சிறுகதை: குருதியின் சாட்சி - பவானி சற்குணசெல்வம் -

நந்தா, போரின் சாம்பல் மேடுகளிலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு பீனிக்ஸ் பறவை. குண்டுச் சத்தங்கள் காதுகளில் ரீங்காரமிட, இரத்த வாடை நாசியில் ஒட்டிக்கொண்டிருக்க, அந்த தேசத்தை விட்டு வெளியேறினாள். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கணவனையும், நினைவுகள் உறங்கும் வீட்டையும் விட்டுவிட்டு, நான்கு பிள்ளைகளைத் தன் சிறகுகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு ஒரு ஐரோப்பிய தேசத்தில் வந்திறங்கினாள்.
அது ஒரு நீண்ட பயணம். உறங்காத இரவுகள், புரியாத மொழி பேசும் அதிகாரிகள், முடிவில்லாத விசாரணைகள் என அத்தனைத் தடைகளையும் கடந்து, இறுதியில் அவளுக்கு அகதித் தஞ்சம் கிடைத்தது. அது அவளுக்கு ஒரு புதிய மூச்சு; தன் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான குடை போன்ற வானம்.
காலம் நகர்ந்தது. ஒரு நாள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இரும்புப் பிடியில் சிக்கியிருந்த அவளது கணவன் பிணையில் விடுவிக்கப்பட்டான் என்ற செய்தி காற்றோடு வந்தது. நந்தாவின் சோர்வுற்ற கண்களில் நம்பிக்கை மீண்டும் சுடர்விட்டு எரிந்தது. "குடும்பம் ஒன்று சேர வேண்டும்" என்ற ஆசையோடு, கணவனைத் தன்னுடனும் குழந்தைகளுடனும் இணைக்க விண்ணப்பித்தாள்.
ஆனால், விதி அங்கேதான் தன் விளையாட்டைத் தொடங்கியது.
குளிர்சாதனப் பெட்டியென உறைந்துபோயிருந்த அந்த அலுவலக அறையில், அதிகாரிகள் ஒரு நிபந்தனையை முன்வைத்தார்கள். "நான்கு குழந்தைகளுக்கும் அவர்தான் தந்தை என்பதை பரம்பரையியல் ரீதியாக, அதாவது டி.என்.ஏ. பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்." நந்தாவுக்கு அதில் எந்தத் தயக்கமும் இல்லை. மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று நினைத்தாள். உண்மைதானே என்றும் துணை நிற்கும் என்று நம்பினாள்.

மகாகவி பாரதியார் பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மகாகவி பாரதியார் பாடல் - ஜய பேரிகை கொட்டடா
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
பாரதியாரின் 'நிற்பதுவே,நடப்பதுவே' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.
பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.
1882இல், டிசம்பர் 12 இல் பிறந்த பாரதிக்கு, 1906இல், வயது இருபத்தி நான்காய், இன்னமும் அரும்பியிராத ஒரு காலப்பகுதி. சரியாக சொன்னால் தனது 23-24 வயது காலப்பகுதியிலேயே இவ் இளைஞன் இவ் உலக பரப்பினை கூர்ந்து நோக்க தலைப்படுகின்றான். இவனது இந்த செய்கைக்கு, பல்வேறு கூறுகள், அடித்தளமாய் அமைந்திருக்க கூடும் என்றாலும், இவற்றில் தலையானதாய் தெரிவது, இவனது ஆழ்ந்த வாசிப்பு திறன் எனலாம். (அதாவது, கசடு அற கற்பது என்பது இவன் பின் கொண்ட ஒரு கூறே).


