ஒட்டாவா, ஜூ ன் 29, 2012 —கனடாவின் குடிவரவு அமைப்பை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவும் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரச இசைவு பெற்றதை குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார துறை மந்திரி ஜேசன் கென்னீ இன்று வரவேற்றுள்ளார்: “இந்த சட்டமானது வெளிநாட்டு குற்றவாளிகள், ஆள் கடத்தல்காரர்கள் மற்றும் கண்டுபிடிக்கப்படாத அகதி கோரல்களுடையவர்கள் ஆகியோர் கனடாவின் தாராளத்தன்மையுடைய குடிவரவு அமைப்பை துர்பிரயோகம் செய்வதையும் வரி செலுத்துவோரால் நிதிபெறும் ஆரோக்கியம் மற்றும் சமுதாய நன்மைகள் பெறுவதையும் தடுத்து நிறுத்தும்” என்று மந்திரி கென்னீ குறிப்பிட்டார். “கனடாவின் குடிவரவு மற்றும் அகதி அமைப்பு என்பது உலகத்திலேயே மிக நேர்மையான மற்றும் தாராளத்தன்மையுடைய அமைப்புகளில் ஒன்றாகும், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அமைப்பிலும் அது அப்படியே தொடரும்.”
னடாவின் குடிவரவு அமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, அடைக்கல அமைப்பிற்கு கூடுதல் சீர்திருத்தங்களை கொணரும். இந்த மாற்றங்கள் உண்மையான தேவையுடையோருக்கு ஆய்வுக்கான நேரத்தை குறைத்து அகதி கோரல் குறித்து தீர்மாணித்து வேகமான பாதுகாப்பை அளிக்க உதவும். பாதுகாப்பு தேவைப்படாதவர்கள் வேகமாக அகற்றப்படுவர் மற்றும் பொதுவாக அகதிகள் ஏற்பட சாத்தியமற்ற நாடுகளிலிருந்து வரும் அகதி நிலை கோரல் நிராகரிக்கப்பட்டவர்கள் மறு விண்ணப்பம் செய்வதையும் இது குறைக்கும்.
சமச்சீரான அகதி சீர்திருத்தச் சட்டம் மற்றும் இன்றைய சட்டம் ஆகியவற்றால் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள், ஐந்து வருட காலத்தில் சமூக உதவி மற்றும் கல்வி கட்டணங்கள் செலவின வகையில் சுமார் 1.65 பில்லியன் டாலர்கள் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நடவடிக்கைகள், ஆள்கடத்தல் என்னும் கொடுங்குற்றத்தையும் சுட்டுகிறது. ஆள் கடத்தல்காரர்கள் தண்டிக்கப்படுவதையும் கடினமான தண்டனைகள் அவர்களுக்கு அளிக்கப்படுவதையும் எளிதாக்குகிறது.
“ஆள் கடத்தல் என்பது குடிவரவின் மிக ஆபத்தான வகைகளில் ஒன்றாகும்,” என்றார் மந்திரி கென்னீ. “உலகெங்கிலும் ஒவ்வொரு வருடமும் ஆள் கடத்தல் செயல்பாடுகளால் சனங்கள் மரிக்கிறார்கள். இந்த புதிய நடவடிக்கைகள், கனடாவின் தயாள குணம் துர்ப்பிரயோகம் செய்யப்படமாட்டாது, ஆள் கடத்தல்காரர்களுக்கு எதிராக எமது குடிவரவு சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் என்ற தெளிவான செய்தியை ஆள் கடத்தல்காரர்களுக்கு தெரிவிக்கிறது.”
புதிய நடவடிக்கைகளின் கீழ், பொது பாதுகாப்பு மந்திரிக்கு கனடாவிற்குள் வரும் நபர்களின் ஒரு குழுவின் வருகையை ஒழுங்கற்ற வருகை என வரையறுக்க இயலும். அப்படி வருபவர்களில் 16 மற்றும் அதற்கு அதிக வயதையுடையவர்களை சிறை தண்டனை போன்ற இச்சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த இயலும்.
கனடா குடிவரவு மற்றும் அகதி வாரியம் 14 நாட்களுக்குள் மற்றும் அதன் பிறகு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் சிறையிலுள்ளவர்களுக்கான ஆய்வினை நடத்தும் போது அல்லது அவர்களது அகதி கோரல் ஏற்றுக்கொள்ளப்படும் போது அந்நபர்கள் சிறையிலிருந்து விடுதலை பெற முடியும். குறிப்பிட்ட தனிநபர்களை கைது செய்ததற்கான காரணம் இப்போது இல்லை என்ற திருப்தி மந்திரிக்கு ஏற்பட்டாலோ அல்லது விடுதலையை வேண்டும் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படுமானலோ அத்தனிநபரை மந்திரி சிறையிலிருந்து விடுவிக்கலாம்.
