
6
இராஜ அரியரத்தினத்தின் அழகுவின் கதையை தமிழுக்கு கொண்டுவந்த (“சேதுப்பாட்டி”) முயற்சிக்குப் பிறகு, அழகுவின் ஆங்கிலக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கான அடுத்த முக்கிய முயற்சியாக 1973ஆம் ஆண்டு மல்லிகை மார்ச் மாத இதழில் (அழகுவின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்ட இதழ்) அழகுவின் The Scholar என்ற ஆங்கிலக் கதை “பட்டதாரி மாணவன்” என்ற தலைப்பில் ராஜஸ்ரீகாந்தனால் மொழிபெயர்க்கப்பட்டது.
அக்காலகட்டத்தில் ராஜஸ்ரீகாந்தன் அவர்களின் கையில் கிடைத்த அழகுவின் நிறைவேறாத குறுநாவலான Mr. Moon மொழிபெயர்ப்பு 1975–1976 மல்லிகை இதழ்களில் வெளிவந்தது. ஆனால் Mr. Moon இன் ஆங்கிலப் பிரதியை நமக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. இதுவரை அது ஆங்கிலத்திலோ தமிழிலோ நூலுருவம் பெறவில்லை.
1999ஆம் ஆண்டு ஜூன் மாதம், ராஜஸ்ரீகாந்தன் அழகுவின் 12 சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து நீதிபதியின் மகன் என்ற பெயரில் வெளியிட்டார். அதில் மொழிபெயர்ப்புத் துறை பற்றிய ராஜஸ்ரீகாந்தனின் விரிவான குறிப்பும், மேமன்கவியின் அட்டைக் குறிப்பும் இடம்பெற்றன. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தும் வீரகேசரியில் பணிபுரிந்தும் வந்த சூரியகுமாரி அந்த மொழிபெயர்ப்பு நூலைப் பற்றி ஒரு விமர்சனத்தையும் எழுதியிருந்தார்.
அத்தொகுப்பில் இடம்பெற்ற அழகுவின் “கணிதவியலாளன்” (The Mathematician) என்ற தமிழ் மொழிபெயர்ப்புக் கதை பல இலக்கிய இதழ்களில் மறுபிரசுரமாகியுள்ளது.இக்கட்டுரை ஆசிரியரின் தயாரிப்பில், 1991ஆம் ஆண்டு தமிழக திருப்பூரில் இருந்து சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கனவு 17வது இதழில், ராஜஸ்ரீகாந்தன் மொழிபெயர்த்த “கணிதவியலாளன்” முதன்மைக் கதையாக இடம் பெற்றது.இவ்வாறு, ஒரு தொகை அழகுவின் கதைகள் ராஜஸ்ரீகாந்தனின் மொழிபெயர்ப்பு முயற்சியால் நமக்குக் கிடைத்தன.
7.
கலைமாணித் தேர்வின் பரீட்சை காலத்தில், செல்வி உமாபாலசிங்கம் என்ற இளம் ஆய்வாளர் அழகு சுப்பிரமணியம் படைப்புக்கள் – ஓர் ஆய்வு என்ற ஆய்வேட்டை சமர்ப்பித்தார்.
(இந்நூல் ஆய்வேட்டை மிகுந்த சிரமத்துடன் கனடாவிலிருந்து என் பார்வைக்காக அனுப்பியிருந்தார். அவருக்கு எனது நன்றிகள் — மேமன்கவி.)இவ்வாய்வேட்டில் உமாபாலசிங்கம், அழகுவை முன்வைத்து அவரது வாழ்வு, அவரது ஆங்கிலச் சிறுகதை உலகில் பங்களிப்பு, அவரது சமூகப் பார்வை, காலனித்துவ–பின்காலனித்துவ காலகட்ட யாழ்ப்பாணச் சமூகத்தைப் பற்றிய அவரது பார்வை, குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவிய சமூகநிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாக ஆராய்கிறார்.மேலும், பெரும்தொகை அழகுவின் கதைகளை மொழிபெயர்த்த ராஜஸ்ரீகாந்தனின் முயற்சிகளைப் பற்றிய விமர்சனத்தையும் இந்த ஆய்வேட்டில் முன்வைக்கிறார்.
