திரு.எல்.ஜோதிகுமாரின் இரு நூல்களின் அறிமுக நிகழ்வு!



* ஓவியம் - AI
எங்கே போயின எல்லாமே?
வீட்டைச்சுற்றி
வாழ்ந்த தென்னை மரங்கள்.
வீட்டு வாசலைப் பார்த்தபடி
காவல்நின்ற பலா.
கிணற்றடியில் நின்ற வாழைகள்.
தென்மேற்குப் பருவக்காற்றில்
மோகங்கொண்டு எம்மை மயக்கிய
முற்றத்தில் நிலைத்து நின்ற
வேம்பும், கறி வேப்பிலை மரமும்.
கூடிவந்து குந்தியிருந்து
'குசாலம்'விசாரித்த பறவைகள்.
கோடிக்குள் குடியிருந்த பப்பாளி.
வாசம் பரப்பிய மல்லிகை.
பின் தோட்டத்தில்
செழித்து நின்று சுவைதந்த
பாண்டியும்,அம்பலவியும்.
வீட்டைச் சுற்றிச்
சோடிச்சு நின்ற பூமரங்கள்!"
அங்கேதான் நாம் வாழ்ந்தோம் என்ற
எம் அடையாளங்கள்
அனைத்தையும் புதிதாக வந்தவர்கள்
முற்றாக அழித்துவிட்டு
காற்றும் வராதபடி புதிதாக
அடுக்குமாடி வீடொன்றைக் கட்டிவிட,
இப்போது அது
இயற்கையைத்தடுத்துத்
துரத்திவிட்டு உயர்ந்து நிற்கின்றது.

இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் பாரதியின் மூன்று முரண்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவையாவன்; அவனது சிந்தையில் காணப்படும் முரண், அவன் அரசியலில் தென்படும் முரண், அவன் எழுத்தில் புலப்படும் முரண். இவ்விதம் ஆரம்பமாகும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் தொடர்ந்து இம்முரண்கள் பற்றி விரிவாகத் தர்க்கம் செய்வார் என்றே வாசிக்கும் எவரும் உணர்வர், ஆனால் 'இம்முரண்கள் ஒவ்வொன்றும் , தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப விவாதிக்கப்படுவது விரும்பத்தக்கது' என்பதுடன் மேலும் அம்முரண்கள் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விடுகின்றார் ஜோதிகுமார். 'இதன் காரணத்தினாலேயே ,இக்கட்டுரைத்தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன' என்றும் கூறுகின்றார். இம்முரண்களைப்பற்றி விரிவாகத் தர்க்கத்தைத் தொடர்ந்திருந்தால் அது மிகவும் பயனுடையதாகவிருந்திருக்கும். பாரதியின் முரண்கள் எல்லாம் அவனது தேடலையும், வளர்ச்சியையும் , அவ்வளர்ச்சியினூடு அவனிடம் ஏற்பட்ட முதிர்ச்சியினையும், தெளிவினையும் வெளிப்படுத்துவதாக அத்தர்க்கம் அமைந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பத்தைத் தவற் விட்டுவிட்டார் ஜோதிகுமார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் , விரிவாக இம்முரண்கள் பற்றிய தர்க்கத்தை அவர் தொடர்வார் என்று எதிர்பார்ப்போம்.
அடுத்து அவர் கவனம் 24 வயது இளைஞனான பாரதியின் மானுட இருப்பு, மரணம், சிறை, ஆங்கிலேயரின் மத ரீதியிலான பிரித்தாளும் தந்திரம், மிதவாதப் போக்கில் செயற்பட்டுக்கொண்டிருந்த இந்திய காங்கிரஸின் அம்மிதவாதப் போக்கிற்கு எதிரான விமர்சனங்கள், அவன் மீதான திலகரின் தீவிரவாதப் போக்கின் தாக்கங்கள், அக்கால உலக அரசியலில் அவனுக்கிருந்த் அறிவு, தெளிவு, ருஷய புரட்சியின் அடித்தளம் பற்றிய புரிதல் போன்றவற்றில் திரும்பி விடுகிறது. அவை பற்றிய விபரிப்புகளிலும், கேள்விகளிலும் மூழ்கி விடுகின்றது. இவை பல தகவல்களை அறிமுகப்படுத்தவும் செய்கின்றன.

இருபத்திநான்காம் வயதில் பாரதி:: ஆன்ம உணர்ந்திறன்
இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் 'மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.' என்று குறிப்பிடுகின்ரார். இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. அது - ஜோதிகுமார் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதுதான். மார்க்சியவாதிகள் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்பதில்லை. அவர்கள் பொருள்முதல்வாதிகள். ஆன்மா என்று ஒன்றிருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. உண்மையில் ஆன்மா என்று இங்கு ஜோதிகுமார் கருதுவது எதனை?
ஆன்மா என்று ஜோதிகுமார் கருதுவது , பொருள்முதல்வாதிகள் கருதுவது போல் , உடலிலிருந்து தனித்து இயங்குமொன்றினை அல்ல , மாறாகச் சிந்தையைத்தான். அதனைத்தான் இந்நெடுங்கட்டுரையில் மூன்றாம் ப்குதியில் வரும் இவ்வரி புலப்படுத்துகின்றது: "ஓன்று அவனது ஆன்மாவில் (சிந்தையில்) தட்டுப்படக் கூடிய முரண்''
இங்கு பாரதியார் ஆன்மாவுக்கு இன்னுமோர் அர்த்தமாகச் சிந்தை என்று கருதுவதையும் அறிய முடிகின்றது. சிந்தை என்பது மார்க்சியவாதிகளின் கருத்துப்படி பொருள்வயமான மூளையின் செயற்பாடு. மூளையில்லையேல் சிந்தையில்லை என்பது அவர்கள் கருத்து.மாறாகக் கருத்துமுதல்வாதிகளோ ஆன்மா என்பது உடலிலிருந்து வேறானது என்று கருதுவர்.
இப்பகுதியில் பாரதியார் மதம், கடவுள் பற்றிய தேடல்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. கடவுள்கள் பலர் இருப்பதை விவேகானந்தரைப் போல் பாரதியும் நிராகரிக்கின்றான். பாரதியார் மீதான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விரிவாக ஆராயப்படுகின்றது. பிரம்மம் என்னும் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படை . அதே சமயம் இவ்விதமான கடவுள், மதம் பற்றிய தேடல்கள் மானுட சமுதாயத்திலிருந்து விலகி, தனித்து , தவங்களில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது. அது அங்கிருந்து இறங்கி வந்து மக்களுடன் கலந்து நிகழ்வதாக இருக்க வேண்டுமென்பது பாரதியின் நிலைப்பாடு. இதனை அவர் எவ்வாறு வந்தடைந்தார்?

