மேலைத்தேசத்தவர்களுக்கு இந்துப்பண்பாடு குறித்த கரிசனையும், அது குறித்த அருட்டுணர்வும் தற்செயலாய் நிகழ்ந்ததொன்றல்ல. மூன்று நூற்றாண்டுகளாய் (கி.பி.17-19) தொடர்ந்த பல்வேறு அரசியல் பொருளாதார சமூக நிகழ்ச்சிநிரல்களின் விளைவாக அவர்களே நினையாப்பிரகாரமாய் நிகழ்ந்த ஒரு பக்கவிளைவாகவே இதனைக் கருத வேண்டும்.

குடியேற்றவாதம், வர்த்தகம், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புதல் என்ற மூன்று அடிப்படைக்காரணிகள் இந்தியாவிற்குள் மேலைத்தேசத்தவர்களின் வருகைக்கு ஏதுவாயின. அந்தவகையில் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவ மிசனரிகள் தமது சமயத்தை இந்துக்கள் மத்தியில் பரப்புவதற்காக இந்துப்பண்பாட்டை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதே போன்றே 'இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்", 'ஆரியவாதம்" போன்ற எண்ணக்கருக்களால் உந்தப்பட்ட ஐரோப்பியப் புத்திஜீவிகள் பலர் குறிப்பாக ஜேர்மன் நாட்டவர்கள் வைதிக இலக்கியங்களையும், சம்ஸ்கிருத மொழியையும் ஆழமாக அறிந்து ஆய்வு செய்வதற்கு உந்தப்பட்டனர். இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தத்தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதற்காகவே இந்துப்பண்பாடு பற்றிய கற்கைகளில் மேலைத்தேயத்தவர்கள் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் அவர்களே நினையாப்பிரகாரமாய் இந்துப்பனுவல்களைக் கற்கக் கற்க இந்துப்பண்பாட்டின் மீதும் சம்ஸ்கிருத மொழிமீதும் அவர்களுக்கு ஈர்ப்பு உண்டாயிற்று. இதனால் சுவடிகளைச் சேகரித்துப் பதிப்பித்தல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் உரைவிளக்கம் எழுதுதல், ஆய்வுநூல்கள், கட்டுரைகள் வெளியிடுதல், ஆய்வுச் சஞ்சிகைகளை வெளியிடுதல், ஆய்வுநிறுவனங்களை ஸ்தாபித்தல் ஆகிய இன்னோரன்ன முயற்சிகளில் மேலைத்தேச அறிஞர்கள் முனைப்போடு செயற்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகளில் இந்துப்பண்பாட்டுக் கற்கைகளில் ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் பற்றி பின்வருமாரு நோக்குவோம்.

இந்துக் கற்கைகள் தொடர்பிலான ஆய்வுகளிலும், மொழிபெயர்ப்பு மற்றும் அச்சுருவாக்கச் செயற்பாடுகளிலும் ஜேர்மனிய அறிஞர்களினதும், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களினதும் வகிபங்கு மிகவும் காத்திரமானதாகும். குறிப்பாக வேதங்கள் பற்றிய ஆய்வுகளில் உலக அரங்கில் ஜேர்மனியரின் வகிபங்கை எவரும் விஞ்சுவதற்கில்லை.

'பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அனேக ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களின் பிரதான நோக்கம் கீழைத்தேயக் காலனிகளிலிருந்து பொருட்செல்வத்தைச் சுரண்டுவதாக இருந்தது. ஆனால் ஜேர்மனியரோ அறிவுத் தொழிற்சாலைகளாக இயங்கிய தமது நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆய்வு வேட்கைக்கான விலைமதிப்பற்ற இந்தியவியல் ஆய்வுத் தேட்டங்களை இந்தியாவில் பாய்கின்ற நதிகளின் கழிமுகங்களிலிருந்து பெற விழைந்தனர்" என்ற ஜேர்மனியக் கவிஞரான ஹென்றிச் ஹெய்ம் (Heinrich Heime) என்பவரின் கூற்று இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

ஜேர்மனி வேத இலக்கியங்கள் தொடர்பிலான ஆய்வுகளில் வடமொழியின் இரண்டாவது தாயகமாகவே அமைந்திருந்ததெனலாம். குறிப்பாக உலகப்போருக்கு முன்னதாக ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களில் பதினான்கு முழுமையான வடமொழிப் பீடங்கள் இருந்துள்ளன. உலகயுத்தங்களின் பின்னரும் அங்கு பத்துக்கும் குறையாத பேராசிரியர் பதவிகளும் இரண்டாம், மூன்றாம் தரங்களிலான சில வடமொழிக் கற்கைத் துறைகளும் உள்ளன. இதனாலேயே இன்றும் முழு ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் ஜேர்மனியின் 'டீழணண" நகரமானது இந்தியாவின் காசியாகவே மேலைத்தேய இந்தியவியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது. இந்துப்பண்பாட்டுக் கற்கைகள் பற்றிய ஆய்வுகளில் ஜேர்மனியப் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் பங்கு அளப்பரியதாகும். கீல் பல்கலைக்கழகம், ஹம்பர்க் (Hamburg)பல்கலைக்கழகம், பேர்ளின் பல்கலைக்கழகம், லெய்ப்ஸிக் (Leipzig) பல்கலைக்கழகம், கொற்றிங்ரன் (Gottingen) பல்கலைக்கழகம், தியுமிங்கன் (Tubingen) பல்கலைக்கழகம், மியூனிச் (Munich) பல்கலைக்கழகம், பொன் (Bonn) பல்கலைக்கழகம் ஆகியவை மேற்குறித்த ஆய்வுகளுக்கான பேராசிரியர்களையும், வளவாளர்களையும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதிகம் தந்திருந்தன.