இலங்கையில் அழகுவைப் பற்றிய விரிவான பல்கலைக்கழக மட்டத் தமிழ் ஆய்வாக இது அமைந்தது.
2003ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நீதிபதியின் மகன் இரண்டாவது பதிப்பாக வெளிவந்தது.
2003ஆம் ஆண்டு மல்லிகை இதழ்களில் ஆ. கந்தையா அவர்கள் தொடர்ச்சியாக மூன்று இதழ்களில் அழகுவைப் பற்றி மிகச் சிறப்பான கட்டுரைகளை எழுதியிருந்தார். அவர் ஆங்கில இலக்கியப் புலமையாளர். இலங்கைச் சூழலில் அழகுவை ஆங்கிலத்தில் வாசித்தவர்களில் அவரும் ஒருவர். அவர் அழகுவைப் பற்றிச் சில முக்கியமான கருத்துகளை முன்வைத்தார்.
ஈழத்து ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளரான அழகு சுப்பிரமணியம் இலங்கைத் தமிழ்ச் சூழலில் காலப்போக்கில் ஏன் மறக்கப்பட்டார் என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
அழகு ஆங்கிலக் கலாசாரத்தில் வாழ்ந்தபோதும், தனது கதைகளில் யாழ்ப்பாணத்து மண், மக்கள், கலாசாரம் மற்றும் வர்க்க–சாதி முரண்பாடுகளை முதன்மையாகக் கையாண்டார் என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும், மேலைநாட்டினர் முன்வைத்த அழகுவின் கதைகளைப் பற்றிய கருத்துகளையும் உறுதிப்படுத்துகிறார்.
அழகு சுப்பிரமணியம் உலகப்புகழ் பெற்ற சிறுகதை ஆசிரியர்களான அன்டன் செக்கோவ் போன்றவர்களின் மேன்மையான கிண்டல் மற்றும் நளினமான கதைச் சொல்லும் பாங்கைக் கொண்டிருந்தார். எளிமையான கருப்பொருளைக் கொண்டு வலிமையானச் சிறுகதைகளை உருவாக்குவதில் வல்லவராக இருந்தார்.
“தனிவிளைவு” (Single Effect) மற்றும் நிகழ்புலக் கட்டவிழ்த்தல் போன்ற நவீன சிறுகதை உத்திகளை தனது ஆக்கங்களில் பயன்படுத்தியிருந்தார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு அழகுவைப் பற்றிய விரிவான விமர்சனப் பார்வையை ஆ. கந்தையா தனது மூன்று கட்டுரைகளில் எடுத்துச் சொல்லியுள்ளார்.
உமா பாலசிங்கத்தின் ஆய்வு ஒரு பார்வை என்றால், அழகைப் பற்றிய ஆ. கந்தையாவின் பார்வை இன்னொரு வகையானது எனத் தெரிகிறது.
8
ராஜஸ்ரீகாந்தனின் தமிழ்மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்குப் பிறகு, இலங்கையில் மேலும் சிலர் அழகுவின் கதைகளை தமிழில் மொழிபெயர்க்க முனைந்தனர்.
அந்த வகையில், இலங்கைச் சேர்ந்த சம்பவி சிவாஜி — ஆங்கில மாணவி மற்றும் மொழிபெயர்ப்பாளர் — 2013ஆம் ஆண்டு அழகுவின் Professional Mourners என்ற கதையைக் “கூலிக்கு மாரடிப்பவர்கள்” என்றப் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.
அடுத்து 2014ஆம் ஆண்டு அழகுவின் The Mathematician கதையை “கணிதவியலாளன்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.
அவ்விரு மொழிபெயர்ப்புகளையும் சம்பவி சிவாஜி தனது Drizzles from My Pen என்ற வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தார்.
அடுத்து கெக்கிறாவைச் சேர்ந்த சுலைஹா — ஆங்கில மொழி ஆசிரியை மற்றும் மொழிபெயர்ப்பாளர் — அழகுவின் Professional Mourners கதையை தமிழில் மொழிபெயர்த்து முகநூலில் வெளியிட்டார்.