- வேதாரணியேசுவரர் ஆலயம் -
கட்டுரை ஆசிரியர்: கலாநிதி செல்லத்துரை சுதர்சன். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர். ஆய்வாளர், கவிஞர், விமர்சகர். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர். அவரது முக்கியமான கவித்தொகையான ‘தாயிரங்கு பாடல்கள்’ என்பதை மணற்கேணி வெளியிட்டுள்ளது.
அறிமுகம்
‘அப்பால் நிலம்’ என்ற கருத்தாக்கம் ‘கடலாற் பிரிவுண்ட நிலப்பகுதி’ என்பதையே இங்கு குறித்துநிற்கிறது. ‘அப்பால் நிலக்கோயில்’ என்பது ‘கடலாற் பிரிவுண்ட நிலப்பகுதியில் அமைந்த கோயில்’ என்பதைக் குறிக்கிறது. கப்பலசைவின் காரணமாக, அப்பால் நிலத்துக் கோயில்களுடன் சமய பண்பாட்டுத் தொடர்புகளைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்ப் புலவர்களும் புலமையாளர்களும் பேணியுள்ளனர். யாழ்ப்பாணத்தவரின் வேதாரணியப் பாரம்பரியம், அதனுடனான ஊடாட்டம், அது குறித்த இலக்கியப் பங்களிப்பு ஆகியவை பற்றிய விரிவான ஆய்வுக்கான முன்வரைபு முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது. அந்த வகையில், இப்பொருள் குறித்த ஓர் அறிமுக எழுத்தாக இது அமைகிறது.
அப்பால் நிலக்கோயில்களும் பண்பாட்டு உறவும்
சைவமறுமலர்ச்சி இயக்கம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றகாலத்தில் தமிழ்நாட்டுடனும் இந்தியாவின் பிறபகுதிகளுடனும் ஈழத்தவர் மேற்கொண்ட சமய, சமூக, பண்பாட்டுத் தொடர்புகளும் அவற்றால் விளைந்த நன்மைகளும் ஏராளமானவை.
தமிழகத்தில் உள்ள பல ஆலயங்கள் யாழ்ப்பாணத்தவருடன் மிகநெருக்கமானவை. குறிப்பாகச் சிதம்பரம், வேதாரணியம், இராமேஸ்வரம், திருச்செந்தூர், எட்டிகுடி முதலாய இடங்களுடன் யாழ்ப்பாணத்தவருக்கு நீண்டகால ஊடாட்டம் உள்ளது. வேதாரணியம் ஈழத்தவருக்குரியது என்பது வரலாற்று ரீதியாகவும் ஆவணங்களின் அடிப்படையிலும் நிறுவப்பட்ட ஒன்று. யாழ்ப்பாணம் வரணி கரணவாய் ஆதீனமே வேதாரணியத்தை நிர்வகிக்கும் முழுமையான உரித்துடையது.

தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை. அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை. குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும். சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க முதிய மானுடருக்கும் பிடிக்கும். இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.
அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' 23ஆம் வயதில் பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.