1808இல் அட்கஸ்டோ ஸ்கேல் (யுரபரளவழ ளுஉhடநபநட) என்ற அறிஞர் இந்தியாவின் ஞானமரபு மற்றும் அதன் மொழி தொடர்பில் 'இந்தியர்களின் மொழி மற்றும் அறிவு பற்றி" (டுiடிநசனநைளிசயஉhந யனெ றுநiளாஉவை னநச ஐனெநச) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவரே 1832இல் பொன் (டீழnn) பல்கலைக்கழகத்தின் முதலாவது சம்ஸ்கிருதப் பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றார்.

பிரீட்ரிக் அகஸ்ட் ரோசன் (Friedrich August Rosen)

இருக்குவேத சம்ஹிதையின் முதல் பகுதியை முதன்முதலில் பிரசுரித்தமைக்காகப் பாராட்டப்பட வேண்டியவர் ஜேர்மன் நாட்டு அறிஞரான பிரீட்ரிக் அகஸ்ட் ரோஸன் (குசநைனசiஉh யுரபரளவ சுழளநn) (1805 – 1837) ஆவார். ஆயினும் அது பூரணப்படுத்தப்படாத நிலையிலேயே ரோஸன் உடைய மரணத்துக்குப் பின்னர் 1838ஆம் ஆண்டில் அது பிரசுரிக்கப்பட்டது. இவர் 02 செப்ரெம்பர் 1805இல் ஹனோவரில் பிறந்தார். லெய்ப்ஸிக் (டுநipணபை); மற்றும் பேர்லின் (Berlin)பல்கலைக்கழகங்களில் பயின்ற இவர் 1827இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேச இலக்கியங்களுக்கான பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். 1831இல் றோயல் ஆசியக் கழகத்தின் (; (Royal Asiatic Society) கௌரவ செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் அங்கே சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட அரிய பல சம்ஸ்கிருதச் சுவடிகளைக் கற்கின்ற வாய்ப்புக் கிட்டியது. இதன் விளைவாக 1830இல் ரிக்வேத மாதிரி (Rigvedae Specimen) என்கிற பனுவலை வெளியிட்டார். அது முழுமையான இருக்குவேத வெளியீட்டு முயற்சிக்கான மாதிரி வடிவமாக வெள்ளோட்டமாக அமைந்ததெனலாம். இப்பனுவலுக்காக ரிக்வேதத்தின் ஏழு பாடல்களைப் பிரசுரித்தார். அதற்காக இரண்டு ரிக்வேதக் கையெழுத்துப் பிரதிகளை அவர் பயன்படுத்தினார். கடினமான சொற்களை விளக்குவதற்குப் பாணினியின் வடமொழி இலக்கணமும் யாஸ்கருடைய சொற்பிறப்பியலும் பயன்பட்டன. அதுபோன்று ரிக்வேதத்தினை முழுமையாக இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கவும் அவர் முனைந்தார். அந்த மொழிபெயர்ப்பு முயற்சி 1838இல் அவர் மரணித்த பின்னரே நூலுருவில் வெளிவந்தது.

காரில் வில்ஹேம் பிரிட்ரிக் (Karl Wilhelm Fredrich)

இந்தோ - ஈரானிய மற்றும் ஜேர்மன் மொழிகளை ஆரியமொழிக் குடும்பமென முன்மொழிந்த முதல் ஆய்வாளராக விளங்கும் இவர் கவிதை, இலக்கிய விமர்சனம், தத்துவம், இந்தியவியல் எனப் பல்பரிமாண ஆளுமையுடையவர். 1772 ஜனவரி 10ஆம் திகதியில் பிறந்த இவர் சட்டவாதியாகவும், சிறந்த மொழியியல் அறிஞராகவும் விளங்கினார். இந்தியவியல் தொடர்பிலான இவரது ஆய்வுப்பணிகளில் குறிப்பிடத்தக்கதாக அமைவது இந்தியாவின் மொழி மற்றும் ஞானம் (On the Language and windom of lndia) என்ற தலைப்பிலமைந்த ஆய்வு நூலாகும். இந்தியாவிலிருந்து வேதகாலத்தைப் பின்பற்றிய மக்களே ஐரோப்பிய நாகரிகங்களின் பிதாமகர்களாகத் திகழ்ந்தனர் என இந்நூலினுடைய பல சான்றுகளை எடுத்துரைத்து வாதிட்டார். இதுவே பிற்காலத்தில் பல ஐரோப்பிய இந்தியவியலாய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட ‘OIT' எனப்படும் Out of India Theory க்கான முதல் விதையாகக் கருதப்படுகிறது.