9
2011-2020 ஆம் காலகட்டத்தில் இலங்கை கல்விப் பொதுத்தராதர (உயர்தர) ஆங்கிலப் பாடத்திட்டத்தில் அழகுசுப்ரமணியத்தின் ‘புரொபஷனல் மௌனர்ஸ்’ (Professional Mourners) சிறுகதை சேர்க்கப்பட்டதன் முன்னிட்டு, மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ருஹுணு பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியர் E.A. காமினி பொன்சேகா அவர்களுக்கு,சந்தர்ப்பம் கிடைத்தது. அழகுவின் வாழ்வு மற்றும் படைப்புகள் பற்றி அறியும் அவருக்கு ஆரவம் ஏற்பட்டது.
. அக்கதையை ஒன்றே வைத்து Servile Mourning for the Powerful: A Critical Reading of “Professional Mourners” by Alagu Subramaniam என்ற தலைப்பில் விரிவான ஆய்வினை 2018 ஆம் ஆண்டு www.academia.edu என்ற இணையத் தளத்தில் வெளியிட்டார்.
பேராசிரியர் EA காமினி பொன்சேகா எழுதிய, அழகு சுப்பிரமணியத்தின் "Professional Mourners" (தொழில்முறை ஒப்பாரி வைப்பவர்கள்) என்ற சிறுகதை பற்றிய விமர்சன ஆய்வின் சுருக்கம்:
கதைக்கரு மற்றும் பின்னணி
காலமும் களமும்: 1960-களின் இலங்கையின் வடக்கு மாகாணம் (யாழ்ப்பாணம்).
மையப்பொருள்: மேல்தட்டு வர்க்கத்தினர் தங்களது சமூக அந்தஸ்தையும் போலிக் கௌரவத்தையும் காட்டுவதற்காக, இறுதிச்சடங்குகளில் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஒப்பாரி வைக்கச் செய்யும் 'போலித்தனமான கலாச்சாரத்தை' இக்கதை விமர்சிக்கிறது.
கதையின் முக்கிய ஆய்வுப்பிரிவுகள்
குழந்தையின் பார்வை: பெரியவர்களுக்குத் துக்கமான மரணச் சூழல், ஒரு சிறுவனுக்குப் பரபரப்பான, வேடிக்கையான ஒரு சமூக நிகழ்வாகவும் சாகசமாகவும் காட்சியளிக்கிறது.
மாமாவின் தற்பெருமை: கதையில் வரும் மாமா (ஒரு பள்ளி ஆசிரியர்) தன்னை இறுதிச்சடங்கின் நிர்வாகியாக நினைத்துக்கொண்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வெற்று மனிதராகச் சித்தரிக்கப்படுகிறார்.
அதிகாரத்தின் கொடுமை (ஒப்பாரி வேட்டை): மாமா தனது வர்க்க ஆதிக்கத்தால் ஏழை மீனவப் பெண்களை மிரட்டுகிறார். அன்றுகாலைதான் சொந்தத் தாயை இழந்த இரு சகோதரிகளை, அவர்களின் சொந்தத் துக்கத்தை மதிக்காமல், மிரட்டி இழுத்துவந்து தனது அத்தையின் உடலுக்கு அழ வைக்கிறார்.
ஒப்பாரி எனும் நாடகக் கலை: கூலிக்கு வந்த பெண்கள் அங்கிருப்பவர்கள் பேசுவதைக் கேட்டு, உடனுக்குடன் வசனங்களை உருவாக்கி, இறந்தவரைப் புகழ்ந்து நாடகப் பாணியில் தீவிரமாக ஒப்பாரி வைக்கின்றனர். இது குடும்பப் பெருமையை வெளிச்சமிட்டுக் காட்ட உதவுகிறது.
திட்டமிட்ட நோக்கம் தோல்வி அடைதல்: மாமாவின் கொடுமை வெளியில் தெரிந்து அங்கிருந்தவர்கள் அவரைக் கண்டிக்கின்றனர். இறுதியில், பாராட்டுக்குக் காத்துக்கிடந்த மாமா அவமானத்தால் உடல்நலம் குன்றி நோயாளியாக மயங்கி விழுகிறார்.
