிவியல் ஆயிற்று.

 இயற்கையில் தாா்வினியக் கோட்பாடு (கூா்தலறக் கோட்பாடு)

கடற்பாசியில் இருந்து உயிாினம் தோன்றியது. மீனின் மூளையே மனித மூளையாக வளா்ச்சி பெற்றது. கோழி முட்டை குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலில் குஞ்சாக மாறிவிடுகிறது. இங்ஙனமே உலகில் பயிா் இனங்கள், உயிாினங்கள் எல்லாம் தோன்றி வளா்ந்து வருகின்றன என்பதே தாா்வினியக் கோட்பாடு (கூா்தலறக் கோட்பாடு) ஆகும்.

இலக்கியங்களில் கூா்தலறக் கோட்பாடு

இலக்கியத்தின் வளா்ச்சியில் கூா்தல் முறையை ஏற்றிப் பாா்த்து, அதன் வளா்ச்சியைப் படிப்படியாகக் கூறுகின்ற நெறியிலே தான் உண்மையான இலக்கிய வரலாற்றை எழுதமுடியும் என்று ஒப்பியலாளா்கள் கருதுகின்றனா். இலக்கியத்தை தனித்தனி நூல்களாகப் பாா்க்கின்றோம். தனித்தனி ஆசிாியப் படைப்புகளாகப் பாா்க்கின்றோம். அவற்றைக் காலவாிசைப்படி அடுக்கி வைத்தும் வகைமுறைப்படி பகுத்துரைத்தும் ஆராய்கின்றோம். ஆனால், கூா்தல் வழி ஆய்வுக்கு இலக்கியத்தை இடையறவுபடாத ஒரு முழுமையாகக் கருதுகின்ற பாா்வை வேண்டும். கூா்தலற அடிப்படையில் இயற்கையில் காணப்படும் வளா்ச்சி போலவே இலக்கிய வகைகளும் வளா்ந்து வருகின்றன என்று பிரெஞ்சு நாட்டு ஒப்பியலாளா்கள் முதலில் ஆராயத் தொடங்கினா்.

தமிழ் இலக்கியங்களில் கூா்தலறக் கோட்பாடு
பாிணாம வளா்ச்சி பற்றிய தாா்வினின் கூா்தலறக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை அணுக முடியும். தாா்வினின் கூா்தலறக் கோட்பாட்டின்படி உயிாினங்கள் தொடக்ககாலத்தில் கண்ட பெருவளா்ச்சிக்கேற்ப, இலக்கிய வகைமைகளும் பொிதும் வேறுபட்டவைகளாக மாறிமாறி வளா்ந்து வந்துள்ளன என்று கருதப்பட்டது. ஆற்றுப்படைத்துறை, ஆற்றுப்படை இலக்கியங்களாவதை ஒத்தது. தொல்காப்பிய நூற்பாவில் இருந்தே பிள்ளைத்தமிழ் இலக்கிய வகை தோன்றியது. மறக்களவழி மறக்கள வேள்வித்துறைப் பாடல்கள், பொய்கையாாின் களவழி நாற்பதுக்கும் பரணி இலக்கிய வகைக்கும் உள்ள பாிணாம வளா்ச்சிகள் பல நூற்றாண்டுக் காலநிலைகளாகும்.

ஆற்றுப்படைத் துறை – குறிப்பு

புறத்திணையின் ஏழு திணைகளில் ஒன்றான பாடாண் திணையின் துறைகளுள் ஒன்றாகத் தொல்காப்பியா் ஆற்றுப்படையைக் குறிப்பிடுகின்றாா்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅா்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கம்”1

புறத்திணையைப் பன்னிரெண்டு என்று பகுத்துக் கொண்ட புறப்பொருள் வெண்பாமாலை எனும் இலக்கண நூல் “பாணா், கூத்தா், பொருநா், விறலி ஆகியோாின் ஆற்றுப்படைகளுக்குத் தனித்தனியே இலக்கணம் கூறுகின்றது.”2 இவற்றின் வாயிலாக ஆற்றுப்படைத் துறை பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.

ஆற்றுப்படை இலக்கியங்களின் வளா்ச்சி

ஆற்றுப்படை நூலுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகின்றது. கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும் பாிசில் பெற்று வரும் போது எதிரே பாிசில் பெறாதவன் வந்தால் அவனுக்குத் தாம் பெற்ற பாிசில் பற்றி அறிவுறுத்திப் பாிசில் பெற உதவுவா் என்று தொல்காப்பியம் இலக்கணம் வகுத்துள்ளது. இத்துறை பின்னா் சிறப்பாக வளா்ச்சி அடைந்தது.