பொன் (Bonn) பல்கலைக்கழகத்தில் இந்தியலியற் பேராசிரியராகப் பணியாற்றிய வேளையில் பகவத்கீதையை மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சிகளை ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களிடையே பரவலாக்கும் செயற்றிட்டமொன்றைத் தயாரித்தார். ஆயினும் அதன் முழுமையான பலனை அறுவடை செய்யும் முன்பே மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

கீல் பல்கலைக்கழகம் உபநிடதங்கள், அத்வைத மெய்யியல், பிரம்மசு10த்திரம் ஆகியவை தொடர்பில் ஆழமான ஆய்வுகளையும், மொழிபெயர்ப்புக்களையும் செய்த அறிஞரான போல்டொய்சனைத் தந்தது. மேலும் வேதகால சமயநிலை, வேத சங்கிதைகளின் பொருள்மரபு குறித்த ஆய்வுகளைத் தந்த ஹேர்மன் ஒல்டன்பேர்க் (Hermann Oldenburg) என்ற பேராசிரியரும் இப் பல்கலைக்கழகத்துக்குரியவரே. இவர் 1884இல் வேதத்தின் மதம் (Die Religion de Veda) என்ற பனுவலையும் பின்னர் வேதப்பாடல்கள் (Vedic Hymns) என்ற பனுவலையும் வெளியிட்டார்.

1854 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதி ஜேர்மனியின் ஹம்பர்க் பிராந்தியத்தில் போதகரின் மகனாகப் பிறந்த ஹேர்மன் ஒல்டன்பேர்க் (Hermann Oldenburg) பேர்ளின் பல்கலைக்கழகத்தில் இந்திய மற்றும் உலகச் செம்மொழியியலில் தனது உயர் பட்டப்படிப்பினை மேற்கொண்டிருந்தார். பேர்ளின் பல்கலைக் கழகத்தில் 1878இல் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று 1889இல் கீல் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பதவி ஏற்றார்.

இவர் இந்தியாவின் இந்துப் பண்பாட்டின் மீதும், பௌத்தப் பண்பாட்டின் மீதும் மிகுந்த ஆர்வங் கொண்டிருந்தார். அவை குறித்துத் தொடர்ச்சியான கற்றலிலும், ஆய்வுகளிலும், மொழிபெயர்ப்புக்களிலும் ஈடுபட்டிருந்தார். அந்தவகையில் 1878இல் சாங்கியான கிருஹ்ய சூத்திரத்தை மொழிபெயர்த்தார். இது The Gtihya-Sutras> rules of Vedic domestic Ceremonies என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளிவந்தது. கிழக்கின் புனித நூல்கள் (Sacred Books of the East) திரட்டில் இவை முறையே இருபத்தொன்பது மற்றும் முப்பதாம் தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

ரிக்வேதசங்கிதைகளின் கட்டமைப்புமுறை பற்றி ஆராயும் இவரின் நூலான ரிக்வேதத்தின் பாடல்கள் (Die Hymnen des Rigveda) 1888ஆம் ஆண்டில் வெளிவந்தது. மேலும் 1912இல் இவரது 'வுநஒவமசவைளைஉhந யனெ நுஒநபநவளைஉhந ழேவநn" என்ற நூல் வெளியானது. இவர் வேதப் பாடல்கள் (Vedic Hymns) என்ற தலைப்பில் அக்கினி மீது பாடப்பட்ட வேதப்பாடல்களை மொழிபெயர்த்திருந்தார். இந்நூலும் கிழக்கின் புனித நூல்களின் திரட்டு (Sacred Books of the East) எனும் நூல் தொகுதியின் நாற்பத்தாறாவது தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் இறக்கும் வரையில் (மார்ச் 18, 1920இல்) இந்துப் பண்பாடு தொடர்பில் கட்டுரைகள், குறிப்புக்கள், மொழிபெயர்ப்புக்கள், தொகுப்புக்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆக்கங்களைத் தந்திருந்தார்.

கீல் பல்கலைக்கழகத்தின் பெருமைமிக்க மேலும் இரண்டு இந்தியவியல் ஆய்வாளர்களாக ஹேர்மன் ஜகோபி (Hermann Jacobi) மற்றும் ஒட்டோ ஸ்ட்ராஸ் (Otto Strauss) ஆகியோரைக் குறிப்பிடலாம். ஜேர்மனியின் ' பொன்' பிரதேசத்தில் 11 பெப்ரவரி 1850இல் பிறந்த ஜகோபி ஆரம்பத்தில் பேர்ளின் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பட்டம் பெற்றிருந்த போதிலும் இந்தியவியல் ஆய்வுகளில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக பொன் பல்கலைக்கழகத்தில் இந்துக்களின் சோதிடவியல் பற்றி (ஹொர சாஸ்திரம்) ஆய்வு செய்து 1872இல் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவர் 1872 – 1873 காலப்பகுதியில் லண்டன் சென்றார். அங்கே ஜகோபிக்கு Dr.புல்ஹரின் அறிமுகம் கிடைத்தது. இதுவே 1874ஆம் ஆண்டில் அவர் இந்தியாவுக்கு களப்பணியில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. இவருடைய கணிதப்புலமை மற்றும் இந்து சோதிடவியலில் பெற்றிருந்த அறிவு ஆகியவற்றின் துணையுடன் வேதங்களில் கூறப்பட்டுள்ள சில இயற்கை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு வேதங்கள் தோற்றம் பெற்ற காலகட்டத்தைக் கணிக்க முயற்சித்தார். அந்தவகையில் ரிக்வேதப் பாடல்கள் கி.மு. 4500 காலகட்டத்திற்குரியவை என்று இவர் வாதிட்டார். அதுவரை காலமும் ரிக்வேதம் பற்றி மக்ஸ்முல்லர் (Max Muller) போன்ற அனேக இந்தியவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கி.மு. 1200 காலகட்டம் பற்றிய சிந்தனைகள் இதனால் கேள்விக்குள்ளாயின.