முன்னுரை
கம்பர் இயற்றிய இராமாயணத்தில் கூறப்படும் கதாப்பாத்திரங்களுள் முக்கியமானவர்களுள் ஒருவர் ஜனகர். இவர் மிதிலாபுரியின் மன்னர். சீதையைக் கண்டு எடுத்து வளர்த்தவராவார். மாவீரர். குடிமக்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.பெரு வேள்விகள் செய்தவர். கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சி குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கம்பராமாயணத்தில் ஜனகர்
ஜனகர் மிதிலையின் மன்னர். சீதையைத் தன் மகளாக எடுத்து வளர்த்தவர். நாட்டு மக்களைத் தன் கண் போல் காப்பவர். இவருக்குத் துணையாக தேவர்களே தம் படைகளை அனுப்பி வைப்பர். அத்தகைய ஆற்றல் மிக்கவர். இராமன் வில்லை வளைத்ததைக் கண்ட ஜனகர் மிக்க மகிழ்ச்சி பொங்க நாட்டு மக்களுக்கு தேவையான பெருஞ்செல்வத்தை வாரிச் செல்லக் கூறினான்.மன்னன் ஜனகனின் ஆணைப்படி அவனது பெருஞ் செல்வத்தை மிதிலைவாழ் மக்கள் வாரிச்சென்றார்கள்.
“வெண்நிற மேகம் மேன்மேல்விரி கடல்பருகுமா போல்
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார்“
(கார்முகப்படலம் 653)
கம்பர் ஜனகனை அறிமுகப்படுத்தும்போது ' மருதம் சூழ் மிதிலையர் கோன்' என்கிறார். நிலவளம், நீர்வளம் முதலிய பல வளங்களை உடையது மருதநிலப்பகுதி.
மிதிலையின் சிறப்பு
விசுவாமித்திரர், இராம இலட்சுமணனுடன் மிதிலை நகர வீதியில் வரும் போது நகரின் சிறப்புகள் பேசப்படுகின்றன. நடன மங்கையர் நடனமாடும் பொன்னாலான நடன சாலைகளை அவர்கள் கண்டார்கள். குற்றம் உடைய பிறப்புகளைப் போல மேலும் கீழுமாய் போவதும் வருவதுமாகிய தன்மையுடைய குற்றமற்ற பிறப்புகளைப் போல மேலும் கீழுமாய் போவதும் வருவதுமாகிய தன்மையுடைய பாக்கு மரங்களிலே பிணைக்கப்பட்டுள்ள ஊஞ்சலிலே, பெண்கள் தம்மைச் சுற்றிலும் ஆரவாரத்தோடு மேலெழுந்த வண்டுகள் ஒலித்து நிற்க, ஆடவர்களின் மனதோடு ஆடுவதை அவர்கள் கண்டார்கள். அளவில்லாத இரத்தினங்கள், பொன்முத்துக்கள் கவரிமானின் வால், காடுகளில் உண்டாகும் வகிர்க் கட்டைகள், மயில் தோகைகள், யானை தந்தங்கள் ஆகியவற்றை வயல்களுக்கு வரப்புகளை அமைத்து முடிக்கும் உழவர்கள் குவித்து வைக்குமாறு இரு கரைகளிலும் பரவச் செல்கின்ற காவிரி நதியைப் போன்ற கடைவீதிகளை அவர்கள் கண்டார்கள். மகளிர் வீணை வாசிப்பதைக் கண்டார்கள்.

* ஓவியம் - AI
பிள்ளைப்பருவத்துக்கும் (childhood) வளர்ந்தோர் என்ற நிலைக்கும் (adulthood) இடையிலான காலம் வளரிளம்பருவம் எனப்படுகின்றது. இதன் தொடக்கமும் முடிவும் பிள்ளைக்குப் பிள்ளை வேறுபடலாம். ஒன்பது வயது முதல் 25 வயது வரையான காலத்துக்கிடையில் இப்பருவம் அமைந்திருக்கும்.
வளரிளம்பருவத்தினருடன் தொடர்பாக உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியே பொதுவாக பேசப்படுவதுண்டு. இந்தக் கட்டுரை வளரிளம்பருவத்தினர் எதிர்நோக்கும் சவால்களையும், அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களையும் அவற்றை அவர்கள் மேவுவதற்கு வளர்ந்தோர் எவ்வகையில் உதவிசெய்யலாம் என்பதையும் ஆராய்கின்றது.
ஒருவரின் உளவியல்ரீதியான நலத்துக்கும், மேம்பாட்டுக்கும், குடும்பத்தவராலும், சூழவுள்ள சமூகத்தவராலும் அங்கீகரிக்கப்படும் ஒருவராக நான் இருக்கிறேன் (belonging), என் இருப்பு முக்கியமானது (significance) என்ற நம்பிக்கை அவசியமானது என்கின்றனர் உளவியலாளர்கள். குழந்தைகளினதும், வளரிளம்பருவத்தினரதும் உளவியல்ரீதியான இந்தத் தேவைகள் பூர்த்திசெய்யப்படும்போது, பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். அந்த உணர்வு அவர்களின் சுயமதிப்பை மேம்படுத்துகிறது.
]
முன்னுரை
நம் பண்பாட்டுக் கலாச்சாரத்திற்கும் அமைதி மற்றும் நம்பிக்கையின் சின்னமாகவும் திகழ்வது கோயில்கள். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற உலகநீதியின் அடிகள் கோயிலின் இன்றியமையை எடுத்துரைக்கிறது. அவ்வகையில் மதுரைக்குத் தென்மேற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில் தே.கல்லுப்பட்டி (தேவன்குறிச்சி கல்லுப்பட்டி) பேருந்து நிலையத்திலிருந்து வலப்புறமாக உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயிலின் தலவரலாறு, கல்வெட்டுக்கள், கல்வெட்டுக்களின் அமைவிடம் மற்றும் அவற்றில் இடம்பெற்றுள்ள செய்திகளை எடுத்துரைப்பதாக இவ்வாய்வு கட்டுரை அமைகின்றது.
தல வரலாறு
அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில் ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. தே.கல்லுப்பட்டியை அடுத்த ஆவுடையாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தேவர், தனது மாடுகளைத் தினமும் இந்த தேவன்குறிச்சி மலையை ஒட்டிய இடங்களில் மேய்த்து வந்திருக்கிறார். மாடுகள் எல்லாம் சரியான அளவு பால் கொடுத்து வர, ஒரே ஒரு மாடு மட்டும் மிகக் குறைந்த அளவு பால் கொடுத்து வந்தது.
அவர் மாட்டைப் பின் தொடர்ந்து செல்ல அந்த மாடு மலையின் நடுவிலிருக்கும் ஓரிடத்தில் நிற்க, அதன் மடுவிலிருந்து பால் தானாக சுரந்தது. கோபம் கொண்டு அதைச் சத்தம் போட்டு விரட்டி அடித்து விட, மாடு தடுமாறி அங்கிருந்த கல்லின் மீது காலை வைத்து மிதித்துவிட்டு ஓடியது. மாடு பால் சுரந்த இடத்தைப் பார்த்த மாட்டின் உரிமையாளர் திகைத்துப் போனார். அந்தக் கல்லிலிருந்து இரத்தம் வடிந்தது. அந்தக் கல்லைச் சுற்றியுள்ள மண்ணை அகற்றிவிட்டுப் பார்த்தார். அங்கு லிங்க வடிவமாக சிவபெருமான் எழுந்தருள் செய்தார்.

