அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான, கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015 ஆம் திகதி மறைந்த திருமதி அருண். விஜயராணியின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் ஒழுங்குசெய்துள்ள நினைவு அரங்கு அஞ்சலிப்பகிர்வு நிகழ்ச்சி 31-01-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகும். அன்னாரின் நினவுகளை பதிவுசெய்யும் கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்ற விஜயதாரகை என்னும் இலக்கியத்தொகுப்பும் அருண். விஜயராணியின் வாழ்க்கை மற்றும் குடும்ப விபரம் அடங்கிய பிரசுரமும் இந்நிகழ்வில் வெளியிடப்படும்.
இந் நினைவரங்கில் திரு. ஆதித்தன் அருணகிரி வரவேற்புரை நிகழ்த்துவார். சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் - திருமதி ரேணுகா தனஸ்கந்தா - திரு. தெய்வீகன் - திருமதி வாசுகி பிரபாகரன் ஆகியோர் அருண். விஜயராணியின் சமய - சமூக - கல்வி - கலை இலக்கியப்பணிகள் குறித்து நினைவுரைகளை நிகழ்த்துவர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.