ஏளன இரைச்சல்: மாமா வீழ்ந்த பிறகும் பெண்கள் தங்களது ஒப்பாரியை நிறுத்தாமல் அதிக ஆற்றலுடன் கத்துகின்றனர். இவர்களின் குரல் உயர்வு மாமாவின் வீழ்ச்சியை ஏளனம் செய்வது போல் அமைகிறது.
முடிவுரை
இக்கதை அதிகார வர்க்கத்தின் போலித்தனத்தையும், ஏழைகளின் உணர்வுகள் நசுக்கப்படுவதையும் விவரிக்கும் சிறந்த சமூக விமர்சனமாகும். தனிப்பட்ட முறையில் மாமா கொடுமைக்காரராக இருந்தாலும், அவர் சார்ந்த மேல்தட்டு சமூகம் தனது ஆடம்பரத்திற்காகவும், வெளிநாட்டுப் படிப்பு போன்ற குடும்பப் பெருமைகளை ஊருக்கு அறிவிக்கவும் இத்தகைய பயனற்ற, போலிச் சடங்குகளைத் தொடர்ந்து ஆதரிக்கிறது என்பதை அலாகு சுப்பிரமணியம் சுட்டிக்காட்டுகிறார்.
10
மெல்பேர்ன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அழகுவிள் பேத்தி திருமதி பிரமிளா துரைரத்தினம், அவருடைய ‘The Big Girl’ மறுபதிப்பின் இரண்டு பிரதிகளை காமினிக்கு அனுப்பி வைத்தார்.
2019 ஆம் ஆண்டு The Island பத்திரிகையில், அழகுவின் முதலாவது ஆங்கிலத் தொகுப்பான Big Girl என்ற தொகுப்பின் இரண்டாவது பதிப்பைப் பற்றி காமினி அவர்களால் ஒரு விமர்சனம் எழுதப்பட்டது.
பேராசிரியர் ஏ. ஜெமினி பொன்சேகா எழுதிய, அழகு சுப்பிரமணியத்தின் "The Big Girl and Other Stories" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கான விமர்சனக் கட்டுரையின் சுருக்கம்:
பொதுவான அறிமுகம்
நூல் விபரம்: அழகு சுப்பிரமணியம் (1915-1971) எழுதிய இத்தொகுப்பு, கொழும்பின் 'பே அவுல் பிரஸ்' மூலம் 750 இலங்கை ரூபாய் விலையில் புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு: 1940 முதல் 1964 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த இக்கதைகள், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இலங்கைச் சிறுகதைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. காலனித்துவக் காலத்தின் கீழ் மாற்றமடைந்து வந்த பாரம்பரிய யாழ்ப்பாணச் சமூகத்தை இவை பிரதிபலிக்கின்றன.
கதைகளின் முக்கிய கருப்பொருள்கள்
பிரபுத்துவப் போலித்தனம் ("Professional Mourners"): இலங்கையின் வட மாகாண இறுதிச்சடங்குப் பாரம்பரிய பின்னணியில், ஒரு செல்வந்தக் குடும்பம் தனது கௌரவத்தை நிலைநாட்ட, இரு ஏழைப் பெண்களின் வறுமையையும் துயரத்தையும் முதலீடாக்கி 'தொழில்முறை ஒப்பாரியாளராக' பயன்படுத்தும் வர்க்க-சாதிய ஆதிக்கத்தை இக்கதை விவரிக்கிறது.
தற்பெருமை கொண்ட ஆண்கள்:
"The Mathematician": மனைவியிடம் வன்முறையாக நடந்து கொண்டு இறுதியில் மனநலக் காப்பகம் செல்லும் ஒரு கணிதவியலாளரின் கதை.
"Malayan Money": வெளிநாட்டுப் பயணம் பற்றிய கர்வத்தால் மோதலில் ஈடுபட்டு சிறை செல்லும் ஒருவரின் கதை.
கலாச்சார அதிர்ச்சியும் ஆங்கில மோகமும்: லண்டன் செல்லும் இலங்கையர்கள் பிரிட்டிஷ் மொழியையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றும் போது ஏற்படும் குளறுபடிகளை "The Cat" மற்றும் சில கதைகள் நகைச்சுவையுடன் விவரிக்கின்றன.
