30-12-2017, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் ICAF அமைப்பின் பொது செயலாளர் தங்கராஜ் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே ஒரு பிலிம் கிளப் நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா சென்னை திரைப்பட விழாதான். தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விமர்சனங்களும் இந்த அமைப்பின் வைக்கபப்டுகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழா தமிழ் சினிமாவிற்கு பங்காற்றியமை, சினிமா விழாக்களின் முக்கியத்துவம், விருதுகளின் அரசியல் உள்ளிட்டவை குறித்து தங்கராஜுடன் கலந்துரையாடலும். ஒரு மாபெரும் திரைப்பட விழாவை ஒரு வாரத்திற்கு முன்னர்தான் நடத்தி முடித்திருக்கிறார்கள். திரளாக கலந்துக்கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்வதோடு, உங்கள் கேள்விகளையும் முன்வைக்கலாம். அவசியம் வாருங்கள்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
தமிழ் ஸ்டுடியோ <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>