திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளை சொற்பொழிவு பிரமிள் கவிதைகள் குறித்து “கணத்தில் மொக்கவிழும் காலாதீதம்“ என்ற தலைப்பில் -இயக்குனர் தங்கம் அவர்கள் வழங்கினார் அக்டோபர் மாதத்தில் 0
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் இயக்குனர் தங்கம் அவர்களின் வேங்கை சாமி என்ற திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டது . இந்தக்குறிப்புகள் விடுதலை படத்தின் டைட்டிலிலும் இடம்பெறுகின்றன. வெற்றிமாறனின் விடுதலை 1 , விடுதலை 2 ஆகிய இரண்டு பாகங்களைக் கொண்ட படங்களிலும் இயக்குனர் தங்கம் பணிபுரிந்து இருக்கிறார் .
பாலு மகேந்திரா அவரிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர் .அவர் இயக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட கதைநேரம் தொடரில் பெரும் பங்கு வைத்தவர் ... பல திரைக்கதைகளை உருவாக்கியவர் ..இறைவன் என்பது வரம் என்ற இவருடைய கதையை இப்போது அமீர் அவர்கள் திரைப்படமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். புதிய திரைப்படம் ஒன்று இயக்குகிற வேலையில் தங்கம் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார் ....தொடர்ந்து இலக்கியவாசிப்பிலும் அக்கறையும் கொண்டவர்.
பிரமிள் அவர்களுடைய மறைவுக்கு பின்னால் அவர் நினைவிடத்தில் சமாதி ஒன்று எழுப்பி இருக்கிறார் . ஓவியர் சந்துவை வைத்துக்கொண்டு பிரமிள் அவர்களுடைய சிலை ஒன்றை நிறுவி இருக்கிறார் . அது அவருடைய சமாதி நினைவு மண்டலத்தில் விரைவில் வைக்கப்பட உள்ளது . பிரமிள் பற்றியதோர் ஆவணப்படம் ஒன்றையும் கால சுப்பிரமணியம் போன்றோரின் ஒருங்கிணைப்பிலும் ஆலோசனையிலும் எடுத்து வருகிறார். அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது.
'பிரமிள் கவிதை'களைப் பற்றி தன் உரையில் குறிப்பிட்டு உரையை ஆரம்பித்து விரிவாகப் பேசினார் இயக்குநர் தங்கம்:
'சென்ற நூற்றாண்டில் பாரதிக்கும் புதுமைப்புத்தனுக்கும் பிறகு பிரமிள் என்ற ஒரு கருத்தை பலரும் வெளிப்படுத்துகின்றனர். த.மிழ் மரபிலிருந்து கிளர்ந்தெழுந்து வந்தவர்களான மேற்கண்ட முப்பெரும் மகனார் தமிழை தத்தமது வாழ்கால மாற்றங்களுக்கு இசைவுறும்படியும் வருங்கால மாற்றங்களை மேற்கொள்ளும்படியும் புத்தாற்றலூட்டிய புதுக்கியவர்கள் என்பதால் இணைமதிப்பீட்டுக்கு உரியவர்களாகிறார்கள் என்பது வரலாற்றில் நிலைத்து விட்ட பார்வை. இது எவரது மதிப்பீட்டு புலனாய்வுத் துறை கொண்டும் துப்பறிந்து மேலே கொண்டுவரப்பட்ட மறைவு உண்மையும் அன்று.
பாரதியும் புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கிய போக்கின் எதிர்காலத்தில் நேரடியாக பங்கு செலுத்துகின்றனர். தாக்கமானது பெரும் இலக்கிய போக்குகளோடு மட்டும் நின்று விடுகிற ஒன்று அல்ல. முன்னையவர் இருவரை காட்டிலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். பழைய காலத்தில் குடும்ப சோதிடர் என்றவர் இருப்பாரே அதுபோல் தமிழினத்தின் தமிழ் சமூகத்தின் எதிர்கால கலை இலக்கிய பண்பாட்டு வரலாற்று ஆன்மீக மதவாத விபத்துக்களை குறித்து ஆருடம் சொன்னவர் . உலக வரலாறாது தமிழின வரலாற்றை ஒருவழிக்க போகிறது என்பதையும் தமிழ் சமூகம் இந்த பூவில் அழியாது உயிர் தரிக்க வேண்டுமானால் தமிழ் சமூகத்திற்குள் ஏற்பட்டாக வேண்டிய அகவடிப்பு குறித்தும் ஒரு மாயக்காரனைப் போல குறிப்புகள் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார். அதனால் தான் முப்பெரும் மகனான பிரமிள் தனி பெரும் மகனார் என்று ஆகிறார்.
இப்படி சொல்வதனால் முன்னைவரை விட இவர் பெரிய ஆளாக்கும் என்பதே அல்ல பொருள் . புதுமையும் நவீனமும் கலந்தவர் பாரதியும் புதுப்பித்தனும் பிரமிளும் ஒரே ஆற்றலே என்றும் வெவ்வேறு கால வெளிகளின் வெவ்வேறு வடிவுகள் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்'
தொடர்ந்து பேசிய இயக்குனர் தங்கத்தின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
'
'சுப்ரபாரதிமணியன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பான ”அப்பா " வில் தொகுப்பில் இடம்பெற்று இருந்த சேவல் சண்டை பற்றிய கதைகள் எங்களின் கோவை நண்பர்களை மிகவும் உலுக்கியது. அவர்கள் சொல்ல நானும் அந்த தொகுப்பில் உள்ள சேவல் சண்டை மற்றும் பிறகதைகளை வாசித்தேன் .பிடித்திருந்தன. அவரை அப்போதே கோவையில் சந்தித்திருக்கிறேன்.
அவருடைய முதல் நாவல் “மற்றும் சிலர் “ திண்டுக்கல் சின்னாளப்பட்டி கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த மக்களைப் பெற்றது. சமீபத்தில் அவரில் ஆயிரம் பக்க நாவல் 'சிலுவை' வெளிவந்திருக்கிறது. அதனை விலைக்கு வாங்கி இருக்கிறேன் விரைவில் படித்து முடித்து விடுவேன். தொடர்ந்து நான் அவர் படிப்புகளை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் சுப்ரபாரதிமணியன் தன்னுடைய நாவல்களை திரைக்கதைகள் ஆக்கி நான்கு புத்தங்களை வெளியிட்டு இருக்கிறார் . தமிழ் நாவல்களில் இருந்து சின்ன விஷயங்களை திருடிக் கொண்டு திரைப்படமாக்குகிற போக்கு இருக்கிறது . இந்த சூழலில் நாவல்களை முழு திரைக்கதைகள் ஆக்கிக் கொண்டு நூலாக வெளியிட்டு இருக்கிறார் சுப்ரபாரதிமணியன் . இதிலிருந்து எவ்வளவு திருடு போகப் போகிறது எவ்வளவு பேர் மீது இவர் வழக்கு என்று வழக்காடு மன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்குகள் பதிவு செய்ய இருக்கிறாரோ . இவரின் தொடர்ந்து இலக்கிய செயல்பாடுகளில் இந்த நாவல்களை திரைக்கதை ஆக்கும் அம்சமும் முக்கியமாகும் .
திரைக்கதைக்கும் இலக்கியத்திற்குமான இடையிலான பொருத்தப்பாடுகளையும் வேறுபாடுகளையும் உணர்ந்த முடித்தவன் என்கிற முறையிலும் திரை கதைக்கும் இலக்கியத்திற்கும் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவன் என்ற முறையிலும் இந்தப் பார்வைக் கோணம் சுப்ரபாரதிமணியனின் திரைக்கதை நூல்களில் இருக்கிறது .
சுப்ரபாரதிமணியன் நடத்தி வரும் பல இதழ்களில் பிரமிள் அவர்களின் படைப்புகள் வெளியாகியுள்ளன. அவரின் படைப்புகளுக்கு அவருக்கான பொருளாதார உதவியை மனதில் கொண்டு சன்மானங்கள் வழங்கியிருக்கிறார். இந்த விசயத்தை காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “கனவு “ இலக்கிய இதழ் தொகுப்பில் கூடத் தெரிவிட்த்துள்ளார். “கனவு “ இலக்கிய இதழ் முதல் 25 ஆண்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் 400 பக்கத் தொகுப்பாகும் அது .'
சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளையின் சொற்பொழிவின் போது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஆனந்தகுமார் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டவை :
'சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் பற்றி அவரின் ஹைதராபாத் மற்றும் திருப்பூர் மைய படைப்புகளை வைத்துக்கொண்டு இரட்டை நகர்களின் கதை சொல்லி என்று நான் ஒரு நீண்ட கட்டுரை எழுதி இருக்கிறேன். திருப்பூர் நெசவாளர்களின் மற்றும் விவசாயிகளின் பூமியாக இருந்தது .அது பின்னலாடை நகரமாக மாறிய பின்னால் விவசாய சீரழிவும் சுற்றுச்சூழல் சீரழிவும் எப்படி நடந்தது என்பதை இவரின் 'சாயத்திரை' நாவல் விளக்குகிறது .நெசவாளர்களின் வாழ்விடமாக இருந்த பூமி இயந்திர பூமியாகி விட்டது. இப்போது வெளிவந்திருக்கும் அவரின் ஆயிரம் பக்க நாவலான 'சிலுவை'யில் கூட நெசவாளர் வாழ்க்கை பற்றி அதிகம் பேசுகிறார். கொங்கு பூமி என்றால் அது கவுண்டர்களின் விவசாய வாழ்க்கை சொல்லப்பட்ட இலக்கிய பிரதிகள் அதிகம் என்ற நிலையில் நெசவாளர் வாழ்க்கை பற்றி இவருடைய நாவல்கள் பெரும்பாலும் பேசி இருக்கின்றன .
இன்றைக்கு உலகமயமாக்களுக்கு பின்னால் வணிகம் என்பது எல்லா நகரங்களுக்கும் சாதாரணமாகிவிட்டது .எல்லா நாடுகளுக்கும் பொதுவாகிவிட்டது. இந்த சூழலில் பல வெளிமாநில மக்கள் வந்து தொழிலாளராக பணிபுரியும் இடமாக இருக்கிறது திருப்பூர். நைஜீரிய ஆப்பிரிக்கர்கள் வந்து குடியேறியிருக்கிற பிரதேசமாகவும் இருக்கிறது . இப்படி தமிழக நகரம் இந்தியாவின் பல மாநில தமிழ் அடையாளங்களை , பிரச்சனைகளை உள்ளடக்கிய நகரமாக திருப்பூர் மாறி இருப்பதை இவரின் படைப்புகள் சொல்கின்றன.
தமிழ் பண்பாடு வட்டாரத் தன்மை வாய்ந்ததா அது அந்த பண்பு நீடிக்கிறதா என்ற கேள்வியை இவருடைய படைப்புகள் உள்ளே வைத்திருக்கின்றன. வட்டார முதன்மையான இடம் பெற்றதும் அவற்றின் தன்மையும் காலமாற்றத்தால் நிகழ்ந்த விஷயங்களும் இவரின் படைப்புகளில் வெளிவந்திருக்கின்றன . உலக அளவில் பல விசயங்கள் பாதிக்கும் தொழில் நகரம் சார்ந்த இலக்கியப் பதிவுகளை இவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன.
தமிழ் பண்பாடு வட்டாரத் தன்மை வாய்ந்ததா அது அந்த பண்பு நீடிக்கிறதா என்ற கேள்வியை இவருடைய படைப்புகள் உள்ளே வைத்திருக்கின்றன. வட்டாரம் முதன்மையான இடம் பெற்றதும் அவற்றின் தன்மையும் காலமாற்றத்தால் நிகழ்ந்த விஷயங்களும் இவரின் படைப்புகளில் வெளிவந்திருக்கின்றன . உலக அளவில் பல விசயங்கள் பாதிக்கும் தொழில் நகரம் சார்ந்த இலக்கியப் பதிவுகளை இவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன.'
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.