இந்தியப் பயணத்தொடர்: நர்மதை நதியின் ஓசை! - நடேசன் -

மத்தியப் பிரதேசத்தின் யபல்பூரில் (Jabalpur) நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நர்மதா நதி ஓடிக்கொண்டிருந்தது. வழிகாட்டி கூறியபடி, இந்த நதி இந்திய உபகண்டத்தின் பழமையான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைக் கேட்டு நான் ஆச்சரியத்துடன் சிந்திக்கத் தொடங்கினேன்.
கங்கை, யமுனா, பிரமபுத்திரா போன்ற இந்தியாவின் பிரசித்தி பெற்ற நதிகள் அனைத்தும் இமயமலையிலிருந்து தோன்றியவை. இமயம் உருவானதே இந்திய உபகண்டம் தெற்கிலிருந்து நகர்ந்து ஆசியப் கண்டத்துடன் மோதியதில் ஏற்பட்ட புவியியல் விளைவாகும். இந்த மோதல் சுமார் 50 மில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. அதன் விளைவாக இமயமலை மற்றும் திபெத்தியப் பீடபூமி உருவாயின. பின்னரே இந்தியாவின் முக்கிய நதிகள் தோன்றின. ஆனால் நர்மதா பாயும் பகுதிகள், இதைவிடச் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்பே நிலமிருந்த பாறைத்தட்டுகளில் அமைந்தவையாகும். அங்கு கிடைக்கும் தொல்லியல் (fossil) எச்சங்களும் பாறைகளும் இதற்குச் சாட்சியாய் உள்ளன என்று வழிகாட்டி விளக்கினார்.
இதனை விளக்குவதற்காக அவர் நர்மதா நதிக்கரையிலுள்ள( Narmada Marble Valley) ஒரு இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு புறத்தில் கறுப்பு கற்கள், மற்றொரு புறத்தில் சுண்ணாம்பு படிவ பாறைகள் காணப்பட்டன. சுமார் ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு, நர்மதா நதியின் இரு கரைகளிலும் உயரமாக பளிங்குப் பாறைகள் உயர்ந்து தெரிந்தன. வழிகாட்டி, முழுநிலவின் ஒளியில் இக்கற்கள் பளிச்சிடும் எனக் கூறினார். நாங்கள் சென்றது மதிய நேரம். எழுத்தாளரானதால் நிலவை கற்பனையில் பார்த்தேன். நடுப்பகலான போதிலும் வள்ளத்தில் அரைமணி நேரம் பயணித்தபோது பாறைகளின் இயற்கை அமைப்பு கண்கவர் அழகாக இருந்தது.


பெண்ணிய எழுத்தாளரான தாமரையின் 'கதவும் கள்ளிப்பாலும்' எனும் கவிதையின் தொகுப்பில் 'தொலைந்து போனேன்' கவிதையில் பெண்ணின் மனவெளிப்பாட்டினை வெளிப்படும் நோக்கில் அமையப் பெற்றதாகும்.
[இக்கதையில் ஆசிரியர் கழுகு, தாமரை என்று குறிப்பிடுவது அக்காலகட்டத்தில் இலங்கையில் இயங்கிய தமிழ் அமைப்புகளில் இரண்டை. - பதிவுகள் -]
''அருள், இந்த உக்ரேன் பிரச்சனை...என்ன, ஒன்றுமே விளங்க மாட்டேன் என்கிறதே? '' கட்டடியிலே சபேஷ், கேட்க கூடி இருந்த உமா,யோகி, நாகேஷ்...எல்லார் மூஞ்சியிலும் அறியும் ஆர்வம் சுடர் விட்டது. அருளர் பழைய தொழில்சங்க அமைப்பில் இருந்தவர். அவனுடைய காலத்தில் அவர் ஒன்றாய் ஒரே விடுதலைக்குழுவில் புழங்கியவர் .மற்றவர்களுக்கு தான் புதியவர் . யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த பிறகு எவரும் தெரிந்தவர் எனக் காட்டிக் கொவள்தில்லை. கழுகால் தடை செய்யப்பட்டு , பல வருசங்கள் ஓடி விட்டன . யாரும் எவரையுமே இப்பவெல்லாம் தெரிந்து கொள்ளவும் முயல்வதில்லை . 









தமிழ் இலக்கிய மரபில் நூல் விமர்சனம் என்பது ஒரு தனித்துவமான அறிவுச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. அது வெறும் தனிநபரின் விருப்பு–வெறுப்புகளை வெளிப்படுத்தும் முயற்சியாக அல்ல; வாசக சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள பணியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு நூலைப் பற்றி சொல்லப்படுகின்ற கருத்துகள், அந்த நூலின் மதிப்பை மட்டுமல்லாது, இலக்கியச் சூழலையும் சமூகச் சிந்தனையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியவை என்பதால், விமர்சனத்திற்கு தெளிவான வரையறைகளும் ஒழுங்குகளும் தேவைப்படுகின்றன.
23-24 வயதே நிரம்பியிருக்கக்கூடிய இவ்விளைஞனின், சாதியம் பற்றிய உணர்வும், பெண்களின் அடிமைத்தனம் பற்றிய எண்ணமும், இதைவிட மேலாக எலும்பும் தோலுமாய் அன்று தோற்றமளித்திருக்கக்கூடிய தன் மக்கள் பொறுத்த சிந்தனையும், நாடு காலனித்துவ ஆங்கிலேயரிடம் இப்படி அடிமைப்பட்டு போயிருக்கின்றதே என்ற ஆதங்கமும் மேலோங்கி வீசுவதாய் இருந்தது. ஆனால், இவற்றை விட, தம் இன்னுயிரை தியாகம் செய்து வெஞ்சிறையினுள்ளும் தம்மை இருத்திக் கொள்ள துடிக்கும் தன்னிகரற்ற சிங்கங்களையும் அவன் தன் வாழ்நாளில் தரிசிக்க வேண்டி வருகின்றது. இருப்பினும் இவ்விளைஞனின் உணர்வலைகளுக்கு கடிவாளம் போட்ட இரு பெரும் அலைகளும் அன்று வீசாமல் இல்லை.
ஏற்கனவே போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திரிமனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்கு உள்ளாகியுள்ளது.. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.

பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது.
பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் சாலை சேவ்அலுவலக அரங்கில் சுசீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமூக ஆய்வாளர் வியாகுல மேரி அவர்கள் விருதுகளை வழங்கினார். அவர் உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார் :





தலைப்பிற்கேற்ப கடலும்,கடல் சார் நிலமும் - கடற்கரையுமாய் - மங்கிய மாலையில்,மஞ்சள் நிறப் பின்னணியில், மங்கலகரமான அட்டைப் படத்துடன் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் 'நெய்தல் நடை' எனும் அவரின் முதற் படைப்பான இச் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய எனது பார்வையை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்ய விழைகின்றேன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