இந்தோ - ஆரியர்களின் புலப்பெயர்வும் அதன் பின்னரே வேதங்கள் தோற்றம் பெற்றன என்ற பிரபல்யமான எண்ணக்கரு இவரால் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இது பற்றி ஜகோபி சிறந்த ஆய்வுக்கட்டுரையொன்றையும் எழுதினார். இக்கட்டுரை 1908இல் றோயல் ஆசியக்கழகத்தின் (Royal Asiatic Society) சஞ்சிகையில் வெளிவந்து பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியது.

இந்து மெய்யியலில் குறிப்பாக நியாய-வைசேடிக தரிசனங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் ஜைனமெய்யியல் பற்றியும் கரிசனை கொண்டிருந்தார். யோகதரிசனம் பற்றியும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. ~யோகதரிசனத்தின் அடிப்படைகள் பற்றி Uber das urprungliche Yogasystem என்ற நூலையும் இயற்றினார்.

இதிகாச புராணங்கள் பற்றியும் ஆழ்ந்து கற்ற இவர் இராமாயண இதிகாசக் கதையினை அதில் வரும் சம்பவங்கள் பற்றிய வரலாற்றுப் பார்வையோடு விபரிக்கும் நூலான இராமாயணம், அச்சிடப்பட்ட மதிப்புரைகளின் படி ஒத்திசைவு உள்ளிட்ட கதைகளின் உள்ளடக்கம் (னுயள சுயஅயலயயெ, புநளஉதiஉhவந ரனெ ஐnhயடவ நெடிளவ ஊழnஉழசனயணெ யெஉh னநn பநனசரஉமவநn சுநணநளெழைநெn) என்ற பனுவலை 1893இல் வெளியிட்டார். மற்றும் புராதன இந்தியக் கவிதைகள் பற்றியும், அழகியல் பற்றியும் 1910இல் (Schriften Zur indischen Poetik and Asthetik) இந்தியக் கவிதை மற்றும் அழகியல் பற்றிய எழுத்துக்கள் (writings on Indian Poetics and aesthetics) என்ற நூலை வெளியிட்டார்.

இந்தியச் சமுதாயத்தில் ‘கடவுள்’ பற்றிய எண்ணக்கரு தோன்றி வளர்ச்சி பெற்ற முறைமை குறித்தும் கடவுளின் இருப்புப் பற்றி முன்வைக்கப்படும் விவாதிப்பு முறை மற்றும் சான்றுகள் பற்றியும் ஆய்வு செய்வதாக, இந்தியர்களிடையே கடவுள் பற்றிய கருத்தின் வளர்ச்சி மற்றும் கடவுள் இருப்பதற்கான ஆதாரங்கள் Die Entwicklung der Gottesidee Bei den Indern and deren Beweise Fur das Dasein Gottes (The development Of the Indian’s idea of God and their proofs for God’sexistence) என்ற இவரின் நூல் 1923இல் வெளிவந்தது.

இவரால் இந்துப்பண்பாடு தொடர்பில் எழுதப்பட்ட வேறு சில நூல்களாக, ‘கல்வெட்டுக்களில் இந்துத் தேதிகளின் கணக்கீடு| (The Computation Of Hindu Dates in the Inscriptions) (1892), ~தொன்மையான வேதக் கலாசாரத்தில்’ (On the Antiquity of Vedic Culture) (1908) போன்றவற்றைக் குறிப்பிட முடியும்;.

இந்துப்பண்பாட்டியல் தொடர்பான ஆய்வுகளில் கொற்றிங்கள் (Gottingen) பல்கலைக்கழகத்தின் பங்களிப்பும் கவனத்திற்குரியது. பேராசிரியர் தியோடர் பென்(க)வி (Theodore Benfey), பேராசிரியர் பிரான்ஸ் கீல்ஹார்ன் (Franz Kielhorn), பேராசிரியர் ர்நு.வால்ஸ்மிட் (Waldschmidt), ஹொபர்ட் ஹார்டெல் (Dr.Herbert Hartel) போன்றவர்கள் இப் பல்கலைக்கழகத்தில் வளவாளர்களாக விளங்கி இந்துப்பண்பாட்டியல் சார்ந்த ஆய்வுகளை முன்கொண்டு சென்றனர். இவர்களில் தியோடர் பென்(க)வி (Theodore Benfey) மிகுந்த கவனத்திற்குரியவர்.

