முகத்தில்
ஓங்கியறைந்த வார்த்தை
நீண்ட நேரமாக
அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது

உவப்பில்லாத அந்த வார்த்தையை
மறைப்பதற்காக
நேரம் கடத்தும் வித்தையை
உடலும் தெரிந்து வைத்திருந்தது

யன்னல் மறைப்புக்குக்
கட்டிய துணியை அவிழ்த்து
மீளவும் கட்டுகிறான்
உள்ளேயிருந்த பிளாஸ்ரிக் கதிரையை
வெளியே வைக்கிறான்
மற்றையது உள்ளே மாறுகிறது
வெறுமையான தேநீர்க்குடுவை
தூக்கிப் பார்த்து
நகர்த்துகிறான்
தலைவாசல் முன்னிருந்த கால்விரிப்பு
தூசு தட்டப்படாமலே
நகர்த்தப்படுகிறது

யாரோ
வாசலில் நீண்ட நேரமாக
அழைத்திருக்கிறார்கள்
சின்னவன் வந்து
கைகளால் தட்டித் திசைகாட்டுகிறான்

எவ்வளவுதான்
மறந்தாலும் மறைத்தாலும்
அது விடுவதாயில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்