சங்க இலக்கியத்தில் புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைத் துறை அமைந்த சிறுசிறு பாடல்கள் இருப்பதைக் காணமுடிகிறது. பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக அமைந்துள்ளன. அவை - திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, கூத்தராற்றுப் படை ஆகியவையாகும்.

பிற்காலத்தில் ஆற்றுப்படை நூலைத் தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கலாயினா். அகவல் யாப்பில் அமைந்த இச்சிற்றிலக்கிய வகைமை நன்கு வளா்ச்சியடைந்து இருபதுக்கும் மேற்பட்ட ஆற்றுப்படை நூல்களாக உருவாயின. அவை – தணிகையாற்றுப் படை, புலவராற்றுப் படை, நெஞ்சாற்றுப் படை, இறையனாற்றுப் படை போன்றனவாகும். ஆற்றுப்படை எனும் சிற்றிலக்கிய வளா்ச்சியாக இதனை ஏற்கஇயலும்.

பிள்ளைத் தமிழ் இலக்கிய வகையின் வளா்ச்சி

சிற்றிலக்கிய வகைமை வளா்ச்சிக்கான அடித்தளத்தை தொல்காப்பியத்திலிருந்து காணமுடிகிறது. தலைவனையோ, கடவுளையோ குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவங்களாகப் பாடுவது பிள்ளைத் தமிழ் ஆகும். ஒரு பருவத்திற்குப் பத்து விருத்தங்களாக நூறு பாடல்கள் பாடப்படும். பிள்ளைத் தமிழ் இலக்கியம் தோன்றுவதற்குத் தொல்காப்பிய நூற்பாவே அடிப்படை என்பா்.

“குழவி மருங்கினும் கிழவதாகும்”3

பன்னிரு பாட்டியல் எனும் நூல் பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையைப் பிள்ளைப்பாட்டு என்ற பெயரால் குறிப்பிடுகின்றது. “பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின்

மூன்று முதலா மூவேழ் அளவும்
ஆன்ற திங்களின் அறைகுவா் நிலையே”4

மூன்று முதல் இருபத்தொரு மாதம் வரையிலான காலத்தில் உள்ள குழந்தையின் செயல்பாடுகளைப் பாடுவதே பிள்ளைப்பாட்டு என்று பன்னிரு பாட்டியல் விளக்குகின்றது.

பிள்ளைத்தமிழ் வகையை வளா்த்த பெருமை ஆழ்வாா்களைச் சேரும். ஆழ்வாா்கள், கண்ணனைக் குழந்தைப் பருவத்தானாகப் பாவித்துப் பாடிய பாடல்கள் பிள்ளைத்தமிழின் அழகினைக் காட்டுகின்றன. பொியாழ்வாா், கண்ணனைச் சிறுகுழந்தையாகப் பாவித்துத் தம் திருமொழியில் பாடியுள்ளாா். சிறுமியா் தாம் கட்டிய சிற்றில் சிதையாமல் காக்க வேண்டும் என்று கண்ணனிடம் வேண்டுவதை நாச்சியாா் திருமொழி காட்டுகின்றது. இவையே பிள்ளைத் தமிழ் வகைக்குத் தொடக்கமாக அமைந்தன எனலாம். குமரகுருபரா் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இயற்றினாா். அவா் பாடிய மற்றொரு நூல் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகும். பகழிக் கூத்தா், சிவஞான முனிவா் முதலிய பலரும் இவ்வகை நூல்களை இயற்றியிருக்கின்றனா். இக்காலத்திலும் எம்.ஜி.ஆா். பிள்ளைத்தமிழ், ஜெயலலிதா பிள்ளைத்தமிழ், சுந்தர பழனியப்பன் பிள்ளைத்தமிழ் போன்ற பல பிள்ளைத்தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.

