வாசிப்பும், யோசிப்பும்: எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் 'அனுலா' - வ.ந.கி -
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அறுபதுகளில் எழுதிய கதைகள் 'அக்கா' என்னும் தொகுப்பாகக் கலாநிதி க.கைலாசபதியின் அணிந்துரையுடன் வெளியானதைப் பலரும் அறிந்திருப்பார்கள். அதன் பின்னட்டையில் அவரைப்பற்றிய குறிப்பில் அவரது சிறுகதை கல்கியின் ஈழத்துச் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றதென்று குறிப்பிடப்பட்டிருந்தது. நூலுக்கான தனதுரையில் அ.முத்துலிங்கம் அவர்கள் 'அனுலா' கல்கியில் வெளியான சிறுகதையென்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் கல்கியில் பரிசு பெற்ற கதையாகவிருக்க வேண்டுமென்று எண்ணினேன். அண்மையில் இணையக் காப்பகத்திலிருந்த பழைய கல்கி இதழ்களில் இதற்கான விடை கிடைத்தது.