குட்டிக்கதை : வழி திறக்கவில்லை! - கடல்புத்திரன் -
வாகனத்தின் வானொலியை இயக்கினான் . ' குட்டிக்கதை ' ஒன்றை ஒலிப்பொருப்பாளர் பவானி கூறிக் கொண்டிருக்கிறார் . இதில் இடம் பெறுகிறது ' மனம் ' என்ற இத்தூணித்துண்டு . அது தலையிலே , நெஞ்சிலே எங்கையாச்சும் இருந்துட்டு போகட்டும் . " ஒரு ராஜா .... " ஏன் அவரை இழுக்கிறார்கள் . பிரபலங்கள் வர வேண்டும் போல இருக்கிறது . அவர் ஒவ்வொரு நாளும் சந்தனக் கட்டைகள் விற்கிற கடைக்கு முன்னால் நடந்து போகிறார் . என்ன , நடை பயில்கிறாரா ? . எளிமையாகப் போகிராராம் . ஊரிலே தெரு , கிருவெல்லாம் நடக்கிறார் போல இருக்கிறார் . நாட்டார்க்கதைகள் லொஜிக் மீறல்களுடன் தான் ஆரம்பிக்கிறது , நடக்கிறது , முடிகிறது . ஏன் ? . அழுத்தம் கொடுக்க ...மனதிலே ஒருவர் தோன்றுகிறார் . அவரின் அடுத்த நகர்வு என்ன ? , தெரியாது . எனவே எளிமையாக தொடர்வது . அதுவும் ஒருவிதத்திலே ...சரி போலவே தோன்றுகிறது . இன்று லொஜிக் மீறலையே கதைக்கருவாக எடுத்து , கற்பனைக் குதிரைகளை பறக்க வைத்து ஃபான்டாசிக் கதையாக ...கதிரையின் நுனியில் இருக்க வைத்து விடுகிறார்கள் . தொழினுற்பம் கதை சொல்லி . சிலநேரம் அதற்கு விஞ்ஞானக் கதை என்ற தலைப்பும் இடப்படுகிறது .
கதை இது தான் . ராஜா கடைக்குமுன்னால் நடந்து போகிறார் . கடைக்காரர் , முதலை எல்லாம் போட்டு சந்தனக்கட்டைக் கடை திறந்திருக்கிறார் . பூஜைப் பொருட்கள் விற்கிற கடை இருக்கிறது .விறகாலை இருக்கிறது . இந்தியாவில் ...சந்தனக்கட்டை வெட்டின வீரப்பன் புகழ் அந்த மாதிரி பறக்கிறது . ஆனால் நிஜத்தில் ...இந்தக்கடை இருக்கிறதா? . சவ இல்லம் இருக்கிற போது , வாங்கிறவர் இருக்கலாம் தான் . கதை நம் காலத்தில் நடக்கவில்லை . அரசர் காலம் . இன்று தடை செய்யப்பட்டவை சில அன்று விடுதலைப் பெற்றிருந்தன . அப்பவும் சாதாரணர் வாங்க முடியாது . அப்படியென்றால் விலையான பண்டம் . ஏன் அந்தக் கடையைப் போய்த் திறந்தார் ? . அரசர் போறார் எனத் தெரிகிறது . இவர் மனதில் , " அரசன் செத்துத் தொலைத்தால் நம்கட்டைகள் அத்தனையும் விற்பனையாகி விடுமே ! " என்ற நினைப்பு எழுகிறது .அரசரை சந்தனக்கட்டைகளை அடுக்கியே எரிப்பார்கள் . ஒரு லோடு போகும் . திரும்ப வாங்கி விற்கிற போது ...என்ன யோசிப்பாராம் ? . கதையைக் கேட்கிற போது கேள்விகள் கேட்கக் கூடாது . இலங்கை அரசு , வடக்கு , கிழக்கு இணைப்பையோ , சுயாட்சியையோ ... ஏன் மாகாணவரசையோ கொடுக்கவில்லை ? . இந்திய அரசு வரும் வரையில் தாழ்ந்த மாவட்டசபைகள் , அதிலும் யாழ் மாவட்டசபைகளை தமிழ்க்கட்சிகள் கைப்பற்றி விட்டது என்று அன்றைய இலங்கை ஜனாதிபதி கலவரத்தை ஏற்படுத்தி தமிழ்ப் பொருளாதாரத்தையே சிதைத்தார் ; உயிர்களைப் பறித்தார் . இந்திய அரசால் தான் மாகாணவரசு ஒப்பந்தத்தையே ... எழுத முடிந்தது . நம் அரசியல்வாதிகளுக்கு எதன் பெறுமதி தான் தெரிகிறது ? . சந்தையிலே கூச்சல் போட மட்டும்... தெரிகிறது . அப்பப்ப மக்களின் தலைகள் உருளும் . உருப்படியாக கவனிக்க அவர்களுக்கு கற்றுக் கொடுத்தாலும் தலையிலேறுமா ?