கிறிஸ்தவ மதமாற்றத் தாக்கங்கள்: "The Thorn" கதையில் மதம் மாறியவர்கள் தங்களின் புதிய வாழ்விலும் பழைய இந்துப் பழக்கவழக்கங்களை ("சிவ சிவ" எனக் கூறுவது போன்றவை) மாற்ற முடியாமல் தவிப்பதையும், திருமணத்திற்காக மதம் மாறுவதையும், மத நிறுவனங்கள் அனைத்திற்கும் இறையியல் விளக்கம் தருவதையும் சுட்டிக்காட்டுகிறது. "Colombo’s Justice" கதையும் காலனித்துவ மதச் சிந்தனையின் தர்மசங்கடங்களை விவரிக்கிறது.
நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கச் சித்தரிப்பு: "The Marketplace" மற்றும் "The Big Girl" போன்ற கதைகள் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் கௌரவம் பார்க்கும் போலித்தனம், திருமணப் பொருத்தங்களில் காட்டும் தந்திரங்கள் மற்றும் ஏழைகளை ஏமாற்றுவதை எதார்த்தமாகப் பேசுகின்றன.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அக்கறை: அழகு சுப்பிரமணியம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், வர்க்கத் தடைகளைத் தாண்டி ஏழைகள் மீது கொண்டிருந்த அக்கறையை "The Unfortunate Headmaster" மற்றும் "The Flood" போன்ற கதைகள் உணர்த்துகின்றன.
முடிவுரை
இத்தொகுப்பில் உள்ள 17 சிறுகதைகளும் பிற்கால வன்முறைகள் மற்றும் தீவிர மாற்றங்களுக்கு முந்தைய, அமைதியான பழைய யாழ்ப்பாணச் சமூகச் சூழலையும் அதன் பழக்கவழக்கங்களையும் இளைய தலைமுறைக்குக் கடத்துகின்றன. அழகு சுப்பிரமணியத்தின் முதிர்ந்த மொழி ஆளுமையைக் கருத்தில் கொண்டு, இந்நூலை மேல்நிலை மற்றும் உயர்கல்வி ஆங்கிலப் பாடநெறிகளுக்குப் பாடப்புத்தகமாகப் பேராசிரியர் பரிந்துரைக்கிறார்.
11
2019 ஆம் ஆண்டு Hussain Perera பதிப்பகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் Sam Perera, அழகுவின் Big Girl (இரண்டாவது பதிப்பு) தொகுப்பைப் பற்றிய மதிப்புரை ஒன்றை The Island பத்திரிகையில் எழுதினார்.
2020 ஆம் ஆண்டு திருமதி பிரமிளா துரைரத்தினம், The Extraordinary Alagu Subramaniam என்ற தலைப்பில் The Ceylankan Magazine (Nov 2020) இதழில் ஒரு கட்டுரை எழுதினார்.
12
2021 ஆம் ஆண்டு அக்டோபர் நம்மட புத்தகங்கள் சஞ்சிகையில் (இலங்கை), வி.ரி. இளங்கோவன் அழகுவைப் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதியிருக்கிறார். அழகு ஈழத்து முற்போக்கு இயக்கத்தினரால் தொடர்ந்து கவனிக்கப்பட்டுள்ளார் என்பதையை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.
13
1973 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியான இரண்டாவது தொகுப்பான Closing Time and Other Stories இன் இரண்டாவது பதிப்பை 2021 ஆம் ஆண்டு பிரேமிளா துரைரத்தினம் வெளிநாட்டில் வெளியிட்டார்.
இந்தத் தொகுப்பில், அழகுவின் முதலாவது தொகுப்பான Big Girl இல் இடம்பெற்ற பல கதைகள் இத்தொகுப்பிலும் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால், Professional Mourners என்ற கதை இடம்பெறவில்லை என்பது ஒரு குறையாக இருந்தது. பெரும் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அழகுவின் சிறந்த சிறுகதையாகப் போற்றப்பட்ட இக்கதை, ஏன் இத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவில்லை.
