பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ : புத்தாண்டு கலந்துரையாடல் @ பியூர் சினிமா புத்தக அங்காடி
31-12-2016, சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 12 மணி வரை.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
சந்திப்பு 1 : 5.30 மணிக்கு.
இயக்குனர் ஞானராஜசேகருடன் கலந்துரையாடல்
தமிழில் இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பான ஒரு விரிவான கலந்துரையாடல் நடைபெறவே இல்லை. தமிழ் சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ வெவ்வேறு துறை சார்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதில் முக்கியமாக திரைப்படத் தணிக்கை துறை மண்டல அதிகாரியாக இருந்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை மாலை கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. திரைப்பட தணிக்கைத் துறை (Censor) தொடர்பான ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக இதனை மாற்றிக்கொள்வது நண்பர்களின் பொறுப்பு.
சந்திப்பு 2 : புகைப்படக் கலை பயிற்சி வகுப்பு.
இரவு 8.30 மணிக்கு.
தேசிய விருது பெற்ற முருகராஜ் அவர்களுடன் கலந்துரையாடல்
செய்தி புகைப்படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்ற புகைப்படக் கலைஞர் புகைப்படக் கலையின் தொழில்நுட்பம், அதன் தேவை, நேர்த்தி உள்ளிட்டவை குறித்து நண்பர்களுடன் கலந்துரையாடவிருக்கிறார். புகைப்படக் கலையில் ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம்.
சந்திப்பு 3 : இயக்குனர் மிஷ்கினுடன் கலந்துரையாடல்
இரவு 10.30 மணிக்கு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்குனர் மிஷ்கின் தமிழ் ஸ்டுடியோ நண்பர்களுடன்தான் புத்தாண்டை கொண்டாடி வருகிறார். இந்த வருடமும் தமிழ் ஸ்டுடியோ நண்பர்களுடனேயே புத்தாண்டை கொண்டாடவிருக்கிறார். சினிமாவைப் பற்றியும், இலக்கியம் பற்றியும், பார்வையாளர்களுடன் கலந்துரையாடப்போகிறார். நண்பர்கள் தவறவிடக் கூடாத சந்திப்பு இது. உங்கள் வாழ்வில் ஆகச்சிறந்த இரவாக அன்றைய இரவு இருக்கும்.
அனைவரும் வருக...அனுமதி இலவசம்... அனுமதி இலவசம்தான், ஆனாலும் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
முன்பதிவு செய்ய. 9566266036, 044 42164630
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | www.thamizhstudio.com