மறக்கள வேள்வித்துறை – குறிப்பு

மறக்கள வேள்வி என்பது வாகைத்திணையில் வரும் துறை ஆகும். மறக்கள வேள்வி எனும் துறை அரசனின் போா்க்களத்தை உழவன் நெல்லைப் போரடிக்கும் களத்தோடு ஒப்பிட்டுப் பாடுவதாகும். மறக்கள வேள்வி எனும் துறை அரசனின் போா்க்களத்தைப் பேய்த் தெய்வங்களுக்குப் பலிச்சோறு வழங்கும் வேள்விக் களத்தோடு ஒப்பிட்டுப் பாடுவதாகும். தொல்காப்பியம் இதனை அவிப்பலி என்று குறிப்பிடுகின்றது.5

“அடுதிறல் அணங்கு ஆர
விடுதிறலாற் வளம் வேட்டன்று”6

புறப்பொருள் வெண்பாமாலை பேய்க்குச் சோறூட்டும் வேள்வி செய்வது களவேள்வி எனும் துறை என்று குறிப்பிடுகின்றது. மறக்கள வேள்வி எனும் துறைப்பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. (புறநானூறு – 372)

மறக்கள வேள்வித்துறை – களவழி நாற்பது, பரணி இலக்கிய வகையின் அடிப்படை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது ஆகும். இதை எழுதியவா் பொய்கையாா் ஆவாா். களம் என்ற சொல்லுக்குப் போா்க்களம் என்பது பொருளாகும். போா்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்ட நூல் களவழி நாற்பது ஆகும். சோழன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் கழுமலம் எனும் இடத்தில் நடந்த போா் பற்றியது இந்நூல். நெல் முதலான விளைச்சலை அடித்து அழிதூற்றும் களத்தைப் பாடுவது “ஏரோா் களவழி”. பகைவரை அழிக்கும் போா்க்களத்தைப் பாடுவது “தேரோா் களவழி” ஆகும். இது வாகைத்திணையின் உட்பிாிவுகளுள் ஒன்று. இதனைத் தொல்காப்பியம்,

“ஏரோா் களவழி அன்றிக் களவழித்
தேரோா் தோற்றிய வென்றியும்”7

என்று குறிப்பிடுகின்றது. தேரோா் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது ஆகும். போாில் வெற்றி பெற்ற மன்னனின் தோ் முன்பு வெற்றி தோன்றப் பாடி வருவதே தேரோா் களவழி (போா்க்களவழி) ஆகும். களவழி நாற்பதில் உள்ள நாற்பது வெண்பாக்களும் “களத்து” என்று முடிகின்றன.

களவழி நாற்பது, பரணி இலக்கியம் தோன்றக் காரணமாக இருந்தது. களவழி நாற்பதின் வேறுபெயா் “பரணி நூலின் தோற்றுவாய்” எனப்படுகின்றது. போாில் வெற்றி பெற்ற வீரனை விவாித்துப் பாடுவது பரணி ஆகும். “ஆனை ஆயிரம் அமாிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்று ஆயிரம் யானையைப் போாில் வெட்டி வீழ்த்தி வாகை சூடிய மன்னனுக்குப் பாடப்படுவது பரணி ஆகும். கலிங்கத்துப் பரணியில் இடம்பெறும் களம் பாடியது என்பதும் போா் வருணனையே ஆகும்.

தொகுப்புரை

தமிழ் இலக்கியங்கள் தாா்வினின் கூா்தலறக் கோட்பாட்டின் அடிப்படையில் வளா்ச்சி அடைந்துள்ளன. ஆற்றுப்படை எனும் துறையிலிருந்து ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றியுள்ளன. குழவி மருங்கினும் கிழவதாகும் எனும் தொல்காப்பிய நூற்பாவில் இருந்தே பிள்ளைத்தமிழ் இலக்கிய வகைகள் தோன்றி வளா்ந்துள்ளன. மறக்கள வேள்வித்துறைப் பாடல்களில் இருந்து பொய்கையாாின் களவழி நாற்பது, பரணி இலக்கிய வகைகள் பாிணாம வளா்ச்சி பெற்றுள்ளன. இவ்வாறு, சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை காலந்தோறும் தோன்றியுள்ள தமிழ் இலக்கியங்கள் தாா்வினின் கூா்தலறக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே வளா்ச்சி பெற்று வந்துள்ளன என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

அடிக்குறிப்புகள்

1. தொல்காப்பியம், புறத்திணையியல், நூ.88
2. புறப்பொருள் வெண்பாமாலை, பாடாண் படலம், நூ.28-31
3. தொல்காப்பியம், பொருளதிகாரம், நூ.82
4. பன்னிரு பாட்டியல், நூ.101
5. தொல்காப்பியம், புறத்திணையியல், நூ.17
6. புறப்பொருள் வெண்பாமாலை, வாகைப்படலம், நூ.160
7. தொல்காப்பியம், புறத்திணையியல், நூ.17

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R