- பேராசிரியர் சுனில் ஆரியரத்னா -
பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவின் இயக்கத்தில்வெளியான திரைப்படம் 'பத்தினி'. 'நாம கடவுள்' புகழ் பூஜா உமாசங்கர் கண்ணகியாக நடித்திருக்கும் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிஙகளத்திரைப்படம்.
பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவைச் (Sunil Ariyaratne) சிங்களக் கலை,இலக்கிய உலகு நன்கறியும். கவிஞர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதாசிரியர், பாடலாசிரியர் எனச் சிங்களத்திரையுலகில், சின்னத்திரையுலகில் நன்கறியப்பட்ட ஒருவர்.
காவிய மாந்தர்களை வைத்து இவர் உருவாக்கிய சிங்களத்திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றவை. சிலப்பதிகாரக் கதையை மையமாக வைத்து இவர் எடுத்த சிங்களத்திரைப்படமான 'பத்தினி' பெற்ற வரவேற்பைத்தொடர்ந்து இவர் சித்தார்த்தரின் (புத்தர்) மனைவியான யசோதராவை மையமாக வைத்து உருவாக்கிய Bimba Devi Alias Yashodhara என்னும் திரைப்படமும் 2018இல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கண்ணகியைத் தெய்வமாகக்கொண்டு வழிபடும் முறை சிங்கள , தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வருவதற்குச் சான்றாகக் கண்ணகி அம்மன் கோவில்கள் உள்ளன. சிங்கள மக்கள் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* ஓவியம் - AI -
எங்களூர்க் கடலில் ஒருகாலத்தில் மீன்கள் அளவுக்கு அதிகமாகக் கிடைத்தன. மீன்களின் வாசம் காற்றில் கலந்து, நம் மூச்சுக்கே ஒரு சுவை கொடுத்தது. தோணிகள் நீரில் வரிசைபோட்டு மிதந்துகொண்டிருந்த நாட்கள். அவற்றில் பிரபலமானவை பெரியடம்பர், காக்காமொட்டையன், சின்ன டெம்பர்… அவற்றின் பெயர்களை கேட்டாலே கடலின் கருப்பு நீரின் வாசனையும், வலையில் சிக்கிய மீன்களின் மினுமினுப்பும் நினைவுக்கு வரும். அந்த நாட்களில் அம்பா பாடல் என்று ஒன்று இருந்தது. வலை இழுக்கும் போது பாடுவார்கள். அந்தப் பாடல் கடலின் அலைக்குள் கலந்து, மீன்களை கவர்ந்தது போல இருந்தது.
இப்போது அந்த காட்சி அரிது. மீன்கள் இல்லாமல் போனது போலவும், பாடல்கள் மறைந்து போனது போலவும். பெரியடம்பர் வயதானவர். அவரது கைகளில் ஒருகாலத்தில் வலை ஓசையோடு இருந்த வலிமை, இப்போது வெறும் நினைவாகவே உள்ளது. காக்காமொட்டையன், பழைய நாட்களில் போல பாடாமல், கடற்கரை வாசலில் அமர்ந்து அமைதியாகக் கடலை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார். சின்ன டெம்பர்… யாரும் அவர் எங்கே சென்றார் என்று சரியாகச் சொல்லவில்லை. சிலர் அவர் கடலில் மூழ்கினார் என்பார்கள், சிலர் அவர் மீன்களுடன் வாழ்கிறார் என்பார்கள்.
ஓர் இரவு, கடல் பேசவில்லை. ஆனால் பாடியது. மழை நின்றுவிட்டது. கடல்மேல் பச்சை மின்சாரம் ஓடும் மாதிரி ஒளி பரவியது. அந்த ஒளிக்குள் யாரோ தோணியில் நின்றபடி வலை வீசிக் கொண்டிருந்தார். அது ஒரு நிழல் மாதிரி இருந்தது. அவர் அம்பா பாடலை மெதுவாகப் பாடினார். பாடலின் வார்த்தைகள் காற்றில் கலந்து, அலை மீது அலை அடித்தது.

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளியான நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இந்நாவல் விடுக்கும் முக்கியமான அறைகூவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்;
1.பஞ்சமர் என்னும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரவினர் தம் சமூக விடுதலைக்காகத் தம்மை அடிமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருக்கும் சமூகத்தொழில்களைச் செய்வதிலிருந்து வெளிவரவேண்டும். அவ்வகையான தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தாம் செய்ய வேண்டும் என்னும் நிலை மாற வேண்டும். மேனாடுகளில் எவ்விதம் மானுட சமுதாயத்துக்கு வேண்டிய பல் தொழில்களையும் கற்று அவ்வகையான தொழில்களைச் செய்கின்றார்களோ அவ்விதமே அவ்வகையான தொழில்கள் செய்யப்பட வேண்டும். இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சிகை அலங்காரத் தொழிலாளியான முத்தனும், அவனது மனைவியும் தாம் வாழ்ந்த குடிசையிலிருந்து புலம் பெயர்கின்றார்கள். புலம் பெயர்ந்து நாட்டின் இன்னுமொரு பகுதிக்குச் செல்கினறார்கள். அவர்கள் சென்றதும் அவர்கள் வாழ்ந்த குடிசை சமூக மாற்றத்தை . விடுதலையை விரும்பும் ஏனைய தமிழ்ச் சமூக இளைஞர்களால் எரிக்கப்படுகின்றது. அந்த எரித்தல் என்பது ஒரு குறியீடு. 'குடிமைத்தொழில் செய்யும் குடிமகன் ஒருவன் வாழுவதற்கு இனி அந்தக் குடிசை அங்கு வேண்டியதில்லைத்தான்' என்று நாவல் முடிகின்றது.