2021 ஆம் ஆண்டு வெளியான இந்த இரண்டாவது பதிப்பிற்காக இலங்கையைச் சேர்ந்த Prof. E.A. Gamini Fonseka அவர்கள் விரிவான முன்னுரையை வழங்கியிருந்தார். அதன் சுருக்கம்
அழகுசுப்ரமணியத்தின் படைப்புகள்: ஒரு பார்வை
இலங்கை எழுத்தாளரான அழகுசுப்ரமணியத்தின் படைப்புகள், பின்காலனியச் சூழலில் 20-ஆம் நூற்றாண்டு யாழ்ப்பாண சமூக மாற்றங்களையும், லண்டனில் குடியேறிய ஆசியர்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கின்றன. அவரது தனித்துவமான மொழி ஆளுமை ஆங்கில இலக்கிய உலகிற்குப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
தற்போது வெளிவந்துள்ள புதிய தொகுப்பில் 13 கதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் முக்கியப் பிரிவுகள்:
1. லண்டன் கதைகள்
Single Room: லண்டன் வாழ்க்கைச் செலவுகளுக்கு முன்னால் இந்திய வம்சாவளியினரின் அகங்காரம் சிதைவதை விவரிக்கிறது.
Closing Time: குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டினரின் சவால்களையும், மதுப்பழக்கத்தின் துயரமான முடிவையும் பேசுகிறது.
The Kid: சமூக விமர்சனங்களையும் கடந்து, ஜெர்மன் அகதிப் பெண்ணிற்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்திய மாணவனைப் பற்றியது.
Francophile: பிரான்ஸ் மீது அதீத மோகம் கொண்ட ஆங்கிலேயரால் ஏற்படும் நகைச்சுவையான தர்மசங்கடத்தை விளக்குகிறது.
2. யாழ்ப்பாணக் கதைகள்
Son of a Judge: அதிகாரப் போதையில் மற்றவர்களை அவமதிக்கும் ஒரு சிறுவனின் கர்வத்தையும், அந்தஸ்து குறித்த தவறான புரிதலையும் காட்டுகிறது.
இதர கதைகள்: மனிதர்களை ஏமாற்றும் ஒரு போலி நபரின் கதையையும் இத்தொகுப்பு விவரிக்கிறது.
முடிவுரை:
அழகுசுப்ரமணியத்தின் தனித்துவமான கருப்பொருள்கள் இன்றைய தலைமுறைக்கு அவசியமானவை. இவருடைய படைப்புகள் இனவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைச் சமூகத்தில் அமைதியையும் பரஸ்பர புரிதலையும் ஏற்படுத்த உதவும் எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.
Prof. E.A. Gamini Fonseka அவர்கள் விரிவான முன்னுரையை வழங்கியிருந்தார். விரிவஞ்சிச் சருக்க்மாகத் தரப்பட்டுள்ள்து.
14
2021 இலங்கை யாழ்ப்பல்கழகச் சேசர்ந்த சிவகௌரி ராஜசாந்தள் (Sivagowri Rajashanthan) இரண்டாவது தொகுப்பான Closeing Time and other Stories யின் இன்னொரு பதிப்பை இலங்கை குமரன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். இப்பதிப்புக்கு இலங்கையரான Australia யில் வசித்த பிற்காலிய நாடகாசிரியர் எர்னஸ்ட் மெக்கின்டைர் (Ernest MacIntyre) ஓர் முன்னுரை வழங்கி இருந்தார்.
அம்முன்னுரை சிறியதாக இருந்தாலும் அழகுப் பற்றி ஓர் சித்திரத்தைத் தருகிறது. பிரிட்டிஷ் இலங்கையில் பிறந்த எழுத்தாளரான அழகு சுப்பிரமணியம், லண்டனின் ப்ளூம்ஸ்பரி (Bloomsbury) இலக்கிய வட்டத்தில் ஒரு முக்கிய நபராகவும், ஒரு பாரிஸ்டராகவும் (Barrister) விளங்கினார். இலங்கை ஆங்கில இலக்கிய வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறார். அவரது “Professional Mourners” என்ற கதை, இலங்கையின் சிறந்த ஆங்கிலச் சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
செக்கோவைப் போலவே கதையில் யாரையும் விமர்சிக்காமல், இயல்பான நடையில் கதையை நகர்த்துவதில் அவர் வல்லவர்.