தியோடர் பென்(க)வி (Theodore Benfey) (1809-1881)

ஜேர்மனியின் கொற்றிங்ன்ரன் (Gottingen) பிராந்தியத்தில் நோர்ரன் (Norten) என்ற சிறிய நகரத்தில் யூதக்குடும்பத்தில் 28 ஜனவரி 1809ஆம் ஆண்டில் தியோடர் பென்(க)வி பிறந்தார். பதினாறு வயதில் கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழிகளினை கொற்றிங்ரன் பல்கலைக்கழகத்தில் கற்ற இவர் தனது பத்தொன்பதாவது வயதில் அப் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1834ஆம் ஆண்டில் கொற்றிங்ரன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். இளவயதில் கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தபோதிலும் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசியராக 1848ஆம் ஆண்டில் அதாவது தனது முப்பத்தொன்பதாவது வயதிலேயே அவரால் நியமனம் பெற முடிந்தது. உதவிப் பேராசிரியரான அதே ஆண்டில் அவருடைய சாமவேதப் பாடல்கள் (The Hymns of Sama – Veda) என்ற நூல் வெளிவந்தது. இந்திய மெய்யியல் தொடர்பிலான கருத்தாடல்களைத் தன்னகத்தே கொண்ட நூலான ஜேர்மனியில் கீழைத்தேச மெய்யியலின் வரலாறு (A History of Oriental Philosophy in Germany) என்ற நூல் 1868இல் இவரால் எழுதப்பட்டது. மேலும் இதே ஆண்டில் சம்ஸ்கிருத ஆங்கில அகராதி (A Sanskrit – English Dictionary) என்ற அற்புதமான அகராதியையும் இவர் வெளியிட்டார். இதன் மூலமாக இந்து சாஸ்திர மூலங்களைக் கற்பதற்கான வழி மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் எளிமையாக்கப்பட்டது.

பிறப்பால் யூதராய் இருந்த காரணத்தினால் இவரால் கொற்றிங்ரன் பல்கலைக்கழகத்தின் பதவிநிலை வாய்ப்புக்களை உரியகாலங்களில் பெற முடியாமல் போனது. எவ்வாறாயினும் தனது சொற்ப வருமானத்தைக் கொண்டு தனது அகலித்த பணிகளால் இந்துக்கற்கைகளை கொற்றிங்ரன் பல்கலைக்கழகத்தில் பிரபல்யப்படுத்தி முன்னெடுத்த அறிஞர்கள் வரிசையில் Prof.தியோடர் பென்(க)வி ) மறக்க முடியாதவர். Prof.வால்ட்ஸ்மித் .பிரான்ஸ் கில்ஹார்ன் (Franz Kielhorn) ஆகியோரும் இப்பல்கலைக்கழகத்தில் இருந்து இந்துப் பண்பாட்டுக் கற்கைகளுக்குப் பங்களிப்புச் செய்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

15 ஜுலை 1897இல் ஜேர்மனியின் லியூனில் பிறந்த பேராசிரியர் வால்ட்ஸ்மித் , ஆரம்பத்தில் பேர்ளின் பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். 1936இல் இருந்து கொற்றிங்ரன் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். இந்திய மெய்யியல், காந்தாரக் கலைமரபு, பௌத்தம் ஆகியவற்றில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவை தொடர்பில் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட்டார். 31 மே மாதம் 1840இல் கொற்றிங்ரன் நகரில் ஒஸ்ன்பார்க் (Osnabruck) என்ற சிற்றூரில் பிறந்த பிரான்ஸ் கீல்ஹார்ன் கொற்றிங்ரன் பல்கலைக்கழகத்தில் தியோடர் பென்ஃபி யிடத்தில் கல்வி கற்றார். பின்னர் பேர்ளின் பல்கலைக்கழகத்தில் அல்பிச்ட் வெபர் (Albrecht Weber) இடமும் கல்வி பயின்றார். 1862 - 1865 காலப்பகுதியில் ஒக்ஸ்போர்ட் சென்று மொனியர் வில்லியம்ஸ்சின் (Monier Williams) உதவியாளராகப் பணியாற்றினார்.

இக்காலப் பகுதியில் மொனியர் வில்லியம்ஸ் தனது சம்ஸ்கிருருத ஆங்கில அகராதியைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பணியில் உதவியாளர் என்ற வகையில் பிரானஸ் கீல்ஹாரனும் ஈடுபட்டிருந்தார். இக்காலப் பகுதியில் மக்ஸ்முல்லருடைய தொடர்பும் இவருக்குக் கிட்டியது. னுச. ஜோர்ஜ் புல்ஹருடன் இணைந்து மும்பாய் சமஸ்கிருதப் பனுவல்களின் தொடரை (டீழஅடியல ளுயளெமசவை ளுநசநைள) ஆரம்பித்து வைத்த இவர் 1881இல் இந்தியாவில் சேகரிக்கப்பட்ட சம்ஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்புரைகளையும் வெளியிட்டார்.