யப்பானிய உணவும் அவர்கள் பூங்கா போல் கலாச்சாரத்தின் ஒரு கூறாகும் . ஆரம்பத்திலிருந்தே யப்பானிய வீடுகள் சிறியவை. அவர்கள் விருந்தினர்களை வீட்டில் உபசரிப்பதில்லை. உணவகங்களிற்கே அழைப்பார்கள் . மேலும் அவர்கள் உணவகங்கள் சிறியன. ஆனால், ஏராளமானவை . ஒரு செய்தியில் 160,000 உணவகங்கள் டோக்கியோவில் என நான் அறிந்தேன் (In Tokyo alone, there are an estimated 160,000 restaurants—10 times as many as in New York.) இதை விட முக்கியமானது பத்திரிகையாளர்கள் ஒரு உணவகத்தைத் தேடிச் செல்வார்கள் அதேபோல் தீயணைப்பு படையின் ஒரு உணவகத்தை நோக்கிச் செல்வார்கள். ஒவ்வொரு உணவகமும் ஒவ்வொரு உணவுக்கு விசேடமானது அதாவது நமது பிராமணாள் தோசை கடை, ஆப்டீன் பிரியாணி கடை போல். தொடர்ச்சியாகப் போவதால் வாடிக்கையாளர்களும் உணவகத்தினருக்கிடையே ஒரு அறிமுகம் , அன்னியோன்னியம் உருவாகி உள்ளது.
தற்போது மேற்கு நாட்டு உணவுகள், இந்திய, சீன உணவுகள் என எல்லாம் உள்ளது.
இலங்கையில் ஒரு முறை சீனர்கள் இலவசமாகத் தந்த அரிசியை உட்கொண்டதால் வயிற்றுப்போக்கு உருவாகி, பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்தது. இலங்கை அரசு, சீனர்களின் தரங்குறைந்த உணவை வடபகுதியில் விநியோகித்தது என்ற பிரசாரம், கேக்கில் சீனி கலந்தது போல் பரவியது . இலங்கை அரசின் மேல் அக்காலத்தில் அதிக காழ்ப்புணர்வு உள்ளதால் மக்கள் நம்பி விட்டார்கள். ஊடகங்கள் செய்தியை , குழந்தைகள் ஊதிய பலூனை வாயில் எச்சி வடிய ஊதிப் பெருப்பித்தன.
- இளைஞன் எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை ... டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiiah) -
வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம். ஒன்று, காந்தியாலும் தாகூராலும் கவரப்பட்ட நிலையில், அவர் இளைஞனாய் இருந்த போது, தோன்றிய மனக்கசிவுகள். மற்றது, நேருவின் ஆசிர்வாதத்துடன், இலங்கை இந்திய காங்கிரசானது ஸ்தாபனமுற்ற நிலையில் வேலுப்பிள்ளை தொழிலாள சாரியுடனும் தொழிற்சங்கத்துடனும் இணைந்த ஒரு காலப்பகுதி. மூன்றாவது, திருமணம் முடிந்து, ஒரு குடும்ப மனிதனாகிவிட்ட ஒரு காலப்பகுதி.
தொழிற்சங்கத்தில் இணைந்து தொழிலாளர் அணியுடன் கட்டிப் புரண்ட காலப்பகுதியிலேயே (போலிஸ் வேனிலும் அடைப்பட்ட போது) முகிழ்த்து கிளம்பியதே ‘தேயிலைத் தோட்டத்திலே’ எனும் இந்நெடுங்கவிதை.
இக்காலத்தை ஒட்டி பிறப்பெடுத்ததே மற்றுமொரு காவியமான ‘உழைக்க பிறந்தவர்கள்’ (Born to Labour) என்னும் மலையக மக்களின் வாழ்வியல் சித்திரங்கள்.
இதன் பின்னரான காலப்பகுதியில், இவரது இறுதி எழுத்துக்களாகவே, ‘வீடற்றோர்’ அல்லது ‘நாடற்றோர்’ போன்ற நவீனங்கள் உருவாகியவை.
இந்த மாற்றங்கள் குறித்தே – முக்கியமாக – ‘தாகூரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த இளைஞன்’ என்று இவ் வேலுப்பிள்ளையை, வியக்கின்றார், ஜெக் மோகன்.
இப்பின்னணியில் வேலுப்பிள்ளையின் குடும்ப Photo அனேக விடயங்களை எமக்கு எடுத்துரைக்க வாய்ப்பளிக்கின்றது.

1. உருவமில்லா மனிதர்கள்
உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்
அவர்கள் எப்படி இருப்பர்
நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும்
இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா
புராணக் கதைகளில் எல்லாம் கேள்விபட்ட
மனக்கண்ணில் பதிந்துவிட்ட அந்த கொடூரமான
மிகப்பெரிய அரக்கன் போன்றா
கொன்றுவிடுவானோ என்ற பயத்தில்
நம்மை எதிர்த்து சீறும் சிறு பாம்பு போன்றா
பயமுறுத்தும் விஷமில்லாத அந்த
பாம்பின் காட்சியில் தெரியும் நாம் போன்றா
கழட்டி வைத்துவிட்ட மனசாட்சியோடு திரியும்
நாமும் அது போலவே


