தீட்டு
எது தீட்டு
அவள் தீட்டா…?
அவன் தீட்டா…?
மூன்றெழுத்தில்
முட்டாளாய்
மாற்றிவிட்டார்களே…!
தீட்டு
வரையறை
இலக்கணம்
வகுத்தீா்களோ…?
இலக்கணம்
வரையறை
வகுத்தவன்
யார் யாரோ…?
வகுத்தவனுக்கே
தெரியாத
புரியாத
மூன்றெழுத்து
மூலமந்திரமோ…?
மந்திரம்
என்றெண்ணியே
மனிதனை
இழிவுப்படுத்துவதற்கே
கண்டெடுக்கப்பட்ட
சொல்லே
தீட்டு…?
அவள்
மாதவிடாய்
தீட்டு
என்கிறாய்…?
மாதவிடாய்
இல்லை என்றால்
அவளும் இல்லை
அவனும் இல்லை
இருவரும்
இல்லாத இடத்தில்
இவ்வுலகம் இல்லை.
இச்சி இச்சி
தள்ளிப்போ
என்கின்றாயே
எதற்குத்தள்ளிபோ
என்கின்றாய்…
இவ்வுலகில்
நீ எப்படியோ
அதே மாதிரிதான்
நானும்…!
நான் சுவாசிக்கும்
காற்றை
நீயும் சுவாசிக்கின்றாய்
அப்போ
நீயும் தீட்டுத்தானே…!
குளத்தில்
நீர்
குடித்தேன்
தீட்டானவன்
என்றாய்.
அடித்தாய்
உதைத்தாய்
ஒரங்கட்டினாய்
வெட்டினாய்
கொன்றுபோட்டாய்…!
உயிரைப்படைத்தவன்
நீ என்றெண்ணினாயோ…?
நான் தொட்ட நீரை
நீயும் தொட்டாய்
என்னை தீட்டு
என்று உரைத்தால்
நீ என்னவாம் …?
நீயும் தீட்டானவனே…?
உண்மை நிலை
புரியாத
மூடன்
சக மனிதனை
மனிதாக பார்க்கத்
தெரியாதவனே
தீட்டானவன்…?
இயற்கைவிதியை
தீட்டு என்கின்றாயே…?
இயற்கைப்படைத்தவன்
தீட்டு என்றானானோ…?
அப்போ
அவனே
தீட்டுத்தானே…?
விழித்துக்கொள்
வீழ்ந்துகிடக்காதே
மானிடனே
வாழும் பூமி
நம் பூமி
வாழ்ந்துகாட்ட
நீ புறப்படு…
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.