கார்த்தியாயனார் மற்றும் பதஞ்சலி தொடர்பாக 1876இல் இவர் எழுதிய பனுவலும் வேறு சில சம்ஸ்கிருத இலக்கணம் பற்றிய நூல்களும் இவர் ஆளுமைக்குச் சான்று பகர்வனவாகும். புனேயிலுள்ள டெக்கான் பல்கலைக்கழகத்தில் 1866 – 1881 காலப்பகுதியில் சம்ஸ்கிருதப் பேராசிரியராக இருந்த இவர் 1882இல் கொற்றிங்ரன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் 1902இல் (D.Litt)இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் கொற்றிங்ரன் பல்கலைக்கழகத்தினால் கௌரவ சட்ட கலாநிதிப் (L.L.D) பட்டத்தையும் (1902) பெற்றிருந்த இவர் 19 மார்ச் 1908இல் கொற்றிங்ரன் நகரிலேயே காலமானார். மர்பேக் பல்கலைக்கழகத்தின் (University of Marburg) பேராசிரியராக விளங்கிய கார்ல் ஃப்ரீட்ரிக் ஜெய்ல்ட்னர் (Prof. Karl Friedrich Geldner) என்பவரும் வேதங்கள் தொடர்பான ஆய்வுகளில் அதிகம் அக்கறை காட்டிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

17 டிசம்பர் 1852இல் சேக் மீனிங்கன் (Saxe-Meiningen) பிராந்தியத்தில் பிறந்த இவர் புராதன ஈரானிய மொழியான அவெஸ்தா மொழி மற்றும் சம்ஸ்கிருதம் ஆகியவை தொடர்பில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காட்டினார். வேதங்கள் தொடர்பிலும், பிராமணங்கள் தொடர்பிலும் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள் இந்துக் கற்கைகள் புலத்தில் முக்கியத்துவம் பெறுபவையாகும். அவற்றில், Rigveda in Auswahi(The Rigveda in selection)( (2தொகுதி), and Brahmanismus ( Vedism and Brahmanism) Der Rig-veda aus dem Sanskrit ins Deutscheubersetzt (The Rig-veda from Sanskrit into Germantranslated) (3தொகுதி) ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடற்பாலன. இவை பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன.

லெய்ப்ஸிக் (Leipzig) பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்களும் சம்ஸ்கிருத மொழி மற்றும் இந்துக்கற்கைகளில் ஆர்வம் காட்டினர். அந்தவகையில் பேராசிரியர் ஹேர்மன் பிறோஹாஸ் (Hermann Brockhaus), பேராசிரியர் வின்டிஸ் (Windish, பேராசிரியர் ஃப்ரிட்ரிக் வெல்லெர் (Friedrich weller), பேராசியர் Johannes Hertel போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இந்துக்கற்கைகள் பற்றி ஆய்வுகளில் ஈடுபட்ட மேலைத்தேசத்தறிஞர்களில் துருவநட்சத்திரமாகத் திகழ்ந்த பேராசிரியர் மக்ஸ்முல்லரும் பேராசிரியர் ப்ரீட்ரிக் ஸ்க்லெகல் (Friedrich Schlegel) என்பவரும் குறித்த பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கவனத்துக்குரியது.

ஜேர்மனியில் மிக முக்கியமான சம்ஸ்கிருத இலக்கிய மூலங்களைச் சேகரித்து வைத்த பல்கலைக்கழகங்களிலொன்று என்ற பெருமைக்குரியதாக தியுமிங்கன் ((Tubingen) பல்கலைக்கழகம் திகழ்கிறது. பேராசிரியர் ருடால்ப் வான் ரோத் (Rudolph von Roth), பேராசிரியர் ஹியூர் (Hauer), கலாநிதி ஹேர்மன் வெலர் (Hermann Weller), பேராசிரியர் க்ளாஸ்தப் (Glasenapp) ஆகியோர் இப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கீர்த்திமிக்க இந்தியவியல் ஆய்வாளர்களாகும்.

தியுமிங்கன் மற்றும் பேர்லின் பல்கலைக்கழகங்களில் கற்று தியுமிங்கன் பல்கலைக் கழகத்திலே பேராசிரியராக நியமனம் பெற்று இந்துக் கற்கைகளை தனது ஆராய்ச்சியால் வளமூட்டிய பேரறிஞராக ருடால்ப் வான் ரோத் திகழ்கிறார். 03 ஏப்ரல் 1821 இல் Stuttgart இல் பிறந்த இவர் வேதங்களின் மொழிப்பிறப்பியல் பற்றிய ஆய்வுகளின் பிதாமகராகப் போற்றப்படுகிறார். 1856இல் கீழைத்தேய மொழிகளுக்கான பேராசிரியராக தியுமிங்கன் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டார்.

ஒட்டோ போட்டலிங் (Otto Boetlingk) இவருடன் இணைந்து தயாரித்த சமஸ்கிருத அகராதி (Sanskrit worterbuch) ஐரோப்பியர்களுக்கு வேத கலைச் சொற்களைப் புரிந்து கொள்வதற்கு வழிசமைத்துக் கொடுத்தது. இந்தப் புகழ்பெற்ற அகராதியினை னுவ Peterburg Academy of Sciences வெளியிட்டது. இந்த அரிய கடினமான பணியில் இவ்விருவரும் இருபத்து மூன்று வருடங்களாக (1852 - 1875) ஈடுபட்டிருந்தனர். ஏழு மிகப் பெரிய தொகுதிகளாக இது வெளிவந்தது. முதலாவது தொகுதி 1855இலும், ஏழாவது தொகுதி 1875இலும் வெளியாகின. இன்று ஒன்றரை நூற்றாண்டுகள் கழிந்த நிலையிலும் வேதங்கள் தொடர்பிலான ஆய்வுகளைப் பொறுத்தவரையில் இந்த அகராதியின் பயன்பாட்டனுகூலத்தினை விஞ்சமுடியாதுள்ளமை நோக்கற்பாலது.

