இவரைப்பற்றி நினைத்ததும் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம்.இவரது திருமணம். திருமணம் 1981இல் நடந்தது. அப்போது நிலவிய அரசியற் சூழல் காரணமாக எம்முடன் படித்த ஏனைய பல்கலைகழக மாணவர்கள் எவருமே அத்திருமணத்துக்குச் சென்றிருக்கவில்லை. நான் மட்டுமே சென்றிருந்தேன். அவர் நீண்ட காலமாகப் பாடசாலைக் காலத்திலிருந்து காதலித்த சுபா என்னும் பெண்ணொருவரையே திருமணம் செய்திருந்தார். இன்றுவரை அதே மாறாக் காதலுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இவருக்கு இரு பெண் குழந்தைகள். இருவரும் படித்து ஒருவர் மருத்துவத்துறையிலும் , மற்றவர் கட்டடக்கலைஞராகவும் பணியாற்றுகின்றார்கள். அவர்களிலொருவருக்கு இரு குழந்தைகளுமிருக்கின்றார்கள். இன்று தாத்தாவாக வலம் வரும் மோகன் தற்போது அதிகமாக இசையிலும், வாசிப்பிலும் நேரத்தைச் செலுத்துவதாகக் கூறினார். ஆனால் அதே இளமைமிக்க உடல்வாகுடன் காட்சியளிக்கின்றார்.
மோகன் அருளானந்தம் சிறந்த பாடகர். இவர் முறையாகச் சங்கீதம் கற்றவரல்லர் என்று நினைக்கின்றேன். ஆனால் இனிமையாகப் பாடுவார். கேள்வி ஞானத்தாலும், குரல் வளத்தாலும் இனிமையாகப் பாடுவார். எம் பல்கலைகழகக் காலகட்டத்தில் ஓய்வு நேரங்களிலெல்லாம் இவரைப் பாடக்கேட்டு நாம் சுற்றியிருந்து இரசிப்பதுண்டு. இன்றும் பாடுவதை இவர் நிறுத்தவில்லை. பாடல்கள் சிலவற்றை இவர் குரலில் கேட்டு இரசிப்போமா நண்பர்களே.
மோகன் அருளானந்தம் பாடிய தமிழ் மெல்லிசைப் பாடல்கள் சில : https://www.youtube.com/watch?v=vKY0wp9DcZQ
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.