ஹிரோஷிமா நகரத்தின் நதிகளின் மேலே உள்ள பாலத்தில் நடந்தபடி, தற்போது நினைவுச் சின்னமாக இருக்கும் எலும்புக்கூடான (Atomic Bomb dome) என்ற ஒரு கட்டிடத்தைப் பார்த்தவுடன், எனது வயிற்றில் அமிலம் ஊற்றி வயிற்றில் நெருப்பு பற்றுவது போன்று எரிவைக் கொடுத்தது. லைவ் சஞ்சிகைக்காக (life Magazine) க்காக அனுப்பப்பட்ட ஜோன் ஹிசியின் (John Hersey) ஹிரோஷிமா என்ற நாவலின் சுருக்கம் ஏற்கனவே வாசித்திருந்தேன். அந்த நாவலில் 1946 ஆண்டு அமெரிக்காவிலிருந்து செய்திகளை சேகரிக்க சென்ற ஜோன் ஹிசி ( John Hersey), அணுக்குண்டு வெடித்தபோது அங்கு வாழ்ந்த ஆறு மனிதர்களை சந்தித்து அவர்களிடமிருந்து செவ்வியினைப் பெற்றார்.
அதன் பிரகாரம், அணுக்குண்டு வெடித்தபின் அவர்களது அடுத்த மூன்று நாட்களில் அவர்கள் அடைந்த அனுபவங்களை வைத்து ஹிரோஷிமா நாவலை எழுதினார். அவர்கள் ஆறு பேரில் , இரு வைத்தியர்கள் , எழுதுவினைஞர், யப்பானிய கிறிஸ்தவ பாதிரியார், ஜெர்மன் கிறிஸ்துவ பாதிரியார் மற்றையவர் யப்பானியத் தாயாகும். இந்த நாவல் அவர்களது மூன்று நாட்களை நமக்குத் தரும்போது இதயத்தை நிறுத்தி உறையப் பண்ணுகிறது.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் காலை 8.15 மணியளவில் அந்த அழிவுக்கு நேரம் குறிக்கப்பட்டது. அமரிக்க அதிபர் ஹரி ரூமன் கட்டளைப்படி சிறிய பையன் (Little Boy )என்ற பெயரில் அணுக்குண்டு போடப்பட்டது. தற்பொழுது உள்ள நினைவு கட்டிடத்தின் மேலாக வெடித்தது. அப்பொழுது அந்தக் கட்டிடத்தின் (Industrial Promotion Hall) இரும்பைத் தவிர மற்றைய எந்த கட்டிடப் பொருட்களும் அங்கு மிஞ்சவில்லை . போட்ட குண்டு ஆகாய வெளியில் நிலத்தில் இருந்து 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது- காரணம் நிலத்தில் வெடித்ததால் அதனது தாக்கம் சுற்றியுள்ள கட்டிடங்களால் குறைக்கப்படும்.

அனுபவங்களே சிலரை நம்முன் அறிமுகப்படுத்துகின்றன. சிலரை நண்பராக, சிலரை உறவினராக. சிலரை எழுத்தாளராக, கவிஞராக அறியச்செய்கின்றன. நடேசனை எனக்குத் தந்தது என் ஊர் உறவுமுறைதான். ஆனால், அவரது எழுத்துகள் எனக்குள் ஒரு புதிய உறவைப் பிறக்கச் செய்தன—ஒரு வாசகர்–எழுத்தாளர் உறவு. நடேசனின் பல நாவல்களை நான் வாசித்திருக்கிறேன். ஆனால், இந்த நாவல் தனித்துவம் வாய்ந்தது.
இது நம்மை ஒரு மறக்கப்பட்ட தீவுக்கு அழைத்துச் செல்கிறது. வளங்கள் குறைந்த, உறவுகள் குறைந்த, மக்கள் சத்தமும் கூட மெல்லியதாகத்தான் இருக்கும் ஒரு இனச்சூழலை; ஆனால் அந்த மண்ணின் வாசனை மட்டும் அழியாதது.

- இளைஞன் எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை - ... டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiiah) -

- 'இலங்கை தேயிலைத் தோட்டத்திலே' - மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் எழுத்தாளர் சக்தீ அ. பால ஐயா (சக்தீ அ.பாலையா) அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு பாக்கியா பதிப்பகத்தால் இரு பதிப்புகள் 1956, 2007 இல் வெளியிடப்பட்டன. மேலுமொரு பதிப்பு செய்தி பதிப்பகத்தால் 1969இல் வெளியிடப்பட்டது. -
முன்னுரை:
“அமர காவியம் இது” என ஆர்ப்பரித்து மொழிப்பெயர்த்துள்ள சக்தீ பாலையா கூறுவார்: ‘நான் எழுதியது வரிக்கு வரியிலான மொழிப்பெயர்ப்பல்ல. மன உந்துதலால் உதித்த கவிதைகள்’ (மேற்கோள்:திலகர்:சூரியகாந்தி:25.12.2023).
இக்கூற்றில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு என்றாலும் திரு.சக்தீ பாலையா அவர்களே இம் மொழிப்பெயர்ப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றார் என்பது அழுத்தமான உண்மையாகின்றது.
கீழே காணப்படும் மொழிப்பெயர்ப்பானது, அவரில் இருந்து சற்றே மாறுபட்டு, வித்தியாசமான ஒரு நடையில் தரப்படுகின்றது. ஒரு வேளை இது, வேலுப்பிள்ளையின் மூல நடையின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்றாய் இருக்கக்கூடும்.
1952இல், மலையக மக்களின் வாக்குரிமை பறிபட்டமைக்கு எதிராக, காங்கிரஸ், பிரதம மந்திரியின் அலுவலக வாயிற்படியில், காந்திய மோஸ்தாரில் ஒரு சத்தியாகிரகத்தை நடத்தியிருந்தது. கிட்டத்தட்ட 798,000 தொழிலாளர்களை அன்று கொண்டிருந்த மலையகம் இக் கொடுஞ்செயலுக்கு எதிராக, ஏன் வேலை நிறுத்தங்களில் இறக்கப்படவில்லை என்ற கேள்வி முக்கியமானதொன்று. வெறும் 6000 தொழிலாளர்களை மாத்திரமே, வேலை நிறுத்தம் அல்லாமல், வெறும் சத்தியாகிரகம் என்ற பெயரில் பங்குபற்ற செய்தமை ஒரு வரலாற்று கேள்வியாகின்றது.