அழகுவின் சில கதைகளைப் பற்றிய குறிப்புகளை முன்வைக்கிறார்.
“A Single Room” : ஒரு சிறிய இறைச்சித் துண்டைப் போல (meat pie) சுருக்கமாகவும் சுவையாகவும் இருக்கும் இக்கதை, ஆங்கிலம் கற்கத் தொடங்குபவர்களுக்கு மிகவும் ஏற்றது.
“A Judge's Son” : பழையகால யாழ்ப்பாணத்தின் உயர்மட்ட குடும்பங்களின் வாழ்வியலைச் சித்தரிக்கிறது.
“Lawyer” : ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது ஏழை வாடிக்கையாளர் பற்றிய இக்கதை, பழையகால யாழ்ப்பாணத்தின் ஒரு பக்கத்தைக் காட்டுகிறது எனக் கூறி, பிரிட்டிஷ் இலங்கையில் பிறந்த எழுத்தாளரான அழகு சுப்பிரமணியம், லண்டனின் ப்ளூம்ஸ்பரி (Bloomsbury) இலக்கிய வட்டத்தில் ஒரு முக்கிய நபராகவும், ஒரு பாரிஸ்டராகவும் (Barrister) விளங்கினார் என்றும், இலங்கை ஆங்கில இலக்கிய வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறார் என்றும் குறிப்பிடுகிறார்.
அத்தோடு, செக்கோவைப் போலவே கதையில் யாரையும் விமர்சிக்காமல், இயல்பான நடையில் கதையை நகர்த்துவதில் அவர் வல்லவர் என்றுகிறார்.
இறுதியாக, இந்தக் கதைகளை வாசிப்பதன் மூலம் பழைய லண்டன் மற்றும் பழைய யாழ்ப்பாணத்தின் வாழ்க்கைத் துளிகளை அழகுக் கதைகளில் நீங்கள் காணலாம் என்று முடிக்கிறார்.
சிவகௌரி ராஜசாந்தள் (Sivagowri Rajashanthan) இத்தொகுப்பில் அழகுவைப் பற்றிய ஓர் அறிமுகவுரையும், அவர் இத்தொகுப்பில் அழகுவின் மொழிநடை பற்றி எழுதிய ஓர் ஆய்வினை யும் இணைத்திருந்தார்.
15
The Extraordinary Alagu Subramaniam தலைப்பில் Premila Thurairatnam Srylankan magazine Nov 2020 இதழில் ஒரு கட்டுரை எழுமி இருந்தார்.
Unfolding of a Ceylonese Author என்ற தலைப்பில் The Ceylankan May 2022 இதழில் பிரமிளா கட்டுரை எழுதினார்.
2022 ஆம் ஆண்டு MICHAEL ROBERTS, இலங்கையின் சமூகவியல் அறிஞர், தனது Thuppahi என்ற வலைப்பதிவில் (மார்ச் – 2022) பதிவொன்றில், அழகுவின் பேத்தி பிரமிளா துரைரத்தினம் இலங்கைப் பத்திரிகையில் அழகுவைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, அவ்வலைப்பதிவில் அழகுவைப் பற்றி இலங்கை மற்றும் உலக அறிஞர்கள் முன்வைத்த கருத்துகளும் சொல்லப்படுகின்றன. அழகுவின் இடதுசாரிகளுடனான தொடர்பையும் குறிப்பிடுகிறார்.
2025 ஆம் ஆண்டு, இரண்டாவது தொகுப்பான Big Girl பற்றி இலங்கை ஆங்கில எழுத்தாளர் Vihanga Perera தனது Sri Lankan English Writers Review யில் கட்டுரை எழுதி இருந்தார்.
16
60 களின் தொடக்கத்தில் அழகுவின் கதைகளைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சி பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், 2024 ஆம் ஆண்டில் அழகுவின் கதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு முயற்சியாக, அழகுவின் பேத்தி பிரேமிளா துரைரத்தினத்தின் நண்பர் Prof. E.A. Gamini Fonseka மொழிபெயர்ப்பில் 20 கதைகள் அடங்கியத் தொகுப்பு Smart International Publication மூலம் Jaffna Anecdotes (சிங்களத் தலைப்பு: අලගුසුබ්රමනියම්) என்ற பெயரில் இலங்கையில் வந்தது வெளிவந்தது.