இது தவிரவும் ருடால்ப் வான் ரோத் அவர்கள் 1856இல் W.D.விற்னி (Whiney) யுடன் இணைந்து அதர்வவேதத்தினைப் பதிப்பித்து வெளியிட்டார். இவர்களின் மாணவர்களான மோரிஸ் புலும்பீல்ட் (Moris Bloomfield) மற்றும் றிச்சாட் காபே (Richard Garbe) ஆகியோர் இணைந்து 1857 - 1927 காலப்பகுதியில் பைப்பலாத சாகைக்குரிய அதர்வவேதத்தைத் தொகுத்துப் பதிப்பித்தனர். இது பல்கலைக்கழக நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கையெழுத்துப் பிரதிகளின் 544 புகைப்படப் பிரதிகளைக் கொண்டு (Chromo-Photography)பதிப்பிக்கப்பட்டதாகும்.

ருடால்ப் வான் ரோத்தின் பிறிதொரு குறிப்பிடத்தக்க முயற்சி 'இருக்கு வேதத்தின் 70 செய்யுட்கள்" (Seventy Hymns of the Rigveda) என்ற நூலாகும். இது சீர் முறையிலமைந்த மொழிபெயர்ப்பாகும். இந்நூலகத்திற்கு வான் ரோத்துடன் அவருடைய மாணவர்களான கார்ல் கு ஜெரல்ட்னர் (Karl F.Gerldner) மற்றும் கேஹி (Kaeg) ஆகியோர் பங்களிப்புச் செய்திருந்தனர். ருடால்ப் வான் ரோத் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இந்துக் கற்கைகளுக்கான ஆய்வுச் செல்நெறியில் கவனத்துக்குரியன. குறிப்பாக German Oriental Society (ZDMG) வெளியீடாக அமைந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் இவரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் மிகப் பிரதானமானவை.

• 'ஆரியரின் உயர்வான தெய்வங்கள்" (The Highest gods of Aryan Nations) தொகுதி VI
• சோமன் (Soma) (தொகுதி XXXV), சோம தாவரத்தின் இருப்பிடம் (The Habitat of the Soma Plant) தொகுதி VII
• சோமம் மற்றும் கழுகு பற்றிய தொன்மம் (The Myth of Soma and Eagle) தொகுதி XXXVI
• இந்தியாவின் பழமையான அறிஞர் பாரம்பரியம் (Learned Tradition in Antiquity> Especially in India) தொகுதி XXI
• வேதங்களின் எழுத்தியல் முறைமை (The Orthography of the Vedas) தொகுதி XLVIII

என்பன அவற்றுட் குறிப்பிடற்பாலன.

ஜுலியஸ் ஜுலி (Julius Jolly)

28 டிசெம்பர் 1849 இல் ஜேர்மனியிலுள்ள ஹெடெல்பேர்க்கில் (Heidelberg) பிறந்த ஜுலியஸ் அவர்கள் பேர்ளின் மற்றும் லெப்ஸிக் பல்கலைக்கழகங்களில் தனது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டார். ஒப்பீட்டு மொழியியலில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர் 1877இல் வரஸ்பர்க் (Wuvzburg) பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு மொழியியல் மற்றும் சம்ஸ்கிருதத்துக்கான பேராசிரியராக நியமனம் பெற்றார்.

1882-1883 காலப்பகுதியில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தாகூர் சட்டப்பேராசிரியர்) ஆசனத்துக்கான வருகைப் பேராசிரியராக இந்தியாவுக்கு வந்தார். கல்கத்தாவில் புராதன இந்துச்சட்டங்கள் தொடர்பில் பன்னிரண்டு புகழ் பெற்ற விரிவுரைகளை ஆற்றினார். இவை 1885 இல் பகிர்வு, பரம்பரை மற்றும் தத்தெடுப்பு பற்றி இந்துச்சட்ட வரலாற்றின் வெளிப்பாடு (Outlines of the History of the Hindu Law of Partition > Inheritance and Adoption) என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. பஞ்சாப் சம்ஸ்கிருத நூல்களின் வரிசை (Panjab Sanskrit Series) தொடரில் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை விமர்சனப் பதிப்பாக (ஊசவைiஉயட நனவைழைn) பதிப்பித்து வெளியிட்டார். 1866இல் இவர் இந்தோ ஆசிய ஆய்வுகளுக்கான கலைக்களஞ்சியத்திலும் (Encyclopedia of Indo-Aryan Research) இல் இந்துச்சட்டம் மற்றும் இந்துசமய வழக்காறுகள் தொடர்பில் அனேக கட்டுரைகளை எழுதியிருந்தார். புராதன இந்து மருத்துவப் பனுவல்களான சரஹசம்ஹிதை, சுஸ்ருதசம்ஹிதை, அட்டாங்கஹ்ருதய சம்ஹிதை பற்றிய ஆழமான ஆய்வுக்கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டன. மேலும் இந்திய வரலாற்றியல் ஆய்வுச் சஞ்சிகையான ''Journal of Indian History” இன் ஆசிரியராகவும் இவர் செயற்பட்டிருந்தார்.

