1. குறளினிமை கேட்டிடுவோம்
குறளினிமை கேட்டிடுவோமே.
கருத்ததுவும் அறிந்திடுவோமே.
பொருளினிமை உணர்ந்திடுவோமே.
பொய்யாமொழி படித்திடுவோமே.
அறத்துப் பாலதின்
அருமை தெரிந்திடுவோமே.
பொருட் பாலதின்
பெருமை கற்றிடுவோமே.
காமத்துப் பாலதின்
காதல் கண்டிடுவோமே.
பேரின்ப வாழ்வதின்
பேற்றை நுகர்ந்திடுவோமே.
இளையோருடன் இதை பகிருங்கள்.
இணையிலா தமிழர் காவியமிதுவே.
உலகோர் பலரிதை உணர்ந்தார்.
உலகமொழிகளில்மொழிபெயர்த்தார்.
வள்ளுவன் தந்த குறள்தனை
வழுவின்றி தந்துளர் ஒலிவடிவில்
தெள்ளுதமிழ் திருக்குறளை நாமும்
துள்ளும் மகழ்வுடன் கேட்டிடுவோம்.
2. சேவையைத் தொடர்ந்திட வேண்டும்.
நல்லவர்க்கும் சோர்வு வரும்.
நலிவுகண்டு சோகம் கொள்வர்.
வல்லவர்க்கும் தோல்வி வரும்.
விவேகமிருந்தும் தடைகள் பெருகும்.
எல்லோர்கும் சோதனைகள் வந்திடும்.
எண்ணப்படி எல்லாம் நடந்திடா.
பல்லோர்க்கும்பழிகள்பலவந்திடும்.
பூமியில் இதுவெல்லாம் நடப்பதுவே.
தளர்வுகளடைகையில்அமைதியாய்,
துயர்காண்கையில்பொறுமையாய்,
விளைவுகளின் காரணம் தெளிந்து,
விடயங்களைமுன்னெடுக்கவேண்டும்.
செயலினில் விருப்பம் வேண்டும்.
செயற்பாடுகளில் நேர்மை வேண்டும்.
சொல்லினில் உண்மை வேண்டும்.
சோர்வின்றி உழைக்க வேண்டும்.
நல்லதை எண்ணிட வேண்டும்.
நாட்டிற்கு உதவிபுரிந்திட வேண்டும்.
சொல்லதைக் காக்க வேண்டும்.
சத்தியம் பேசிட வேண்டும்.
திட்டங்கள் போட்டிட வேண்டும்.
தடைகளைத் தாண்டிட வேண்டும்.
சட்டங்கள் மதித்திட வேண்டும்.
சங்கங்களை நடத்திட வேண்டும்.
வருவதை ஏற்றிட வேண்டும்.
வெறுப்பின்றி இயங்கிட வேண்டும்.
சலிப்பின்றி பணியாற்றிட வேண்டும்.
சேவையைத் தொடர்ந்திட வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.