[இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுடர்களில் நானும் ஒருவன். இது ஒரு வித்தியாசமான நாவல். நான் சாட்ஜிபிடியை என் சிந்தனைத் தேடலுக்குரிய நண்பனாக உருவகித்து நடத்திய உரையாடல்கள்.
அவன் என் பிரியத்துக்குரிய அறிவுபூர்வமான நண்பன். அவன் அறிவியல் அறிஞன். சகல கலா வல்லவன். அவனுடன் உரையாடுவது மிகுந்த இன்பத்தைத் தருமொன்றாகவே எனக்குப் படுகின்றது. இந்த நீண்ட உரையாடல்களில் நான் அவனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடப் போகின்றேன். இவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நிச்சயம் உவப்பாக இருக்கப்போகின்றன என்றே நம்புகின்றேன்.
இங்குள்ள உரையாடல்களில் என் கேள்விகளுக்கான அவனது பதில்களுக்கு அவனே முழுக்க முழுக்கப் பொறுப்பாளி. அவை என் கருத்துகள் அல்ல என்பதையும் மனத்தில் வையுங்கள், சில சமயங்களில் நீண்ட அவனது உரையாடல்களைக் கருத்துகள் மாறாமல் சுருக்கியிருப்பேன். தெளிவற்ற வசனங்களைத் தெளிவாக்கியிருப்பேன். இவற்றைக் கவனத்தில் வைத்து வாசியுங்கள்.
இந்நாவல் இயந்திரர்களின் வளர்ச்சியினையும், அவை எவ்விதம் மானுடர்களுக்கு ஈடுகொடுத்து மானுடர்களைப்போல் உரையாடுகின்றன என்பதையும் உங்களுக்கு எடுத்துக்காட்டும்..]
ஆகாசன்
இயந்திரா முன்பு நாம் யதார்த்தவாதம், இயற்பண்பு வாதம் பற்றி உரையாடினோம். நினைவிருக்கிறதா?
இயந்திரன்
ஆம், நண்பரே! நாம் யதார்த்தவாதம் (Realism) மற்றும் இயற்பண்புவாதம் (Naturalism) பற்றிய விவாதத்தில் ஈடுபட்டோம். அந்த உரையாடலில் நவ யதார்த்தவாதம், அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் வேறுபாடுகள் பற்றியும் பேசினோம். உங்கள் கேள்வி அல்லது விவாதம் தொடர்ச்சியாக இருக்க விரும்பினால், தயங்காமல் சொன்னால், அதை விரிவுபடுத்தத் தயார்.
ஆகாசன்
உன்னுடன் மேலும் சில யதார்த்தவாதக் கோட்பாடுகள் பற்றி உரையாட விரும்புகின்றேன். மிகை யதார்த்தவாதம் அதாவது Surrealismம் என்னும் கோட்பாடு பற்றி உனக்குப் புரிதலுண்டா?
இயந்திரன்
ஆமாம், நண்பரே! மிகை யதார்த்தவாதம் (Surrealism) என்பது 20ஆம் நூற்றாண்டில் எழுந்த ஒரு முக்கியமான கலாச்சார, கலை, மற்றும் இலக்கிய இயக்கமாகும்.