
வ.ந.கிரிதரனின் பாடல் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்"
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா!
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=94OrPEO5arI
ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்
வாசிக்கப் புத்தகம் இருந்து விட்டால்
வனமும் எனக்குச் சொர்க்க புரிதான்.
யோசிக்க வைப்பதும் புத்தகம் தான்.
யோசிப்பற்ற வாழ்வில் சுவை உண்டா?
ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்
புத்தகம் அற்ற உலகம் எனக்கு
சித்தம் அற்ற வெறும் உடல்தான்.
இத்தரையில் இருப்பதற்கு புத்தகம் அவசியம்.
புத்தகம் அற்ற நிலம் பாழ்நிலமே.
ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்
இருக்கும் வரையில் புத்தகம் வேண்டும்.
இருப்பு பற்றி அறிவதற்கும், உணர்வதற்கும்
எண்ணத்தை விதைப்பது புத்தகமே! புத்தகமே!
எண்ணமற்ற வாழ்வில் என்ன இருக்கு?
அறிவைப் பட்டை தீட்டுவதும் புத்தகமே.
அறிவற்ற இருப்பு உயிரற்ற உடலே.
அதனால் சொல்வேன் புத்தகமே எந்தன்
ஆருயிர்த் தோழன் , தோழி என்று.
ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









