"நிமலரூபன் மரணத்துக்கு சர்வதேச சமூகமே பொறுப்பு"
- ஜூலை 24, 2012 - இலங்கை சிறைச்சாலை ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளாகி, அதனால் மரணடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற அரசியல் கைதி நிமலரூபனின் உடல் வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வவுனியாச் சிறைச்சாலையில் சில கண்காணிபாளர்களை கைதிகள் தாக்கினார்கள் என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பலர் மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, நிமலரூபன் இறந்த நிலையிலேயே கொண்டுவரப்பட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணமடைந்த நிமலரூபன் அடிகாயங்ளினாலும், உரிய சிகிச்சையில்லாமலுமே உயிரிழக்க நேரிட்டதாக தமிழ் அரசியல்வாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் குற்றம் சுமத்தியிருந்தனர். அவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்ற போதிலும் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.