சந்தியாப்பிள்ளை மாஸ்டர் என்னும் இளைஞர்! - வ.ந.கிரிதரன் -
சந்தியாப்பிள்ளை மாஸ்டரைப்பற்றி நினைத்தால் எனக்கு முதலில் தோன்றுவது அவரது திடகாத்திரமான உடம்பும், மீசையும், சிரித்த முகமும்தாம். அவருடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தால் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு. அதற்குக் காரணம் அவரது வயதும், தோற்றமும்தாம். எண்பத்தைந்து வயது, ஆனால் தோற்றமோ நாற்பதுகளின் நடுப்பகுதிதான். எப்படி இவரால் இவ்விதமிருக்க, தோன்ற முடிகின்றது என்று வியப்பதுண்டு. அதனால்தான் அவரைச் சந்திக்கையில் அவ்விதம் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு.
இன்று அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது இளமையின் இரகசியம் பற்றிச் சில கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில்கள் பலருக்கும் உதவக்கூடும் என்பதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.