எளிமை, சந்தநயம், அழகியல் சித்தரிப்பு என்ற பின்னணியில் அமைந்த கவிதைகள் கொண்ட தொகுப்பு தொடுவானம். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மரபின் தொடர்ச்சி மற்றும் நவின கருத்தியல் என்ற இரு புள்ளிகளை கொண்டமைந்துள்ளதை அறிந்தகொள்ள முடிகின்றது. வசன நடையில் எளிமையான சொற்களைக் கொண்ட கவிதைவரிகளில் உருவத்தில் மரபின் தொடர்ச்சியும் உள்ளடக்கத்தில் நவினத்தின் அதாவது, காலமாற்றதின் தேவை பற்றிய கருத்தியல் முன்னெடுப்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்றும் உயிர்புடன் இருக்கின்ற சமூகத்தின் சில புள்ளிகளை அடையாங்காட்டுவனவாக உள்ளன.
கவிதைகளில் இடம்பெற்றுள்ள சில வரிகளைக் காலச் சூழலுக்கு மட்டும் ஏற்றவை என்று கொண்டாலும் அவற்றில் ஏராளமான செய்திகள் சமகாலத்தின் தேவையாகவும் சமூகத்தின் அங்கலாய்ப்புகளை வெளிப்படுத்தி உள்ள ஆவணமாக அமைந்துள்ளதுள்ளன. இத்தகைய தன்மைகளைக் கொண்ட இப்பிரதி வாசிக்கின்ற பொழுது அவற்றில் சில கூறுகளை நாம் அடையாளம் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவற்றில் ஒன்று அழகியல் சார்ந்த விவரிப்புகள். இது எக்காலத்திற்கும் உரியதான ஒன்றாக விளங்குகிறது. அழகியலை வெளிப்படுத்தும்விதம் காலந்தோறும் தொடர்ச்சியாக மாறுதல்களைச் சந்தித்து வந்தாலும், அதன் உள்ளார்ந்த அகம் என்றும் நிலைபெற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அப்படிப் பார்க்கிறபொழுது கவிஞன் தான் கண்ட - தன் மனதைக் கவர்ந்திழுத்த அழகியலை எளிமையான சொற்களில் சொல்லிச் சென்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது.
சான்றாக,
‘’மாவின் பசுந்தளிர்கள் பனித்துளி தூவிடும் !
மலர்கள் பரப்பி உயிர்களைக் கூவிடும் !
பூவின் மதுநுகர்ந்து பொறிவண்டு பாடிடும் !
புதர்கள் தலை அசைத்துப் புன்சிரிப் பூட்டிடும்!
கூவிச் சிறகடித்து வரிச்சேவல் எழுப்பிடும் !
கொடுமை இருளகல ஒளி எங்கும் தாவிடும்!’’
என்ற முதல் கவிதை இயற்கையின் அழகை எளியச் சொற்களால் சித்தரித்துவிடுவதைப் பார்க்கலாம். என்றாலும், கவிதையின் இறுதிவரி கவனிக்க வேண்டியதாக உள்ளது. அந்த வரி ஒளி பற்றியதாக இருந்தாலும், அந்த ஒளியால் அகற்றப்படும் இருள் வெறும் இருளா? என்ற கேள்வி எழாமல் இல்லை. காரணம் அது ‘கொடுமை இருள்’ என்று சுட்டப்பட்டுள்ளது. இருள் என்பதன் பொருள் என்ன? இருள் யாருக்கு என்ன கொடுமை தந்தது என்பன போன்ற வினாக்கள் பின்னணியில் நாம் விரித்துப் பொருள் கொள்ளலாம். மேலும், எழுதப்பட்ட காலத்தில் மட்டுமன்றி இன்றும் புதுமையானதாகவே அவ்வரி உள்ளதை உணரலாம்.
Join Zoom Meeting | Meeting ID: 838 9328 0707 | Passcode: 2025

Join Zoom Meeting | Meeting ID: 885 9929 2299 | Passcode: 372549

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268


அண்மையில் தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கலைஞரும், எழுத்தாளருமான சோக்கல்லோ சண்முகநாதன் அவர்கள் முக்கியமான தமிழ்க் கலைஞர். வில்லுப்பாட்டும், நாடகம், எழுத்து, நடிப்பு எனப் பன்முகத்திறமை மிக்கவர். சிறந்த மரபுக்கவிஞரும் கூட. இவரது 'சோக்கல்லோ' நகைச்சுவைக் கதம்ப நிகச்சி மிகவும் புகழ்பெற்ற மேடை நாடகங்களிலொன்று. இலங்கையில் பல இடங்களில் 500 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட நாடகமிது. அதன் காரணமாகவே சோக்கல்லோ சண்முகம் என்றழைக்கப்பட்டவர். அந்நாடகம் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியில் , ஒரு சில மாறுதல்களுடன் ஒளிபரப்பப்பட்டது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். சோக்கல்லோ என்னும் அடைமொழியை இவருக்கு வழங்கிய இந்நாடகத்தை இவரைப்பற்றி அறிய விரும்பும் ஒவ்வொருவரும் முதலில் பார்க்க வேண்டிய நாடகமாக நிச்சயம் பரிந்துரைக்கலாம்.

கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை ஈழத் தமிழ் நாடக இலக்கியத்திற்கு தொடர்ந்து தனது பங்கினை ஆற்றிவருகிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த்துறை பேராசிரியரான சுவாமி விபுலானந்த அடிகள் ஒரு நாடக ஆசிரியரும் ஆவார்.' மதங்க சூளாமணி' என்கிற நாடக இலக்கண நூலை எழுதிய முன்னோடி இவர். மகாகவி பாரதி பற்றிய முதல் ஆய்வினையும் நடத்தியவர் என்பது நாம் அறிந்த செய்தி. பின்னர் வந்த தமிழ்த் துறை தலைவர்களான பேராசிரியர்கள் கணபதிப் பிள்ளை, வித்தியானந்தன், தில்லைநாதன், துரை மனோகரன், தற்போதைய தமிழ்த்துறை தலைவர் பிரசாந்தன் வரை அனைவரும் நாடக ஆசிரியர்கள் . சிங்கள நாடக முன்னெடுப்புகளும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்விப் புலத்தால் பெரிதும் அரவணைக்கப்பட்ட ஒன்று . இத்தகைய பாரம்பரிய பின்புலத்துடன் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஈழத்தமிழ் நாடக இலக்கியத்தை மையப் பொருளாக்கி ஐந்தாவது தமிழியல் மாநாட்டை கொரோனா பெருந்தொற்றின் போது 2020 ஆம் ஆண்டில் நடத்தியது. இதற்கான கட்டுரைகள் துறைசார்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டன.தமிழ்நாட்டு நாடகத்திற்கும் ஈழத் தமிழ் நாடகத்திற்கு இடையேயான பிணைப்பினை நினைவு கூறும் வகையில் தமிழகத்து நாடகச் செயற்பாட்டாளர்களான வெளி ரங்கராஜன், பிரஸன்னா ராமஸ்வாமி, பிரளயன் கி.பார்த்திபராஜா, ஆர். ராஜு ஆகியோர் ஜூம் வாயிலாக அரங்கத் தலைமை உரையை அழைப்பின் பேரில் நிகழ்த்தினர். நாடக ஆர்வலனாக நானும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினேன். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட கலாநிதி செல்லத்துரை சுதர்சன் ,திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அவை அனைத்தையும் ஹஈழத்தில் தமிழ்நாடக இலக்கியம்’ என்கிற நூலாக தொகுத்துள்ளனர்.
ஈழ நாடக அரங்கினதும் கல்விப்புலத்தினதுமான முக்கிய அடையாளமாக விளங்கும் பேராசிரியர் சி.மௌனகுரு இம்மாநாட்டின் துவக்க உரையை நிகழ்த்தியுள்ளார். ஈழ நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டு நாடகம் பற்றியும் அவர் வரலாற்றுப் பார்வையுடன் சுருக்கமாகவும் செறிவுடனும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். நாடகம் பிரதானமாக ஆற்றுகை வடிவம் என்றாலும் அது இலக்கியப் பிரதியாகவும் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்த இலக்கியப் பாரம்பரியம் நம்மிடையே இருந்தபோதிலும் நாடகம் பற்றிய நல்லெண்ணங்கள் வளராததன் காரணமாகவே அதன் வரலாறும் பிரதிகளும் தொலைந்து போனதை குறிப்பிடுகிறார். செவ்விலக்கியங்கள் நாடகப் பிரதிகளை தம்முள் கொண்டுள்ளன என்பதை தெரிவிக்கும் அவர் நாடகமாகவே இலக்கிய கர்த்தாக்கள் அவற்றை எழுத முன்வராதது பற்றிய தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். “ அது கம்பராமாயணம் அன்று. அது ஓர் கம்ப நாடகமே. கம்பன் நாடகம் எழுதியிருப்பின் தமிழருக்கு காளிதாசன் போல ஒரு நாடக ஆசிரியன் கிடைத்திருப்பான்” என்கிறார். கூத்துப் பனுவல்களாக பள்ளு, குறவஞ்சி நூல்கள் 16, 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே நம்மை தொடர்வன என்பதைக் கூறிவிட்டு பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் நவீன தமிழ் நாடக இலக்கியத்தின் தோற்றுவாய் என்று குறிப்பிடுகிறார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, சுவாமி விபுலானந்தர் ஆகியோரைத் தொடர்ந்து சீர்திருத்த கருத்துகளை உள்ளடக்கிய வசனங்கள் புனைகதை எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்கள், இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் ராமானுஜம், நா.முத்துசாமி, மு.ராமசாமி, இன்குலாப் ஆகியோர் நாடகப் பிரக்ஞையுடன் எழுதிய நாடகங்கள் ஆகியவற்றையும் நாடக இலக்கியத்தின் தொடர்ச்சியாகக் கருதுகிறார். இப்போக்குகளுக்கு இணையாக ஈழத்தமிழ் நாடக இலக்கியங்களின் வளர்ச்சி பற்றியும் எழுதியுள்ளார். பேச்சோசை நாடகங்கள், கவிதை நாடகங்கள், அபத்த வாத நாடகங்கள், சிறார் நாடகங்கள், பெண்ணிய நாடகங்கள் என்று பலதரப்பட்ட போக்குகளையும் இதில் அறிமுகம் செய்கிறார். மேலைத் தேய மரபுகளின் வழிவந்த சிந்தனைகளின்பாற்பட்டவற்றை நாம் கண்மூடித்தனமாக அணுகாது விமர்சனப் பார்வையுடன் நமக்கானவற்றை அடைய வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் மௌனகுரு.