ஒழுங்கற்ற வருகையின் ஒரு பகுதியாக கனடா வரும் நபர்கள் ஐந்து வருடங்களுக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்திற்காக விண்ணப்பிப்பதை தடுக்கவும் இந்த மாற்றங்களால் முடியும். இந்த நேரத்தில் அவர்களால் தங்கள் குடும்பங்களை ஸ்பான்சர் செய்ய இயலாது என்பது இதன் பொருள்.
புதிய நடவடிக்கைகள்படி தற்காலிக குடியிருப்பு விசா விண்ணப்பம், வேலை அனுமதி, மற்றும் கல்வி அனுமதி ஆகியவற்றின் ஒரு பகுதியாக உயிர் புள்ளியியல் தரவு அளிக்கப்பட வேண்டும். விசா தேவைப்படும் குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வரும் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் விரல்ரேகைகளை அளிக்கவேண்டும், மேலும் அவர்கள் கனடாவிற்கு வரும் முன் புகைப்படமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
“இந்த மாற்றங்களால், கனடாவின் குடிவரவு திட்டங்களின் ஒருமைபாடு மற்றும் கனடியர்களின் நலன் பாதுகாக்கப்படும் ,” என்று மந்திரி கென்னீ குறிப்பிட்டார்.
புதிய நடவடிக்கைகளில் சிலவை உடனடியாக அமலுக்கு வரும் அதே வேளையில் மற்றவை இந்த வருடத்தின் பிற்பகுதியில் அரசாங்கம் தீர்மாணிக்கும் ஒரு தேதியில் அமலாகும். புதிய உயிர் புள்ளியியல் நடவடிக்கைகள் 2013 முதல் அமலுக்கு வரும்.
நேரம் குறித்த மேலதிக தகவல்களுக்கு மாற்றங்கள் குறித்த பின்புல தகவல்கள் சுருக்கவுரையை பார்க்கவும்.
இந்த சட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு சிஜசியின் வலைதளமான www.cic.gc.ca. –வை பார்க்கவும்
பின்புல தகவல்கள்:
அகதி சீர்திருத்தங்கள்:
கனடாவின் அகதி அமைப்பிற்கான சீர்திருத்தங்களின் கண்ணோட்டம் (மீள்பார்வை) சுட்டிக்காட்டப்பட்டுள்ள தாயக நாடுகள் கனடாவின் குடிவரவு அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதில் உள்ள மாற்றங்களின் சுருக்கம்
ஆள் கடத்தல்
மீள்பார்வை: கனடாவின் குடிவரவு அமைப்பை ஆள் கடத்தல்காரர்கள் துர்ப்பிரயோகம் செய்வதை முடிவுக்கு கொண்டுவருதல்
நமது தெருக்கள் மற்றும் சமுதாயங்களை குற்றசெயல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்தல்
கனடாவின் கடல் பாதுகாப்பு சட்டத்திற்கு கீழ்படியாத கப்பல் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு கடுமையான தண்டனைகள்
அகதி அமைப்பினை துர்பிரயோகம் செய்வதை தடுத்தல்
ஆள் கடத்தல் நிகழ்வுகளை வரையறுத்தல்
கனடாவின் குடிவரவு அமைப்பினை துர்பிரயோகம் செய்யும் ஆள் கடத்தல்காரர்களை கண்டுபிடித்தல்
ஆள் கடத்தல்காரர்கள் மீது கட்டாய சிறை தீர்ப்புகளை அளிக்கவும் அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தவும் உதவும் சிறந்த கருவிகள்
உயிர் புள்ளியியல்கள்
கனடாவின் தற்காலிக குடியிருப்பு திட்டத்தில் உயிர் புள்ளியியல்
நமக்கு ஏன் உயிர் புள்ளியியல் தேவை என்பதற்கான ஐந்து காரணங்கள்
www.twitter.com/CitImmCanada என்ற முகவரியில் டிவிட்டரில் எங்களை தொடருங்கள்
அமைச்சர் கென்னியின் புகைப்படம் பின்வரும் முகவரியில் இன்று பிற்பகுதியில் கிடைக்கும்: www.cic.gc.ca/english/department/media/photos/high-res/index.asp.
மேலதிக விபரங்களுக்கு (ஊடகம் மட்டும்), தயவுகூர்ந்து தொடர்பு கொள்ளவும்:
அலெக்ஸிஸ் பாவ்லிக்
அமைச்சர் அலுவலகம்
குடியுரிமை மற்றும் குடிவரவு கனடா
613-954-1064
ஊடக தொடர்புகள்
தகவல் தொடர்புகள் கிளை
குடியுரிமை மற்றும் குடிவரவு கனடா
613-952-1650
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
உறுதியான கனடாவை கட்டுதல்: குடியுரிமை மற்றும் குடிவரவு கனடா (CIC) உலகிலேயே பெரிய மற்றும் மிக தாராளமான திட்டங்களின் ஒன்றான ஒரு திட்டத்தை நடத்தும் போது கனடாவின் பொருளாதாரம், சமுதாயம் மற்ற கலாச்சார செழிப்பு, கனடிய பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய உதவுகிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.