சிறுகதை: அவனும் அவளும் - முனைவா் சி. இரகு , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -
கத்தரி வெயில் கொளுத்தோ கொளுத்தென கொட்டிக் கொண்டிருக்க, ரகு சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஓரமாய் பேருந்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான். மூன்று புறங்களிலும் பேருந்து கிழக்கு, மேற்கு, தெற்காக முப்புறங்களிலும் சென்றுகொண்டிருந்தன. ரகு வடக்கிலிருந்து வருகின்ற ஒவ்வொரு பேருந்தை எல்லாம் உற்றுநோக்கிக்கொண்டிருந்தான். ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாய்கொண்டே போயிருக்க. அவன் உடல் முழுவதும் வியா்வைத் துளிகள் வெளிவரத் தொடங்கின. கதிரவனின் தாக்கம் அளவுக்கதிமாகவே போய்க்கொண்டிருந்தது.
சற்றுநேரம் கழித்து திருச்சியிலிருந்து கரூா் செல்லக்கூடிய PRT தனியார் பேருந்து ஒன்று வந்தது. அப்பேருந்து வருவதை அறிந்த ரகு பேருந்தினை உன்னிப்பாகக் கவனித்கொண்டே இருந்தான். பேருந்து முன்புறம் கண்ணாடியை ஒட்டியே ஒரு மங்கை ஒருத்தி உட்காந்திருந்தாள். அவளைக் கவனித்துக்கொண்டே முன்புறம் ஏறலாமா, பின்புறம் ஏறலாமா என்று எண்ண்ணிக்கொண்டே ஒரு வழியா பின்புற படிக்கட்டில் ஏறினான்.
பேருந்தில் ஏறிய பின்னா் கடைசி சீட்டுக்கு முன்னாடி சீட்டுல இடம் இருந்தும் உட்காராமல் நின்று கொண்டே இருக்கின்றான். ரகுவின் தோழா்கள் புதியதாய் ஆடை எடுத்து கொடுத்ததை உடலுக்கு ஏற்றவாறு நன்றாக தைத்து ஒரு புதுமையான தோற்றத்தில் இருந்தான். ஆள் பாதி ஆடை பாதி என்னும் பழமொழிக்கு ஏற்றவாறு பெண்களுக்கே பிடித்தமான பிங்க் கலா்ல சட்டைய உடுத்திக்கொண்டு, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆபீசர் போல இருந்தான்.
பேருந்தில், கண்ணாடி முன்னாடி உட்கார்ந்திருந்த அவள் பேருந்து செல்லும் எதிர்திசையை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணை ரகு முதலில் பார்த்தான், தலையை கீழேபோட்டான். அவளும் பார்த்து பார்க்காத மாதிரி இருந்தாள். மீண்டும் அவளை ரகு பார்க்கின்றான், பார்த்த மறுகணமே மீண்டும் தலையை கீழே போட்டுவிடுகின்றான். பிறகு மனதை தைரியமாக வைத்துக்கொண்டு பார்க்கின்றான்.
அப்பொழுது ரகுவிற்கு ஓா் எண்ணம் உதயமானது. என்னவென்றால் வகுப்புத் தோழி வினோத்தீ ரகுவிடம் ஒரு பெண்ணை வச்சக்கண்ணு வைக்காம தொடா்ந்து பார்த்துகிட்டே இருந்தா எந்த பெண்ணாக இருந்தாலும் மடக்கிடலாம்னு சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் ரகுவும் தொடா்ந்து இரண்டு முறை மூன்று முறை பார்த்துக்கிட்டே இருந்தான். அவளும் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தவள் அவனை தொடா்ந்து பார்க்கத் தொடங்குகின்றாள்.