இந்துக்கற்கைகள் தொடர்பில் இவருடைய பணிகள் யாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போலமைவன விஷ்ணுஸ்மிருதியை மையப்படுத்தியThe Institutes of Visnu என்ற நூலும் ; The Minor -Law Books என்ற தலைப்பில் அமைந்த பிரஹஸ்பதிஸ்மிருதி மற்றும் நாரதஸ்மிருதி பற்றிய பனுவலும் ஆகும். இவை இரண்டுமே கிழக்கின் புனித நூல்களின் Sacred Books of the East திரட்டில் இடம்பெறுவது நோக்கற்பாலது.

ஜார்ஜ் ரிபேட் (George Thibaut)

ஜேர்மனியில் பிறந்த ஜார்ஜ் ரிபேட் ((George Thibaut) அவர்கள் பணி நிமித்தமாக இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து வசித்து வந்தார். அங்கிருந்து 1875இல் காசியில் அமையப்பெற்றிருந்த அரச சம்ஸ்கிருதக் கல்லூரியில் சம்ஸ்கிருதப் பேராசிரியராக நியமனம் பெற்று இந்தியாவுக்கு வருகை தந்தார். பின்னர் 1888 – 1895 காலப்பகுதியில் அலகபாத் மியுர் மத்திய கல்லூரியில் மெய்யியற் பேராசிரியராகக் கடமையாற்றினார். அதே கல்லூரியின் அதிபராகவும் பின் பதிவாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் குறிப்பிடத்தக்க பணிகளில் ஒன்று சுல்வ சூத்திரங்கள் பற்றிய ஆய்வுகளாகும். 1875 - 1878 காலப்பகுதியில் இவர் இப்பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார். பௌதாயன சுல்வ சூத்திரத்தினை முழுமையாக மொழி பெயர்த்திருந்த இவர் சுல்வ சூத்திரங்கள் பற்றி நீண்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றையும் பிரசுரித்துள்ளார்.

வராஹமிகிரரின் கணித வானியற் தொகுப்பான 'பஞ்சசித்தாந்திகா" வையும் இவர் ஆங்கிலத்தில் நேர்த்தியாக மொழி பெயர்த்திருந்தார். சுல்வ சூத்திரங்களும், பஞ்சசித்தாந்திகாவும் புராதன இந்துக்களின் கணித வானியற் புலமை மரபின் முக்கிய பனுவல்களாகும். அந்த வகையில் இந்து அறிவியல் என்ற ஆய்வுப்புலத்தை அக்கால அறிஞர்களுக்கு அடையாளங் காட்டிய மேலைத்தேசத்தவர்களுள் திபேட் (Thibaut)) இன் வகிபங்கும் இன்றியமையாததாகும். மேலும் புராதன இந்துப் பண்பாடு தொடர்பில் இவரால் களப்பணியின் மூலம் சேகரிக்கப்பட்ட அனேக சுவடிகளும் கையெழுத்துப்பிரதிகளும் இன்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேணி வைக்கப்பட்டுள்ளன.

பிரம்ம சூத்திரத்துக்கான ஆதிசங்கரரின் சூத்திர பாடியத்தையும் இராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட இவருடைய பணி மெச்சத்தக்கதாகும். இவை மூன்று தொகுதிகளாக கிழக்கின் புனித நூல்களில் திரட்டு ) எனும் நூற்றிரட்டில் இடம்பெறுகின்றன. இவ்வாறாக இந்துப்பண்பாட்டுக் கற்கைகளுக்கு ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் தமது அளப்பரிய சேவைகளினைச் செய்துள்ளனர். இதனால் இந்துப்பண்பாட்டுக் கற்கைகளானவை மேலைத்தேச ஆய்வறிவியல் சட்டத்துடன் இயைந்து உலக அரங்கிற்குத் துலாம்பரமாயிற்று. நவீன இந்துசமய சீர்திருத்த சிந்தனையாளர்கள் தோன்றவும், வங்காள மறுமலர்ச்சி ஏற்படவும் இவ் மேலைத்தேசத்தவர்களின் இத்தகைய செயற்பாடுகளே துணைக்காரணிகளாயின. இந்துப்பண்பாட்டுக் கற்கைகள் என்ற அக்கினியினை உலக அரங்கிற்குக் காட்சிப்படுத்திய இவ் மேலைத்தேச அறிஞர்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூறப்பட வேண்டியவர்களே.

உசாத்துணைகள்

1. முகுந்தன்,ச., (2021) 'இந்துக்கற்கைகளை வளமூட்டிய மேலைத்தேசத்து ஆளுமைகளும் ஆய்வுகளும்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு-6.
2. https://www.dw.com>... The west has a lot to learn from ancient india:Indology in germany.
3. https://www.newworldencyclopedia.org>... Karl Wilhelm friedrich von schlegel-new world encyclopedia.
4. https://www.jewishencyclopedia.com>... Benfey> theoder- jewishencyclopedia.com.
5. https://hinduexistence.org>... Sanskrit bridges hindu culture and heritage in Germany.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here