முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?
(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ) பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு ,மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய காலகட்டம் அப்போது அவர் காமராஜர் காலகட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த விசயங்களை நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என் தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போது இணைய இதழ்களில் வெளி வந்தது. அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது.