சமூக, அரசியல் செயற்பாட்டாளர் மகாதேவன் ஜெயக்குமரனுடனோர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -
அண்மையில் மறைந்த சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் , நண்பருமான எழுத்தாளர் மகாதேவன் ஜெயக்குமரனுடன் (ஜெயன் தேவா) ஆகஸ்ட் இறுதியிலும், செப்டெம்பர் ஆரம்பத்திலும் முகநூல் மெசஞ்சர் மூலம் உரையாடினேன். அதிலவர் தெரிவித்திருந்த கருத்துகள் தற்போதுள்ள சூழலில் முக்கியமானவையாகப் படுவதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். எனக்குக் கிடைத்த தகவல்களின்படி மறைவதற்குப் பத்து நாட்கள் வரையில் சிறுநீரகச் சுத்திரிப்புக்குச் செல்லவில்லையென்றும், அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் மரண விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென்றும் அறிகின்றேன். அதன்பின்பே அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படுமென்று தெரிய வருகிறது.
அவருக்கும் எனக்குமிடையில் நடந்த அந்த முகநூல் மெசஞ்சர் உரையாடல் வருமாறு:
Aug 5, 2022, 7:29 PM
ஜெயன் என்ன நடந்தது?
Aug 6, 2022, 3:50 AM
Jeyan Deva
உங்களுக்கு தெரியும் தானே கிரி? எனது சிறுநீரகப் பிரச்சனை கடுமையாகி விட்டது. 10 அடி தூரம் கூட நடக்க முடியவில்லை.
Aug 6, 2022, 3:42 PM
ஜெயன், நீங்கள் டயலிசிஸ் செய்கிறீர்களா? அங்கு மாற்றுச் சிறுநீரகத்துக்கான திட்டமேதுமில்லையா? இங்கு அதற்காக விண்ணப்பித்து வைப்பார்கள். கிடைத்ததும் பெற்றுக்கொள்வார்கள். உள்ளத்தை உறுதியாக வைத்திருங்கள். இங்கு எழுத்தாளர் குலேந்திரன் டயலிசிஸ் எடுப்பதுடன் பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றார். https://www.youtube.com/watch?v=oV0qPOydAts (ஏழுத்தாளர் குலேந்திரனும் அண்மையில் மறைந்து விட்டார்)