கனடா: அகதி அந்தஸ்சு பெற்றவர்களின் அகதி அந்தஸ்சு பறிபோகும் அபாயம்?
கனடாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள், தங்களது சொந்த நாடுகளுக்கு, சொந்த நாடுகள் வழங்கிய கடவுச்சீட்டுகளுடன் அடிக்கடி பயணித்திருந்தால் அவர்களது அகதி அந்தஸ்து, நிரந்தரக் குடியுரிமை ஆகியன ரத்துச் செய்யப்படும் அபாயமுள்ளது. அதே சமயம் அகதி அந்தஸ்து கிடைத்தபின்னர் , அவர்களது சொந்த நாடுகளில் சமாதானம் ஏற்பட்டிருந்தால், அகதி அந்தஸ்து நீக்கப்படும். ஆனால், நிரந்தரக் குடியுரிமை நீக்கப்பட மாட்டாது. அகதி அந்தஸ்து பெற்று பல ஆண்டுகள் கடந்தபின்னர் கூட அவர்கள் சொந்த நாடுகளுக்குப் பயணித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களது அகதி அந்தஸ்து நீக்கப்படும் அபாயமுள்ளது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 875 அகதிகளுக்கெதிராக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கக் கனடிய எல்லைச் சேவை நிறுவனம் திட சங்கற்பம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகத் தகவல்களுக்குக் கீழுள்ள கட்டுரையினை வாசித்துப் பார்க்கவும். Canadianimmigrant என்னும் இலவச மாத சஞ்சிகையில் வெளியான கட்டுரையிது.