கோடை காலத்தில்,மத்தியானம் ஆனதும் ஊர்போல வெயில் கொளுத்தி எரிக்கும். உடல் முழுக்க வேர்த்து, வேர்வை ஒட்டிக்கொள்ளும்.தேகம் பிசுபிசுக்கும்.‘நா'வரண்டுபோகும். காற்று வராதா? வந்து எம்மை வருடாதா? என்று ஒவ்வொரு மனசும் எதிர்பார்க்கும்.சிலவேளைகளில் அதுவும் சாத்தியமாகும்.
கட்டுரையாளர்: அருணாசலம் லெட்சுமணன், அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம், அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம்.
தென்னிந்தியாவில் இருந்து வருகைத்தந்து இலங்கையின் பெருந்தோட்ட பொறிமுறையினை விருத்தி செய்வதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்கேற்பு மிக முக்கியத்திற்குரியதாக விளங்குகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பூர்வீகத் தொடர்பு நிலைகள் குறித்த ஆதாரங்கள் பல உள்ளன. அவ் ஆதாரங்களை முன்வைப்பதில் இராமாயண சித்திரிப்புக்கள் குறித்த பார்வை மிகுந்த கவனத்தை பெறுகின்றன. இவ்வாறான தொடர்பு நிலைகள் பல இருந்த போதிலும் 1823ம் வருடத்தை பிரதானப்படுத்திய நகர்வு 'மலையக சமூக' உருவாக்கத்தில மிக முக்கிய கட்டமாக அமைகிறது. அப் பிரயத்தனத்தில் 'மலையகம் - 200' என்ற கோசத்தின் பின்னணியில் இடம்பெற்ற நிகழ்வுகள் அவதானத்திற்குரியதாக அமைந்தன. இவ் இருநூறு வருடகால அவதானிப்பில் மலையக மக்களின் வரவு, வாழ்வு, புலம்பெயர்வு, இருப்பின் ஆர்வம், புலம்பெயர்வின் நிர்ப்பந்தம், பிரயோக அரசியலின் பலம் பலவீனம், கலை பண்பாட்டு அம்சங்கள், கல்வி நிலைகள், பொருளாதார நகர்வுகள் போன்றவை பற்றிய அவதானங்களும் கவனத்தை பெறுகின்றன. மலையக மக்களின் இருப்பை தக்க வைப்பதிலும் அவர்களின் அடையாளத்தை பிரதிபலிப்பதிலும் கலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அக் கலைகளுள் முத்தாய்ப்பாகவும், மலையகத்தின் முக்கூத்துக்களில் மூலமாகவும் அமையும் காமன்கூத்து மலையக மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய வகிபங்கை பெறுகிறது எனலாம்.
வ.ந.கிரிதரனின் பாடல் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
- எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் மறைந்தார் என்னும் தகவலை அறிந்தோம், துயர் அடைந்தோம், அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும் பங்கு கொள்கின்றது. அவர் நினைவாக , கலைம், இலக்கியத்திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் மாத்தளை வடிவேலனின் சிறுகதைத்தொகுப்பு பற்றி எழுதிப் பதிவுகளில் வெளியான கட்டுரையை மீள் பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
நீர் வார்த்த அய்யனார்! - சுருளி காந்திதுரை (மதுரை) -
திரு முருகபூபதி அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளை மூன்று முக்கியப் பிரிவுகளாகக் கூறலாம். எழுத்தாளர், சமூகப் பணியாளர், மற்றும் சமூகப் பதிவாளர். மெல்போர்ன் தமிழ்ச் சமூகத்தில் இம்மூன்று துறைகளிலும் ஒரே நேரத்தில் பணியாற்றியவர்களை காண்பது மிகவும் அரிது. முதலில் நான் பேச விரும்புவது எழுத்தாளர் என்ற அவருடைய பங்களிப்பைப் பற்றியே.
ஊழின்வலி பெறுஒரே உயிரினம் யான் மட்டுமே
முகத்தில்
தாகூரின் செல்வாக்கில் இருந்து, கழன்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் வந்த எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது எனலாம். ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை இவர் தம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி மீண்டும் கவிதைக்குள் செல்லலாம்:



“ராகவியை நினைச்சா … அவளின்ர சிரிப்புத்தான் முதலில கண்ணுக்குத் தெரியும்,” ராகவியின் பாடசாலைச் சினேகிதி மாயா அவளின் அந்தியேட்டி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றிக் கொண்டிருந்தாள்.
பகுதி 2
இள வயதில் வாசிப்பை நெறிப்படுத்த மூத்தவர்கள் ஓரிருவருடைய உதவி எனக்கு இருந்திருந்தாலும், பின்னால் இலக்கியரீதியான வழிகாட்டலுக்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது துர்பாக்கியமாகும். அந்த வெளியைக் கடந்தேனென்றாலும், அது சுலபத்தில் கைகூடியிருக்கவில்லை. பிழைவிட்டு திருந்தி, பிழைவிட்டு திருந்தி… ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கவேண்டி இருந்தது. காலமே, ஒரு சக்தியாகயிருந்து அந்த வெறுமையை நிவர்த்தித்தது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
சர்வதேச மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் முதற்கண் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









