2020ஆம் ஆண்டிலிருந்து டொரோண்டோ, கனடாவிலிருந்து இலாப நோக்கற்ற அமைப்பொன்று , ஆண்களின் பிரச்னைகளை மையமாக வைத்து 'Voice of Men 360 (ஆண்களின் குரல் 360) என்னும் பெயரில் இயங்கி வருகின்றது. இதன் ஸ்தாபகர் சிவம் வேலாயுதம். 'சர்வதேச ஆண்கள் தினம்' (International Men's Day) என்னும் சர்வதேசரீதியில் இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பின் பகுதியாக இயங்கி வரும் அமைப்பிது. பல்வயது ஆண்களும் (சிறுவர் தொடக்கம் முதியவர் வரை) சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை, அதனால் அவர்களுக்கு எற்படும் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்குப் பல் வழிகளிலும் உதவிகள் வழங்குவதையே நோக்கமாகக்கொண்டு இயங்கிவரும் அமைப்பிது.
- 'ஆண்களின் குரல் 360' அமைப்புன் ஸ்தாபகர் சிவம் வேலாயுதம்-
'சர்வதேச ஆண்கள் தினம்' அமைப்பானது சுமார் தொண்ணூறு நாடுகளில் இருபது வருடங்களுக்கும் அதிகமாகச் செயற்பட்டு வரும் அமைப்பு. இவ்வமைப்பின் முக்கியமான தூண்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
1. ஆரோக்கியமான ஆண் முன்மாதிரிகளை (Role Models) சமூகத்தில் அன்றாடம் வேலை செய்யும் ஆண் வர்க்கம் மத்தியில் ஊக்குவித்தல்.
2. சமூகம், குடும்பம், திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் சூழல் ஆகியவற்றுக்கான ஆண்களின் ஆரோக்கியமான பங்களிப்பைக் கொண்டாடுதல்.
3. ஆண்களின் உடல் நலம், நல் வாழ்க்கை, சமூக, உணர்வு, உடல் மற்றும் உளவியல் ரீதியிலான விடயங்களுக்கு முகம் கொடுத்தல்.
4. சமூக சேவைகளில், சமூகச் செயற்பாடுகளில், சமூக எதிர்பார்ப்புகளில் மற்றும் சட்டத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டுதல்.
5. பால் தொடர்புகளை, பால் சமத்துவத்தை மேம்படுத்துதல்.
6. மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்து தம் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் பாதுகாப்பான சிறந்த உலகை உருவாக்குதல்.
மேற்படி 'சர்வதேச ஆண்கள் தினம்' அமைப்பின் பகுதியாக இயங்கி வரும் 'ஆண்களின் குரல் 360' இந்நோக்கங்களுக்கமைய செயற்பட்டு வருகின்றது. தன் நோக்கங்களை இணையக் கலந்துரையாடல்கள், குழுக் கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள், நேரடி உரையாடல் நிகழ்வுகள், உளவியல் ஆலோசனைகள், பயிற்றுவித்தல், வழிகாட்டுதல், சந்திப்புகள் மற்றும் தன்னார்வத்தொண்டு செய்தல் போன்றவற்றின் மூலம் தன் செயற்பாடுகளை இவ்வமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
- நாடகக் கலைஞரும், எழுத்தாளருமான ரவிச்சந்திரன் அரவிந்தன் -
இவ்வமைப்பு Voice of Men 360 என்னும் யு டியூப், முகநூல் சானல்களை நடத்திவருகின்றது. அதில் பல்துறை ஆண் ஆளுமையாளர்களுடன் நேரடி உரையாடல்களை நடத்திப் பதிவிட்டு வருகின்றது. அவ்விதமான உரையாடல்களிலொன்று இவ்வுரையாடல். நாடகக் கலைஞரும், பயிற்றுவிப்பாளரும், எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அரவிந்தனுடனான நேரடி உரையாடலிது. இதில் ரவிச்சந்திரன் அரவிந்தன் சமூகத்தில் பல்வேறு பருவங்களில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை , குறிப்பாக பால், உளவியல் மற்றும் பொருளியல் பிரச்னைகளைத் தன் சொந்த அனுபவங்களிலிருந்தும் , தனக்குத் தெரிந்தவர்களின் அனுபவங்களிலிருந்தும் எடுத்துரைக்கின்றார். நவீன நாடக முயற்சிகள், ஆண், பெண் சமத்துவம், பெண் விடுதலை போன்ற பல விடயங்களைச் சரியாக உள்வாங்கித் தெளிவாக எடுத்துரைக்கும் இவரது பாங்கு என்னை மிகவும் கவர்கின்றது.
இந்நேர்-உரையாடல் நிகழ்வினை சிவம் வேலாயுதமே சிறப்பாகச் செய்திருக்கின்றார். இதற்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/watch?v=k-06v0SuSPw | https://www.facebook.com/voiceofmen360/videos/3625902537727816 மேற்படி 'ஆண்களின் குரல் 360' அமைப்புக்காக அவ்வப்போது ஆண்கள் எதிர்கொள்ளும் பல்வகைப்பிரச்னைகளை, சவால்களைப்பற்றித் தமிழில் எழுதுவதற்குத் தன்னார்வத்தொண்டர்கள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளார்கள். ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ; தொலைபேசி இலக்கம்: 1 437-889-8329
இவ்வமைப்பின் இணையத்தள முகவரி: https://www.voiceofmen360.org/
தொடர்பு கொள்வதற்குரிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொலைபேசி இலக்கம் : +1 437-889-8329
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.