அதற்குப் Prof. E.A. Gamini Fonseka அவர்கள் விரிவான சிங்கள முன்னுரையை வழங்கி இருந்தார். அந்த முன்னுரையில், 2021 ஆம் ஆண்டு பிரேமிளா துரைரத்தினத்தின் முயற்சியினால் வந்த இரண்டாவது பதிப்பான Closeing Time and other Stories என்ற பதிப்புக்கு Prof. E.A. Gamini Fonseka அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கிய விரிவான முன்னுரையில் முன்வைத்த அதே கருத்துகளை, அழகுவின் கதைகளின் சிங்களத் தொகுப்பான Jaffna Anecdotes யின் முன்னுரையிலும் முன்வைத்திருந்தார்.
இந்த நூலின் பின் அட்டையில் பிரமிளா பற்றிய ஒரு குறிப்பு சிங்களத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த நூலின் வெளியீட்டு விழா கொழும்பில் இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் மற்றும் இக்கட்டுரையாளரின் முயற்சியினால் நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டு இவ்வெளியீட்டு விழாவைப் பற்றிய ஒரு குறிப்பு இணையத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்தது.
17
ஆங்கில இலக்கித் துறையில் இயங்கிய இலங்கைத் தமிழரான அழகுவைப் பற்றி விரிவான ஆழமானப் பார்வையைக் கருத்தை மேலும் இதுவரை காலம் அழகுவை பற்றி முன் வைக்கப்பட்ட ஆய்வுகளில் ஆழமாதும் விரிவீனதுமான ஆய்வுகளாக காமினியின ஆய்வுகள் அமைந்தன.
ஆங்கிலத்தில் அளவுக்கு தமிழ்ச் சூழலிவ் அழகுவைப் பற்றி ஆய்வுகள் குறைவாகவே இருந்தன .இதற்கு காரணம் அவர் ஆங்கிவத்தில் எழுதியமை ஓரு காரணமாக இருக்க்லாம். இரண்டாவது அவரது எல்லா கதைகளும் தமிழிக்கு வராமல் போனதும் அடுத்தக் காரணமாக இருக்க்லாம்.
18
முடியுரையாக
1.இது வரை காலம் வரை காலம் தூல் உருவம் பெற்ற, நூல் பெறாத படைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டுத்து அழகுவின் எல்லாப் படைப்ப்புகள் ஓரு பெரும்தொகுப்பாக வெளிவர வேண்டும்.
2.இதுவரை காலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அழுகுவின் கதைகளுடன் இணைத்து, மிருதி கதைகளை தமிழில் மொழிபெயர்க்கபட்டு, ஒரு பெரும் தொகுப்பு வெளிவரவேண்டும்
3.அதைப் போன்று சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அழகுவின் கதைளை இணைத்து, மிகுதி கதைகளையும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படு ஒரு பெரு தொகுப்பாக வெளி வரவேண்டும்
.4.இற்றை வரை அழகுவைப் பற்றிய ஆங்கில,தமிழ்,சிங்கள. ஆகிய மொழிகளில் நடந்த ஆய்வுகள் ஒரு சேர பெரும் தொகுப்பாக வெளிவர வேண்டும்
5.அதன் மூலம் இலவ்கையச் சார்ந்த தமிழர் ஆங்கிலத்தில் எழுதி, தன் படைப்புகள் மூலம் கீழைத்தேய-மேலைத்தை சமூகத்தைச் சித்திரித்து, ஆங்கில இலக்கிய உலகில் சிறந்த படைப்பாளியாக தன்னை ஸ்தாபித்துக் கொண்ட அழகு சுப்பிரமணியம் என்ற எழுத்தாளர்ருக்கான பெரும் ஆவணத்தொகுப்பாக அமையும். அவையே மேலைத்தேய-கீழைத்தேய இனையத் தலைமுரையினருக்கு அழகு சுப்பிரமணியத்தை அறிய உதவும் ஒரு பெரும் ஆவணமாக இருக்கும்.
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









